பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 06, 2006

அவர் வைகோ, நான் விஜயகாந்த் !

விஜயகாந்த் பேட்டி
கேள்வி: தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? அதிமுக கூட்டணியில் இணைவீர்களா?


பதில்: வரும் தேர்தலில் கூட்டணி உருவாகும் சூழ்நிலை இருந்தபோதிலும் அதிமுகவும் வேண்டாம், திமுகவும் வேண்டாம். 234 தொகுதிகளிலும் (இதில், 10 லிருந்து 20 தொகுதிகள் குறையலாம்) தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளோம். இதில் எவ்வித மாற்றமும் இல்லை.

கேள்வி: அதிமுக கூட்டணியுடன் வைகோ இணைந்தது பற்றி?

பதில்: அவர் வைகோ. நான் விஜயகாந்த். இக்கேள்விக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: அதிமுக கூட்டணி சார்பில் சசிகலா நடராஜன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறதே?

பதில்: அதிமுக கூட்டணியில் சேர சசிகலாவே எனது மனைவியுடன் பேரம் பேசியதாகவும், அதற்கு நான் ஒத்துக்கொண்டதாகவும்கூட பத்திரிகைகளில் செய்திகள் வெளிவருகின்றன. இது போன்ற செய்திகள் வதந்தி மட்டுமே, உண்மையில்லை.

கேள்வி: தனித்துப் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என கருதுகிறீர்களா?

பதில்: ஏன் வெற்றி பெற முடியாது? தமிழகத்தில் திடீரென ஏற்பட்ட "சுனாமி' போல தேர்தலிலும் திடீரென மாற்றம் ஏற்பட்டு தேமுதிக வெற்றி பெறக்கூடாதா? சுனாமியை நாம் எதிர்பார்க்கவில்லையே.

கேள்வி: நடிகர் என்பதற்காக உங்களைக் காணவரும் கூட்டமெல்லாம் கட்சியின் வோட்டுகளாக மாறுமா?

பதில்: நிச்சயமாக. 50 சதவீதம் வரை மாறும். எனக்குச் சேரும் கூட்டத்தில் 75 சதவீதம் வரை வோட்டுகளாக மாறும்.

கேள்வி: உங்கள் தலைமையில் 3-வது அணி உருவாகுமா?

பதில்: இதுவரை நான் முயற்சி எடுக்கவில்லை.

சில சேனல்கள் ஓப்பனாகியிருக்கிறது என்று தகவல் ! பார்க்கலாம்.

0 Comments: