பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 16, 2006

'கருத்து' கணிப்பு - கலைஞர்

நேற்று கலைஞரின் அறிக்கை :

கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்த கூட்டணி கூட்டத்தில் கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஒரு கட்சி மட்டும் 25 தொகுதிகள் வேண்டும் என்றும் தி.மு.க., திருச்சி மாநாட்டுக்கு முன்பே அறிவிக்காவிட்டால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்றும் தெரிவித்தது. கட்சி பொருளாளர் ஆற்காடு வீரசாமி அவர்கள் வீடு தேடிச் சென்று அழைப்பு விடுத்துப் பேசிய போதும் கண்டிப்பாக சொல்லி அனுப்பி விட்டனர்.

அதற்கு மேலும்கூட நான் எனது முயற்சியை கைவிட்டு விடவில்லை. நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசினேன். பயனில்லை. கடைசி நிமிடத்தில்தான் திருச்சி மாநாட்டுக்கு அவர்கள் யாரும் வரப் போவதில்லை என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

அ.தி.மு.க.,வுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஜனவரி மாதமே தொடங்கி விட்ட காரணத்தால் கூட்டணியின் அனைத்து கட்சிகள் சார்பில் ஜனவரி 18ம் தேதியன்று மக்கள் விரோத ஜெயலலிதா அரசைக் கண்டிக்கும் கூட்டங்களில் அ.தி.மு.க., ஆட்சியின் மீது தும்பு தூசு படாமல் சர்வ ஜாக்கிரதையாகவே உரையாற்றினர். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே நம்முடன் உறவு நீடிப்பது போல காட்டிக் கொண்டு உடைத்துக் கொண்டு போகும் திட்டத்திற்கு அம்மையாரின் உத்தரவுப்படி திருச்சி மாநாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்த தயாராகிக் கொண்டிருந்தார்கள் என்பது இப்போதுதான் தெளிவாக புரிகிறது. அவர்கள் அதிர்ச்சி என கருதி ஆற்றிய செயல் உடன்பிறப்புகளை திகைத்திடச் செய்திடவில்லை.

அழுகிற பிள்ளைக்கு கிலுகிலுப்பை ஆட்டிக் காட்டுவது போல உளவுத் துறையினர் அவர்களின் இழுத்த இழுப்புக்கு வரக் கூடிய ஒரு சில பத்திரிகைகளை வளைத்துப் போட்டுக் கொண்டு கற்பனையாக கருத்துக் கணிப்புகளை வெளியிடச் செய்து அதற்கு "கறுப்பாக' எவ்வளவு வழங்கவும் தயாராகி அந்தக் காரியத்தை முடித்து இன்னும் இரண்டொரு நாளில் "இதோ பாருங்கள் புதிய கருத்துக் கணிப்பு அம்மாவுக்கே அமோக வெற்றி' என்று முழங்கப் போகிறார்களாம். இந்த அரசு உளவுத்துறை மூலம் நான்கு தடவை எடுத்த கருத்துக் கணிப்பும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இல்லை. அவர்களுக்கு கடுப்பு கணிப்பாகவும், நமக்கு களிப்பான கணிப்பாகவும் அமைந்துள்ளது.

அதனால் அவருக்கு ஆறுதல் அளிக்கும் தந்திரமாகவும் அ.தி.மு.க., தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் சூழ்ச்சியாகவும் ஜெயிக்கப் போவது ஜெயலலிதா தான் என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்க ஒரு புதிய கருத்துக் கணிப்பை வெளியிட ஆயத்தமாகி விட்டார்கள். அந்த விஷமப் பிரசாரத்தை முறியடிக்க அதைப்பற்றி அணுவளவும் கவலைப்படாமல் கூட்டணி கட்சியினருடன் கூடி செயல்பட வேண்டும்.

இந்த அரசுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் கருத்துக் கணிப்பில் உளவுத்துறை முகப்புரையாக தொடங்கியிருப்பதை படித்துப் பார்த்தால் துல்லியமாக வெற்றி நமக்குத்தான் என்பது விளங்கும். "இன்றுள்ள நிலவரப்படி, எனது முந்தைய அறிக்கையில் அனுப்பிய தமிழக தேர்தல் நிலவரத்தில் அதிக அளவிற்கு வேறுபாடில்லை. வைகோ அ.தி.மு.க.,வுக்கு வந்தது அந்த கூட்டணியில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதைப் பார்த்துவிட்டு தி.மு.க.,வினர் அளவுக்கு மீறிய நம்பிக்கையுடன் அலட்சியமாக இருந்து விடக் கூடாது.

4 Comments:

Naarathar said...

ஜயா இட்லியாரே,
எனக்கு ஒரு சந்தேகம்.
தாங்கள் தி.மு.க ஆதரவாளரா?
எப்பவும் நீங்க தி.மு.க சார்பான
செய்திகளைத் தான் தேடிப் பிடித்து
பிரசுரிக்கிறீங்க? உண்மையைச் சொல்லுங்க, கலைஞர் எவ்வளவு கறுப்பாகத் தந்தார்?

IdlyVadai said...

ஐயோ சத்தமா சொல்லாதீங்க நிறைய பேர் என்னை அம்மா அனுதாபி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

selvan said...

Paavam karunanidhi, avarukku therdhal payam vanthuvittadhu. Adhanal than ularugirar.

Anonymous said...

Karunanidhi may be taking comfort from the so-called survey.

But, the electorate in TN has been voting for either DMK or AIADMK led fronts in every ALTERNATE General Election held in TN (i.e. either for Parliament or for Assembly or for both held together). This has been the trend since 1971. Only in 1984 (due to Indira Gandhi's assasination / MGR's illness) and in 1991 (Rajiv Gandhi's assasination) did they vote for the same alliance (AIADMK-led) again i.e. AIADMK led alliance got majority votes/seats in 1980 (Assly) as well as the next in 1984 (Parl./Assly). Similarly in 1989 (Parl) & next in 1991 (Parl./Assly).

As per the above trend, it is the turn of AIADMK led front to triumph at the hustings this time. This is the election history as far as TN is concerned since 1971.

Will Karunanidhi be able to swim against the tide of history?

Kettle