ஒரு வாரம் முன்பு திமுக முன்னணித் தலைவர் துரைமுருகன் மீது சென்னை நீதிமன்றத்தில் நாமம் இடுவது குறித்து நக்கலாகவும் இழிவாகவும் பேசியதாக வழக்கு தொடரப் பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட துரைமுருகன், தேர்தல் அதிகாரி கோபால்சாமி பற்றி கிண்டலாகப் பேசியுள்ளார். அது
"கோபால்சாமி நாமம் போட்டு வந்துள்ளார், நமக்கும் நாமம்தான் போடுவாரோ... யாருக்குத் தெரியும்' என்று பத்திரிகையாளர்களிடம் துரைமுருகன் கூறியுள்ளார்.
அகில பாரத கிருஷ்ண சேவா சங்கத்தின் தலைவர் சுவாமி. கோவிந்தராமானுஜதாசா, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
நெற்றியில் தினமும் நாமம் இட்டுக் கொள்ளும் வைணவர்களுக்கு அவரது பேச்சு மனவேதனையை அளித்துள்ளது. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் 504, 505, 295-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் துரைமுருகன் தவறு செய்துள்ளார் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு மார்ச் 23-ம் தேதி விசாரிக்கப்படும்.
( தினமணி செய்தி இங்கே )
சில கேள்விகள்:
1. ஏன் எந்த பத்திரிகையும் இதைக் கண்டிக்கவில்லை.
2. ஏன் எந்த வலைப்பதிவும் இதைக் கண்டிக்கவில்லை.
( பிராமண மாநாடு பேச்சுகள் ( மாநாட்டுக்கு போகாமல்) பற்றி வேட்டி, பாவாடையை வரிந்து கட்டிப் பேசினார்கள் என்பது வேறு விஷயம்.)
3. ஏன் கலைஞர் அல்லது எந்த அரசியல் கட்சியும் ( பாஜக, இந்து முன்னணி உட்பட (கருத்துதெரிவித்திருக்கலாம்)) இதற்கு ஒரு சின்ன கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ( கார்டூன் போட்டால் தான் தெரிவிப்பார்களா ?)
4. தேர்தல் அதிகாரி ஒரு இஸ்லாமியராக இருந்திருந்தால் துரைமுருகன் இப்படிக் கூறியிருப்பாரா ? ( கருத்து சுதந்திரம் ? )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, March 13, 2006
நாமம் நக்கல் - சில கேள்விகள்
Posted by IdlyVadai at 3/13/2006 11:42:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
22 Comments:
Pseudo secularism is the middle name of dravidian movement.That's why thiruman is being insulted in this fashion.
//2. ஏன் எந்த வலைப்பதிவும் இதைக் கண்டிக்கவில்லை.//
முதலில் நீர் ஏன் இதனைக் கண்டிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தவும். பிறகு அடுத்தவரை குறை சொல்லலாம்.
//4. தேர்தல் அதிகாரி ஒரு இஸ்லாமியராக இருந்திருந்தால் துரைமுருகன் இப்படிக் கூறியிருப்பாரா ? ( கருத்து சுதந்திரம் ? )//
அய்யா இட்லி வடை, முஸ்லிம்கள் நாமம் போடமாட்டார்கள் என்பது உமக்குத் தெரியாதா? ஏன் சம்பந்தமில்லாமல் இங்கு முஸ்லிம்களை இழுக்க வேண்டும்?
குறிப்பு:- நாமம் போடுதல் என்பது ஏமாற்றுதல் என்ற அளவிலும் பல சந்தர்ப்பங்களில் பலரால் கையாளப்பட்டுள்ளது. துரைமுருகன் மட்டுமே இதனை பயன்படுத்தவில்லை.
முதலில் நீர் ஏன் இதனைக் கண்டிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தவும். பிறகு அடுத்தவரை குறை சொல்லலாம்.//
அதை கண்டித்து தான் இந்த பதிவையே அவர் போட்டுள்ளார்.
//அய்யா இட்லி வடை, முஸ்லிம்கள் நாமம் போடமாட்டார்கள் என்பது உமக்குத் தெரியாதா? ஏன் சம்பந்தமில்லாமல் இங்கு முஸ்லிம்களை இழுக்க வேண்டும்?//
சம்பந்தமில்லாமல் நாமம் போடுபவர்களை துரை முருகன் ஏன் இழுத்தார் என்பதை கேட்டு தான் இந்த பதிவே.
//நாமம் போடுதல் என்பது ஏமாற்றுதல் என்ற அளவிலும் பல சந்தர்ப்பங்களில் பலரால் கையாளப்பட்டுள்ளது. துரைமுருகன் மட்டுமே இதனை பயன்படுத்தவில்லை.//
பலரும் தப்பு செய்கிறார்கள் என்பதால் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம் என்கிறீர்களா?
அழகப்பன் - யாராவது கண்டிப்பார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு இந்த பதிவு போட்டுள்ளேன்.
//அய்யா இட்லி வடை, முஸ்லிம்கள் நாமம் போடமாட்டார்கள் என்பது உமக்குத் தெரியாதா? ஏன் சம்பந்தமில்லாமல் இங்கு முஸ்லிம்களை இழுக்க வேண்டும்?// உதாரணத்துக்கு சொன்னேன். வேறு ஒரு நோக்கமும் கிடையாது.
சம்பந்தமில்லாமல் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் வலைப்பதிவாளர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இதனை சாதாரண விசயமாக விட்டுவிடக்கூடாது.
இதுபோல் எந்த ஒரு உதாரணத்திற்கும் சமபந்தமில்லாமல் முஸ்லிமை பயன்படுத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன்.
இது போன்ற உதாரணங்கள் கூறுவதை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
//( பிராமண மாநாடு பேச்சுகள் ( மாநாட்டுக்கு போகாமல்) பற்றி வேட்டி, பாவாடையை வரிந்து கட்டிப் பேசினார்கள் என்பது வேறு விஷயம்.)//
உங்கள் (நாமம் குறித்த) உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம், வேட்டியைப் போல் பாவாடையை யாரும் வரிந்துக் கட்டுவதில்லை என்ற உண்மையும் உங்களுக்குத் தெரிந்தே இருக்குமென்று நினைக்கிறேன். இருந்தாலும், உங்களுக்குப் பிடிக்காத கருத்தைத் தெரிவித்தார்களென்பதால் அவர்களை எவ்வாறு வேண்டுமானாலும் விமர்சிப்பீர்கள், அப்படித்தானே? உங்களுக்கும் துரைமுருகனுக்கும் என்ன வேறுபாடு என்று நினைக்கிறீர்கள்?
அழகப்பன் அவர்களே கோபம் வேண்டாம். கேளுங்கள். தேர்தல் அதிகாரி அவர்கள் இஸ்லாமியராக இருந்தால், துரை முருகன் அவர்கள் "அவர் போடும் தொப்பியை நமக்கும் போட்டுவிடுவாரோ" என்றோ, அல்லது அவர் கிறித்துவராக இருந்தால் "நம்மை சிலுவையில் அறைந்து விடுவாரோ" என்றெல்லாம் தைரியமாகக் கூறி விடுவாரா? அது என்ன நாமம் என்றால் அவ்வளவு இளப்பம்? நாமம் போடுவது ஏமாற்றுவது என்ற பொருளும் உண்டு என்று கூறினால், தொப்பி போட்டுவிடுவது என்றால் என்ன பொருள் வரும் தெரியுமா?
திராவிடக் கட்சிகளுக்கே உரித்தான தைரியத்துடன் ஹிந்துக்களை மட்டும் இழிவு செய்கிறார்கள். அவர் தலைவரே அப்படித்தானே?
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்டும் முறையில் அதன் நகலை என்னுடைய பிராம்மணர் சங்கத்தைப் பற்றிய வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். அதைப் பார்த்த பிறகு மட்டுறுத்தல் செய்யுமாறு இட்லி வடை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
voice of wings - ஆழ்ந்து சிந்தித்துள்ளீர்கள் நன்றி.
டோண்டு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பெரியவர் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி :-)
இட்லிவடையாரே - இது போன்று வலைப்பதிவுகளில் எழுதினால் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள். ஜாக்கிரதை
உங்கள் நலம் விரும்பி...
idlyvadayare,
asathal post. nalla kaeLvi :-) Kaekaradhukku aaL illai appadina enna venumnaalum pesalaam appadinu sila per nenaikaraanga!
dondu(#4800161) said...
//தொப்பி போட்டுவிடுவது என்றால் என்ன பொருள் வரும் தெரியுமா?//
தொப்பி போடுதல் (இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட பழக்கம் இல்லை) என்றாலும் இதே கருத்துடன் சிலர் கையாளுவது எனக்கும் தெரியும். முஸ்லிம்களில் பலருக்கும் தெரிய வாய்ப்புண்டு.
நான் கேட்ட கேள்வி "நாமம் போடுதல்" என்ற பதத்தை ஏமாற்றுதல் என்ற கருத்தில் பயன்படுத்தியதால் அதனால் வருத்தமுண்டான வைணவர்களான நீங்கள் கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் நீங்கள் கண்டிக்கவில்லை. அது உங்கள் தவறு. இதில் இஸ்லாமியர்களை சம்பந்தப் படுத்தி கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதே போன்று இஸ்லாமியர்களை பேசி இருந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? நீங்கள் முஸ்லிம்களைவிட சொரணை இல்லாதவர்களா என்று வைணவர்களை உசுப்பேற்றுவதற்காகவே பயன்படுத்தப் பட்டுள்ளது என்றே நான் கருத வேண்டியுள்ளது? இல்லையெனில் வேறு என்னதான் காரணம்?
குறிப்பு: தொப்பி போடுதலை அவர் பயன்படுத்தி முஸ்லிம்கள் மனம் புண்பட்டிருந்தால் முஸ்லிம்கள் கண்டிக்கப் போகிறார்கள். ஆனால் அதன் தேவை இதுவரை எழவில்லை.
Ingu vivathipathu "Thuraimurugan ennum peyaril ulla irattai veda, arasiyal endra peyaril anagarigathai valarkum oru, manitharin anagariga seyal patri" thayavu seythu naam disai maari sellamal intha "ANAGARIGATHAI" kandipomaga.
"நீங்கள் முஸ்லிம்களைவிட சொரணை இல்லாதவர்களா என்று வைணவர்களை உசுப்பேற்றுவதற்காகவே பயன்படுத்தப் பட்டுள்ளது என்றே நான் கருத வேண்டியுள்ளது? இல்லையெனில் வேறு என்னதான் காரணம்?"
வைணவர்களை மட்டும் குறிவைக்கவில்லை. இந்துக்களையே நோக்கித்தான் கேள்வி கேட்டேன்.
"தொப்பி போடுதலை அவர் பயன்படுத்தி முஸ்லிம்கள் மனம் புண்பட்டிருந்தால் முஸ்லிம்கள் கண்டிக்கப் போகிறார்கள்."
வெறும் கண்டிப்போடு எல்லாம் நின்றிருக்க மாட்டார்கள். ஃபத்வாவே போட்டிருப்பார்கள்.
எந்த மதம் தாக்கப்பட்டாலும் அந்தந்த மதத்தவரிடமிருந்துதான் எதிர்ப்பு வர வேண்டும் என்று நீங்கள் கூறுவதைத்தான் நான் வேறு சொற்களில் கூறினேன்.
முக்கியமாக திராவிடக் கட்சியினரின் இந்த பாரபட்ச நடவடிக்கை எதிர்த்துத்தான் என் பின்னூட்டம். அதுதான் மற்ற மதத்தினரைப் பற்றிக் கூற தைரியம் உண்டா என்று கேட்டேன்.
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்டும் முறையில் அதன் நகலை என்னுடைய பிராம்மணர் சங்கத்தைப் பற்றிய வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். அதைப் பார்த்த பிறகு மட்டுறுத்தல் செய்யுமாறு இட்லி வடை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu(#4800161) said...
//வைணவர்களை மட்டும் குறிவைக்கவில்லை. இந்துக்களையே நோக்கித்தான் கேள்வி கேட்டேன். //
இட்லி-வடையை நோக்கி கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்ததன் மூலம் இடலி சுடுபவர் யார் என்பதை வெளிப்படுத்தியமைக்கு நன்றி டோண்டு அவர்களே.
//எந்த மதம் தாக்கப்பட்டாலும் அந்தந்த மதத்தவரிடமிருந்துதான் எதிர்ப்பு வர வேண்டும் என்று நீங்கள் கூறுவதைத்தான் நான் வேறு சொற்களில் கூறினேன்.//
ஆச்சர்யமாக இருக்கிறது. கார்டூன் விவகாரமாக மாலிக் அதனை கண்டித்து எழுதிய பதிவில் சம்பந்தமில்லாமல் சரஸ்வதியை ஓவியர் உசேன் வரைந்ததை சுட்டிக்காட்டியதை என்னவென்று சொல்வது?
Ingu vivathipathu "Thuraimurugan ennum peyaril ulla irattai veda, arasiyal endra peyaril anagarigathai valarkum oru, manitharin anagariga seyal patri" thayavu seythu naam disai maari sellamal intha "ANAGARIGATHAI" kandipomaga.
By nanmanam, at March 13, 2006 4:03 PM
டோண்டைவிட கேவலமாக எழுதியுள்ளார்
"ஆச்சர்யமாக இருக்கிறது. கார்டூன் விவகாரமாக மாலிக் அதனை கண்டித்து எழுதிய பதிவில் சம்பந்தமில்லாமல் சரஸ்வதியை ஓவியர் உசேன் வரைந்ததை சுட்டிக்காட்டியதை என்னவென்று சொல்வது?"
இப்போது நீங்கள் கூட சம்பந்தமில்லாமல்தானே சரஸ்வதி ஓவியம் விவகாரத்தை இங்கு வந்து கிளப்புகிறீர்கள்? நீங்கள் கேட்டதால் கூறுகிறேன்,
அந்த இடத்தில் மாலிக் அவர்கள் நான் கேட்டதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் முகம்மது கார்ட்டூன் கொலை குற்றம்போல சித்தரிக்கப்பட்டது, அதே சமயம் சரஸ்வதி ஓவியம் துரதிர்ஷ்ட சம்பவமாக குறைத்து மதிப்பிடப்பட்டது. ஒரு இஸ்லாமியரிடம் இந்த இரட்டை நிலை எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. கராத்தே ஹுசேனிக்கு இங்கு மறுபடியும் சபாஷ் போடுகிறேன்.
இங்கு நான் சாடுவது இஸ்லாமியர்களை அல்ல, ஏனெனில் அவர்களிடம் நியாய உணர்ச்சியை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மதசார்பற்றவர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வெட்கம் கெட்டு செயல்படும் சக ஹிந்துக்களை மன்னிக்க இயலாது.
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்டும் முறையில் அதன் நகலை என்னுடைய பிராம்மணர் சங்கத்தைப் பற்றிய வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். அதைப் பார்த்த பிறகு மட்டுறுத்தல் செய்யுமாறு இட்லி வடை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இப்போது நீங்கள் கூட சம்பந்தமில்லாமல்தானே சரஸ்வதி ஓவியம் விவகாரத்தை இங்கு வந்து கிளப்புகிறீர்கள்? நீங்கள் கேட்டதால் கூறுகிறேன்,
இங்கு நான் சாடுவது இஸ்லாமியர்களை அல்ல, ஏனெனில் அவர்களிடம் நியாய உணர்ச்சியை நான் எதிர்பார்க்கவில்லை.//
டோண்டு அவர்கள் வாதத்திறமை உள்ளவர் என்று சகபதிவர்களின் பதிவுகளில் எழுத படித்துள்ளேன். தங்களின் வாதத்திறமை கண்டு வியக்கிறேன். வாழ்க உங்களின் (புரட்டு) வாதங்கள்.
//பதவிக்கு ஆசைப்பட்டு ஜெ.,பக்கம் தாவிய 'திண்டிவனம்', ராஜேந்தருக்கு பட்டை நாமம்,//
http://epaper.dinamalar.com/ArticleImageEx.aspx?article=25_03_2006_002_013&type=1&subcat=11&gb_W=587&gb_H=440
தினமலர் மீதும் வழக்கு தொடர்வார்களா?
துரைமுருகன்கள் பேசினால் தான் கோவம் வரும். 'தினமலரு'க்குன்னா ஜால்ரா தான் போட முடியும். ஏன்னா, அவா எங்களவா.
தினமலர் துரைமுருகன் இப்படி யார் பேசினாலும் தப்புதான்.துரைமுருகன் வழக்குல தீர்ப்பு வந்தா அது எல்லாரையும் தானே கட்டுபடுத்தும்?தினமும் இப்படி லட்சம் பேரு பேசிட்டே இருப்பாங்க.எல்லார் மேலேயும் கேஸ் போட முடியுமா?கேஸ் போட காசுக்கு எங்க போறது?ஒருத்தர் மேல கேஸ் போட்டு கோர்ட் கண்டிச்சா மத்த எல்லாரும் அதுக்கப்புறம் பேசாம இருப்பாங்க
Post a Comment