பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 31, 2006

விஜயகாந்த் வேட்பாளர் பட்டியல்

விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ( இது முதல் பட்டியல் )

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் அவர் போட்டியிடப் போவ தாக அறிவித்தார். இந்த தொகுதி யில் அ.தி.மு.க. சார்பில் காசிநாதனும், பா.ம.க. சார்பில் டாக்டர் கோவிந்தசாமியும் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் கோவிந்தசாமி வெற்றி பெற்றார்.

பண்ருட்டி தொகுதியில் விஜயகாந்த் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச் சந்திரன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ராஜேந்திரனும், பா.ம.க. சார்பில் வேல்முரு கனும் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் வேல்முருகன் வெற்றி பெற்றார்.

விருத்தாசலம் - விஜயகாந்த்
பண்ருட்டி : பண்ருட்டி ராமசந்திரன்

ஆர்.கே.நகர்-முகமதுகான்.
புரசைவாக்கம்-ஜாக்குலின் ஹோம்ஸ்
மதுரை மத்தி-ஆர்.சுந்தர்ரா ஜன்
திருவள்ளூர்-பார்த்தசாரதி
உத்தரமேரூர்-முருகேசன்
ஈரோடு-சந்திரகுமார்
ராயபுரம்-பாபு
பூ ங் காநகர்-பாலசுப்பிரமணி யன்
பெரம்பூர்-ஜெ.லிங்கன்
அண்ணாநகர்-கண்ணன்
தி.நகர்-பாண்டியன்
சேப்பாக்கம்-ஜெயக்குமார்
மயிலாப்பூர்-வி.என்.ராஜன்
சைதாப்பேட்டை-இரா. வேணுகோபால்
பொன்னேரி- ஸ்ரீஅங்க முத்து.
திருவொற்றிïர்- எஸ். முருகன்.
வில்லிவாக்கம்- வேல் முருகன்.
திருத்தணி-ஆர். சேகர்
பள்ளிப்பட்டு-நேதாஜி
அரக்கோணம்-உஷா
சோளிங்கர்-பிரபாகரன்
நாட்ரம்பள்ளி-கையாஸ் பாஷா
செங்கம்-சுரேஷ்
கலசப்பாக்கம்-சங்கர்
அணைக்கட்டு-வெங்கடேசன்
வேலூர்-ராஜேந்திரன்
ஆரணி-ரமேஷ்
செய்யாறு-சுபமங்கலம்
பெரணமல்லூர்-கார்த்தி கேயன்
மேல்மலையனூர்-சந்திரதாஸ்
செஞ்சி-ராஜேந்திரன்
வானூர்-ராஜா
முகைïர்-வெங்கடேசன்
உளுந்தூர்பேட்டை- சண் முகம்
நெல்லிக்குப்பம்- சிவக் கொழுந்து
புவனகிரி-சபியூதீன்
காட்டுமன்னார்கோவில்- உமாநாத்
சிதம்பரம்-ராஜமன்னன்
மங்களூர்-மகாதேவன்
ரிஷிவந்தியம்-கோவிந்தன்
சங்கராபுரம்-செழியன்
ஓசூர்-சந்திரன்
தளி-ஹரி
காவேரிப்பட்டணம்- சின் ராஜ்
கிருஷ்ணகிரி-அன்பரசன்
பர்கூர்-கோவிந்தராஜ்
பாலக்கோடு-விஜய்சங்கர்
தர்மபுரி-பாஸ்கர்
பெண்ணாகரம்- தண்ட பாணி
மேட்டூர்-மாலதி
தாரமங்கலம்-சுரேஷ்
ஓமலூர்-கமலக்கண்ணன்
ஏற்காடு-ராமகிருஷ்ணன்
சேலம் 1-தனசேகரன்
ஆத்தூர்-இளங்கோவன்
தலைவாசல்-கீதா
ராசிபுரம்-ராஜா கவுண்டர்
சேந்தமங்கலம்-காந்தி
நாமக்கல்-அமுதா
கபிலர்மலை-செல்வி
திருச்செங்கோடு-பொங்கி யண்ணன்.
சங்ககிரி-ஈஸ்வரன்
மேட்டுப்பாளையம்- சரஸ் வதி
அவினாசி-ஆனந்தராஜ்
தொண்டாமுத்தூர்- டென் னிஸ் கோவில்பிள்ளை
சிங்காநல்லூர்-பொன்னு சாமி
கோவை கிழக்கு- மேரி ராணி
பேரூர்-ராஜசேகர்
கிணத்துக்கடவு-லதாராணி
பொள்ளாச்சி- மீனாட்சி சுந்தரம்
வால்பாறை-முருகராஜ்
உடுமலைப்பேட்டை- ஞான சம்பந்தன்
தாராபுரம்- ஜோதிப் பாண்டியன்
வெள்ளக்கோவில்- ஜெக நாதன்
பொங்கலூர்-சிவா
பல்லடம்-சுப்பிரமணி
காங்கேயம்-குமாரசாமி
மொடக்குறிச்சி- விக் டோரியா
பெருந்துறை-ரவிச்சந்திரன்
பவானி-கோபால்
அந்திïர்-ஜெகதீஸ்வரன்
கோபிசெட்டிபாளையம்- நடராஜன்
பவானிசாகர்-சுப்பிரமணி யன்
சத்தியமங்கலம்-மனோகர்
குன்னூர்-சிதம்பரம்
ஊட்டி- பெஞ்சமின் ஜேக்கப்
கூடலூர்-கிருஷ்ணமூர்த்தி
ஒட்டன்சத்திரம்-பாலசுப் பிரமணியம்
பெரியகுளம்-ஷாகுல்அமீது
தேனி-முருகன்
போடிநாயக்கனூர்- அட் சயகண்ணன்
கம்பம்-ஜெகநாத்
ஆண்டிப்பட்டி-வி.எஸ். சந்திரன்
சேடப்பட்டி-சாமுண்டீஸ் வரி
திருமங்கலம்-தனபாண்டி யன்
உசிலம்பட்டி-ஏ.கே.டி.ராஜா
நிலக்கோட்டை- நித்யா
திருப்பரங்குன்றம்- ராஜ மாணிக்கம்
மதுரை மேற்கு- மணி மாறன்
மதுரை கிழக்கு- தாமோ தரன்
சமயநல்லூர்-பாஸ்கரன்
வேலூர்-ராமகிருஷ்ணன்
நத்தம்-கணேசன்
திண்டுக்கல்-கார்த்திகேயன்
ஆத்தூர்- ராஜேஷ் பெரு மாள்
வேடசந்தூர்-வெங்கடாசலம்
அரவக்குறிச்சி-பஷீர்அகமது
கிருஷ்ணாராயபுரம்-முரு கன்
மருங்காபுரி-ஜமால்முகமது
குளித்தலை-விஸ்வநாதன்
தொட்டியம்-மனோகரன்
உப்பிலியாபுரம்-மூக்கன்
முசிறி-ராஜலிங்கம்
பெரம்பலூர்-மணிமேகலை
வரகூர்-கணபதி
அரியலூர்-ஜெயவேல்
ஆண்டிமடம்-பன்னீர்செல் வம்
ஸ்ரீரங்கம்-ரமேஷ்
திருச்சி1- சசிகலா முருகேசன்
திருச்சி 2- செந்தூரேஸ் வரன்
திருவெறும்பூர்-தங்கமணி
பூம்புகார்-அப்துல்காதர்
வேதாரண்யம்- வீர வினாயகம்
திருத்துறைப்பூண்டி- மோகன் குமார்
பட்டுக்கோட்டை- செந் தில்குமார்
பேராவூரணி-பழனிவேல்
ஒரத்தநாடு-ரமேஷ்
திருவோணம்-மோகன்
திருவையாறு-மகேந்திரன்
வலங்கைமான்-சித்ரா
திருவிடைமருதூர்-சங்கர்
கடலாடி- முகம்மது அலி ஜின்னா
விருதுநகர்-நாகேந்திரன்
சிவகாசி-ராஜேந்திரன்
ஸ்ரீவில்லிப்புத்தூர்-தாமோ தர கண்ணன்
சேரன்மகாதேவி- ராஜேந்திர பிரசாத்
கன்னியாகுமரி-சுப காயத்ரி

பச்சை கலரில் இருப்பவர்கள் பெண் வேட்பாளர் ( முதல் பட்டியலில் 18 பெண் வேட்பாளர்கள், இன்னும் நிறைய பேர் அடுத்த பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார் )

Update: விஜயகாந்த் பேட்டி


கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி சேர திமுக, அதிமுக கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்ததா?
பதில்: காலம் கடந்து கேட்கிறீர்கள். அக்கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், தனித்துப் போட்டியிட ஏற்கனவே நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

கே: உங்கள் கட்சி தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?
ப: இரண்டு அல்லது மூன்று நாட்களில் எங்களுடைய தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். நாளை மறுநாள் காஞ்சிபுரத்தில் இருந்து மீண்டும் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்குகிறேன்.

கே: உங்கள் கட்சி ஜெயிக்கும் தொகு திகள் எவை என்று கூற முடியுமா?
ப: காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. எங்களைக் கேட்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றுதான் சொல்வேன். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு எதிர்பாராமல் தங்கம் கிடைப்பதில்லையா?

கே: நீங்கள் போட்டியிட விருத்தாசலம் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?.
ப: விருத்தாசலம் தொகுதி எனக்கு பிடித்துள்ளது. அதனால் அங்கு போட்டியிட நான் முடிவு செய்தேன்.

கே: எந்த சின்னத்தில் போட்டியிட போகிறீர்கள்?
ப: தேர்தல் ஆணையத்திடம் மொத்தம் 170 தேர்தல் சின்னங்கள் உள்ளன. ஏப்ரல் 22ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பிறகு தேர்தல் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும். நாங்கள் தேர்தல் சின்னத்தை தேர்ந்தெடுத்த பிறகு அதனை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
எங்கள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் 18 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு 35 பெண்கள் களத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது.

கே: திமுக தனது தேர்தல் அறிக்கையில் இலவச கலர் டிவி, 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்று ஏராளமான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பது குறித்து உங்களுடைய கருத்து என்ன?
ப: தேர்தல் வந்தால் இதுபோன்ற அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடுவது சகஜம் தான்.

கே: 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி தர முடியுமா?
ப: திமுகவின் தேர்தல் அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கும் கருணாநிதி தனது முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுத்திருக்க வேண்டியதுதானே?

கே: அதிமுக, திமுகவை எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் செய்வீர்களா?
ப: நாங்கள் தனித்துப் போட்டியிடுவதால் இவ்வாறுதான் பிரச்சாரம் இருக்கும். எல்லா கட்சிகளையும் விமர்சனம் செய்து தான் பிரச்சாரம் செய்வோம்.

கே: எதைச் சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்வீர்கள்?
ப: வீடுதேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று நான் பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்த விஷயம் புதியது தானே.

கே: விஜயகாந்த் ஒரு பொருட்டல்ல என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதாக சொல்லப்படுகிறதே?
ப: சன் டிவியில் இவ்வாறு சொன் னதாக என்னிடம் சொன்னார்கள். பத்திரிகைகளில் ஜெயலலிதா இப்படி சொன்னதாக செய்தி வெளியானதை நான் பார்க்கவில்லை. அதனால் இதுபற்றி எதுவும் கூறுவதற்கில்லை.

14 Comments:

Muthu said...

idly,

vijaykanth at virudhachalam?what happened to madurai?opposing pmk at its den?

all the best captain

IdlyVadai said...

முத்து - எனக்கே கொஞ்சம் ஷாக் தான் :-)

Anonymous said...

All the Best for VJ,
Vote for him and his members as a
need of tamil nadu right now

Reasons are
1) He is new that does't mean he is good but our old Gaints DMK and ADMK will not let him do major correcption
becasue they have experiance and media in thier hands, so we can expect some improments.
2) can't give again to DMK or ADMK
because already they have became too big and its like a monopoly already there are no one to question them.

Please tell everyone to vote for VJ
tell your house servents and ask them to tell to everyone

tell them nobody can see thier votes

பட்டணத்து ராசா said...

muthu, even today if you release "cinna gownder" and sivaji there in vriddhachalam you can bet for "cinna gownder" for 40 days. And it has history of not many 100 days movies, except few, and the few are captain's movies.
i think that makes him to contest from there.

சம்மட்டி said...

ஆக எதிர்கட்சிக்காரங்க தொகுதிக்கு ஒரு ஓட்டு வீதம் 234 ஓட்ட இழக்க போறாங்கன்னு சொல்லுங்க !

நிலா said...

கேப்டனுக்கு தைரியம் அதிகம்தான். வாழ்த்துக்கள்

IdlyVadai said...

முதல் பட்டியலில் 18 பெண் வேட்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர். அடுத்த பட்டியலில் மேலும் அதிக அளவில் பெண் வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் என விஜயகாந்த் கூறியுள்ளார்.

IdlyVadai said...

விஜயகாந்த் பேட்டி அப்டேட் செய்திருக்கிறேன். சுவாரசியமான கேள்விகள் இருக்கிறது :-)

தயா said...

kadaisi kelvi thane andha suvarasiyam?

He is right about it. Jaya doesn't mention it even though it was a direct question about Vijayakanth. Instead she chose to answer DMK is the only enemy against us and rest doesn't matter. SUN interpreted it as they liked and her answer helped it.

Now link Vijyakanth's response with the predictions by Narayanan. Post elections, DMDK will join ADMK and get a minestrial birth. I feel this possibility is there if it resulted in a hung assembly.

Who knows as luck, Vijayakanth may win the medal. Naryanan bluntly said he will become a minister. It will help to answer later he doesn't mean what (chief?) minister it was!

சீனு said...

//ஆக எதிர்கட்சிக்காரங்க தொகுதிக்கு ஒரு ஓட்டு வீதம் 234 ஓட்ட இழக்க போறாங்கன்னு சொல்லுங்க ! //
ஏன் அந்த 234 ஓட்டு விழுகாதுன்னு சொல்றீங்க ;)

VSK said...

Hearty congratulations to the Gutsy Captain and wishing all the best!

He is the need of the hour to drive out both the kazhagams.

If the voters don't take advantage of this golden opportunity,then as Rajini said sometime back,
"thamizhnaattai aaNdavanaalum kuuda kaappRRa mudiyaadhu!"

Let us wish the Captain the Gold Medal!

தயா said...

ஏங்க விஜயகாந்த பேட்டியில் ஏப்ரல் 22க்கு பிறகு சின்னம் ஒதுக்குவார்கள் என்கிறார். மே எட்டில் தேர்தல். இவரோ 2-ம் கட்ட பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டார். சுவர் விளம்பரம் செய்தால் வழக்கு போடும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. பத்து நாள்களில் சின்னத்தை எப்படி பிரபலபடுத்த முடியும்? இதில் தேர்தல் ஆணையம் முன்னேற்றம் காண வேண்டாமா?

barathi said...

தேர்தல் பிரசாரத்துக்கு ஸ்டார் நைட் எல்லான் உண்டா கேப்டன்...
ஆனா இந்த விசயத்தில நீங்க ரஜினிய விட 1000 தடவை மேல். ஆனா, உங்க முடிவை நீங்க பஞ்சாயத்து தேர்தலில் எடுத்து இருந்தா கட்டாயம் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும்
வாழ்த்துக்கள்.

barathi said...

தேர்தல் பிரசாரத்துக்கு ஸ்டார் நைட் எல்லான் உண்டா கேப்டன்...
ஆனா இந்த விசயத்தில நீங்க ரஜினிய விட 1000 தடவை மேல். ஆனா, உங்க முடிவை நீங்க பஞ்சாயத்து தேர்தலில் எடுத்து இருந்தா.கட்டாயம் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும்
வாழ்த்துக்கள்.