பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 16, 2006

மனம் திறக்கிறார் ரஜினி !

இந்த பதிவு Wednesday, April 07, 2004 அன்று எழுதியது (கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு முன்). திரும்பவும் இங்கு மீள் பதிவாக பிரசுரிக்கப்படுகிறது. படித்துவிட்டு சிரிக்க கூடாது :-)


சென்னைக்கு வந்து ரஜினி மனம் திறப்பதற்கு பொருமை இல்லாமல், நேராக கர்நாடக மாநிலம் சிருங்கேரிக்கு சென்று ரஜினியை சந்தித்து பேட்டி கண்டேன். பேட்டியின் விவரம் வருமாறு...

இட்லிவடை: தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டைவிட்டு ஏன் எங்காவது சென்றுவிடுகிறீர்கள் ?
ரஜினி: அதுக்கு இரண்டு காரணம்
1) first - அடுத்த படத்துலே என்ன punch line வைக்கலாம் என்று discuss செய்ய.
2) second - என்னை வாழவைத்த சென்னையில் இப்போ தண்ணி கஸ்டம்.

இட்லிவடை: மதுரையில் உங்கள் ரசிகர்கள் தாக்கப்பட்டதைப்பற்றி ?
ரஜினி: சத்தியநாராயணா மூலம் ஒரு அறிக்கை கொடுத்திருக்கேன். டிவில அத பார்த்திருப்பீங்க.
இது போல ராட்சச செயல்களை தமில்நாட்டு மக்கள் பார்த்துகிட்டே இருப்பாங்க.
அப்புறம் மறந்துவிடுவாங்க

இட்லிவடை: உங்களுடைய அடுத்த நடவடிக்கை என்ன ?
ரஜினி: அடுத்தது, இமையமலை போய் இன்னும் ஒரு பெரிய அறிக்கை குடுப்பேன்.

இட்லிவடை: மதுரையில் ஏன் உங்கள் ரசிகர்கள் கருப்பு கொடியை காண்பித்தார்கள்?
ரஜினி: கறுப்பு கொடி காட்டுறது ஜனநாயக உரிமை. actually, என் ரசிகர்கள் காமிச்சது
வெள்ள கொடியத்தான். ராத்திரியில் அது கருப்பா தெரிஞ்சிருக்கு.

இட்லிவடை: உங்கள் படத்தில் நீங்கள் கூட வில்லனிடம் சண்டைதானே போடுகிறீர்கள், கருப்பு கொடியையா காமிக்கிறிர்கள் ?
ரஜினி: சினிமா வேற, அரசியல் வேற

இட்லிவடை: உங்கள் பாட்சா படத்தில் வரும் வன்முறையை பார்த்துதான் ராமதாஸ் கட்சி ஆட்கள் கற்றுக்கொண்டார்கள் என்று ஒரு பேச்சு அடிபடுகிறதே ?
ரஜினி: அதான் சொன்னேனே சினிமா வேற, அரசியல் வேற.

இட்லிவடை: சினிமா வேறு என்றால், நீங்கள் அடிக்கடி சினிமாவில்
"சொல்ரதைத்தான் செய்வேன், செய்வதைத் தான் சொல்வேன்" என்று கூறுவது பொய்யா?
ரஜினி: உஹா ஹா ஹா.. இது மாதிரி எதையாவது சொல்வேன்.
அது முட்டாள்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் மட்டும் தான் புரியும்.

இட்லிவடை: உங்கள் ரசிகர்களின் அடுத்தக்கட்ட போராட்டம் என்ன ?
ரஜினி: அடுத்தது, சேலத்துல மாம்பழம் உண்ணாவிரத போராட்டம்.
ராமதாஸ் கட்சி சின்னமான மாம்பழத்த என் ரசிகர்கள் யாரும் சாப்ட மாட்டாங்க.

இட்லிவடை: ஆறு தொகுதியில் மட்டுமா, அல்லது 34 தொகுதியிலுமா ?
ரஜினி: அது அவுங்க இஸ்டம்.

இட்லிவடை: மாம்பழம் ok, mango frooti குடிக்கலாமா ?
ரஜினி: அத சென்னைக்கு வந்ததும் நிருபர் சந்திப்புல் சொல்றேன்.

இட்லிவடை: சென்னைக்கு வந்தவுடன் மனம் திறக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறிர்கள். மனம் திறப்பதற்கும் வாய்த்திறப்பதற்கும் என்ன வித்தியாசம் ?
ரஜினி: சும்மா ஒரு சஸ்பென்ஸ்க்கு அப்படி சொன்னேன். சீரியஸா எடுத்துக்காதீங்க.

இட்லிவடை: அரசியலில் நீங்கள் தெளிவாக இல்லாமல், எப்போதும் ஒரு குழப்பத்தில் இருக்கிறிர்களே ?
ரஜினி: எனக்கு எத, எப்போ, எப்டி செய்யணம்னு தெரியும்

இட்லிவடை: இப்படி நீங்கள் குழப்பத்தில் இருப்பதினால், நீங்கள் சினிமாவில் ஹிரே, அரசியலில் காமெடியன் என்று ஒரு பேச்சு எழுகிறதே ?
ரஜினி: நான் என்னிக்கும்மே ஒரு மனினினிதன்.

இட்லிவடை: உங்கள் படத்தில் வரும் வசனங்கள் எல்லாம் பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளதே ?
ரஜினி: நான் ஒரு 'ஆண்'மீக வாதி என்று எல்லோருக்கும் தெரியும்.


இட்லிவடை: ஜெ., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன நீங்கள், தற்போது அ.தி.மு.க., விற்கு ஆதரவு தருவது முரண்பாடாக இல்லையா?'
ரஜினி: ( பாபா முத்திரையை காமித்து). அவர்களும்(அ.திமுக) இரட்டை இலைக்கு ரெண்டு விரல் காமிக்கிறாங்க. என் ரசிகர்களும் பாபா முத்திரைக்கு ரெண்டு விரல்கள காமிக்கிறாங்க. இருவரும் ஒற்றுமையாக இருக்க குரு ராகவேந்திராவை பிராத்திக்கிறேன்

இட்லிவடை: தலைவா நீ நடிக்க வேண்டாம், நடந்தாலே போதும் என்று உங்கள் ரசிகர்கள் சென்னார்கள், ஆனால் பாபா படம் சரியாக ஓடவில்லையே ?
ரஜினி: தமிழ் நாட்டு மக்கள் எல்லாருமே என் ரசிகர்கள் இல்லையே

இட்லிவடை: உங்கள் ரசிகர்கள், தங்கள் பெயர்களுக்கு முன் ரஜினி, பாட்சா, என்று ஏன் போட்டு கொள்கிறார்கள் ?
ரஜினி: அவர்கள் உருபடியாக செய்வது அது ஒண்ணதான்

இட்லிவடை: சோ'விடம் நீங்கள் கலந்தாலோசித்திர்களா ?
ரஜினி: சோ என் நண்பர். அவர் நட்பினால்தான் நான் குழம்பிருக்கேன்

இட்லிவடை: உங்கள் அடுத்த படம் எப்போது வரும், நாங்கள் எப்போது அதை எதிர்பார்கலாம் ?
ரஜினி: 2010 தமிழ் புத்தாண்டுக்கு எதிர்பார்கலாம்

இட்லிவடை: ஏன் அவ்வளவு lateஆக ?
ரஜினி: நான் lateஆ வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்.ஜெய்ஹிந்த்.

5 Comments:

Anonymous said...

super-ba

I hope the visil-adichan kootam will realise and change.

I see him as an entertainer. Thats it.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ha ha ha
I too agree with anonymus' comment

Anonymous said...

rajini endra poonaiku mani katiyavaril neegalum oruvar

Anonymous said...

Article was published in a complete bad taste.

Anonymous said...

ரஜினியைப் பற்றி ஒரு பதிவுப் போட்டால் உங்கள் பக்கத்திற்கு நிறைய பேர் வருவார்கள் அதுதானே உங்களைப் போன்றோரின் எண்ணம் நடக்கட்டும் நடக்கட்டும்