பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 15, 2006

குட்டிக்கதை போட்டி

கிழே உள்ள செய்தியை வைத்து யார் நல்ல குட்டி கதை எழுதுகிறார்கள் என்று ஒரு சின்ன போட்டி. சிறந்த குட்டிகதைக்கு தகுந்த பாராட்டு உண்டு :-). நானும் ஒரு குட்டிக்கதையை யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது அடுத்த பதிவில்...

அ.தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதி பிரிப்பு முழு விவரம் வெளி யிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று காலை 10.30 மணிக்கு எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்துக்கு வந்தார். அவரை ம.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

வைகோவுக்கு, திருமாவளவன் சால்வை அணிவித்தார். அது போல திருமாவளவனுக்கு, வைகோ சால்வை அணிவித்து கைகுலுக்கினார். பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந் தனர். ம.தி.மு.க.

அதன் பிறகு வைகோவும், திருமாவளவனும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

வைகோ கூறியதாவது:-

இந்த நாள் எங்களுக்கு மகிழ்ச்சியான நாள். தன்னலமற்ற பொது தொண்டுக்காகவும், பெரியார், அம்பேத்கார் கொள்கைகளை பாதுகாப்பதற்காகவும், வாழ்க்கையை அர்ப்பணித்து போராளியாக வலம் வருபவர் திருமாவளவன். அவரை ம.தி.மு.க. சார்பில் நெஞ்சார ஆரத்தழுவி தாயகத்தில் வரவேற்றோம்.

பாச உணர்வின் சங்கமமாக இந்த சந்திப்பு இருந்தது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். எதிர்கால நலனையும், தமிழக மக்கள் நலனையும் பாதுகாக்க அ.தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும் கைகோர்த்துள்ளன. இக் கூட்டணி தேர்தலில் மகோனத வெற்றியை பெறும்.

மாற்றார் வட்டாரத்தை எழ முடியாத அளவுக்கு தூக்கி எறியும். அ.தி.மு.க. தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அந்த ஆட்சி அரணாக ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும் இருக்கும்.

தமிழக மக்களை 21-ம் நூற் றாண்டுக்கு அழைத்து செல்லும் வகையில் இருக்கும்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித் தலைவியை முதல்-அமைச்சராக்க சூளுரைத்து களம் செல்வோம். எதிர்க்கட்சிகள் விமர்சனங் களை சுலபமாக எதிர் கொள்வோம். எங்கள் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வெற்றி பெறுவோம்.

இவ்வாறு வைகோ கூறினார்.

திருமாவளவன் கூறியதாவது:-

தமிழக அரசியலில் இடை வெளியை தீர்மானிக்கும் ஆற்றல் மிக்க தலைவராக இருப்பவர் புரட்சிப் புயல் வைகோ. இப்புயல் எந்த திசை நோக்கி நகர்கிறது என்று பரபரப்பாக எதிர்பார்த்தனர். இது தோட்டம் நோக்கி நகர்கிறது என்று அவர் எடுத்த முடிவு மூலம் தெரிந்தது. தற்போதைய தமிழக அரசியலில் அச்சாக வைகோ திகழ்கிறார்.

எங்கள் கூட்டணியில் ஒருமித்த கருத்து ஒரு மித்த பாதை உள்ளது. இது இயற் கையான கூட்டணி. வைகோ வுடன் சேர்ந்து தேர்தல் களப்பணி செல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மீண்டும் முதல்-அமைச்சராக அம்மா வர கலைஞரே விரும்பி இருக்கிறார். அந்த விருப்பத்தை நிறைவேற்றுகிற பணியில் அண்ணன்-தம்பிகளாகிய நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அ.தி.மு.க. கூட்டணி வைகோ ஏற்கனவே சொன்னது போல 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். மீண்டும் அம்மா தலைமையில் ஆட்சி அமை யும். தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும், உலக தமிழர் களுக்கும் அந்த ஆட்சி பாதுகாப்பாக இருக்கும். அதற்கு நாங்கள் அரணாக இருப் போம்.

தமிழக அரசியலில் ம.தி. மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும் தவிர்க்க முடியாத சக்திகள் என்பதை தேர்தலில் நிரூபிப்போம்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

பின்னர் இருவரும் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- இரு கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என்று முடிவாகி விட்டதா?

பதில்:- பேச்சு வார்த்தை நடக்கிறது. சுமூகமாக முடியும்.

கே:- எப்போது முடியும்?

ப:- முடிந்ததும் சொல்வோம்.

கே:- நீங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்குமா?

ப:- இரு தரப்பிலும் பேசிக் கொண்டு இருக்கிறோம். சுமூகமான பேச்சு வார்த்தை நடக்கிறது. எங்களுக்குள் நெருடல் இல்லை.

கே:- தனி தொகுதிகளை உங்களுக்கு அதிகம் ஒதுக்கியதாகவும், இதனால் அதிருப்தியில் இருப்பதாகவும், செய்தி வெளியாகி உள்ளதே?

ப:-தனித் தொகுதி அதிகம் ஒதுக்கினால் மகிழ்ச்சி அடை வோம். சமூக நீதி என்பது உதட்டளவில் இல்லா மல், உள்ளத்தளவில் கொண்டிருப்பவர்கள் நாங்கள். ஒதுக்கப்பட்ட சமூகத்தினரை இந்த மாதிரி வேறுபடுத்தி பார்ப்பதையோ, சிந்திப்பதையோ துளி கூட எங்கள் இயக்கத்தில் அனுமதிப்பது இல்லை.

2 Comments:

பினாத்தல் சுரேஷ் said...

பொதுவாக என் மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்..

கலக்கப்போவது யாரு? ஜெயிக்கப்போவது யாரு?

விரைவில் எதிர்பாருங்கள் பெனாத்தலாரின்......

குட்டிக்கதைச்சுரங்கம்!!

குட்டிக்கதைகளுக்கான ஒரு முழுமையான Database..

இன்னும் இரண்டே நாட்களில்.

சீனு said...

//தனித் தொகுதி அதிகம் ஒதுக்கினால் மகிழ்ச்சி அடை வோம். சமூக நீதி என்பது உதட்டளவில் இல்லா மல், உள்ளத்தளவில் கொண்டிருப்பவர்கள் நாங்கள்//

வேற வழி???

சீனு