பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 08, 2006

வாரணாசியில் குண்டுவெடிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் செவ்வாய்கிழமை மாலை முன்று இடங்களில் குண்டு வெடித்ததில் 20 பேர் பலி என்று எல்லா செய்தி சேனல்களும் அலரிக்கொண்டிருக்கிறது. ஏராளமானோர் காயமுற்றிருக்கிறார்கள். பலியானவர்களின் குடும்பங்களுக்கு இட்லிவடையின் ஆழ்ந்த அனுதாபங்கள்.


எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு So Called நியாயமான காரணம் இருக்கும். எல்லா குற்றங்களும் நியாயப்படுத்த முடியும். திருட்டுக்கு காரணம் - ஏழ்மை; கொலைக்கு காரணம் - கோபம், ஏன் பிக்-பாக்கெட்டிற்கு கூட காரணம் கண்டுபிடிக்க முடியும்.
என்னை பொருத்தமட்டில் நாட்டிற்கும், மக்களுக்கும் எதிர்காலத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது - தீவிரவாதிகளின் நாசவேலைகளே இதற்கு போய் காரணம் தேடி நியாயத்தை ஆராய்ந்து கொண்டு பொழுதை கழிப்பது வடிகட்டின முட்டாள்தனம் அது எங்குக் நடந்தாலும் யார் செய்தாலும் தீவிரவாதம் தீவிரவாதம் தான். அவர்களை மூட்டை பூச்சியை நசுக்குவது போல் நசுக்க வேண்டும் என்று முன்பு எழுதியிருந்தேன். இப்போது அதையே சொல்கிறேன். அரசின் மாட்சிமையும், மேலான்மையும் காப்பாற்ற வேண்டியது ஒரு அரசனின் கடமை. இவர்கள் பண்ணும் அழிச்சாட்டியத்தை சகித்துக் கொண்டால் அது நாட்டுக்கு செய்யப்படும் பெரும் துரோகம்,அதர்மம். தீவிரவாத எதிர்ப்பில் யார் உறுதி படைத்த நிவாகியாக திகழ்கிறாரோ அவரே அடுத்த பிரதமராக வரவேண்டும். இந்த மாதிரி விஷயங்களை தயவு தாட்சண்யம்மில்லாமல் நசுக்க வேண்டும். மனித உரிமை போன்ற கெட்ட வார்த்தைகள் கொண்டு தீவிரவாதத்தை வளரவிடக் கூடாது. "Zero tolerance" என்பது தான் அதன் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். தீவிரவாதிகளை நசுக்கும் பொது சில அசம்பாவிதங்கள் நிகழ்லாம் அதை நாம் சகித்து கொள்ள வேண்டும் தீவிரவாதத்தை சகித்து கொள்வதை விட இது எவ்வளவோ மேல்.

இந்த ஒரு காரணத்திற்காகவே காங்கிரஸ் அரசு பொடாவை திரும்ப கொண்டுவர வேண்டும் என்பது என் கருத்து.

23 Comments:

துளசி கோபால் said...

நன்று சொன்னீர்.

Anonymous said...

Dear IdliVadai

I second you. But if you write like this in the blogworld you will be branded as a fundamentalist and a regressive minded person. You should analyze the grevances of the terrorists who did this and sympathesis with their cause. You should not address them as terrorists, they are just genuine fighters. You should also make aspersions that it could be an accident. Then only you can join the elite club of pseudo secularists that are plaguing this nation.

My strongest condemnations to those killers, minority appeasing politicians and above all I hate and curse the most inhuman so called "Arivu Jeevi Eeenap piravigal" who attempt to justify such gory murders. Minority appeasing leftists politicians and Mulla yaadav should take responsiblities for these killings. They are the real terrorists who abated violent protests in the last few weeks.

With Pain
Sa.Thirumalai

Anonymous said...

meandum "vaiko" POTA povar paravaiillaya........

KRTY said...

பொடா இருந்த போது, எத்தனை தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள் ?

IdlyVadai said...

துளசி கோபால், திருமலை - நன்றி.
anonymous - வைகோ பொடாவில் கைது செய்த போது என் கருத்து இங்கே http://idlyvadai.blogspot.com/2004/04/blog-post_15.html
அந்த கருத்தில் எந்த மற்றமும் இல்லை.
keerthi - இது விதண்டா வாதம். முதலில் தீவிரவாதத்தை ஒடுக்க நல்ல சட்டம் இருக்க வேண்டும். இதில் நாம் அமெரிக்காவை காப்பி அடித்தால் தப்பில்லை.

ஜோ/Joe said...

இழி பிறவிகள் தான் இப்படி மதத்தை காரணம் காட்டி மக்களை கொல்வார்கள்.இவர்கள் யாராயிருந்தாலும் நாசமாய் போக!

KRTY said...

Terrorist is not தீவிரவாதி ! Only Extremists are தீவிரவாதி..
Terrorist is பயங்கரவாதி..

குருதிப்புனலில் கமல் சொல்வது போல்.. "தீவிரவாதிக்கும் பயங்கரவாதிக்கும் நடந்த கலப்பில வந்தவங்க இவங்க.."
They dont have consistancy to purpose, but have a lust towards these activities..

By the Way, IDLYVADAI, விதண்டா வாதம் செய்யவில்லை.. ஆனால், முதலில் போடா வந்த போது நான் மிகவும் மகிழ்ந்தேன்... வீரப்பன் அப்போது உயிரோடு இருந்த போதிலும் அவன் மீது போடாவில் வழக்கு பதிவு செய்யப்பட வில்லை.. மாறாக பல அரசியல் வாதிகள் மிரட்டப் பட்டனர். I dont think such laws will be put to good use.

IdlyVadai said...

ஜோ - என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.

கீர்த்தி - சரியாக உபயோகபடுத்தவில்லை என்ற காரணத்திற்காக அதை வாபஸ் வாங்க கூடாது. அதில் இருக்கும் ஓட்டைகளை களைய வேண்டும் அவ்வளவு தான். தீவிரவாதியோ, பயங்கரவாதியோ இரண்டுமே வியாதிதான்.

KRTY said...

வாபஸ் வாங்கியதை நான் ஆட்சேபிக்கிறேன்.. ஆனால் போடா மறுபடி வந்தால் அது எவ்வாறு ப்ரயோகப் படுத்தப்படும் என்று யோசிக்கிறேன் !

ஸில்வியா said...

Highly disgusting to make city roads as war field and kill the people like animals. Anybody who resorts to such mindless behaviour must be punished irrespective of their motto or organization. Some of seem to make conclusions right away as per our own perceptions. Let the officials and professionals take over and shed light on the background. Till then, we need the restraint before shell out prescriptions.

Anonymous said...

In the same way shed some tears to those who died in kashmir,iraq,palestine,serbia,afghanistan too.

சந்திப்பு said...

வாரணாசியில் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்கப்பட வேண்டியதே! இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்தியாவில் பெரும் குழப்பமான விஷயமே யார் பயங்கரவாதிகள்? என்பதுதான்? காஷ்மீரில் தினமும் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கும் பயங்கரவாதிகள் ஒரு பக்கம், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்திலேயே தாக்குதல் தொடுத்த பயங்கரவாதம், தற்போதைய வாரணாசி பயங்கரவாதச் செயல் இவைகளை யாரும் ஆதரிக்க முடியாது!

அதே போல் குஜராத்தில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை பயங்கரவாதிகளின் வெறிச் செயல் என்று பெரும் பயங்கரவாத பிரச்சாரம் செய்து, 3000 இசுலாமிய சிறுபான்மை மக்களைக் கொன்றது எந்த வகையான பயங்கரவாதம்! இட்லி - வடை குஜராத் பாணியிலான மோடித்துவ பயங்கரவாதத்தையும் நீங்கள் எதிர்க்கிறீர்களா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்! சமீபத்தில் வெளிவந்துள்ள பானர்ஜி அறிக்கை மூலம் சபர்மதி ரயிலில் ஏற்பட்டது தீ விபத்துத்தான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கெனவே தடயவியல் அதிகாரிகள் இதைத்தான் கூறினார்கள். அப்போதெல்லாம் மோடித்துவ வாதிகள் இதை மறுத்து இசுலாமிய மக்களை கூட்டம் கூட்டமாக, கூண்டோடு எரித்தும், வெட்டியும், புதைத்தும் போட்டார்களே! இந்தியாவிற்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய இந்தச் செயலை என்னவென்று சொல்வது! இவர்களுக்கு எல்லாம் தலைமை தாங்கிய மோடி பயங்கரவாதிகளின் தலைவர் அல்லவா? இந்த மோடி எப்படி குஜராத்தில் முதல்வராக தொடரலாம் என்பது என்னுடைய கேள்வி!

யாத்ரீகன் said...

>> genuine fighters

எப்படிங்க இப்படியெல்லாம் சொல்ல முடியுது....

இருக்கும் உயிரெல்லாம் அழித்துவிட்டு, உயிரில்லாத உலகில் எதை ஆட்சி புரியப்போகின்றனர்... இத்தகையவர்கள் உணர்ச்சிவசப்படாமல் யோசிக்க மறுப்பதேன்..

IdlyVadai said...

சந்திப்பு - மதத்தின் பெயரில் கலவரம் பிறகு அதை அரசியலாக்குவது ;மொழி, இனம் பெயரில் தாக்குதல் எல்லாம் தீவிரவாதம்/பயங்கரவாதம் தான்.எல்லாவற்றையும் கண்டிக்கிறேன். இது தான் என் கருத்து.

Anonymous said...

Sir.
reNdu naaL la maRandhuduvaanga sir. 6 months kazhichu maRubadiyum nadakkum. maRubadiyum idhe kaNNa moochi viLayattu

endru thaNiyum indha sudhandhira dhaagam?

பூனைக்குட்டி said...

இட்லி வடை, முதலில் அது ச. திருமலை எழுதியது தானா.?? (ச திருமலை ஸ்ருசல் தானே???).

சந்திப்பு ஒரு விஷயம் இதுக்கும் இந்த பதிவில் உங்கள் பதிலுக்கும் சம்மந்தம் இருக்கான்னு நீங்கத்தான் சொல்லணும்.

ஏதோ ஒரு கிரிக்கெட் வேர்ல்ட் கப், அப்ப இந்தியா பிளேயர்ஸ்க்கு தலைமைக்கிட்ட ஏதோ பிரச்சனை.

அப்ப பிசிசிஐ தலைவர் சொல்லியிருந்தாரு, யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய அணி அனுப்பப்படும் என்று அதாவது கங்குலி, டெண்டுல்கர், திராவிட் இல்லாவிட்டாலும் என்று; சொல்லியிருந்ததற்கு ஐசிசி பதில் சொல்லியிருந்தது அதாவது, ஐசிசி இந்திய அணியிடமிருந்து தகுதிவாய்ந்த ஒரு அணியை அதாவது டெண்டுல்கர், கங்குலி திராவிட் போன்றவர்கள் உள்ள அணியை விரும்புவதாக...

அதற்கு பிசிசிஐ சொல்லியிருந்த பதில் அற்புதமானது அதைத்தான் நான் சொல்லவந்தது. அந்த சமயத்தில் தான் மார்க், மற்றும் ஸ்டீவ் வா அஸ்திரேலிய கிரிக்கெ அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நேரம்.

பிசிசிஐ சொன்னது, நாங்கள் நினைக்கிறோம் திறமையான அஸ்திரேலிய அணி என்பது மார்க் ஸ்டீவ் உள்ள டீம் தான் அதற்காக அஸ்திரேலிய தலைமை ஏசிபி அவர்கள் இருவரும் உள்ள டீமை அனுப்ப முடியுமா அவர்களுக்கு எது சரியான அணி என்று படுகிறதோ அதைத்தான் அனுப்புவார்கள் அதைப்போலவே நாங்களும் என்று எனக்கென்னவோ இது சரி என்று படுகிறது.

Anonymous said...

ipadi veri pudichi alaiyarathukku peru "sodanthara daagama?" ...kadavuley..sorry allavey ivanugala mannichuduppa!

Anonymous said...

Meendum Jeyalalitha Vaikovai POTA-vil poda ;-)

Anonymous said...

ஐயா இட்லி வடை தயவு செய்து இவருக்கு நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை மொழிமாற்றம் பண்ணி சொல்லுங்கப்பா. எனது ஆங்கிலம் புரியவில்லையா?. ஐயா யாத்ரீகரே, இந்தக் கொலைகாரப் பாவிகளை "genuine killers" என்றெல்லாம் நம்ம அறிவு ஜீவிகள் எழுதுவார்கள், எழுதியிருக்கிறார்கள், அப்படி இட்லி வடை எழுதாவிட்டால் அவரை அடிப்படைவாதியாக இணையத்து அறிவுஜீவிக் கொழுந்துகள் முத்திரை குத்துவார்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன். இஸ்லாமியத் தீவீரவாதிகளை, கேவலமான மத வெறி பிடித்த மிருகங்களை, இந்த பாதகங்களைத் தொடர்ந்து மதத்தின் பெயரால் செய்துவரும் கொலைகார நாய்களையும் ஆதரிக்கவும், ப்ரிந்து பேசவும், இந்தக் கொலைகாரர்களை விட கொடிய மனமும், வக்கிர குணமும் பிடித்த ஒரு பெருங்கும்பலே தமிழ் இணைய உலகில் உலவி வருவது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அது போன்ற விஷ ஜந்துக்களைத்தான் நானும் இட்லி வடையும் இங்கு கடுமையாகச் சாடியுள்ளோம். எல்லாத்துக்கும் ஒரு கோனார் நோட்ஸ் போட்டுத் தொலைய வேண்டியிருக்கு, கஷ்டம்.

ச.திருமலை

Anonymous said...

மனிதம் சிதைக்கிற தீவிரவாதிகள்/பயங்கரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
எந்த மதமாக/இனமாக இருந்தாலும்.

சகோ.திருமலையின் உணர்வை மதிக்கிறேன்.
எல்லா மத'மோடி'களுக்கு எதிராகவும் அவர் இதே உணர்வை கொள்ள வேண்டும்.

அரசியல் தொடங்கி வலைப்பூ வரை இதில் இரட்டை வேடம் இருக்கிறது.

எதிரி 'அவனாக' இருந்தால், 'எல்லாரும் கண் திறந்துப்பாருங்களேன்' என்று நாம் கத்துகிறோம்.
'இவராக' இருந்தாலோ, நமது கண்ணையும் சேர்த்து மூடிக்கொள்கிறோம்.

எதிரி மோடியாக இருந்தாலும், பின்லேடனாக இருந்தாலும்-மனிதம் மதிக்கும் நாம்-ஒரு இந்தியனாக-சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு-ஒரு மனிதனாக- நமது எதிர்ப்பை கடுமையாக்க வேண்டும்.
Raja

Anonymous said...

நான் சகோ ராஜாவிடம் போய் மோடியைக் கண்டிக்க மாட்டேன் என்று சொன்னேனா? நான் மோடியைக் கண்டித்ததேயில்லை இவராக அனுமானம் பண்ணிக் கொண்டால் அதற்கு நானா பொறுப்பு? இதுதான் மோடி அப்படி செய்ததால் காசியில் குண்டு வைத்தது சரியென்று தீவீரவாதத்தை நியாயப் படுத்தும் போக்கு. மோடியைப் போல கண்டிக்கப் பட்ட சபிக்கப் பட்ட ஒரு அரசியல்வாதி இந்தியாவிலேயே வேறு யாரும் கிடையாது. மோடியை மட்டும் அல்ல அப்பாவி மக்களை காப்பாற்றத் தவறிய கடமை தவறிய சீக்கியர் படுகொலைக்குக் காரணமாக இருந்த ராஜீவ், பகத், டைட்லர், அசாம் படுகொலையை கண்டுகொள்ளமல் இருந்த இந்திராகாந்தி, இந்துக்களின் படுகொலைகளை தடுக்க வக்கில்லாத நேரு, மராட் கலவரத்தில் இந்துக்களின் படுகொலைகளைத் தடுக்க இயலாத இருந்த அந்தோனி, கோயமுத்தூரில் நடந்த குண்டு வெடிப்பைத் தடுக்க இயலாத கருணாநிதி, இன்னும் எத்தனையோ மதக் கலவரங்களைத் தடுக்க இயலாத அனைத்துக் காங்கிரஸ்கார மந்திரிகள் அனைவரையுமே நான் சமமாகக் கண்டிக்கிறேன். கடமை தவறிய குற்றத்திற்காக இவர்கள் அனைவருக்குமே கடுமையான தண்டனை வழங்கப் பட வேண்டும். அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள். எந்த நீதிபதியும் இவர்கள் குற்றம் நீரூபிக்கப் படும் பொழுது உச்சப் பச்ச தண்டனையை வழங்கலாம், வழங்க வேண்டும். ஆனால் இந்தத் தீவீரவாதிகள் யாருக்கும் கட்டுப் பட்டவர்கள் அல்லர். இவர்கள் செயல்களை நியாயப் படுத்துவது மிருகத்தனமானதொரு செயல். மோடியின் தவறுகளுக்கு சம்பந்தேமேயில்லாத அப்பாவி மக்களைக் கொல்வது தீர்வாகாது. மோடி செய்ததற்குப் பழிக்குப் பழியாக காசியிலும், டெல்லியிலும் அப்பாவி மக்களைக் கொல்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. ஆனால் இது போன்ற தீவீரவாதத்தை நியாயப் படுத்தும் போக்குத் தொடருமானால் மோடி போன்றவர்களுக்கு ஆதரவும் பெருகும். எல்லா பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

ச.திருமலை

Anonymous said...

Well our govt is facilitating the movement of terrorists. Previously they have to infiltrate - now there are better options. Govt has bus and rail service so that terrorists can comfortably get into the country and get arms etc. No wonder that after these so called CBMs terrorist activities are on the rise in the country. Why on earth does the govt want to appease the minorities. I think someone who came across the border need not return to meet his family after 40 years. Thats much better than people loosing lives, hands and legs all over the country.

Anonymous said...

The govt is providing easier ways to the terrorists by providing rail and road links and you think terrorist activities are going to go down ???