பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 28, 2006

மீண்டும் அதிமுக ஆட்சி - ஜெ பேட்டி

கேள்வி: வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?

பதில்: வேட்பாளர் தேர்வில் பல விஷயங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

கழகத்துக்கு ஆற்றிய சேவை, சீனியாரிட்டி, எதிர ணியில் எந்த கட்சி நிற்கிறது. யார் போட்டியிடுகிறார்கள் என்றெல்லாம் ஆராயப் பட்டது. எத்தனை பேர் விண் ணப்பம் கொடுத்தார்கள் என்ற விவரத்தை கூட இப் போது தான் வெளியிட்டேன். அதற்கு காரணம், தமிழகத்தில் போட்டியிட விண்ணப்பித்த 11 ஆயிரத்து 850 பேரில் 182 பேருக்குத்தான் வாய்ப்பளிக்க முடிந்தது.

அ.தி.மு.க. வரலாற்றில் இந்த முறை தான் இவ்வளவு இடங்களில் கழகம் போட்டி யிடுகிறது. வாய்ப்பு கிடைக்காத வர்களுக்கு தகுதி இல்லை என்று பொருள் அல்ல.

விண்ணப்பித்த கழக உடன்பிறப்புகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் வருத்தப் பட வேண்டாம். வருத்தப்படக் கூடாது. ஒரே தொகுதியில் தகுதி உள்ள பல பேர் இருக்கி றார்கள். கல்வி தகுதி, கழகத் துக்கு பணியாற்றிய தகுதி, மக்களுக்கு செய்த சேவை இப்படி பல அளவுகோல்கள் பார்க்கப்பட்டன. மற்றவர் களுக்கும் தகுதி இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

எத்தனையோ பேர் நீண்ட காலம் கழக பணியாற்றி உள்ளனர். உதாரணத்துக்கு துரை கோவிந்தராஜன் 20 ஆண்டுகாலம் கழக பணியாற்றினார். இப்போது தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டு இருக்கிறது.

ஆகவே வாய்ப்பு கிடைக் காதவர்கள் வருத்தப்பட வேண்டாம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் வரும்போது வாய்ப்பு அளிக்கப்படும்.

கே: புதுமுகங்களை நிறைய நிறுத்தி உள்ளீர்களே?

ப: நான் எதை செய்தாலும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டேன்.

கே: எதை முன் வைத்து பிரசாரம் செய்வீர்கள்?

ப: கடந்த 5 ஆண்டுகள் மக்களுக்கு கழக அரசு ஆற் றிய சாதனைகளையும் மக்க ளுக்காக செய்த நன்மைகளை யும் முன் வைத்து பிரசாரம் செய்வோம்.

கே: கேரளாவில் நிறைய தொகுதிகளில் நிற்கிறீர்களே? காரணம் என்ன?

ப: கேரளாவில் எங்களுக்கு அமோக ஆதரவு இருப்பதாக பல்வேறுபட்ட தகவல்கள் மூலம் அறிந்தோம். எங்கள் பலத்தை சோதிக்க விரும்பினோம். இதனால் நாங்கள் இழக்கப்போவது எதுவும் இல்லை. கேரளாவில் இது புது அனுபவம்.

கே: தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வும், காங்கிரசும் நெருங்க வாய்ப்பு உள்ளதா?

ப: அந்த மாதிரி நாங்கள் நினைக்கவில்லை. அதற்கான சாத்தியம் இருப்பதாகவும் நினைக்கவில்லை.

மக்கள் தீர்மானிப்பார்கள்

கே: சோனியா ராஜினாமா வால் அ.தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பு இருக்குமா?

ப: தமிழக தேர்தலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் மக்கள் தீர்மானிக்க உள்ளனர்.

182 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்

கே: எத்தனை தொகுதிகளில் ஜெயிப்பீர்கள்?

ப: 182 தொகுதியிலும் பெற்றி பெறுவோம்.

கே: கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

ப: அ.தி.மு.க. தமைமை யிலான மக்கள் ஜனநாயக கூட்டணிக்கு மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது. 234-ல் மெஜாரிட்டி தொகுதி களில் இக்கூட்டணி வெற்றி பெறும்.

கே: கூட்டணி ஆட்சி தான் வரும் என்று பேசப்படு கிறதே?

ப: நாங்கள் தனிப்பெரும் பான்மையோடு ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டில் அமையாது.

கே: விஜயகாந்தால் உங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்குமா?

ப: அ.தி.மு.க.வை பொறுத்த வரை தமிழ்நாட்டில் நாங்கள் அரசியல் ரீதியாக எதிரியாக கருதுவது தி.மு.க.வை மட்டும்தான். போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தான்.

தேர்தலில் பரம எதிரியான தி.மு.க.வை தோற்கடிப்போம். அ.தி.மு.க. சந்திக்கும் கடைசி தேர்தல் இது தான். அடுத்த தேர்தலில் பரம எதிரியை சந்திக்கும் சூழ்நிலை இருக்காது.

கே: மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பிரசாரம் செய்வீர்களா?

ப: அதை பெரிய விஷயமாக எடுக்கவில்லை

0 Comments: