பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 10, 2006

எண்ணமும் எண்ணிக்கையும் - டாக்டர் ராமதாஸ் பேட்டி

தி.மு.க.-பா.ம.க. இடையே இறுதி சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தி.மு.க.வுடன் பேச்சு நடத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ.க்கள் குரு, திருக்கச்சிïர் ஆறுமுகம் ஆகியோர் 11.45 மணிக்கு அறிவாலயம் வந்தனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் அவர்கள் பேச்சு நடத்தினார்கள். பேச்சு வார்த்தை சுமார் 30 நிமிடம் நீடித்தது. அதில் சுமூகமான தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
தி.மு.க.வுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டு விட்டு வெளியில் வந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பா.ம.க. தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எண்ணிக்கை என்பது வேறு எண்ணம் என்பது வேறு.

எங்கள் எண்ணம் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான். இதற்காக நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம்.

இந்த ஆட்சியை மாற்றி விட்டு மக்கள் விரும்புகிற அரசியல் நாகரீகம் உள்ள ஒரு நல்ல அரசு கலைஞர் தலைமையில் அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

எண்ணிக்கையை பொருத்த வரை பா.ம.க. தியாகம் செய்துள்ளது. அந்த தியாகத்தில் மகிழ்ச்சியும் இருக்கிறது. மகிழ்ச்சி என்பது வேறு. மனநிறைவு என்பது வேறு.

இன்று காலை கூட சில பத்திரிகைகளில் தொகுதிகளை "அள்ளி'' கொடுத்து இருப்பதாக செய்தி வந்துள்ளது. நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம்.

அதே நேரத்தில் "கிள்ளி" கொடுத்து இருக்கிறார்கள் என்றும் சொல்ல மாட்டோம்.

கேள்வி:- தொகுதி பங்கீடு உங்களுக்கு மன நிறைவு அளிக்கிறதா?

பதில்:- கடந்த 4 ஆண்டுகளாக விதம் விதமாக செய்தி எழுதி எங்களை குழப்பினீர்கள். இன்று ஒருநாள் மட்டும் நீங்கள் குழம்பி போங்கள்.

2 Comments:

நாமக்கல் சிபி said...

//கேள்வி:- தொகுதி பங்கீடு உங்களுக்கு மன நிறைவு அளிக்கிறதா?//


அதான் மருத்துவர் ஐயா தெளிவா சொல்றாரே! மகிழ்ச்சி இருக்கிறது. மகிழ்ச்சி வேறு, மன நிறைவு வேறு என்று!

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

Anonymous said...

Comedy aa irukku sir :-)