பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 21, 2006

தாம்ப்ராஸ் அரசியல் கட்சி - ம.தே.ஜ.க

(TAMBRAS) தாம்ப்ராஸ்(*) - தமிழ் நாடு பிரமணர்கள் சங்கம். 'மக்கள் தேசிய ஜனநாயக கட்சி' (மதேஜக) என்ற புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஜாதி மதம் என்ற வேறுபாடு இல்லாமல் உழைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தலித் மக்களுக்கு சமூக முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றை உயர்த்த பாடுபடப் போவதாக கூறியுள்ளார்கள்.

'திமுக'வை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்திருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக் கூடும் என்று தெரிகிறது. ஆனால் அதிமுக அவர்களுடன் கூட்டு சேர்வார்களா என்பது சந்தேகம். மத சார்பற்ற என்ற போர்வை அவர்களுக்கு தேவைப்படும்(#)

ஹிந்து முன்னனி செயளாலர் பரமேஷ்வரன் ஜெயேந்திரரை கைது செய்த அதிமுகவுடன் கூட்டா ? என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அம்மா கழட்டிவிட்டால் நிச்சயம் அவர்கள் பாஜக உடன் சேர்வார்கள். இந்த செய்தி தமிழ் பத்திரிக்கைகளில் இன்று மாலை வரை வரவில்லை.

(*, #)வலைப்பதிவு அறிவுஜீவிகள் அதிகம் விரும்பி திட்டும் கழகம். திட்டுபவர்கள் முக்கால் வாசி பேர் பிராமனர்கள். இவர்களுக்கும் நடுநிலமை என்ற போர்வை தேவை. டோண்டுவை தவிர வெளிப்படையாக யாரும் பேச மாட்டார்கள்.

கொசுறு செய்தி - நம்ம பினாத்தல் குட்டி கதை பதிவு போட்டிருக்கிறார் ஒரு தபா போய் படிச்சு பாருங்க

3 Comments:

Naarathar said...

சாதிகளின் பெயரில் அரசியல் கட்சிகள்
ஆரம்பிப்பதை தேர்தல் ஆணையகம்
தடை செய்ய வேண்டும். சாதிகளின்
பெயரில் கட்சிகள் பெருகி நாடே குட்டிச்
சுவராகிறது. நான் தமிழன், நான் இந்தியன் எனும் ஒற்றுமை மனப்பான்மை நீங்கி நான் இந்த சாதி,
நீ அந்தச் சாதி எனும் வேற்றுமை மனோநிலையை இச் சாதிக் கட்சிகள்
தோற்றுவிக்கின்றன. 21ம் நூற்றாண்டிலும்
நாம் சாதிகள் பற்றி பேசுவது வேதனையான விடயம். அது மட்டுமல்ல, இப்போது அவனவன் தங்களது சொந்த நலன்களுக்காகவும்
சாதிகளின் பெயரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு எடுத்துக் காட்டு, நடிகர் சரத்குமார்.
தனக்கு அமைச்சு பதவி தராவிடின்
நாடார் சமுகத்திற்கு போதிய பிரதிநித்துவம் இல்லை என கதை அளக்கிறார். எனவே நாட்டின் நன்மை
கருதி , சாதிக் கட்சிகள் உருவாகுவதை
தேர்தல் ஆணையகம் தடை செய்ய வேண்டும்.

Anonymous said...

kachi thalaivar yaar arivu jeevi manbumihu vaarungala maudalvar sujatha va???

பினாத்தல் சுரேஷ் said...

விளம்பரத்துக்கு நன்றி இட்லிவடை.