பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 15, 2006

சென்னை கமிஷனர் நடராஜ் இடமாற்றம்

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நட்ராஜ், முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியிருப்பது தேர்தல் நடத்தை விதிமறைகளை மீறும் செயலாகும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் செய்துள்ளது.

இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஏ.ராஜா தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டனுக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில்,

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மார்ச் 8ம் தேதி ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நட்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், மகளிர் தினத்தின்போது, எனது மனதில் சிறந்த பெண்மணியாகத் தோன்றுபவர் முதல்வர் ஜெயலலிதாதான். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தான் மேற்கொண்டுள்ள பணியிலும் சிறந்து விளங்குபவரே சிறந்த பெண்மணி.

அந்த வகையில் ஜெயலலிதாவை அதற்குச் சரியான உதாரணமாகக் கூறலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நட்ராஜ்.

இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதி மீறலாகும். இப்படிப்பட்ட காவல்துறை ஆணையரை வைத்துக் கொண்டு எப்படி சென்னையில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என எதிர்பார்க்க முடியும்?

சென்னை மாநகர காவல்துறையின் கீழ் 20 தொகுதிகள் வருகின்றன. எனவே 20 தொகுதிகளிலும் மாநகர காவல்துறை ஆணையர் நட்ராஜின் பொறுப்பில் தேர்தல் நடந்தால் நிச்சயம் அதிமுகவுக்கு சாதகமாகத்தான் காவல்துறை நடந்து கொள்ளும்.

எனவே அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜா.

இதை தொடர்ந்து இன்று சென்னை மாநகர கமிஷனர் நடராஜ் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேட்டி கொடுத்ததால் அவரை தேர்தல் ஆணையம்இடமாற்றம் செய்துள்ளது.

4 Comments:

Muthu said...

இட்லிவடை,
புகார் செய்திருப்பதையே இப்போதுதான் எங்கோ படித்தேன். அதற்குள் இடமாற்றம் செய்துவிட்டார்களா?, சுடச்சுடத்தகவல் தருகிறீர்கள்.

selvan said...

அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேட்டி கொடுத்ததால் அவரை தேர்தல் ஆணையம்இடமாற்றம் செய்துள்ளது.

ஒரு வேளை கருனாநிதியை புகழ்ந்து பேட்டி கொடுத்திருந்தால் அவருக்கு மத்திய அரசாங்கத்தில் பெரிய பதவி கிடைத்திருக்கும்.

சீனு said...

ஹூம்...பேசாம அவர் நரேஷ் குப்தாவை புகழ்ந்து பேசியிருக்கலாம்.

சீனு.

தருமி said...

ஜெயா டி.வி. அதை ஒளிபரப்பியது. 'ஓவர்'தான்...