சென்னையில் இன்று பொங்கு தமிழ் அறக்கட்டளையின் சார்பில் கொண்டு வரப்படும் தமிழ் ஓசை என்ற புதிய நாளிதழை வெளியிட்டு திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: பாமக நிறுவனர் ராமதாசுக்கும் எனக்கும் ஆரம்ப காலம் பழக்கம் தகராறில் தான் தொடங்கியது. அந்த தொடர்பு பதப்பட்டு, பதப்பட்டு தற்போது நாங்கள் இருவரும் தமிழ் சமுதாயத்திற்காக எங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம்.
இங்கே ஒரு புதிய மாற்றம் வர வேண்டும் என்று எல்லோரும் பேசினார்கள். கோட்டை நாற்காலியில் என்னை உட்கார வைப்பது மட்டும் மாற்றமல்ல; கோட்டை நாற்காலி சுகமானதல்ல; என்னை பொறுத்தவரை கோட்டை நாற்காலி என்பதை தன்மான இயக்க நாற்காலியாகவே கருதுகிறேன்.
தமிழர்களை வாழ வைக்க நல்ல மாற்றம் வர வேண்டும். மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த நல்ல மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஒரு கருவியாக தமிழ் ஓசை வெளிவந்திருக்கிறது என்றார் கருணாநிதி.
விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மத்திய அமைச்சர் அன்புமணி, தி.க. தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் நல்லகண்ணு, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், காதர் மொய்தீன், டாக்டர் சேதுராமன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, March 16, 2006
தமிழ் ஓசை - பாமக நாளிதழ்
Posted by IdlyVadai at 3/16/2006 04:17:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
Tamil osai online edition undaa????
//தமிழர்களை வாழ வைக்க நல்ல மாற்றம் வர வேண்டும். மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த நல்ல மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஒரு கருவியாக தமிழ் ஓசை வெளிவந்திருக்கிறது என்றார் கருணாநிதி.//
ஆக இறுதியில், திராவிட இயக்கமும் கலைஞரும் கொண்டுவந்த மாற்றம் கெட்டது என்று ஒப்புக்கொண்டுவிட்டார்.
Post a Comment