பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 14, 2006

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா சேருமா? - காளிமுத்து பேட்டி

கேள்வி:- மக்களுடன் கூட்டணி என்ற அ.தி.மு.க. கட்சிகளுடன் கூட்டு வைக்கிறதே?

பதில்:- இப்போதும் மக்களுடன் கூட்டணி என்பதில் மாற்றமில்லை. அது தொடர்கிறது. கட்சிகள் எங்களுடன் வந்தால் அதனையும் வரவேற்போம்.

கே:- பாரதீய ஜனதா வுக்கு கூட்டணி கதவு திறந்துள்ளதா?

ப:- எங்களது கூட்டணியை புரட்சித் தலைவி மதசார்பற்ற அணி என அறி வித்துள்ளார்.

கே:- அப்படி என்றால் பாரதீய ஜனதாவுடன் உடன்பாடு இல்லையா?

ப:- பாரதீய ஜனதா தலைவர் தொடர்ந்து தனித்து போட்டி என்று கூறி வருகிறார்கள். இன்றைய நிலையில் எங்களது கூட்டணி தேவையான அளவுக்கு வலுவாக உள்ளது.

அதை விடவும் மக்களும் எங்கள் பக்கம் உள்ளனர். இந்நிலையில் மேலும் எங்களது அணிக்கு மற்ற கட்சிகளின் கூட்டு தேவையா என்பதை புரட்சித் தலைவி தீர்மானிப்பார்.

கே:- உங்கள் முயற்சியால்தான் அ.தி.மு.க. அணிக்கு ம.தி.மு.க. வந்ததா?

ப:- தவறு, அம்மாவின் ராஜதந்திரத்துக்கும், தாராள மனப்பான்மைக்கும்கிடைத்த பலன்தான் அது. கல்லூரி காலத்தில் இருந்தே வைகோவை நான் அறி வேன். நட்பும் உண்டு. இதன் காரணமாக நண்பன் என்ற முறையில் அழைப்பு விடுத்தேன். இதுவும் கூட கழக பொதுச் செயலாளர் கூட்டங்களில் குட்டிக்கதைகள், நீதிக்கதைகள் மூலம் அறிவுறுத்தியதன் மூலம்தான் நடந்தது. கழகத்தின் கூட்டணியிலும் ஆட்சியிலும் நல்லது எது நடந்தாலும் அது புரட்சித் தலைவி அம்மாவையே சாரும்.

கே:- ம.தி.மு.க.வினால் உங்களுக்கு என்ன நன்மை?

ப:- தமிழகத்தின தென் பகுதியில் அவர்களுக்கென வாக்குகள் உண்டு. அதனுடன் எங்களது மக்களுடனான கூட்டணியும் சேர்ந்திருப்பதால் அமோக வெற்றியை இந்த கூட்டணி பெறும்.

கே:- தி.மு.க. தலைமையி லான 6 கட்சி கூட்டணியையும் மீறி உங்களது வெற்றி எப்படி இருக்கும்?

ப:- அது நம்பிக்கை இழந்த-ஒருவரை ஒருவர் நம்பாதவர்களின் கூட்டணி. கடந்த முறை 140 இடங்களில் போட்டியிட்டு 132 இடங்களில் வென்றோம். இப்போது அதை விடவும் அதிக இடங்களை பிடிப்போம்.

நன்றி: மாலைமலர்

2 Comments:

ஜெ. ராம்கி said...

//கழகத்தின் கூட்டணியிலும் ஆட்சியிலும் நல்லது எது நடந்தாலும் அது புரட்சித் தலைவி அம்மாவையே சாரும்.

கழகத்தின் கூட்டணியிலும் ஆட்சியிலும் kettathu நடந்தாலும் அது புரட்சித் தலைவி அம்மாவையே சாரும்! :-)

IdlyVadai said...

என்ன ராம்கி ரொம்ப நாட்களா காணவில்லை ? அடுத்த புத்தகம் எழுதுகிறீகளா :-)