இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேன் என்று தெரியவில்லை. எல்லா அரசியல் செய்திகளும் ஒரே காமெடியாக இருக்கு. நம்ம நடிகர்களுக்கு தான் நன்றி சொல்லனும். படித்துபாருங்கள் சிரிப்பு தானாக வரும். இதில் யார் காமெடி டாப் என்று பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பரிசு கிடையாது :-)
நடிகர் முரளி:நான் அரசியலுக்கு வர முதல்வரே காரணம். அவரது துணிச்சல் தான் என்னை மிகவும் கவர்ந்தது. கடந்த 23 ஆண்டுகளாக சினிமாவில் மென்மையான வேடங்களையே செய்து வந்தேன்.
எட்டாக் கனியாக இருந்த கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தவர் ஜெயலலிதா. கந்து வட்டி, ரவுடிகள், தீவிரவாதம் அனைத்தையும் வேரறுத்தார்.
தற்போது பெண்கள் எந்தவித அச்சமும் இன்றி சென்று வருகின்றனர். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பொருளாதார ஏற்றத்தை உண்டாக்கி உள்ளார்.
ஆறு கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்வர். காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களே கிடையாது.
தற்போது 14 லட்சம் பேருக்கு புதிதாக வாக்களிக்க தகுதி உள்ளது. இதில் 5 லட்சம் பேர் மாணவர்களாக இருப்பர். கல்வித் துறைக்கு முதல்வர் செய்த திட்டங்களை நினைத்து வாக்களிக்க வேண்டும் என்றார் முரளி.
நடிகர் முரளி சினிமாப் பாடல்களைப் பாடி அ.தி.மு.க.,வினரைக் கவர்ந்தார்.கூட்டத்தில் நடிகர் முரளி கலந்து கொண்டு பேசும்போது இடையில் சினிமாப் பாடல்களை பாடினார். புது வசந்தம் படத்தில் வரும் இது முதன் முதலா வரும் பாட்டு என்ற பாடலைப் பாடிய முரளி தி.மு.க.,கட்டையில் போகும் பாட்டு என்றார். தஞ்சாவூரு மண்ணெடுத்து என்ற பாடலை திருவாரூர் மண்ணெடுத்து திருக்குவளை தண்ணீரெடுத்து முக்கி முக்கி முத்துவேலார் செய்த பொம்மை எனப் பாட துவங்கிய முரளி திடீரென நாம் யாரையும் கிண்டல் செய்யக் கூடாது. இது மேடைக்கு சரி வராது. வீட்டில் வேண்டுமானால் தனியே பாடிக் கொள்வோம் எனக் கூறி அந்தப் பாட்டை நிறுத்தினார்.
பின் நடக்கும் என்பார். நடக்காது. நடக்காது என்பார். நடக்கும் என்ற பாடலைப் பாடியபடி கருணாநிதி வீராணம் திட்டம் நடக்கும் என்றார். நடக்கவில்லை. தற்போது முதல்வர் செயல்படுத்த முனைந்தபோது நடக்காது என்றார் நடந்தது. வீராணம் திட்டத்தை செயல்படுத்தியன் மூலம் ஜெயலலிதா சென்னை நகர மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்த்தார். கருணாநிதி குடிப்பது கூட வீராணம் தண்ணீர்தான் என்றார். கருணாநிதியை பற்றி பேசும்போது எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே எனப் பாடினார். முடிக்கும்போது கருணாநிதி நீடூழி வாழ வேண்டும். அவர் நிரந்தர எதிர்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்றார்.
நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி
இந்த தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறுவது சந்தேகம் என்கிறார்களே?அ.தி.மு.க., நிச்சயம் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இதற்கு காரணம், இந்த தேர்தலில் எந்த அலையும் இல்லை. மாறாக ஆட்சியாளருக்கு ஆதரவான நிலை மட்டுமே உள்ளது. பொதுவாக தேர்தலை நிர்ணயம் செய்வது எதிர்ப்பு ஓட்டு அல்லது அனுதாப அலை. அரசுக்கு எந்த எதிர்ப்பு ஓட்டும் இல்லை. எதிர்கட்சிக்கு ஆதரவாக எந்த அனுதாப அலையும் இல்லை.
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அலை உள்ளதாக கூறுகிறீர்கள்... என்ன மாதிரியான ஆதரவு அலை உள்ளது?
படித்தவர்கள், நெசவாளர்கள், பெண்கள் என பலருக்கும் இந்த ஆட்சியில் நல்ல பலன் கிடைத்துள்ளது. மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தை மிகவும் சிறப்பாக நடத்தியது அ.தி.மு.க., அரசுதான். "உலக மகளிர் தினம்' ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடுகின்றனர். என்னை கேட்டால் முதல்வர் செய்த காரியத்திற்காக தினமும் மகளிர் தினம் கொண்டாட வேண்டும்.
பலம் வாய்ந்த தி.மு.க., கூட்டணியை எதிர்த்து, எப்படி அ.தி.மு.க., வெற்றி பெற முடியும்?
தி.மு.க., கூட்டணி பலவீனமான அணி. முதலில் ஏழு கட்சிகள் கூட்டணி என்றார்கள். இப்போது வைகோ வந்துவிட்ட பிறகு ஆறு கட்சிகள் ஆனது. இது ஐந்து கட்சிகள் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஜாதி சங்கங்களின் கூட்டணி போல உள்ளது. கருணாநிதியை போலவே குடும்ப அரசியல் நடத்தி வருபவர் ராமதாஸ். ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு 13 இடமும் இன்னொன்றுக்கு 10 இடங்களையும் கருணாநிதி ஒதுக்கியுள்ளார். ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதில் தலை சிறந்தவர் கருணாநிதி தான்.
வைகோ அ.தி.மு.க., அணிக்கு வந்துள்ளது எந்த அளவுக்கு பலன் தரும்?
இந்த செயல் வைகோவுக்கு தமிழக அரசியலில் நிரந்தர இடமும், கவுரவத்தையும் அளிக்கும். அதுமட்டுமல்ல, கருணாநிதி வைகோவுக்கு 22 இடங்களை கொடுத்திருந்தாலும் இரண்டு தொகுதியில் கூட அவரை ஜெயிக்க விடமாட்டார். ஆனால், முதல்வர் ஜெயலலிதா வைகோவுக்கு 35 இடங்களை கொடுத்து அத்தனை இடங்களிலும் அவரை வெற்றி பெற வைப்பார்.
படித்த இளைஞர்கள் யாருக்கு ஓட்டுப் போடுவார்கள் என நினைக்கிறீர்கள்?
நாட்டின் மீது அக்கறையும், பொறுப்பும் உள்ள இளைஞர்கள் அனைவரும் நிச்சயம் அ.தி.மு.க.,வுக்கு தான் ஓட்டளிப்பர். மேலும், பெண்களின் ஆதரவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தான் உள்ளது. மிகவும் தைரியமான பெண்ணாக முதல்வரை அவர்கள் பார்க்கின்றனர்.
கருணாநிதி குடும்ப அரசியல் நடத்துவதாக வரும் குற்றச்சாட்டு பற்றி...
இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும் பத்து நாள் மட்டுமே அவர் முதல்வராக இருப்பார். அதன் பின் தனது மகன் ஸ்டாலினை முதல்வராக்கி விடுவார். எது தனது குடும்பத்திற்கு லாபமோ அதை செய்ய கருணாநிதி தயங்க மாட்டார்.
வைகோவை வெளியேற்றியது கருணாநிதியின் ராஜதந்திரம் என வர்ணிக்கப்படுகிறதே?
துரோகம், சூழ்ச்சி, வஞ்சகம் இதன் பெயர் தான் ராஜதந்திரம்.
முதல்வர் ஜெயலலிதா செய்த செயல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன?
வீரப்பனை ஒழித்தது அவர் செய்த மிகப் பெரிய சாதனையாக கருதுகிறேன். மேலும், மழைநீர் சேகரிப்பு பற்றி மக்களிடம் எடுத்துக் கூறி இன்று நிலத்தடி நீரை உயர்த்திய பெருமை அவரையே சாரும்.
உங்களுக்கு இந்த முறை சீட் வழங்கப் படும் என நினைக்கிறீர்களா?
அ.தி.மு.க.,வில் சீட் கேட்டு நான் இதுவரை விண்ணப்பம் கூட அளிக்கவில்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் தொண்டனுக்கு நிச்சயம் கட்சியில் உயர்ந்த பதவி கிடைக்கும் என்பது அ.தி.மு.க.,வில் மட்டும் தான். எனது இப்போதைய கடமை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, ஏன் மக்கள் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட வேண் டும் என்பதை விளக்குவதுதான்.
மக்களுக்கு உங்கள் வேண்டுகோள் என்ன?
கடவுள் நம்பிக்கை உள்ள கட்சிக்கு மக்கள் ஓட்டுப் போடவேண்டும். நமது வீடு வரை உள்ள பிரச்னைகளை தீர்க்கும் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும். என்ன நடந்தால் எனக்கு என்ன என நினைக்காமல் கட்டாயம் அனைவரும் ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும். நமது ஜனநாயக கடமையை செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
டைரக்டர் மனோபாலா"அம்மாவுக்கு ஓட்டுப்போட முடிவு செய்தபின் தேர்தல் எதுக்குன்னு எனக்குப் புரியல்ல என்று சினிமா டைரக்டர் மனோபாலா தெரிவித்தார்.வாலாஜாபாத் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் சினிமா டைரக்டர் மனோபாலா பேசியதாவது:இவ்ளோ பெரிய இயக்கத்தில் என்னைப் போன்ற சிறியவனையும் தொண்டனாக மதித்து இணைத்துக் கொண்ட அம்மாவிற்கு நன்றி. இந்தக் கார்டு( அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை) கைக்கு கிடைத்ததும் தனி மரியாதை. சமுதாயத்தில் கிடைத்த அந்தஸ்து வேற. இது வெறும் அட்டை அல்ல. என் உயிர். எதுக்கு தேர்தல்னு எனக்கு புரியல்ல.
நாட்டு மக்கள் அம்மாவிற்கு ஓட்டுப் போட வேண்டும் என ஒரே முடிவு எடுத்த பின் எதற்கு தேர்தல். நாம் அமைதியாக வீட்டில் அமர்ந்து ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பு என்ன ஜாக்கெட் போட்டிருக்கிறார் எனப் பார்த்துக் கொண்டிருப்போம். அதை விட்டு கூட்டத்திற்கு வர வேண்டி உள்ளது. காரணம் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும்.
ஒரு கட்சி திருச்சியில் மாநாடு நடத்தியது. மாநாட்டில் கட்சி தலைவர்கள் எல்லாம் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் நடு முதுகில் தீப்பிடித்த மாதிரி உட்கார்ந்திருந்தனர். இரண்டாம் நாள் வைகோ அடி செங்கலை உருவிக் கொண்டு நம்மிடம் வந்து விட்டார். கட்டடம் ஆடிப்போய்விட்டது. அங்கு இளைஞர் அணி உள்ளது. அதில் உள்ளவர்கள் யாரும் குச்சி இல்லாமல் நடக்க முடியாது. அவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்த காலத்தில் சேர்ந்தவர்கள்.
கேபிள் டி.வி மசோதா கொண்டு வந்ததும் இரண்டு பையன்கள் தங்கள் தாத்தாவிடம் ஓடிச் சென்று தாத்தா என்ன செய்கிறீர்கள் என்கிறார்கள். அவர் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்கிறார். அதனை எல்லாம் பிறகு பாருங்கள். நமது பிளக்கை பிடுங்கிக் கொண்டு போய்விட்டனர் எனக் கூறி அவசரமாக அவரை அழைத்துக் கொண்டு கவர்னரை சந்தித்து புலம்புகின்றனர். தி.மு.க .,நடிகர் ஒருவர் என்னிடம் கூறினார் என்ன இது, திரும்பி பார்த்தால் நானும் குமரிமுத்தும் மட்டும்தான் நிற்கிறோம். எல்லாரும் அந்தப்பக்கம் போய் விட்டீர்கள் என்கிறார். நீங்களும் வந்து விடுங்கள் எனக் கூறினேன். சாலமன் பாப்பையா ஏப்ரல் 14ம் தேதி பட்டிமன்றத்திற்கு தலைப்பு கிடைக்காமல் திண்டாடுவதாக தெரிகிறது. வேண்டுமானால் கலக்கப் போவது யாரு, கலங்கி நிற்பது யாரு என்ற தலைப்பில் பட்டிமன்றங்கள் வையுங்கள். இவ்வாறு டைரக்டர் மனோபாலா
நடிகர் செந்தில்ஜெயலலிதா ஆட்சியின் 5 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. குண்டர்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர் என நடிகர் செந்தில் கூறினார்.
புவனகிரி பஸ் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
சுயஉதவிக் குழு அமைத்து பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அன்னதானத் திட்டத்தை கொண்டுவந்தார்.
அதிமுக கூட்டணியில் வைகோ, திருமாவளவன் இடம் பெற்றுள்ளனர். இதனால் 234 தொகுதிகளிலும் வெற்றி நமக்குத்தான்.
சுனாமியின்போது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு கிடைக்க கூடிய நிவாரணத்தை தடுத்தவர் கருணாநிதி.
நம்மையெல்லாம் இந்தி படிக்க வேண்டாம் என்று சொன்னவர் இன்றைக்கு இந்தி படிக்கிறார்.
ராமதாஸ் ஆங்கிலம் பேச வேண்டாம் தமிழில் பேசிப் பழங்குகள் என்று சொன்னார். ஆனால் திண்டிவனத்தில் அவருக்கு அடித்துள்ள போஸ்டர் ஆங்கிலத்தில் உள்ளது.
சோனியா காந்தி தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு 5 முறை சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது என்றார்.
எங்களைப் பார்த்து கேலி செய்கிறார் கருணாநிதி. நடிகர்கள் கூட்டம் என்று கிண்டலடிக்கிறார். அப்படியே இருந்து விட்டுப் போகிறோம், அவருக்குத் தைரியம் இருந்தால், வருகிற தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா? (பாவம் கருணாநிதி).
அவரெல்லாம் என்னை எதிர்த்துப் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது (காலக் கொடுமை...)
பாமகவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டுப் போடாதீங்க. ஏன்னா, விரல்ல வச்ச மை காயுறதுக்குள்ளேயே வேற கூட்டணிக்குப் போய் விடுபவர் ராமதாஸ். (திஸ் இஸ் ட்ரூ)
இப்படிப்பட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிதான் திமுக கூட்டணி. இது தேறாத கூட்டணி என்றார் செந்தில்.
தினமணி, தினமலர், தட்ஸ் தமிழ் செய்திகளிலிருந்து தொகுத்தது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 15, 2006
நடிகர்களின் அரசியல் காமெடி
Posted by IdlyVadai at 3/15/2006 03:37:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
May 11 thethi varai comedy season than. Nanraga anubavippom.Sabash, sariyana potti enru chollalam.
எனக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்களில் செந்திலுக்குச் சிறந்த இடமுண்டு. அவருடைய நகைச்சுவைத் திறமையை இன்னும் நிரூபித்துக் கொண்டு வருவது அவருடைய மங்காத் திறமைக்குச் சான்று. இன்னும் என்னவெல்லாம் கேக்கப் போறோமோ.....
ஐயா...ஆனாலும் இந்த ஓரவஞ்சனை கூடாது. தி.மு.க நண்பர்கள் இந்த அ.தி.மு.க நட்சத்திரங்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை. அவர்களின் நகைச்சுவையை இருட்டடித்ததன்(!) மூலம் நீங்கள் அம்மா அணியிடம் கோடி கோடியாய்:-)) பலணடைந்திருப்பது வெட்ட வெளிச்சமாகிறது....:-))))
I am very sad about what is going on in Tamilnadu. Even media is giving more impotant to these actors rather than the real perspective of election.
sadhayam நான் வன்மையாக கண்டிக்கிறேன். இன்னும் திமுக பிரச்சாரத்தை ஆரம்பிக்கவே இல்லை. அவர்கள் நியூஸ் வந்தால் நான் போடாமல் இருக்க மாட்டேன். காமெடி எங்கு நடந்தாலும் அதை ரசிப்பவன் நான்.
சிவபாலன் - நீங்க வேற இவர்களை அரசியலுக்கு இழுப்பதே கூட்டம் சேர்க்க தான் :-)
தேர்தல் வரும் சமயம் அல்லவா.. மாமூல் காட்சிகள்தான் இவைகள்.
தாங்கமுடியல சாமி. இப்ப தெரியுது ஏன் கவுண்டர் செந்திலை அந்த ஒதை ஒதச்சார்னு.
இட்லிவடை, கொஞ்சம் தாமதமா இப்பத்தான் இதெல்லாம் படிக்கறேன். டிவி போட்டி நிகழ்ச்சிகள்ல எல்லாம் நடுவர்கள் முதல் பரிசு அறிவிக்கும்போது ஃபார்மலா சொல்ற, "இதுல யார் டாப்னு சொல்லமுடியாத அளவுக்கு எல்லாருமே சிறப்பா செஞ்சாங்க; தேர்ந்தெடுக்க நான் சிரமப்பட்டேன்' ங்கற வசனத்தை நானும் நிஜமாவே சொல்லவேண்டி வந்தாலும் எதையாவது டாப்னு சொல்லியே ஆகணும்னா, முதல்ல படிச்சதும் அதிர்ந்துபோய், அப்புறம் தாங்கமுடியாம வயிறுவலிக்க சிரிக்கவெச்ச காமெடியா இதைத் தேர்ந்தெடுக்கறேன்.
=====
அம்மாவுக்கு ஓட்டுப்போட முடிவு செய்தபின் தேர்தல் எதுக்குன்னு எனக்குப் புரியல்ல என்று சினிமா டைரக்டர் மனோபாலா தெரிவித்தார்.
=====
ஜெஸ்ரீ - வாருங்கள். நீங்கள் தங்கமணி பதிவை குத்தகை எடுத்திருப்பதாக பரவலாக எல்லோரும் பேசுகிறார்கள். உண்மையா ? உங்கள் வாத திரமையை கண்டு எல்லோருக்கும் பக்க வாதம் என்றும் கேள்விப்பட்டேன் :-)
முதல் பரிசு: மனோபாலாவுக்கு (தேர்தல் எதுக்குன்னு கேட்ட கொடுமைக்கு).
இரண்டாம் பரிசு: செந்திலுக்கு (கருணாநிதிக்கு என்னை எதிர்த்து நிற்கிற தைரியம் இருக்கான்னு கேட்ட கொடுமைக்கு).
Post a Comment