பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 13, 2006

விஜயகாந்த் பாஜக கூட்டணி ?

தேர்தல் கூட்டணி பற்றி இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை என்று தேசிய திராவிட முற்போக்குக் கழகத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக விஜயகாந்த் தில்லி சென்றுள்ளதாக அரசியல் கட்சி வட்டாரங்களில் கடந்த இரு நாள்களாகச் செய்திகள் பரவின.

சென்னையில் திங்கள்கிழமை தமது கட்சி அலுவலகத்தில் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோருடன் நேர்காணலில் அவர் ஈடுபட்டிருந்தார்.

பா.ஜ.க.வுடன் கூட்டு வைப்பது தொடர்பாக நான் தில்லி செல்லவில்லை. கூட்டணி பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. தொடர்ந்து எங்கள் கட்சியினருடன் நேர்காணலில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் தக்க முடிவு எடுத்து அறிவிப்பேன்.

செய்தி: தினமணி

0 Comments: