பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 21, 2006

போட்டுத்தாக்கு

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன்' - நடிகர் சத்யராஜ ( எவ்வளவு பேர் கிளம்பியிருக்கீங்க )

உதிர்ந்த ரோமங்கள்! ஆழ்ந்த அனுதாபங்கள்! :-) - ரஜினி ராம்கி ( இப்போ புரியுது ஏன் தலைவர் விக் வைத்துள்ளார் என்று )

அம்மா மிகுந்த சுயமரியாதை உடையவர். நீங்கள் எந்த அம்மா என்று குழம்பலாம். நான் சோனியா அம் மாவையும் சேர்த்தே சொல் கிறேன். லகானை எப்படித் தன் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது அம் மாக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. லகானை பாதுகாப்பதில் ஐயாக் களை விட அம்மாக்கள் தெளிவாகவும், தீர்க்கமாகவும் இருக்கின்றனர்...'' - எழுத்தாளரும், சிந்தனையாளருமான ஜெயகாந்தன் ( நீங்க நல்லா தானே இருந்தீங்க என்ன சார் ஆச்சு )

"யாராவது விபத்தில் செத்தா அம்மா 50,000 கொடுக்கறாங்க. அதனால இன்னிக்கு யாரைப் பார்த்தாலும் நடுரோட்டில்தான் நடக்கறாங்க" - எஸ் எஸ் சந்திரன் ( நீங்க கீழ்பாக்கம் தொகுதிக்கு நிக்கலாம் )

"ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் தான். வாழ்க்கை என்பதே கற்றுக் கொள்வது தானே! நிறைய உறுப்பினர்களிடமிருந்து சில விவரங்களை நான் புதிதாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. என் அனுபவத்தில், "அம்மா' போல் இவ்வளவு சறுசுறுப்பாக, எந்த முதல்வரும் செயல்பட்டு நான் பார்த்ததே இல்லை. புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு பதிலளிக்கும் முதல்வரின் பாங்கு என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது...'' அ.தி.மு.க., அவைத் தலைவர் காளிமுத்து ( அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நல்லாதான் சிகிச்சை செஞ்சிருக்காங்க )

0 Comments: