பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 07, 2006

மதிமுகவை தொடர்ந்து கம்யூனிஸ்ட் ?

தொகுதி பங்கீடு குறித்த கருணாநிதியுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடதினார்கள். அதன் பிறகு அளித்த பேட்டி கீழே. பேட்டியை படித்தால் நிச்சியம் இவர்களும் அதிமுக பக்கம் போக வாய்ப்பிருக்கிறது.

இந்த பேச்சு வார்த்தை பகல் 11.30 மணி அளவில் தொடங்கியது. 1.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த பேச்சு வார்த்தை முடிவை தெரிந்து கொள்வதற்காக அண்ணாஅறிவாலயத்தில் பத்திரிகை மற்றும் டெலிவிஷன் நிருபர்கள், வீடியோ கேமராமேன்கள் குவிந்திருந்தனர்.

பேச்சு வார்த்தை முடிந்து வெளியில் வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியனை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

( சிகப்பு கலரில் இருப்பது இட்லிவடை கமெண்ட்ஸ் :- )


கேள்வி:- பேச்சு வார்த்தை எப்படி நடந்தது?

பதில்:- தமிழில் தான் நடந்தது. ( கலைஞருடன் பேசிய பாதிப்பு வேறு ஒன்றுமில்லை )

கேள்வி: எத்தனை தொகுதிகள் கேட்டு இருக்கிறீர்கள்?

பதில்:- அதை சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி இருக்கிறோம். ( ஐயோ )

கேள்வி:- பேச்சுவார்த்தையில் என்ன முடிவு செய்துள்ளீர்கள்?

பதில்:- எங்கள் குழு தி.மு.க.வுடன் பேசியுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருத்து பரிமாற்றம் செய்துள்ளோம். ( அடிச்சிகிட்டேங்க என்பதை டிப்ளோமாட்டிகா சொல்ரீங்க )

கேள்வி:- இந்த பேச்சு வார்த்தை திருப்திதானா?

பதில்:- கருத்துகளை தெரிவித்துள்ளோம். இறுதி முடிவு காணப்படவேண்டும். அடுத்து தொடர்ந்து பேசுவோம். ( உள்ளே காபி, டீ நன்றாக இருந்தது என்று கொள்ளவும் )

கேள்வி-: மீண்டும் எப்போது பேசுவீர்கள்?

பதில்:- எப்போது அழைத்தாலும் வந்து பேசுவோம். ( யார் அம்மாவா ? )

கேள்வி:- எப்போது இறுதி முடிவு எடுக்கப்படும்?

பதில்:- பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படவேண்டும். இதில் நாங்கள் மட்டும் இறுதி முடிவு எடுக்க முடியாது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் கலந்து பேச வேண்டும். இன்னும் ஓரிருநாட்களில் முடிவு எடுக்கப்படும். காலம் நமக்காக காத்து இருக்காது அல்லவா? ( வைகோ பாதையில் போய்கொண்டிருக்கிறீகள் )

கருணாநிதி பேட்டி

அவர் பேட்டி கொடுத்துவிட்டு அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு கருணாநிதி அறிவாலத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அவரை நிருபர்கள் சந்தித்து பேச்சுவார்தை குறித்து கேட்டனர்.

அதற்கு கருணாநிதி, "பாண்டியன்(தா.பாண்டியன்) சொன்னதைத் தான் இந்த சோழனும்(கருணாநிதி) சொல்கிறான்'' என்று கூறினார்.

அதற்கு மேல் கருத்து எதுவும் சொல்லாமல் கருணாநிதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி

தி.மு.க.தலைவர் கருணாநிதியை அண்ணாஅறிவாலயத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் என்.வரதராஜன், மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், நிர்வாகிகள் ஏ.கே.பத்மநாபன்,டி.லட்சுமணன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை சந்தித்து பேசினார்கள்.

மாலை 6.30 மணிமுதல் இரவு 8 மணிவரை இந்த பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சு வார்த்தை குறித்து என்.வரதராஜன் நிருபர்களிடம் கூறும்போது, " பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. மீண்டும் சந்தித்து பேசுவோம். எப்போது சந்தித்து பேசுவோம் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்'' என்றார்.

திருச்சி மாநாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அறிக்கபடவில்லை, கம்யூனிஸ்ட கட்சியுடன் இரண்டு மணி நேரம் பேசியும் உடன்பாடு எதுவும் அறிவிக்கபடவில்லை, மீண்டும் பேசுவோம் என்கிறார்கள். எனக்கு கொஞ்சம் சந்தோகம் வர ஆரம்பித்திருக்கிறது.

27 Comments:

மணியன் said...

Too early to conclude. Only indicates that the negotiations are hard.

There is a conspiracy theory circulating here that Congress want to reconstitute UPA with jettisoning communists. May be this is part of that plan.

(Sorry, I am not having access to ekalappai)

Unknown said...

கம்யூனிஸ்டுகள் போவது காரிய சாத்தியமில்லை.
திமுக மாநாட்டில் எவ்வளவு கடுமையாக வைகோவை விமர்சனம் செய்தார்கள் கம்யூனிஸ்டுகள் என்று பார்த்தீர்களா?பிறகு எப்படி அவர்கள் போவார்கள்?

Unknown said...

வைகோவுக்கு கலைஞர் வடை கொடுத்து உபசரித்து அதன் பின் தான் அவர் கட்சி மாறியதாக தகவல்.

என்ன வடை கொடுத்தார்?இட்லி வடையா?அதான் கட்சி மாறிட்டாரா?:-)))))

IdlyVadai said...

மணியன் - நீங்கள் சொல்லுவது சரி. இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். பார்க்கலாம்.

Muthu said...

ஆசை, தோசை, அப்பளம், வடை ( இட்லி வடை??)

IdlyVadai said...

செல்வன் - தமிழ்நாடு அரசியலில் எதுவும் நடக்கலாம். வடை கொடுத்தாரா விடை கொடுத்தாரா என்று தெரியாது :-)

IdlyVadai said...

முத்து - :-))

Anonymous said...

வர வர இட்லி வடையில் தினமலர் வாடை அதிகமாக அடிக்கிறது.

IdlyVadai said...

anonymous - அப்படியா. இந்த செய்திக்கு ஆதாரம் தினத்தந்தி :-).

Anonymous said...

தெருவோரம் உண்டியல் குலுக்கியே கட்சி நடத்திய நல்ல உள்ளம் கொண்டவர்கள் கம்யூனிஸ்ட்காரர்கள். இன்றளவுக்கும் அப்பழுக்கில்லாத தலைவர் என்றால் அது தமிழக அரசியலில் நல்லகண்ணுதான். அவர்கள் திமுகவோடு சேர்ந்தால் கொஞ்சமாவது மானம் மிஞ்சும். அப்படி இல்லாமல் நல்லகண்ணுவை நிற்கவைத்து ஜெயாவுக்கு மட்டும் ஒரே ஒரு சீட்போட்டு காலில் விழ வைத்தார்கள் என்றால் அது நாட்டுக்கே மிகப்பெரிய அவமானம்.

எனவே தற்போதைக்கு திமுக கூட்டணியில் தொடர்வதே உசிதம். அப்படி ஒருவேளை அதிமுக அணியில் நுழைந்து அதன்பின் மானம் போய்விட்டதாக குய்யோ முறையோ என்றால் கேட்கவே நமக்கு கோபம் வரும். வைகோவின் அலறலை நான் கேட்கத்தான் போகிறோம்.

தமிழக பார்ப்பனர்கள் பெரும்பாலும் இந்திய கம்யூனிஸ்ட்களை விரும்புவதில்லை. பார்ப்பனர்கள் எந்த வயலில் இறங்கி விவசாயம் செய்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்க? எனவே வலையுலக பார்ப்பனர்கள் கண்டிப்பாக ஜெயாவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும்தான் ஆதரிப்பார்கள்.

டி ராஜ்/ DRaj said...

தினதந்தியில் வெளியிடப்படும் அரசு விளம்பரங்களுக்கான தொகையை அம்மா அறிவிச்சாங்களாமே? நன்றி விசுவாசமா இருக்குமோ?

IdlyVadai said...

ராஜ் - இருக்கலாம். எனக்கும் கொஞ்சம் கொடுத்த நல்லா இருக்கும் :-))

வெங்காயம் - உங்க பின்னூட்டத்தை பிரசுரிக்க இயலவில்லை மன்னிக்கவும்.

IdlyVadai said...

தி.மு.க உடன்பாடு இப்படி இருக்கலாம்

தி.மு.க. - 136
காங்கிரஸ் - 42
பா.ம.க. - 28
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு - 11
இந்திய கம்யூனிஸ்டு - 10
உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் உதிரி கட்சிகள் - 7

மொத்தம் - 234

ஜோ/Joe said...

//வர வர இட்லி வடையில் தினமலர் வாடை அதிகமாக அடிக்கிறது.//
ஹி..ஹி..இட்லி வடையை இப்போல்லாம் தினமலர் பேப்பர்-ல தான் பொதிஞ்சு குடுக்குறது.

ஏஜண்ட் NJ said...

----------------
பாண்டியன்(தா.பாண்டியன்) சொன்னதைத் தான் இந்த சோழனும்(கருணாநிதி) சொல்கிறான்//

பின்ன என்ன, கூட்டணியில் சேரவில்லை என்றா சொல்லமுடியும்!

;-)

-------------

Haranprasanna said...

கம்யூனிஸ்ட்டுகள் அணி மாற வாய்ப்பே இல்லை. சொன்னதைக் கொஞ்ச காலத்திற்காகவாவது காப்பாற்ற நினைப்பவர்கள் அவர்கள். ஒற்றை இலக்கங்களில் திமுக தரப்பில் சொல்லப்பட்ட இடங்களை மறுத்து இரட்டை இலக்கங்களில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் தலா பத்து இடங்கள் என்று முடிவடையும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. காங்கிரஸுக்கு 42 இடங்கள் என்ற முடிவு எட்டப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. 136-ல் தி.மு.க. போட்டியிடும் என்று கொண்டால், எப்படி தனி மெஜாரிக்கான இடம் கிடைக்கும்?

krishjapan said...

i expect some more will be given to PMK

IdlyVadai said...

ஞான்ஸ் - சூப்பர் :-)
கிருஷ்ணா - நான் அப்படி நினைக்கவில்லை. வைகோ பல்டி அடிப்பதற்கு முன்பே 'மதிமுக வின் தொகுதிகள் இவர்களுக்கு கிடையாது என்று முடிவு செய்யபட்டதாக படித்தேன். இன்னும் இரண்டு தினங்களில் அவர்களுடன் பேச்சு வார்த்தை இருக்கும் என்று தெரிகிறது.
பிரசன்னா - நீங்கள் சொல்லுவது சரி.

சந்திப்பு said...

இட்லி, வடை போய் சூடாக ஒரு காபி குடிங்க... உங்க பகல் தூக்கம் காணாமல் போகும். இடதுசாரிகள் வலது பக்கம் சாய்வது உங்கள் பகல் கனவில் மட்டுமே நடக்கக்கூடியது!

IdlyVadai said...

சந்திப்பு - சூடா டீ குடித்தேன். தெளிவு பெற்றேன். :-).
கடைசி செய்தி: பாஜக - தனித்து போட்டி வெங்கையா நாயுடு அறிவிப்பு

Haranprasanna said...

தப்பிச்சது பா.ஜ.க.

பா.ஜ.க. கூட்டணிக்குத் தயார்னு அறிவிச்சாலும் அ.தி.மு.க அழைத்திருக்காது. ஏற்கனவே இஸ்லாமிய, கிறித்துவ சமுதாயத் தலைவர்கள் அ.தி.மு.க. பக்கம் இருக்கும் நேரத்தில், அதை இழக்க அ.தி.மு.க. தயாராக இருந்திருக்காது. அதனால் பா.ஜ.க. தயார் என்று அறிவித்திருந்தாலும் அ.தி.மு.க. கண்டு கொண்டிருக்காது. அந்தக் கஷ்டத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டது பா.ஜ.க.

பா.ஜ.க.வின் இந்த முடிவால், வெற்றி வாய்ப்பு யாருக்கெல்லாம் மாறும்? :P

IdlyVadai said...

haranprasanna - போட்டுத்தாக்கு பதிவில் ஞான்ஸ்க்கு அளித்த பின்னூட்டத்தை பார்க்கவும் :-). நீங்கள் சொல்லுவது சரி, ஆனால் - திருநாவுக்கரசர் - "அ.தி.மு.க.வோடு இன்று வரை கூட்டு இல்லை. அதற்காக கடைசி வரை கூட்டு இல்லை என்று கூறு முடியாது" என்று சொல்லியிருக்கிறார் :-)

krishjapan said...

Haranprasanna, But for Aranthangi, no other change anywhere.

krishjapan said...

Seems CPI agreed to 10 so, "Chera"n wont join the pandiyan and Cholan?!

selvan said...

I do not understand why the experienced MK is under big confusion.He should have commanding power like jaya on seat allotment.I think he lost his self confidence on winning election.Delay of seat allotment from DMK alliance is due to number problem or allocation of place problem?. If they comeout one time for both, it will be good. Otherwise some of the party may come out and join in ADMK.

நாமக்கல் சிபி said...

இட்லி வடை!
எனக்கென்னவோ இன்னும் குறைந்தபட்சம் ஒரு கட்சி இந்தக் கூட்டணியிலிருந்து எகிறும் என்றே தோன்றுகிறது.பொறுத்திருந்து பார்போம்!

(இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்)

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

Machi said...

கருணாநிதி அரசியல் விற்பனர் ( சாணக்கியர்) என்று சொல்வது உண்டு. எதனால் இப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியாது, போன தேர்தல் & இந்த தேர்தலை பார்த்தா அப்படி தெரியவில்லை, ஜோ சொன்னது போல் தடுமாறுகிறாரோ? பா.ஜ.க சேரலைன்னா கம்யூனிஸ்டுகள் அ.தி.மு.க வுடன் கூட்டு சேர தயங்கமாட்டார்கள். எல்லாம் அரசியல்.
இட்லி வடை காரசாரமா தான் இருக்கு :-))