பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 31, 2006

தேர்தல் பற்றி நம்புங்கள் நாராயணன் !

இந்த் தேர்தலிலும் நம்புங்கள் நாராயணன் சில கணிப்புக்களை கூறியுள்ளார்.

* ஜெயலலிதாதா மீண்டும் முதல்வர் பதவிக்கு வருவார். சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். அதாவது 4ல் 3 பங்கு மெஜாரிட்டியுடன் அவர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார். கடந்த காலங்களைப் போல் இல்லாமல், மத்திய அரசுடன் அவர் சுமூக உறவை ஏற்படுத்திக் கொள்வார். பல திட்டங்களை செயல்படுத்துவார். அவரது ஆட்சியில் விவசாயம், கம்ப்யூட்டர் துறை மற்றும் தொழில் வளர்ச்சி மேம்படும். ( கொஞ்சநெஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது)

* அதிமுக ஆட்சிக்கு வைகோ முழுமையாக ஒத்துழைப்பார். வேறு அணிக்கு மாற மாட்டார். ஆட்சி சிறப்பாக நடக்க முடிந்தவரை பாடுபடுவார். ( அட அட இதெல்லாம் கூட சொல்ல முடியுமா )

* திமுக தலைவர் கருணாநிதிக்கு இது சோதனையான நேரம். தேர்தலில் பெரும் பின்னடைவை அவர் சந்திப்பார். ( அவர் வெற்றி பெற்றால் உங்களுக்கு சோதனை )

* விஜயகாந்த்தின் கட்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. தனித்துப் போட்டியிடுவதாக அவர் கூறி வந்தாலும் கூட அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையை அவர் எடுப்பார். அமைச்சராகும் யோகமும் அவருக்கு உள்ளது. ( அதுக்கு முதல்ல அவர் ஜெயிக்கனும்)

* நடிகர் ரஜினியைப் பொருத்தவரை திரையுலகில் அவர்தான் உச்சத்தில் இருப்பார். அவரது சிவாஜி படம் மிகப் பெரும் வெற்றியைப் பெறும். அரசியல் பக்கம் வரவே மாட்டார். தத்துவ வாழ்க்கையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். ( நீங்க ரஜினி ராம்கிக்கு நண்பரா ? )

* நடிகர் கமல்ஹாசனுக்கும் இந்த ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக அமையும். ரஜினிக்கு இணையான புகழை அவர் விரைவில் பெறுவார். அவருக்கு இருந்து வந்த கெட்டகாலம் முடிந்து விட்டது. மிகப் பெரிய நிறுவனத்தின் படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாவார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். (அதில் அவர் ஒரு பாட்டு பாடுவார், வித்தியாசமாக மேக்கப் போடுவார் என்று சொல்லாம் விட்டுவிட்டீர்களே )

* விரைவில் ஜோதிகா திருமண செய்தி வெளிவரும். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமையும் என்று கூறியுள்ளார் நாராயணன். ( தமிழ் நாட்டுக்கு ரொம்ப முக்கியம் )

(செய்தி உதவி தட்ஸ் தமிழ் )

15 Comments:

யாத்ரீகன் said...

செய்தியையும், அதற்கான கமெண்ட்டையும் விட அந்த சின்ன கார்ட்டூன் படம் டக்கர். :-)

G.Ragavan said...

அடடே! இன்னமுமா நாராயணுக்குக் கலைமாமணி பட்டம் குடுக்கலை..யாரங்கே.......

பட்டணத்து ராசா said...

can not stop laughing :-)))

வானம்பாடி said...

அவரு வழக்கமா சொல்றதைதான் சொல்லியிருக்காரு. 1991 தேர்தல்லயும் இவரு ஜெ. தான் ஜெயிப்பாங்கன்னு சொன்னாரு.

ஜெ. ராம்கி said...

:-) No comments! :-)

Anonymous said...

நணபர்களே,
ஒருவருடைய நம்பிக்கையை குறை கூறுவது அவ்வளவு நல்லதாக படவில்லை.

இதை நாரயணின் கருத்தாக நீங்கள் ஏன் பார்க்க கூடாது. கருத்தை கேலி பேசாமல் இருக்கலாமே.

செல்வகுமார்.

இலவசக்கொத்தனார் said...

அதெப்படி செல்வகுமார், பொதுவில் வந்து பேசும் போது அதற்கான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதுவும் இந்த மாதிரி எல்லாம் காமெடியாக வேற சொன்னால். செந்தில் மேடை பேச்சுக்கள், தி.மு.க தேர்தல் அறிக்கை, இவருடைய அறிக்கை என பல காமெடிகள் அரங்கேறும் போது சிரிப்பை அடக்கவா முடிகிறது?

Manasatchi said...

இட்லிவடை,
படம் சூப்பருங்கோ. :-))))

வானம்பாடி said...

செல்வகுமார்,
அது அவருடைய கருத்தல்ல, கணிப்பு. ஜோதிட விஞ்ஞானமாம்.

Muthu said...

friends,

this may happen...

remember you are living in tamilnadu where people are interested in cinema politics...

தருமி said...

"கருத்தை கேலி பேசாமல் இருக்கலாமே." இந்தக் கருத்து எனக்குப் பிடிபடவில்லை;யார் என்ன சொன்னாலும், அதுவும் பொது விஷயத்தைப் பொதுவில் சொன்னால் அதைப் பற்றிய கருத்துக்கள் கேலியும் செய்யப்படலாம்; கேள்விகளும் கேட்கப்படலாம். ஒருவேளை இதுவும் தனிமனித சுதந்திரத்திற்குள் வருகிறதா, என்ன?

பாரதி said...

ஜெ, வை.கோ., விஜய்காந்த், கமல், ரஜினி, ஜோதிகா என அனைவருக்கும் + போட்டவர் கலைஞருக்கு மட்டும் - போட்டுவிட்டார். நம்பலாமா நாராயணரை?

Selvakumar said...

நண்பர்களே,
இதை வேறு விதமாக அணுகி இருக்கலாம் என்பது எனது கருத்து.

அவருடைய கருத்துக்களை அவருக்குடைய வழியிலேயே பின்னூட்டம் தரலாம்.

எனக்கு தெரிந்த வரை பிரபலங்களின் ஜாதகத்தை (ரஜினி தவிர) மற்ற ஜோதிடர்கள் பார்ப்பது இயலாது. இதை நாரயணன் ஒரு சாதகமாக எடுத்திக் கொண்டாரோ என்று தோன்றுகிறது.

முத்து, நான் கருத்து சுதந்திரத்தில் தலையிடவில்லை. இருப்பினும், எத்தனயோ பேர் கூறும் கருத்துக்கணிப்பு ஆதாரமற்ற காமெடிகளிக்கு இது பரவாயில்லை என்று தோன்றுகிறது

செல்வகுமார்.

Anonymous said...

2004 பாராளுமன்றத் தேர்தலிலும், 96 சட்டசபைத் தேர்தலிலும் இதே நாராயணன், ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்தவர் தான்.... அவர் ஏன் ஜால்ரா அடிக்கிறார் என்று எல்லோருக்குமே தெரியும்.... வெளியில் சொல்ல விரும்புவதில்லை.....

Anonymous said...

2004 பாராளுமன்றம் குறித்து தெரியாது. ஆனால் 96 தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றி பெரும் என்று நாராயணன் கூறினார். லக்கிலுக் சொல்லுவது சும்மா கப்ஸா.