பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 29, 2006

திமுக தேர்தல் அறிக்கை மற்றும் கலைஞர் பேட்டி

இன்று கலைஞர் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் விவரம்:

* தமிழகத்திலுள்ள எல்லா விமான நிலையங்களிலும் வந்து போகும் விமானங்களிலும் செய்யப்படும் அனைத்து அறி விப்புகளும் தமிழ் மொழியிலும் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம்.

* தமிழ் அறிஞர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படவிருக்கும் விருதுகளுக்கு "தொல்காப்பியர் விருது'', "திருவள்ளுவர் விருது'' என்று பெயர் வைத்திடுமாறு வலியுறுத்துவோம்.

* திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பதற்கு வலியுறுத்துவோம்.

* சிறு குறு விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட கூட்டுறவுக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வோம்.

* கரும்பு விவசாயிகள் இதுவரை செலுத்தி வந்த லாரி வாடகையை நிர்வாகமே செலுத்த வழி வகை செய்வோம்.

* தமிழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 55 இலட்சம் ஏக்கர் தரிசு நிலங்களைப் பயன்படுத்தி, நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம்.

* தென் மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.

* கிராமப்புறக் குடிசைத் தொழில், மற்றும் சுய வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட கிராமப்புற குறுநிதிக் குழுக்களை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவோம்.

* கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள் இயற்கை மரணமடைந்தால் அவர்கள் கூட்டுறவு வங்கி களுக்கு செலுத்த வேண்டிய கடனும் வட்டியும் அறவே தள்ளுபடி செய்வோம்.

* சிறு வாணிபம் செய்வோர் வளம் பெறவும் அவர்கள் தண்டல் வட்டியிலிருந்து விடு படவும் கூட்டுறவு வங்கி களின் மூலம் எளிய முறையில் வாராந்திரக் கடன் பெற உரிய நடவடிக்கைகள் மேற் கொள்வோம்.

* மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள ஆசிரி யர் பணி இடங்களை உடனடியாக நிரப்புவோம்.

* மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற குறிக்கோளை நடை முறைப் படுத்துவோம்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசுக் கல்லூரி யில் ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பும் பட்டயப் படிப்பும் துவக்க நடவடிக்கை மேற் கொள்வோம்.

* பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கு அவர்களுடைய முழுக்கல்விக்கட்டணம் தங்கும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை அரசே ஏற்று அவர்கள் கல்வி பெற துணை நிற்போம்.

* மாணவர்களுக்கு சத்துணவோடு வாரம் இரண்டு முறை, திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முட்டை வழங்கப்படும்.

* விளையாட்டரங்கங்கள் இல்லாத மாவட்டத் தலைநகரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

* கிராமப்புற இளைஞர்களுக்கு கணினிப் பயிற்சி எட்டாக்கனியாக இருப்பதால் கிராமப் பகுதிகளில் கணி னிப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு, இலவசமாகப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடை முறைப்படுத்துவோம்.

* தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியைப் பயன்படுத்தி கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்கி வேலை வாய்ப்பு பெருகுவதற்கு முயற்சி மேற் கொள்வோம்.

* அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 300 ரூபாய் வழங்குவோம்.

* மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களுடைய வரு மானத்தை பெருக்கிக்கொள் ளும் வகையில் உணவுப் பொருட்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* தற்போதுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை போலவே, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக சுய உதவிக் குழுக்கள் திட்டம் ஒன்றை புதிதாக தொடங்குவோம்.

ஐந்தாண்டு காலமாக கூட் டுறவு தேர்தலையே நடத்த வில்லை என்பதை சுட்டிக்காட்டுவதோடு உடனடியாக கூட்டுறவு தேர்தல்களை நடத்துவோம்.

* நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைக்கு தற்போது கிலோ அரிசி ரூ.3.50 என்று விற்பதற்கு பதிலாக கிலோ அரிசி இரண்டு ரூபாய் வீதம் தரமான அரிசி வழங்கி தாய் மார்களின் உள்ளத்தை குளிர்விக்கும் பபசாதனை புரிவதுடன், தாய்மார்களின் பொழுது போக்குகளை மனதில் கொண்டு, பொது அறிவை பரப்புவதற்கும் பயன் படும் வகையில் தொலைக் காட்சி பெட்டியில்லாத ஒவ்வொரு வீட்டுக்கும் அறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்களையொட்டி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங் கும் திட்டம் தொடங்கப் பட்டு செயல்படுத்தப்படும்.

* கருவுற்ற ஏழை பெண்களுக்கு மகப்பேறுக்கு முன் மூன்று மாதங்களுக்கும், பின் மூன்று மாதங்களுக்கும் பேறு கால உதவியாக மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும்.

* ஏழையெளிய மக்களின் சமையல் எரிவாயு கடன்களை ரத்து செய்து, மீண்டும் தாய் மார்கள் சமையல் எரி வாயு அடுப்பு பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
* தமிழகத்தில் உள்ள அனைத்து நகர பகுதிகளிலும் அனுமதியில்லாமல் இதுவரை கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வோம். அந்த பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்போம்.

* தமிழகத்தில் உள்ள முக்கிய இரண்டு வழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாகவும், நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாகவும் படிப்படியாக மாற்றுவோம்.

* சென்னை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையையும், வாகன எண்ணிக் கையையும் கருத் தில் கொண்டு முக்கிய சந்திப்பு களில் புதிய பாலங்கள், மேம் பாலங்கள் அமைக்க ஆவன செய்வோம்.

* கிழக்கு கடற்கரை சாலையை கடலூர் தொடங்கி கன்னியாகுமரி வரை விரிவு படுத்துவதோடு, இருவழிச் சாலைகள் நான்கு வழிச்சாலை களாக மாற்றப்பட நடவடிக்கை எடுப்போம்.

* சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பெருநகர் மெட்ரோ சுரங்க வழி ரெயில் போக்குவரத்தை கொண்டு வருவோம்.

* தஞ்சையில் உள்ள ராணுவ விமானதளத்தை பொது மக்கள் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றிட முயற்சிகள் மேற்கொள்வோம்.

* மத மாற்ற தடைச்சட்டத்தை நீக்குவோம்.

* ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அனைத்து மதங்களிலும் இருக்கின்ற ஆதிதிரா விடர்களுக்கும் கிடைக்குமாறு செய்வோம்.

* மதிப்புக்கூட்டு வரியை நடைமுறைப்படுத்த மாட்டோம்.

* சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை எதிர்ப்போம்.

* முதியோர், ஊனமுற்றோர், கணவனால் கை விடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் போன்றவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் இரு நூறு ரூபாய் ஓய்வூதியம் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டு எண்ணிக்கை வரம்பு எதுவுமின்றி வழங்குவோம்.

* வேலை வாய்ப்பில் ஊன முற்றவர்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 200 ரூபாய் என்பது 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

சேலம், ஈரோடு, காஞ்சீபுரம், கரூர், அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில் நெசவுத் தொழில் சார்ந்த பூங்காக்களை அமைப்பதற்கு பாடுபடுவோம்.

* கிழக்கு கடற்கரை குதிகளிலும் மற்றும் கச்சத்தீவு அருகிலும் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், கடத்தப்படுவதையும், சுட்டுக்கொல்லப்படுவதையும் தடுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

* சுனாமி நிவாரண நிதி வழங்கியதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும், உண்மையான பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நிதி உதவி வழங்காதது குறித்தும் முறைகேடான முறையில் ஆளுங்கட்சியினருக்கு வழங் கப்பட்ட நிதி உதவி குறித்தும் விசாரணை நடத்துவோம்.

* உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி சுற்றுலாத் தளங்களில் கம்பி வழி ஊர்திகள் அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்வோம்.

* திருவள்ளுவர்பபபசிலையை அருகில் சென்று காண்பதற்கு நவீன படகு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவோம்.

* கண்ணகி சிலை மீண்டும் கடற்கரை சாலையில் அதே இடத்தில் நிறுவுவோம்.

* ரயில் கட்டண அளவுக்கு பேருந்து கட்டணத்தை சீராக்குவோம்.

* சினிமா வெளிப்புறக்காட்சி படப்பிடிப்புக்கு அரசு உயர்த்தியுள்ள கட்டணங்களை பெரிதும் குறைப்போம்.

* எம்.ஜி.ஆர். திரைப்பட நகரை, மீண்டும் புதிதாக உருவாக்குவோம்.

* நடிகர் திலகம் சிவாஜிக்கு பாண்டிச்சேரி அரசு அமைத்துள்ளது போன்ற சிலையையும், அத்துடன் மணி மண்டபத்தையும் விரைவில் அமைப்போம்.

* பெருந்தலைவர் காமராஜருக்கு பல நினைவு சின்னங்களையும், குமரிமுனையில் மணி மண்டபத்தையும் அமைத்துள்ள தி.மு.க. அரசு காமராஜர் பிறந்த நாளாம் ஜுலை 15-ந் தேதியை கல்விக்கண் திறந்த நாளாக அறிவித்து பள்ளிகளில் விழா எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.

சென்னை புறநகர் பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள ஏரிப்பகுதிகளை சீரமைத்து புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்க செயல் திட்டங்களை வகுப்போம்.

தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டு வர உரிய அரசியல் சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.

* `டெஸ்மா' சட்டத்தை அறவே ரத்து செய்வோம்.

* மத்திய அரசு தற்போது அமைக்க முன் வந்துள்ள 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்திலும் உடனடியாக நடைமுறைப்படுத்துவோம்.

* காவலர் குறை தீர்க்க, காவல்துறை மறுமலர்ச்சி பெற மூன்றாவது போலீஸ் கமிஷன் அமைப்போம்.

* கிராமப்புற மாணவர்கள், விவசாயிகள் வணிகர்கள் பயன்பெறும் வகையில் கழக ஆட்சிக் காலத்தில் இயக்கப்பட்ட சிறிய பேருந்துகளை மீண்டும் அறிமுகப்படுத்துவோம்.

* சென்னை மாநகரிலே போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகி உள்ள பகுதிகளில் `பறக்கும் சாலை' திட்டத்தைச் செயல்படுத்துவோம்.

* சென்னை நகரின் முக்கிய வணிக மையங்கள் பணி இடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பல அடுக்கு மாடி கார் நிறுத்துமிடங்களை கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்வோம்.

இதை தொடர்ந்து கலைஞர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்:

கேள்வி:- தேர்தல் அறிக்கையில் இலவச டி.வி. வழங்கப்படும் என்று கூறியுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இவை வழங்கப்படும்.

பதில்:- வண்ண டி.வி. பெட்டி இருக்கிறதா இல்லையா என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

கே:- ரேசன் அரிசி கிலோ 2 ரூபாய்க்கு வழங்குவதாக கூறியுள்ளீர்கள். யாருக்கு எல்லாம் வழங்கப்படும்.

ப:- ரேசன் அரிசி வாங்கும் எல்லா குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.

கே:- வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?

ப:- இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். இதே போன்று திடீரென்று பட்டியல் வெளியிடப்படும். தாமதமாக வந்தாலும் தரமான பட்டியலாக இருக்கும்.

கே:- தி.மு.க. சந்திக்கும் கடைசி தேர்தல் இது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

ப:- அது அவர்கள் பண்பாட்டை காட்டுகிறது.

கே:- அரசியல் எதிரிகளால் தேர்தல் ஆணையம் அரசு திட்டங்களுக்கு தடை போட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே?

ப:- தேர்தல் ஆணையம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு இரு சாரா ருக்கும் துணை போகக்கூடாது என்ற அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.

அதன் செயல்பாட்டிலும், நடவடிக்கையிலும் நோக்கம் கற்பிக்கும்போது பதில் சொல்ல வேண்டியது அதன் பொறுப்பு.

கே:- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முக்கியமாக எதை கருதுகிறீர்கள்.

ப:- மத்திய சர்க்கார் நிகழ்ச்சிகளில் கருணாநிதி இனி கலந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்வோம் என்பது முக்கிமான விஷயம். இது மக்களுக்கு தேவையான ஒன்று.

கே:- நுழைவு தேர்வு மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே?

ப:- இது சட்டம் ஆக்கப்படுவது அரசு ஆணை வெளியிடுவது, நீதிமன்ற தீர்ப்புகள் வருவது, அதை சரி செய்ய திருத்தம் செய்வது என்று மாணவர்கள் மத்தியில் இரண்டு ஆண்டாக குழப்பம் இருந்து கொண்டிருக்கிறது.

கே:- கூட்டணி ஆட்சி வராது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே.

ப:- அது அவரது கருத்து.

கே:- மத்திய அரசு திட்டங்களுக்கு தடை போடப்ப டுவதாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதே?

ப:- மத்திய அரசு பெருந்தன்மையாக பதில் சொல்லாமல் இருக்கலாம். அந்த பொறுப்பில் இருந்து மக்க ளுக்கு உண்மையை சொல்ல வேண்டியது எங்களை போன்றவர்களின் கடமை.

கே:- உழவர் சந்தை திட்டம் திரும்ப வருமா?

ப:- நாங்கள் திரும்பி வந்தால் எல்லாம் வரும்.

12 Comments:

Anonymous said...

idlycadai,
Is it complete? I think some things like Reservation for Minorities, Sri lankan issue etc. are missing...

Voice on Wings said...

//* தமிழகத்திலுள்ள எல்லா விமான நிலையங்களிலும் வந்து போகும் விமானங்களிலும் செய்யப்படும் அனைத்து அறி விப்புகளும் தமிழ் மொழியிலும் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம்.//

//* தற்போதுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை போலவே, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக சுய உதவிக் குழுக்கள் திட்டம் ஒன்றை புதிதாக தொடங்குவோம்.//

//* ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அனைத்து மதங்களிலும் இருக்கின்ற ஆதிதிரா விடர்களுக்கும் கிடைக்குமாறு செய்வோம்.//

//* சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை எதிர்ப்போம்.//

//* சென்னை புறநகர் பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள ஏரிப்பகுதிகளை சீரமைத்து புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்க செயல் திட்டங்களை வகுப்போம்.//

உருப்படியான வாக்குறுதிகள் என்று எனக்குத் தோன்றுவது இவையே. மற்றவையெல்லாம், (1) மக்களின் உணர்வுகளைக் குறி வைத்து, மயக்கி, அதன் காரணமாக ஓட்டு வாங்கும் உத்திகளோ, அல்லது (2) நடைமுறைப் படுத்த முடியாது என்று தெரிந்தே அளிக்கப்படும் வாக்குறுதிகளோ (உ-ம், தரிசு நில விநியோகம். இதை எவ்வளவு முறை கேட்டாகி விட்டது, ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும்?), அல்லது (3) கஜானாவை காலி செய்யும் திட்டங்களோதான் (உ-ம், இரண்டு ரூபாய் அரிசி, கடன் தள்ளுபடி etc.)

சதயம் said...

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை விட நேர்த்தியானதாகவே தோன்றுகிறது...இந்த அறிக்கை.

மக்களின் தேவைகளை விட அவர்களின் உணர்வுகளைக் குறிவைத்து உறுவாக்கப்படும் தேர்தல் அறிக்கைகள் இனி எடுபடாது என்பதும் என் கருத்து.

selvan said...

ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அனைத்து மதங்களிலும் இருக்கின்ற ஆதிதிரா விடர்களுக்கும் கிடைக்குமாறு செய்வோம்.

Is there any SC in other religion?

இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங் கும் திட்டம் தொடங்கப் பட்டு செயல்படுத்தப்படும்

Can we see Jaya TV?

selvan said...

MK should have announced free issue of tamil murasu,murasoli,dinakaran,kunkumam etc.

Sivabalan said...

By and large the manifesto is good. But they did not speak about the revenue part where the DMK can meet their promise.

Or is it only Election Promise?

We have to wait and see.

Anonymous said...

"தமிழகத்தில் உள்ள முக்கிய இரண்டு வழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாகவும், நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாகவும் படிப்படியாக மாற்றுவோம்.

* சென்னை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையையும், வாகன எண்ணிக் கையையும் கருத் தில் கொண்டு முக்கிய சந்திப்பு களில் புதிய பாலங்கள், மேம் பாலங்கள் அமைக்க ஆவன செய்வோம்.

* கிழக்கு கடற்கரை சாலையை கடலூர் தொடங்கி கன்னியாகுமரி வரை விரிவு படுத்துவதோடு, இருவழிச் சாலைகள் நான்கு வழிச்சாலை களாக மாற்றப்பட நடவடிக்கை எடுப்போம்.

* சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பெருநகர் மெட்ரோ சுரங்க வழி ரெயில் போக்குவரத்தை கொண்டு வருவோம். "

உருப்படியான இன்னும் நான்கு வாக்குறுதிகள்.

Anonymous said...

Can he do it from his own money? All are directed at enriching his family business.. Engum Family!!! Ethilum Family!! appuram than mathathulam..

IdlyVadai said...

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சொல்லியிருக்கலாம்.

Voice on Wings said...

//"தமிழகத்தில் உள்ள முக்கிய இரண்டு வழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாகவும், நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாகவும் படிப்படியாக மாற்றுவோம்.

* சென்னை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையையும், வாகன எண்ணிக் கையையும் கருத் தில் கொண்டு முக்கிய சந்திப்பு களில் புதிய பாலங்கள், மேம் பாலங்கள் அமைக்க ஆவன செய்வோம்.

* கிழக்கு கடற்கரை சாலையை கடலூர் தொடங்கி கன்னியாகுமரி வரை விரிவு படுத்துவதோடு, இருவழிச் சாலைகள் நான்கு வழிச்சாலை களாக மாற்றப்பட நடவடிக்கை எடுப்போம்.

* சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பெருநகர் மெட்ரோ சுரங்க வழி ரெயில் போக்குவரத்தை கொண்டு வருவோம். "

உருப்படியான இன்னும் நான்கு வாக்குறுதிகள்.//

அனானிமஸ், இவையே 'சந்திரபாபு நாயுடு திட்டங்கள்' எனப்படுபவை. நகரங்களிலுள்ள, ஓட்டுப்போடாத, மேல்தட்டு வர்க்கங்களுக்கு இவற்றால் பிரயோசனமிருக்கலாமென்பதால்,் இவற்றைச் செயல்படுத்துவதால் அவர்களது மதிப்பையும், பாராட்டையும் வேண்டுமானால் அள்ளிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஓட்டுப்போடும், தெருவில் நடக்கும் பொதுஜனத்திற்கு இவற்றால் அதிகப் பயன் கிடையாது என்பதால், இத்திட்டங்கள் மறுமுறை ஆட்சியைக் கைப்பற்ற உதவாது.

//காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சொல்லியிருக்கலாம்.//

இட்லிவடை, இப்படில்லாம் சொல்லி கிச்சு கிச்சு மூட்டறீங்களே :) காவிரிப் பிரச்சனையை உயிர்ப்போடு வைத்திருப்பதில்தான் சகல கட்சிகளின் வருங்காலமே உள்ளது.

எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுது, வறுமை ஒட்டுமொத்தமா ஒழிஞ்சிடுதுன்னு வெச்சிக்கோங்களேன், அதுக்கப்பறம் அரசியல்வாதிக்கு தேவையே இல்லாம போயிடுமில்லையா? அதுனால, எந்த பிரச்சனையும் தீராது, கவலைப்படாதீங்க :)

தயா said...

2 ருபாய் அரிசி , வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் எவ்வளவு போலியானவை. இந்த அரிசி விலை எத்தனை தேர்தல்களில் வாக்குறுதிகளில் இருக்கிறது தெரியுமத? மக்களுக்கு எந்த வித பிரயோஜனமும் செயல்படுத்துவதற்கான சாத்தியங்களும் இல்லாத திட்டம். இலவசமாய் கிடைக்கும் என ஓட்டுப்போடுபவர்கள் சிந்திக்க வேண்டும்.

விஜயகாந்த் ஆசிரியர்களுக்கு வேலை தரப்படும் என்றவுடன் அதிமுகவும் திமுகவும் அதை தங்கள் வாக்குறுதிகளில் சேர்த்திருக்கின்றன. சைக்கிள் தரும் போது அதைவிட செலவும் வண்ணமும் தரும் டிவியால் கேபிள் தொலைகாட்சிகளில் "நிம்மதி" பார்த்துக்கொண்டு மக்கள் அடுத்த நூற்றாண்டுக்கு தயாராகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதி.

எந்த வித தொலைநோக்கு பார்வையில்லாமல் அளிக்கப்படும் வாக்குறுதிகளை நம்பி ஓட்டுப்போடுபவர்கள் தங்கள் வருங்கால சந்ததியனருக்கு மிகப்பெரும் துரோகம் செய்கிறார்கள்.

barathi said...

நல்ல வேளை வீரப்பன் உயிரோடு இல்லை. இல்லையென்றால் "வீரப்பனுக்கு பொது மன்னிப்பும்" ஒரு தேர்தல் வாக்குறுதியாய் இருந்திருக்கும்.