தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது என அதன் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பெரியார் இறுதியாகப் போராடிய, "அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்" என்ற கோரிக்கையைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக திராவிடர் கழகம் முன்னெடுத்து போராடி வருகிறது.
தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 1970-ம் ஆண்டு திமுக ஆட்சியில், "அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை அளிக்கும் சட்டம்' இயற்றப்பட்டது. சமுதாய மாற்றத்துக்கான இச்சட்டம் சுமார் 36 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
1992-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இச்சட்டத்தை நிறைவேற்றுவேன் என சட்டப்பேரவையில் அறிவித்து, பயிற்சி அளிக்க திருச்சி அருகே கம்பரசம்பேட்டையில் 40 ஏக்கர் நிலமும் தேர்வு செய்ய உத்தரவிட்டார். ஆனால் இச் சட்டத்தைச் செயல்படுத்த ஜெயலலிதா எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இந்நிலையில் "தந்தை பெரியாரின் இதயத்தில் தைத்த முள்ளை, மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையில், முதல் கடமையாக அகற்றுவோம். எங்கள் முதல் பணி, எங்கள் முதல் ஆணை இதுவாகத் தான் இருக்கும்' என திமுக தலைவர் மு. கருணாநிதி ஒரு விழாவில் அறிவித்தார்.
திருச்சியில் கடந்த 3,4,5 தேதிகளில் நடைபெற்ற திமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், முடிவுகளும் திராவிட இயக்கப் பார்வையில் பெரிதும் வரவேற்கதக்கவை என்றார் கி. வீரமணி.
[ கடவுளை நம்புகிறவன் முட்டாள்; கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்" என்பது பெரியார் வாக்கு. அவருடைய சிலைக்கு கீழே அது தான் எழுதியிருக்கும். அர்ச்சகர், கடவுளை பரப்புகிறவர்; அந்த வேலையை எல்லோரும் செய்ய வேண்டும் என்று பேராடுகிறார்கள் பெரியார் சீடர்கள். பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கே ]
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, March 10, 2006
தி.க - தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு
Posted by IdlyVadai at 3/10/2006 10:11:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
அட, நீங்க வேற ஏங்க, வீரமணி பேசறதெல்லாம் ஒரு பதிவா போட்டு எடத்த வேஸ்ட் பண்ணிட்டு. அவரே ஏதோ இருக்கற சொத்த காப்பாத்தறதுக்காக கட்சி நடத்தற மாதிரி பாவலா காட்டிட்டு அறிக்கை எல்லாம் விட்டு காமெடி பண்ணிட்டு இருக்காரு. படிச்சு சிரிச்சிட்டு போவீங்களா....
வீரமணி தி.மு.க வை ஆதரிக்கறார் என்றால் தி.மு.க கூட்டணி தான் தேர்தலில் வெற்றிபெறும் என்று தோன்றுகிறது.
விளக்கம்: சொத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் ஆட்சியை பிடிக்க கூடிய கச்சியை ஆதரிப்பது இவர் வழக்கம் அதை வைத்தே என் அனுமானம். :-) :)
kolgai veru; urimai veru
kadavul illai enbadhu kolgai
thagudhi ullor archagar avadhu urimai
嚪õ£¼ «î˜î™ õ¼‹«ð£¶‹ F¼.ióñE Üõ˜èœ î¡ è†C Þ¼Šð¬î‚裆ì ÞŠð® å¼ G¬ô â´Šð£˜.Þ¬î â™ô£‹  ªð£¼†ð´ˆî‚Ã죶
嚪õ£¼ «î˜î™ õ¼‹«ð£¶‹ F¼.ióñE Üõ˜èœ î¡ è†C Þ¼Šð¬î‚裆ì ÞŠð® å¼ G¬ô â´Šð£˜.Þ¬î â™ô£‹  ªð£¼†ð´ˆî‚Ã죶
இரவு படுக்கப் போகும் முன் ஒரு நல்ல காமெடி படித்தத் திருப்தி
apdinaa, ella koilayum idikkalaam vareengala?
sangara madatha govt eduthukka aadharikkareengala?
Mr.Veeramani used to issuse such statements during elections to remind the people about the existance of his party. Hence do not take it seriously
"சொத்தப் பல்லுக்காக சொத்தையே பிரிக்கிறதா?" (ஏன்! அவரால தான் சம்பந்தமே இல்லாம பேச முடியுமா, நாங்களும் PKS தான்)
Post a Comment