பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 04, 2006

ஜெ வைகோ சந்திப்பு முழு விபரம்

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தார். இன்று அவர் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

அ.தி.மு.க.வுக்கும், ம.தி.மு.க.வுக்கும் இடையே ஏற்பட்ட கூட்டணி இரு கட்சி தொண்டர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஜெயலலிதாவை வைகோ சந்திக்கிறார் என்று இன்று காலையிலேயே தகவல் பரவியது.

இதையடுத்து வைகோ வீட்டின் முன்பும், கட்சி அலுவலகமான தாயகம் முன்பும் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண் டர்களும் கூடியிருந்தனர். அவர்கள் "புரட்சி புயல் வைகோ வாழ்க'' என்று கோஷமிட்டவாறு இருந்தனர்.

காலை 10 மணிக்கு வைகோ தனது வீட்டில் இருந்து ஜெயலலிதாவை சந்திக்க காரில் புறப்பட்டார். அப்போது தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், வாழ்க கோஷம் எழுப்பியும் வழியனுப்பி வைத்தனர். அப்போது தொண்டர்கள் நிர்வாகிகளிடம் வைகோ நலம் விசாரித்தார்.

பின்னர் எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகம் வந்தார். அங்கும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். 11.30 மணிக்கு தாயகத்தில் இருந்து வைகோ காரில் புறப்பட்ட போதும் தொண்டர்கள் வாழ்க கோஷம் எழுப்பி வழியனுப்பி வைத்தனர். 11.45 மணிக்கு வைகோ போயஸ் கார்டன் வந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க சென்றார்.

அங்கு ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்களும், ம.தி.மு.க. தொண்டர்களும் கூடியிருந்தனர். அவர்கள் ஒருவொருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

உற்சாக மிகுதியால் தொண்டர்கள் ஒருவொருக்கொரு வர் கட்டியனைத்தும் வாழ்த்து தெரிவித்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டின் முன்பு கூட்டியிருந்த தொண்டர்களிடையே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

ம.தி.மு.க. நிர்வாகிகள் வி.பி. பாண்டியன், அடையாறு சண்முகசுந்தரம், நன்மாறன், வேளச்சேரி மணிமாறன், செல்வபாண்டியன், இளங் காவலன், பூங்காநகர் ராமதாஸ், ஆர்.எஸ். மனோகரன், ஆர்.கங்கா, என்.எஸ்.விஜயன், மலுக்காமலி சீமா பஷீர், சூளைமேடு குமார் உள்பட ஏராளமான ம.தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பியவாறு இருந்தனர்.

அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் "2006 வின்னிங் டீம் கேப்டன் அம்மா'' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேனரை கையில் பிடித்து இருந்தார்.

முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை வைகோ சந் தித்து பேசினார். சந்திப்பு முடிந்ததும் 12.20 மணிக்கு ஜெயலலிதாவும், வைகோவும் ஒன்றாக வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்தனர்.

வராண்டா முன்பு திரண்டிருந்த நிருபர்கள் முன்னால் சிரித்தபடி இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதலில் பேட்டி அளித்தார்.

2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எங்கள் கூட்டணி தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்றி மகத்தான வெற்றியை பெறும்.

கேள்வி: பொடா கைதியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறீர்களே? அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: பழைய விஷயங்களை திரும்பிப் பார்த்து அதையே நினைத்துக் கொண்டிருப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து செயல்படுவதில்தான் நம்பிக்கை வைத்து இருக்கிறோம்.

அதன்படி இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

ஆக்கப்பூர்வமான விஷயங்களை இப்போது இறுதி செய்துள்ளோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர பகைவனும் கிடையாது.

கே: பொடா கைதியுடன் கூட்டணி வைத்து இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

ப: நாங்கள் நண்பர்களாக இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம்.

கே: அ.தி.மு.க. கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருமா?

ப: வேறு கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறது. அந்த கட்சிகள் வரும்போது உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

கே: இருவரும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்வீர்களா?

ப: இது முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு அல்ல. மற்ற கேள்விகளுக்கு பிறகு பதில் சொல்கிறோம். நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்களும், ம.தி.மு.க. தொண்டர்களும் இணைந்து வெற்றிக்கு உழைப்பார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக அரசியல் வரலாற்றில் எங்கள் அணி சிறப்பு மிக்க அணியாகவும், வலிமை மிக்க அணியாகவும் அமைந்துள்ளது. தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

தேர்தலில் அ.தி.மு.க. தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு ம.தி.மு.க. தோழர்களும் ம.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு அ.தி.மு.க. தோழர்களும் சேர்ந்து பணியாற்றுவார்கள். எங்கள் அணி தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கேள்வி: மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பீர்களா? அல்லது வாபஸ் பெறுவீர்களா?

ப: இன்று மாலை நிருபர்களை சந்திக்கிறேன். அப்போது அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். இப்போது முதல்-அமைச்சர் சொன்ன கருத்தே எனது கருத்து.

9 Comments:

Anonymous said...

Good coverage Idli! Hope you would extend your coverage when Purathchi Kazhainar joins the coalition!

.:dYNo:.

குழலி / Kuzhali said...

மதிமுக எக்ஸ்ட்ரா லக்கேஜா?

2001 தேர்தலில் மதிமுக திமுக கூட்டணியில் இல்லாமல் போனதால் திமுக கூட்டணி 26 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது,இவற்றில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில்.

அந்த நிலையில் கூட்டணியில் தென் மாவட்டத்தில் ஓரளவிற்கு வாக்கு வங்கியுள்ள காங்கிரஸ் திமுகவுடன் இல்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும், தற்போது திமுக மதிமுகவிற்கு தர நினைத்தது 22 தொகுதிகள்...

திமுக கூட்டணி ஆட்சிக்கு தயாராக இல்லாமல் தனி ஆட்சிக்கு மட்டுமே தயாராக இருந்தால் தனிப்பட்ட முறையில் திமுக மதிமுகவினால் வெகு சில தொகுதிகளை மட்டுமே இழக்கும் என்பது எனது கணிப்பு.

நன்றி

IdlyVadai said...

Dyno - நன்றி. கவரேஜ் கொடுத்தால் போச்சு :-)
கருத்துக்கு நன்றி குழலி

Anonymous said...

கே: இருவரும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்வீர்களா?

ப: இது முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு அல்ல. மற்ற கேள்விகளுக்கு பிறகு பதில் சொல்கிறோம். நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்களும், ம.தி.மு.க. தொண்டர்களும் இணைந்து வெற்றிக்கு உழைப்பார்கள்.

arambame ippadiya. pavam vaiko

IdlyVadai said...

Anonymous - இதைவிட காமெடி இருக்கு ; பொடா பற்றி ஒரு கேள்விக்கு பொடா சட்டம் மத்தியில் அரசு கொண்டுவந்தது, மேடம் ஜெ ( கவனிக்கவும் மேடம் ) அதை அமல் படுத்தினார் அவ்வளவுதான் என்றார் :-). அதாவது மத்திய அரசு ( இவரும் அதில் இருந்தார் ) தான் அதற்கு காரணம் என்கிறார். நல்ல கூத்து.

selvan said...

Vaiko தியாகியாகிவிட்டார். தன் மானம் பெரிதா அல்லது தன் கட்சி மானம் பெரிதா என்பதில் தன் மானத்தைவிட தன் கட்சி மானம் தான் பெரிது என்று தான் தியாகி என்பதை MDMK membersக்கு உணர்த்திவிட்டார். தாயை விட தாயகம் தான் பெரிது என்று உணர்த்திவிட்டார்.

Anonymous said...

By switching loyalties, vaiko has lost credibility among educated voters.My opinion is he should have stayed with DMK. MK has proved beyond doubt that his priorities his family members and thier political future. Long live democracy !!!!!

Murthi.

குசும்பன் said...

Idli,

Excellent coverage!!! Keep up your good show.

:-)

Boston Bala said...

By not making any of his MPs as ministers in the Cong Govt., he has this idea from Day #1. His thought would be a DMK in opposition is easy to break, than a DMK in power (& by that, which has police & unlimited control over its MLAs).