தமிழ் நாட்டு அரசியலில் தான் ஆபாச பேச்சு இருக்கிறது என்பது என் எண்ணம். மத்தியில் /வேறு மாநிலங்களிலோ இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இந்த ஆபாச பேச்சுக்கள் யார் ஆரம்பித்தது அது எவ்வாறு வளர்ந்தது என்று யாராவது ஆராயலாம். என்ன செய்வது இது தான் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி.
சமிபத்தில் அதிமுகவில் செந்தில்
"ஏ கருணாநிதி! உனக்கு தைரியம் இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வா! அதை விட்டுட்டு ஏழு பேரைச் சேர்த்துட்டு வர்றியே... இதான் உன் வீரமா? அதெல்லாம் பண்ணக்கூடாது. சாதனை நாயகி அம்மாதான்யா ஒரிஜினல் வீரம்!’’..
என்று பேசியுள்ளார். இவர் வயசு என்ன அவர் வயசு என்ன் என்று கொஞ்சமாவது யோசித்தாரா ? தெரியவில்லை. இவர் கவுண்டமணியிடம் நிஜமாகவே அடி வாங்கி இருக்க வேண்டும்.
அதே போல் குண்டுகல்யாணத்தின் தரக்குறைவான "அர்ச்சனை" இன்னும் மோசம். தேனியில் நடந்த முதல்வரின் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம்.
"தி.மு.க., தலைவர், தனது பிறந்த நாள் விழாவில் கேக் வெட்டுவார். ஆனால் மனைவிகளுக்கு மட்டுமே ஊட்டுவார். அருகில் அடுத்தவர் மனைவி நின்றாலும் ஊட்டி விடுவார். அப்படி செய்கிற அதே வேளையில் உண்டியல் வைத்து வசூல் செய்வதில் குறியாக இருப்பார். பொதுமக்களை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்.
கடந்த லோக்சபா தேர்தலில் குளறுபடி செய்து, கிறுக்குத்தனம் செய்து, தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அந்த கேனத்தனமான செயல் சட்டசபை தேர்தலில் எடுபடாது.
ஏழு கட்சி கூட்டணி என்பது கார்த்திகை, மார்கழி மாதத்திய "நாய்கள்' மாதிரியான கூட்டணி, இதனை சிலர் வேடிக்கை பார்ப்பார்கள், சிலர் துரத்துவார்கள், சிலர் கல்லால் அடிப்பார்கள்.
சொட்டத்தலை தலைவர் கட்சியில் இருக்கும் மத்திய அமைச்சர்களால் தான் ரூ.16ல் இருந்த டீசல் ரூ.35க்கு உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியதை தவிர, நாட்டு மக்களுக்கு வேறு என்ன செய்தார் அந்த.... ( ஆபாச வார்த்தை) .
உடன்பிறப்பே, உளுத்தம்பருப்பே, கடலை பருப்பே என கடிதம் எழுதி கட்சியினரையும் ஏமாற்றி வருகிறார். அரிசி விலை உயர்விற்கு காரணமே தமிகத்தில் இருந்து மத்தியில் அமைச்சர்களாக இருக்கும் "சொறிநாய்கள்' கூட்டம் தான். மாநிலத்தில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் கேணயனுக்கு பொறந்த கிறுக்குபய "சொட்டை...' (ஆபாச வார்த்தை)தான் காரணம்.
இது மாதிரி பேசுபவர்களை முதலமைச்சர் ஜெ முதலில் கட்சியை விட்டு நீக்க வேண்டும்.
இதே போல் திமுகவும் சளைத்தவர்கள் இல்லை திருச்சியில் நடந்த மாநாட்டில் திருச்சி செல்வேந்திரன்
"பின்னாலே பார்க்காதீங்கன்னு ஜெயலலிதா சொல்லுது முன்னாலே பார்த்தாலே அசிங்கமாயிருக்கு. அதனாலேதான் பின்னாலே பார்க்காதீங்கன்னு சொல்றாங்க"திருமதி சற்குண பாண்டியன்
"ஒரு பெம்பளை.. .கதவு தொறந்தே இருக்கு. யார் வேணும்னாலும் வரலாம் சொல்றியே உணக்கு வெட்கமா இல்லையா? பழைய ஞாபகமா? இம்முறை மக்கள் உன்னை தோற்கடித்து மீண்டும் அதற்குத்தான் அனுப்பப் போகிறார்கள்"
பரிதி இளம்வழுதி
" அம்மாவோட கதவு திறந்திருக்கு. எல்லோரும் வாங்க, எல்லோரும் வாங்கன்னு கூப்பிட்டவன் ( காளிமுத்து ), அப்பல்லோவில் போய் படுத்திகிட்டான். இப்ப போறவன் கதி என்ன ஆகப் போகுதோ"எச்சரிக்கை: இன்னும் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டால் இதே போல் பேச்சுக்களை நாம் நிறைய கேட்ட வேண்டியிருக்கும்.
திமுக பேச்சுக்கள் உதவி: துக்ளக்
செந்தில் பேச்சு உதவி : ஆ.வி
குண்டுகல்யாணம் பேச்சு உதவி: தினமலர்
11 Comments:
கடைசி மூன்று மேற்கோள்களும் துக்ளக்கில் வந்திருந்தன.
திமுக மேடைப்பேச்சாளர்கள் ஜெயலலிதா பெண் என்பதால் அவரை வைத்துப் பேசும் அசிங்கமான பேச்சுக்கள் கீழ்த்தரமானவை. இதே போல முந்தைய திமுக மாநாட்டில் பேசப்பட்ட அசிங்கங்களை துக்ளக் வெளியிட்டிருந்தது. ("அம்மாவைப் பார்த்து 'அகண்ட காவிரியே'ங்கறன். இவனுக்கு எப்படி தெரியும் அகண்டு இருக்குன்னு?")
நீங்கள் சொல்வது சரிதான். தமிழகத்தில்தான் இப்படியான அநாரிகமான ஏசல்கள், ஆபாசமான, அசிங்கமான, தரக்குறைவான திட்டல்கள் உள்ளன. திராவிட கட்சிகளின் அபாரமான பங்களிப்புகளில் இதுவும் ஒன்று. தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்!
பத்ரி - நீங்கள் சொல்லுவது சரி. இதில் இவர்களுக்கு தமிழ் செம்மொழி என்று வேறு பெருமை. இந்த அசிங்கங்கள் துக்ளக், தினமலர், ஆனந்தவிகடன் ஆகிய பத்திரிக்கையில் வந்தவவை; இப்போது இட்லிவடையில் :-)
தாக்கி சொல்ல வேண்டும் என்பதற்காக தரக்குறைவாக பேசுவதை, மக்களும் ஏன் பொறுமையாக கேட்டு கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஜெயங்கொண்டான் என்ற ஒருவருடைஅய் பேச்சை ஜூவியில் ஒருமுறை படிக்க நேர்ந்தது.
வட நாட்டில் இவ்வளவு மோசம் இல்லை என்றால்ம் மோசமாகி கொண்டிருப்பது உண்மைதான்
தமிழக அரசியலில் கண்ணியம் குறைந்து வெகு நாட்களாகிறது. அதிலும் செல்வி ஜெயலலிதாவை பெண்னென்றும் பாராமல் மிகவும் கீழ்த்தரமாக பேசுவதை திமுகவினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். திமுக மா நாட்டில் திருமதி சற்குணபாண்டியனின் பேச்சு அவரது தராதரத்தை காட்டுகிறது.
இந்தப் பேச்சுக்கள் எங்கே இருந்து கிளம்புகிறது என்பதை ஆராயமல் பொத்தாம் பொதுவாய் திராவிடக் கட்சிகளை சாடுவதில் அர்த்தமில்லை....
கீழ்த் தட்டு,மத்திய தரம்..உயர் மத்தியதரம் மற்றும் உயர்தர மக்கள்(பொருளாதார ரீதியில்) என குறிப்பிடப் படும் அத்தனை தரத்திலும் அடுத்தவனை காயப்படுத்த அவனது தாயையும்,சகோதரியையும் பாலியல் ரீதியாக இழுக்கும் அவலத்தை எப்படி மறந்து போனீர்கள்.
துக்ளக்கும், தினமலரும் சொலவதை மட்டுமே அறிந்தவர்கள் அல்லது கருத்துச் சொல்பவர்கள்....திராவிடக் கட்சிகளை குறை கூறி உங்கள் முதுகின் அழுக்கை மறைக்கிறீர்கள் என்பேன்.
மற்றபடி இந்த ஆபாசப்பேச்சுக்களுக்காக நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
பார்க்க அமைதிப்பூங்கா
பத்ரி, சித்தன் போன்ற பார்ப்பனர்கள் மிகவும் கவனமாக படித்துவிட்டு ஜெயாவை தாக்கியது தவறு ஆனால் கருணாநிதியைத் தாக்கியது தவறல்ல என்ற பாணியில் பதில் சொல்லி இருக்கின்றனர்.
இவர்களுக்கு இட்லிவடை எழுதும் பாஸ்டன் பாலா என்ற பார்ப்பனரே மேல்.
பத்ரி சொல்லி இருப்பது நியாயமான கருத்து. ஆபாசத்தின் உச்சகட்டம் திராவிட முன்னேற்ற கழகம். அ.தி.மு.க எவ்வளவோ பரவாக இல்லை.ஆனால் இந்த சரியான கருத்தை உரக்க சொல்ல, நீங்கள் ஜெயலலிதா ஜாதி காரராக இருக்க கூடாது. அது இணையமாக இருப்பினும்.
இணையத்திலும் ஜாதி- காரணம் ஜாதி நாம் படிக்காமல் வாங்கிய பட்டம்.
உண்மையில் அ.தி.மு.க.விட தி.மு.க.வில் ஆபாசப் பேச்சுகள் அதிகம் பேசப்படுகின்றன. கடந்த முறை தேர்தல் மாநாட்டில் ஆபாசப் பேச்சுகள் கருணாநிதி மற்றும் அவரது குடுமப உறுப்பினர்கள் முன்பே பேசப்பட்டன. அ.தி.மு.க. தரப்பில் எஸ்.எஸ். சந்திரன் "கருணாநிதி எந்த வீட்ல இருக்கார்னு எப்படி தெரியும்?" என்று தொலைகாட்சியில் பேசினார். மொதத்தில் இரண்டு கழகங்களும் ஆபாசப்பேச்சுகளை அள்ளி வீசுகின்றன.
தேவையற்ற பல விஷயங்களில் மூக்கை நுழைத்து, வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் கடும் நெருக்கடியைக் கொடுக்கும் தேர்தல் ஆணையம் இத்தகைய ஆபாசப்பேச்சுகளுக்கு ஒரு வரையறை விதிப்பது பற்றி யோசிக்கலாம்.
எத்தனை அய்யார் வந்தாலும் திமுகவைத்தான்யா எதுக்குறாய்ங்கெ. பத்ரி அய்யர், சித்தன் அய்யர் எல்லாம் போய் இப்ப புதுசா ஹரன்பிரசன்னா அய்யர் வந்து ஜெயலலிதாவ ஆதரிச்சு கருத்து எழுதி இருக்கார்.
நன்னிலம் நடராஜன் ஒருமுறை பேசும்போது அம்மாவுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு என்றால் எங்கள் தலைவருக்கு என்ன ஆயுதம் தொங்கிய போலீசாரா என்று கேள்விக்கணை எழுப்பினார்.
Post a Comment