பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 07, 2006

போட்டுத்தாக்கு

கூட்டணி உண்டா இல்லையா - பாஜக இன்று முடிவு - ( எல்லோரும் ரொம்ப டென்ஷனாக இருக்காங்க சீக்கிரம் சொல்லுங்க )


எம்.ஜி.ஆர். பாணியில் ஜெயலலிதா கூட்டணி அமைத்து இருக்கிறார் - திருமாவளவன் பேட்டி ( எம்.ஜி.ஆர் இல்லாத தைரியத்தில் பேசரீங்க பேசுங்க )

எம்ஜிஆரின் வேனை வைத்திருப்பதால் மட்டும் எம்ஜிஆர் ஆக முடியாது - விஜயகாந்த் மீது நாஞ்சில் சம்பத் தாக்கு ( அதுக்குனு எம்ஜிஆரையா வைத்துக்கொள்ள முடியும் ?)

பள்ளிகளில் விரைவில் யோகா கட்டாயமாக்கப்படும் - அமைச்சர் அன்புமணி தகவல் ( எவ்வளவு தலைகீழ நின்னாலும் மதிமுக திரும்ப வராது சார்)

அதிமுக ஆட்சி அமைக்கும் - திண்டிவனம் ராமமூர்த்தி ( உங்க கட்சி கூட்டணியால் தான் என்று சொல்லாமல் போனீர்களே )

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி - கார்த்திக் அறிவிப்பு ( தினமும் உங்க தொல்லை பெரிய தெல்லையா இருக்கு )

வைகோவை கூட்டணியில் சேர்த்தது மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் நடத்துவதில் கெட் டிக்காரர் என மீண்டும் நிரூபித்து உள்ளார் (உங்களை சேர்த்துமா ? )

தேர்தல் நேரத்தில் தனிப் பட்டவர்களை தாக்கி பேசுவது தவிர்க்க முடியாதது. இதை எல்லா கட்சிகளும் செய்திருக்கின்றன. சோனியாவை தாக்கி பேசிய சரத்பவார் இப்போது மத் திய அமைச்சராக இல் லையா? சோனியாவை விமர்சித்த ஜெயலலிதா, இப்போது தனது நிலையில் இருந்து மாறுபட்டிருக்கிறேன் என்று அதன் பின்னர் கூறியிருக்கிறார். சரத்பவாருக்கு ஒரு நிலை, ஜெயலலிதாவுக்கு ஒரு நிலையா ? - திண்டிவனம் ராமமூர்த்தி ( நாளை உங்களுக்கு இருக்கு )


""வைகோ மசாலாக் குழம்பு. மிளகாய், மஞ்சள், மிளகு, உட்பு இதையெல்லாம் குழப்பினாத் தான் குழம்பு. வைகோவும் குழம்பிப் போயிருக்கிறார்; கருணாநிதியும் குழப்பிக் கொண்டிருக்கிறார். என் னில் பாதி என்று என்னைச் சொன்ன கருணாநிதி, பாதியில் கைவிட்டு விட்டார். "மயிலை... கொல்லையில் தம்பி ராஜேந்தரிடம் கையேந்தினேன், கைகொடுத்தார்' எனச் சொன்ன கருணாநிதி, கை கழுவி விட்டார். தன் தேவைக்குப் பயன்படுத்திவிட்டு பின் னர் யாரையும் கழற்றி விடுபவர் கருணாநிதி. வைகோவைப் பார்த்து, "தம்பி வைகோ... உன் உழைப்பை வை! பின் யூ கோ' என்பார்...'' - இலட்சிய தி.மு.க., தலைவர் விஜய டி.ராஜேந்தர் ( சூப்பர்ர்ர்ர். மா )

இப்படி அப்படி சொன்னாங்க :

தமிழகத்தில் ஜாதி சண்டை வர வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார். அதனால் தான் "அடங்க மறு, அத்து மீறு' என்று பேசி வரும் கும்பலுடன் (விடுதலைச் சிறுத்தைகள்) கூட்டணி வைத்துள்ளார்- ராமதாஸ் (10.4.2001).

தமிழுக்காக மட்டுமல்ல, வரும் சட்டசபை தேர்தலிலும் திருமாவளவனுடன் இணைந்து நிற்பேன். அவரை தி.மு.க., கூட்டணியில் சேர்ப்பேன்-ராமதாஸ் (7.1.2006)

முதல்வர் பதவி கருணாநிதிக்கு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளதா- வைகோ (1.5.2001)

கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து நிச்சயம் வெற்றி பெறுவோம். கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கியே தீருவோம்-வைகோ (28.8.2005)

ஜெ தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பார் ( 4-3-2006)

அ.தி.மு.க., கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இதற்காக நான் ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டவும் தயார்- மணிசங்கர் அய்யர்(1.4.2001)

தமிழ்நாட்டில் பேயாட்சி நடக்கிறது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை- மணிசங்கர் அய்யர்(23.10.2005)

11 Comments:

Unknown said...

சன் டி.வி. மாதிரி 'முன்னே பின்னே' ஆரம்பிஞ்சிட்டீங்க? கலக்குங்க.

இதெல்லாம் சன்'னுக்கு அனுப்பக் கூடாதா?

IdlyVadai said...

துபாய் வாசி - தினமலர் போய் இப்போ சன் டிவியா ஓ.கே ஓ.கே :-)

ஏஜண்ட் NJ said...

--------------
//கூட்டணி உண்டா இல்லையா - பாஜக இன்று முடிவு//

இந்தத் தேர்தலில் போட்டியிட்டே தீரனும்னு கட்டாயம் எதுவும் இல்லாட்டி, இந்தத் தேர்தல்ல நிக்காம, கொஞ்சம் ஓரமா ஒக்காரலாம்!

;-)


-------------

IdlyVadai said...

ஞான்ஸ் - கடைசி செய்தி - பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடும் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைப்பதில்லை என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என்றார். ( அழைக்கவில்லை என்றும் படிக்கலாம் )

விஜயகாந்த் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்கும் வாய்ப்பில்லை என்றார் அவர்.

பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மார்ச் 10 முதல் 15 வரை மனுக்கள் பெறப்படும் என வெங்கையா நாயுடு தெரிவித்திரிக்கிறார்.

யோசிப்பவர் said...

நீங்க துக்ளக்ல வேலை பாக்குறிங்களோ?!?!;)

IdlyVadai said...

யோசிப்பவர் - தினமலர், சன் டிவி இப்போ துக்ளக் :-)

சீனு said...

அசதிட்டீங்க...

சீனு said...

//பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மார்ச் 10 முதல் 15 வரை மனுக்கள் பெறப்படும் என வெங்கையா நாயுடு தெரிவித்திரிக்கிறார். //

அது சரி! போட்டியிட ஆள்???

IdlyVadai said...

சீனு - தாங்ஸ்
சீனுசீனு - இதை நான் அடுத்த போட்டுத்தாக்கு'வில் எழுதலாம் என்று இருந்தேன் :-)

ஏஜண்ட் NJ said...

*************

"எவ்ளோதான் கத்தி, அருவா, துப்பாக்கின்னு எடுத்துட்டுப் போயி நின்னாலும், கடைசில தோத்துட்டு நிக்கறது நாங்க தாங்க; என்ன பண்றது, அது எங்க தொழில்" - ரிஸ்க் பாஸ்கர், டிஷ்ஷும்.

ரிஸ்க் பாஸ்கர பிடிச்சவங்களுக்கு, பா.ஜ.க வையும் பிடிக்கும்!

;-)
*************

டி ராஜ்/ DRaj said...

Idlyvadai:
What about Jaya's flip flops??? I wonder if you are trying to ignore her delibrately ;)
Cheers
DRaj