பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 14, 2006

பார்வர்டு பிளாக் அதிமுக கூட்டணியில் இணைந்தது

இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எல்.சந்தானம் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு இதுவரை 51 தொகுதிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். தற்போது அ.தி.மு.க. வசம் 183 தொகுதிகள் இருக்கின்றன.

அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை ஒவ்வொரு கட்சியும் பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை விபரம் :

ம.தி.மு.க.- 35
விடுதலை சிறுத்தைகள்- 9
தேசிய லீக்- 2
ஐ.என்.டி.ï.சி.- 2
மூவேந்தர் முன்னேற்ற கழகம்- 1
முஸ்லிம் லீக்- 1
அகில இந்திய பார்வர்டு பிளாக் (சந்தானம்)- 1

பிகு: கார்த்திக்கு அதிமுக கூட்டணியில் இனிமேல் சேர முடியாது இதனால் அவ்ர் திமுக கூட்டணிக்குப் போக வேண்டும். சீட் கிடைக்குமா என்று தெரியாது. பார்க்கலாம்.

2 Comments:

மாயவரத்தான் said...

கார்த்திக்கோட கட்சி பேரு என்னா?

IdlyVadai said...

மாயவரத்தான் - எங்கே ரொம்ப நாளா காணோம் ? கார்த்திக் கட்சியின் பெயர் அகில இந்திய பார்வர்டு பிளாக் (2) என்று நினைக்கிறேன்