பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 24, 2006

சோனியா ராஜினாமா ஒரு நாடகம் - ஜெ

"சோனியாகாந்தி ராஜினாமா என்ற பெயரில் பெரிய நாடகத்தை நடத்தி தனது சுயரூபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இது போன்ற நாடகங்களை வெளிப்படுத்துவது வழக்கமானதுதான்.

ஆதாயம் தரும் பதவி விதியின்படி அவர் பதவி பறிக்கப்பட இருந்தது. எனவே முன் கூட்டியே ராஜினாமா செய்துதான் நேர்மையானவர் என்பதுபோல மாய தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து இருக்கிறார். பதவியில் தொடர்வதற்கு வேறு வழியே அவருக்கு இல்லை. எனவே ராஜினாமா செய்துள்ளார்.

2004-ம் ஆண்டு இதே போல மிகப்பெரிய நாடகத்தை ஆடி நாட்டுக்கு பெரிய தியாகம் செய்தவர் போல காட்டிக்கொண்டார். ஆனால் தேசிய ஆலோசனை குழு தலைவர் பதவியில் அமர்ந்து இந்த அரசையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். இப்போது இன்னொரு நாடகத்தை நடத்தி நாட்டு மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்.

2004-ல் தன்னையே பிரதமர் வேட்பாளராக அவரே முன் நிறுத்தினார். கூட்டணி கட்சிகளையும் ஆமோதிக்க வைத்தார். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்திலும் தன்னை தலைவராக தேர்ந்தெடுக்க வைத்தார். அவர் பதவி வகிக்க முடியாது என்று வந்ததும் மன்மோகன்சிங்கிடம் பதவியை கொடுத்து விட்டு பெரிய தியாகம் செய்தது போல நாடகத்தை அரங்கேற்றினார்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெயாபச்சன் பதவியை பறிக்க காரணமாக இருந்தார். அதே பிரச்சினை தனக்கு வந்தபோது அவசர சட்டத்தை கொண்டு வந்து காப்பாற்றி கொள்ள முயன்றார். அதில் சிக்கல் வந்ததால் இப்போது இந்த நாடகத்தை நடத்தியுள்ளார்.

இதை யாரும் கண்டு கொள்ள போவதில்லை. இது எமர்ஜென்சி காலத்தில் நடந்த நாடகத்தை நினைவூட்டுவது போல உள்ளது.

சோனியாகாந்தி பதவியை காப்பாற்ற அவசர சட்டத்தை கொண்டு வருவதற் காகத்தான் பாராளுமன்றத்தை காலவரையின்றி ஒத்தி வைத்தனர். இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? காரணமே இல்லாமல் சபையை ஒத்தி வைத்து மரபுகளையே மீறி இருக்கிறார்கள்.

சோனியாகாந்தி, எம்.பி. மற்றும் தேசிய ஆலோசனை குழு தலைவர் பதவியை மட்டும்தான் ராஜினாமா செய்து இருக்கிறார். ராஜீவ்காந்தி அறக்கட்டளை, குழந்தைகள் நல கவுன்சில் உள்பட பல பதவிகளில் இப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இவை இன்னும் ஆதாயம் பெறும் பதவி பட்டியலில் காட்டப்படவில்லை.

கம்யூனிஸ்டு கட்சிகளும் இதே போன்ற பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களும் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். அவர்களும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

சோனியாகாந்தி பதவி பறிப்பு தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு ஏற்கனவே புகார் அனுப்பப்பட்டு இருந்தது. அவசர சட்டம் அதன் பிறகுதான் கொண்டு வர முயற்சி நடந்தது. அவசர சட்டம் கொண்டு வந்தாலும் புகார் முன்கூட்டியே சென்றுவிட்டதால் அவசர சட்டத்தால் பலன் இருக்காது என்பதால் திட்டத்தை மாற்றி விட்டனர்"

2 Comments:

Anonymous said...

ஜெ யின் கருத்து சரி என்றே தோன்றூகிறது.அரசியல இதலாம் சகஜமப்பா

ஜெகன்

VSK said...

IF AT ALL THERE IS A VERY GOOD ANOLOGY FOR "POT CALLING THE KETTLE BKACK", THIS IS IT!!

INSTEAD OF CALLING IT AS 'SAHAJAM', WHEN ARE WE GOING TO TAKE RESPONSIBILITY FOR IT??