பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 16, 2006

கலைஞர் , ஜெ கூட்டணி இது பெஸ்ட் - சோ

கலைஞர் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உரிமையோடு பேசுகிற மாதிரி, ஜெயலலிதாவிடம் பேச முடியுமா ?

முடியாது. இரு கழகங்களிடமும் கூட்டணி வைத்துக் கொண்ட ஒரு பெரிய கட்சியின் தலைவரை இது பற்றி முன்பு கேட்டேன். அவர் சொன்னார் "ஜெயலலிதாவிடம் ஒரு சந்திப்பைப் பெறுவதே கடினம்; அப்படிப் பெறுகிறபோது, அவர் சொல்வதைக் கேட்டு கொண்டுவரலாம்; அவ்வளவுதான்; நமது கருத்துக்கு அங்கே இடம் கிடையாது. ஆனால் கலைஞரையோ எளிதில் சந்திக்கலாம்; நமது கருத்தை எடுத்துச் சொல்லலாம்; அது நிச்சயமாக ஏற்கப்படாது; அவர் சொல்வதுதான் நடக்கும்.

அதாவது இரண்டு இடத்திலும் கூட்டணி கட்சியின் கருத்துக்கு இறுதியில் சமாதிதான். அனால் ஒன்று திமுக கூட்டு என்றால், நமது கருத்தை சொல்லிவிட்டோம் - என்ற ஆறுதலாவது மிஞ்சும். அதிமுக கூட்டணியில் அதுவும் மிஞ்சாது.

அதே சமயத்தில் இன்னொரு விஷயமும் அவர் சொன்னார்: கூட்டணி கட்சிகளில் வெற்றிக்கு திமுகவினரை விட, அதிமுகவினர் கடுமையாக உழைப்பார்கள். திமுக தொண்டர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்களே தவிர உண்மையாக உழைக்க மாட்டார்கள். ஆனால் அதிமுக தொண்டர்களோ வலுவில் வந்து தேர்தல் வேலைகளைக் கவனிப்பார்கள். அவர் சொன்ன கருத்துக்களை வேறு சிலரிடமும் கூறினேன். அவர்களும் அதை ஆமோதித்தார்கள்.

நன்றி: துகளக் கேள்வி பதில் ( 22-03-06 )

2 Comments:

Boston Bala said...

---ஒரு பெரிய கட்சியின் தலைவரை ---

எந்தக் கட்சி? காங்கிரஸ்... அங்கே இருக்கும் எல்லாருமே தலைகள்தானே ;-)

---அவர்களும் அதை ஆமோதித்தார்கள்---

எல்லாமே மர்மமா இருக்கே... கழுகு பதில்கள் மாதிரி சோ ஹேஷ்யங்களா :P

VSK said...

BB,
Knowing CHO, your assummption is wrong! :-)
It should be a BJP leader as that party also has had ties with these two K's in the past!

And, LK Advani has bitter experiences ,I heard!