பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 14, 2006

ஐ.என்.டியூ.சி யின் லூட்டி !

ஐ.என்.டியூ.சி பிரச்சனை கடந்த ஒரு வாரமாக எல்லா நாளிதழ்களிலும் ஓரத்தில் இவர்கள் அடிக்கும் லூட்டி வந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் என்ற வார்த்தை கடைசியில் ஒட்டிகொண்டிருப்பதால் கோஷ்டி சண்டைக்கு பஞ்சமில்லை. இது வரை என்ன நடந்தது என்று சுருக்கமாக இங்கே...

* ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க பொதுச் செயலாளராக இருந்து வந்தவர் காளன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.இதன் பின்பு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் ஐ.என்.டி.யூ.சி.கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டணியில் ஐ.என்.டி.யூ.சி.க்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

* இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தின் நெறிமுறைகளுக்கு புறம்பாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து கொண்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் ஐ.என்.டி.யூ.சி.யின் அவசர பொதுக் குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் (12 மார்ச்) நடந்தது.

* கூட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் துணை தலைவர் நஞ்சப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

- தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி.விதிகளுக்கும், கொள்கைகளுக்கும் விரோதமாக அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாட்டை செய்து கொண்ட ஐ.என்.டி.யூ.சி.யின் தலைவர் பி.எல்.சுப்பையா, பொதுச் செயலாளர் காளன், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், பொருளாளர் என்.தேவராஜ் ஆகியோரை தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. தொழிற் சங்க பொறுப்புகளில் இருந்து நீக்குவது என்று தீர்மானிக்கிறது. இவர்களை அகில இந்திய ஐ.என்.டி.யூ.சி. பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்குமாறு மத்திய ஐ.என்.டி.யூ.சி.தலைவர் ஜி.சஞ்சீவ ரெட்டியை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

- தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி.யின் பேரில் அ.தி.மு.க.வுடன் செய்து கொள்ளப்பட்ட 2 தொகுதி தேர்தல் ஒப்பந்தத்தை இக்கூட்டம் நிராகரித்து ரத்து செய்கிறது.

- சத்திய மூர்த்தி பவனில் கூச்சல் குழப்பம் இல்லாமல் எதாவது கூட்டம் நடந்தால் யாராவது தப்பாக நினைப்பார்கள் என்று இந்த கூட்டத்திலும் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டது.

- காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த காளன் மற்றும் அவர்களுடன் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககப்படும். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியில் இருந்தும் காளன் நீக்கப்படுவார் என்று அறிவித்தார்கள்.

* இதை தொடர்ந்து ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச் செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஜி.காளன் கூறியுள்ளார். வரும் 24ம் தேதி சென்னையில் மாநில ஐ.என்.டி.யு.சி. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் அப்போது அதிமுகவுக்கு ஆதரவு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தொடரும்.....

1 Comment:

மணியன் said...

ஐ.என்.டியு.சிக்கு ஜி.இராமானுஜம் என்றோரு தலைவர் இருந்த காலம் ..ஹும்