பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 15, 2006

மக்கள் தமிழ் தேசம் திமுகவில் இணைந்தது

முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையிலான மக்கள் தமிழ் தேசம் கட்சி திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கலைஞர் :

தாய்க் கழகமான திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுக உதயமானதற்கு காரணம். நாம்
கொண்டிருக்கிற கொள்கைகளை, கோட்பாடுகளை லட்சியங்களை எல்லாம் நிறைவேற்றுகின்ற அரசியல்
களத்தைத் தயார் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அரசியல் களத்தின் வாயிலாக
திராவிடர் கழகத்தின் எண்ணங்களை, பகுத்தறிவு சமுதாய மேம்பாடு, சமத்துவம், சமதர்மம்
இவை எல்லாம் உருவாக்கத்தான் திமுக என்ற அரசியல் இயக்கத்தை அண்ணா அன்றைக்கு
உருவாக்கினார்.

திராவிடர் கழகமும் திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அண்ணா சொன்னதற்கு
காரணம் பகுத்தறிவு கொள்கைகளை இழந்துவிட்டு, இன உணர்வு எண்ணங்களை இழந்துவிட்டு, நான்
தமிழன் என்பதை மறந்துவிட்டு இந்த அரசியல் இயக்கத்தை தொடங்கவில்லை என்பதைத்
தெளிவுபடுத்தத்தான்.

ஓராண்டுக்கு முன்பு நான் ஒரு கூட்டத்தில் சொன்னேன். திராவிட இயக்கங்கள் பல
இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவைகள் எல்லாம் ஒன்றாக இணைந்தன என்று
இல்லாவிட்டாலும்கூட ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் திராவிட இன உணர்வுகளை
வளர்ப்பதற்கு பாடுபட வேண்டும்.

கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் போல் திராவிட
இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும். இணைய வேண்டிய அவசியமில்லை. அவைகள் இணைந்து செயலாற்ற
வேண்டும். ஆனால் அது முழுமையாக நிறைவேற முடியாவிட்டாலும் ராஜகண்ணப்பன் போன்றவர்கள்
நாங்கள் உங்களோடு இணைகிறோம் என்று இணைந்திருப்பது புதிய தெம்பினை ஊட்டுகிறதுசென்னை நகர் எங்கும் ( காமராஜர் அரங்கம் செல்லும் சாலை ) பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டபட்டு இருந்தது. நிச்சயம் தொண்டர்கள் எண்ணிக்கையை காட்டிலும் போஸ்டர்கள் எண்ணிக்கை கூட இருக்கும் :-)

1 Comment:

Anonymous said...

வேற வழி இல்ல.. வந்துதான் ஆகனும்.. ஆனால் ஏற்கனவே ஜாதி அரசியலை நம்பி மகத்தான தோல்வி அடைந்ததை திமுக மறக்கக்கூடாது.