பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 30, 2006

தேர்தல் கமிஷன் - சரியா ? தவறா ?


தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக கடந்த 2 நாட்களாக சென்னையில் தாண்டன் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நவீன்சாவ்லா, கோபாலசாமி ஆகியோர் முகாமிட்டு இருந்தனர். இந்தப் பணிகள் நேற்று முடிவடைந்தன. அதைத் தொடர்ந்து சென்னையில் ராஜ்பவனில் நிருபர்களுக்கு தலைமைத் தேர்தல் கமிஷனர் தாண்டன் பேட்டி அளித்தார்.

சோனியா பற்றி ஒரு கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

".....சோனியாகாந்தி மீதான புகாரும் தேர்தல் கமிஷனுக்கு வந்துள்ளது. இதுபோன்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக பல கட்ட விசாரணைகளை கடந்து செல்ல வேண்டும். கூறப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு உண்மை உள்ளதா? புகாருக்கு ஆதாரங்கள் உள்ளதா? என்பதை முதலில் அறிய வேண்டும். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரிடம் எழுத்துப் பூர்வமான பதில் பெற வேண்டும். அதைத் தொடர்ந்து புகார் கூறியவரையும் குற்றம் சாட்டப்பட்டவரையும் நேரில் அழைத்து கருத்து கேட்க வேண்டும். அதன் பின்னரே இந்த விவகாரத்தில் நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம். அந்த முடிவின் படி, அறிக்கை தயாரித்து ஜனாதிபதிக்கு (எம்.பி. என்றால்) அல்லது கவர்னருக்கு அனுப்பி வைப்போம். அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இதுதான் வழக்கமான நடவடிக்கை. இதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. புகார் மீது முடிவு எடுப்பதற்கு முன்பாக, இதுபோன்ற விவகாரங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள உத்தரவுகளை ஆராய்வோம்"

ஆனால் சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றும் விஷயத்தில், தேர்தல் கமிஷன் இப்படி நிதானமாக செயல்படவில்லை. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. மகளிர் தினத்தையொட்டி 'டெக்கான் க்ரானிகல்' பத்திரிக்கை பலரின் கருத்துக்களை பெற்று, சிறிய செய்திகளாக வெளியிட்டது. போலீஸ் கமிஷனர் நடராஜ் 'தன்னுடைய சொந்த மற்றும் தொழில் ரீதியான விஷயங்களை நன்கு கவனிக்கிற பெண்மணிகள் சிறப்பானவர்கள். நமது முதல்வர் ஜெயலலிதா இதற்கு சிறந்த உதாரணம். எல்லா பெண்மணிகளும் அவரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்' என்று அந்தத் தொப்பில் கருத்து தெரிவித்திருக்கிறார். இது அவர் கருத்து. அதனால் இது தேர்தலை எப்படி பாதிக்கும் விஷயமாக கருத முடியும் ? இது தேர்தல் விதியை மீறிய செயல் என்று யாரும் கருத வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் கமிஷனரிடம் அல்லது தமிழக அரசிடம் விளக்கம் கூட கோரப்படவில்லை. புகார் வந்தவுடன் உத்தரவு என்று சூப்பர் ஃபாஸ்டாக செயல்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசுக்கு மூன்று பெயர்களை கொடுத்து அதிலிருந்து ஒருவரை போலீஸ் கமிஷனராக நியமிக்க சிபாரிசு செய்தது. இது கொஞ்சம் ஓவர். போலீஸ் கமிஷனரை தேர்ந்தெடுப்பது மாநில அரசின் வேலை.

ஒரு முறை தேர்தல் சம்பந்தமாக ஒரு அதிகாரி மாற்றப்பட்டால் அவர் ரிடையர் ஆகும் வரை தேர்தல் வேலைகளை கவனிக்க முடியாது என்று இருக்கிறது.
தேர்தல் கமிஷனின் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை தடுக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு.

சென்னை போலீஸ் கமிஷனரை இடமாற்றம் செய்த விவகாரம் தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதன் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று தெரிகிறது. பார்க்கலாம்.

கார்ட்டூன் உதவி : மதி, தினமணி

3 Comments:

சீனு said...

//எல்லாவற்றுக்கும் மேலாக புதிய தமிழக அரசுக்கு மூன்று பெயர்களை கொடுத்து அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்லியிருக்கிறது//

சற்று விளக்கவும்.

IdlyVadai said...

சீனு - மாற்றிவிட்டேன். நன்றி.

தயா said...

நவீன் சாவ்லா ஏற்கனவே சோனியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக பா.ஜ.க சொல்லிக்கொண்டிருந்தது. அவருடைய பேட்டியும் அப்படித்தான் இருக்கிறது. சென்னை கமிஷனரை மாற்ற உடனடியாக உத்தரவு போட்டவர்கள் சோனியா விவகாரத்தில் விசாரனை வேண்டும் என சொல்கிறார்கள். தேர்தல் ஆணையமும் மெல்ல காங்கிரஸின் பிடிக்குள் வருகிறது போல!