பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 15, 2006

வாத்துக்குஞ்சு கதை - துரைமுருகன்

மக்கள் தமிழ் தேசம் கட்சி இணைப்பு விழாவில் துரைமுருகன் கூறிய கதை:கருணாநிதியை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் கெட்டுப்போனது கிடையாது. கோழி முட்டைகளோடு, வாத்து முட்டைகளை கலந்து வைத்தாலும், எல்லாம் தான் இட்ட முட்டை என்று நினைத்து கோழி அடை காக்கும். பின்னர் கோழிக் குஞ்சுகளும் பொரிக்கும். வாத்துக் குஞ்சுகளும் பொரிக்கும். அப்போதும் எல்லாக் குஞ்சுகளும் தன் குஞ்சுகளே என்று கோழி கருதும். ஆனால், காலப் போக்கில் சில குஞ்சுகளுக்கு புத்தி மாறிவிடும். அவை வாத்துக் குஞ்சுகள்; தண்ணீரைக் கண்டால் ஓடிவிடும். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

தகவல்: தினமலர்

2 Comments:

Anonymous said...

//பின்னர் கோழிக் குஞ்சுகளும் பொறிக்கும். வாத்துக் குஞ்சுகளும் பொறிக்கும்.//

பொரிக்கும்???

IdlyVadai said...

அனானி - பொரிக்கும் என்பது தான் சரி என்று நினைக்கிறேன். ஆனால் தினமலரில் பொறிக்கும் என்று தான் இருக்கு. Anyway மாற்றிவிட்டேன். நன்றி.