பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 20, 2006

ரஜினி ரசிகர்கள் - ஜெக்கு ஆதரவு

அ.தி.மு.க. பொதுச் செய லாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை இன்று (திங்கட்கிழமை) காலை அவரது இல்லத்தில் தஞ்சாவூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ஹுமாயூன், மாவட்டப் பிரதிநிதிகள் கலிய மூர்த்தி, விஸ்வநாதன், தஞ்சை மனோஜ்பட்டி கிளைப் பிரதிநிதி செந்தில், தஞ்சாவூர் கிரிதரன் ஆகியோரும்.

புதுச்சேரி மாநில ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ரஜினி சங்கர், மாநிலப் பிரதி நிதி ரஜினிராஜ், ரெட்டியார் பாளையம் கிளையின் மன்றச் செயலாளர் சிரஞ்சீவி, முதலியார்பேட்டை கிளை மன்றச்செயலாளர் ராஜேஷ், பாகூர் கிளையின் மன்றச் செயலாளர் மணி ஆகியோரும் நேரில் சந்தித்தனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள 2006 சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியை ஆதரித்து தீவிர தேர்தல் பிர சாரம் மேற்கொள்ள இருப்ப தாகத் தங்களது விருப்பத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடம் தெரிவித்தார்கள்.

இதனை ஜெயலலிதா மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். அப்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி உஞ்சனை ராசாமி அம்பலம் உடன் இருந்தார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட ரஜினி மன்ற தலைவர்களின் கூட்டறிக்கை வருமாறு:-

தமிழகம் மற்றும் புதுவையில் அ.தி.மு.க.வின் ஆட்சி அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் ஒருமித்த கருத்துடன் இன்றைய அரசியல் சூழலில் நாங்கள் ஒருநிலைப்பாட்டை எடுத்து உள்ளோம். தார்மீக அடிப்படையில் அ.தி.மு.க.விற்கு பகிரங்க ஆதரவு அளித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்தில் நிலவி வரும் வாரிசு அரசியல் மத்தியில் குடும்ப பின்னணி இல்லாமல் நடுநிலையான ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய உன்னத எண்ணத்துடன் தமிழகத்தை உயர்த்தி அயல்நாடுகள் வியக்கும் வகையில் வெற்றி கண்டு இருக்கின்ற அம்மா அவர்களுடைய பொற்கால ஆட்சி மீண்டும் அம்மா தலைமையின் கீழ் தமிழகத்தில் அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் பாடுபட போகிறோம்.

தமிழகத்தில் உள்ள அரசியல் அமைப்புகளில் அ.தி.மு.க.வில் மட்டுமே கடைநிலை தொண்டன் கூட தலைவராக கூடிய தகுதியும், சட்டமன்றத்திற்கு செல்லும் நிலைகளும், அமைச்சராக அமர வைத்து அழகு பார்க்கும் நிகழ்வுகளும் அம்மாவின் கழகத்தில்தான் நடைபெறுகிறது என்பதை தமிழ கத்தில் உள்ள கோடான கோடி மக்களும் சரி மற்ற அரசியல் கட்சியினரும் உணர்ந்து இருக்கின்றார்கள் என்பதை எண்ணிப் பார்த்து நாங்கள் கழகத்திற்கு ஆதரவாக செயல்படுவோம்.

கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் அமைப்பு களுக்கு அதி தீவிரமாக பிரசாரம் செய்து இரவு, பகல் பாராமல் உழைத்து பொருள் விரையம் செய்து குடும்பத்தை மறந்து உழைத்த எங்களுக்கு அவர்களால் துளி விஷத்திற்கு கூட பயன் இல்லை. மாறாக எந்தவித பயன்களும், உதவிகளும் செய்து தரப்படவில்லை.

எனவே நாங்கள் தமிழகத்தில் மட்டுல்லாமல் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள அ.தி.மு.க., பு.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கூட்டணியின் மூலம் எங்களின் ஆதரவுடன் அம்மாவின் ஆட்சி அமைய இன்றைய தருணத்திலிருந்து எங்களது 28 ஆண்டுகால உழைப்பை விட இருக்கின்ற 50 தினங்களுக்கு ஊண் உறக்கமின்றி அயராது அம்மாவின் வெற்றிக்கு பாடுபட்டு வெற்றிக்கனியை அம்மாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிபது என்று முடிவெடுத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றோம்.

அம்மா அவர்கள் எங்கள் நிலைகளை அறிந்து எங்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்பினையும் எங்களுக்கு மட்டுமில்லாமல் எங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் குடும்பத்திற்கும், எங்களை சார்ந்து வருபவர்களுக்கும் பாதுகாப்பாக இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும்.

எங்கள் வாழ்க்கை தரம் அம்மாவின் ஆசியோடு உயர வேண்டும் என்று இறைவனை வேண்டி தேர்தல் களத்தில் இறங்குகின்றோம்.

ரஜினிக்கு இல்லாத தைரியம் அட்லீஸ்ட் அவர்கள் ரசிகர்களுக்கு வந்ததே. அடுத்து ரஜினி ராம்கி ஜெயை சந்திக்க போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. உண்மையா ?
பிகு: ரஜினி கையால் காமிப்பது இரட்டை இலை சின்னத்தை தான் என்று ரசிகர்கள் அடித்து சொல்லுவார்கள் இன்னும் கொஞ்ச நாளில் :-)

9 Comments:

ஜெ. ராம்கி said...

உதிர்ந்த ரோமங்கள்! ஆழ்ந்த அனுதாபங்கள்! :-)

Muthu said...

//அடுத்து ரஜினி ராம்கி ஜெயை சந்திக்க போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. உண்மையா ?//
இருக்கலாம்...எந்த புத்தில எந்த பாம்போ..

ராம்கி,
நீங்க அம்மாவ பாத்தீங்கன்னா எனக்கு மெட்ராஸ் ட்ரான்ஸ்பர் வாங்கி கொடுங்க..:))))

ஜெ. ராம்கி said...

//எங்கள் வாழ்க்கை தரம் அம்மாவின் ஆசியோடு உயர வேண்டும்

//நீங்க அம்மாவ பாத்தீங்கன்னா எனக்கு மெட்ராஸ் ட்ரான்ஸ்பர் வாங்கி

ப்ப்.பூ....வாழ்க்கை தரமே உயருதாம்.. இதுல ட்ரான்ஸ்பர் எதுக்கு? :-)

Naarathar said...

ரஜனி ரசிகர்களுக்கு எனது பாராட்டுக்களும் , நன்றிகளும்.
தக்க தருணத்தில் எடுக்கப் பட்ட சரியான முடிவு. தமிழகமெங்கும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற
குறிப்பாக ம.தி.மு.க போட்டியிடும்
35 தொகுதிகளிலும் , ம.தி.மு.க அமோக வெற்றி பெற ரஜனி ரசிகர்கள்
உழைக்க வேண்டும் என அன்புடன்
வேண்டிக்கொள்கிறேன்.ரஜனி அவர்களும் ம.தி.மு.க போட்டியிடும் 35 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய முன்வர வேண்டும் என திரு.ரஜனிகாந்த் அவர்களை நான் மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

குமரேஸ் said...

தலைவர் எவ்வழி, தொண்டனும் அவ்வழியே (வருமானத்திற்கு பாதகமான கொள்கைகளை கைவிடல்)

Balamurugan said...

Happy news. Kumares aiyya is ready to surrender all his money to poor people.hereafter he will not doing business for returns and he will do only free services. what a great?

குழலி / Kuzhali said...

//உதிர்ந்த ரோமங்கள்!
//
ராம்கி இப்படியே எல்லா ரோமங்களும் உதிர்ந்து வழுக்கையா இருக்கபோறாருங்கோ....

//ஆழ்ந்த அனுதாபங்கள்! :-)
//
யாருக்கு ஜெயலலிதாவுக்கா?

IdlyVadai said...

குழலி - போட்டுத்தாக்கு படிக்கவும் :-)

Balamurugan said...

ராம்கி இப்படியே எல்லா ரோமங்களும் உதிர்ந்து வழுக்கையா இருக்கபோறாருங்கோ....

but much better ramadoss and anbumani. conolence is sure for ramados for being part of failure alliance. vaiko escaped.