பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 04, 2006

"ஓ பாசிட்டிவ்" புயல் அடித்த விபரம்

ம.தி.மு.க. "ஓ'' பாசிட்டிவ் ரத்தம் போன்றது. அது எதனுடனும் பொருந்தும் என்று கடந்த டிசம்பர் மாதம் வைகோ பேசியபோதே ம.தி.மு.க. பற்றிய பரபரப்பு தொடங்கி விட்டது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ம.தி.மு.க. ஒரு மகத்தான சக்தி என்ற ரேஞ்சுக்கு உயர்ந்தது. அந்த அளவுக்கு தினம், தினம் பரபரப்பான நிகழ்வுகள் நடந்தன. இது பற்றிய ஒரு கண்ணோட்டம்.

ஜன. 1 :- தொகுதி பங்கீட்டில் ம.தி.மு.க.வுக்கு கவுரவமான இடங்கள் என்று நம்புகிறேன்- வைகோ

ஜன. 2:- வைகோ கவுரவமான தொகுதிகள் கேட்பதில் தவறு இல்லை -கருணாநிதி

ஜன. 3:- ம.தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும்- டைரக்டர் சேரன்.

ஜன. 16:- ம.தி.மு.க. நீடிக்குமா?- பத்திரிகைகளில் பரபரப்பு தகவல்.

ஜன. 23 :- தமிழக அரசுக்கு ஆதரவாக வைகோ மத்திய அரசுக்கு கடிதம்.

ஜன. 24:- தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்கும் என்று நம்புகிறேன் -கருணாநிதி.

ஜன. 26:- கருணாநிதி- வைகோ சந்திப்பு, தொகுதி பங்கீடு பற்றி பேச்சு.

ஜன. 27:- ஒரு வாசல் மூடினால் இன்னொரு வாசல் திறக்கும்- வைகோ.

ஜன. 28:- தொகுதி பங்கீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது- எல்.கணேசன்.

ஜன. 30:- ம.தி.மு.க. தொண்டர்கள் நலனை காப்பதே எனக்கு முக்கியம்- வைகோ.

பிப். 1:- கூட்டணிக்காக மற்ற கட்சிகளுக்கு அ.தி.மு.க. கதவு திறந்தே இருக்கிறது- ஜெயலலிதா.

பிப். 5:- கூட்டணியில் மாற்றம் வரப்போவது உண்மை- எல்.கணேசன்.

பிப். 10:- வந்தாரை வரவேற்க காத்து இருக்கிறேன்- ஜெயலலிதா.

பிப். 11:- தி.மு.க. கூட்டணி சரி இல்லை என்றால் புதிய கூட்டணியை உருவாக்குவோம்- நாஞ்சில் சம்பத்.

பிப். 12:- ம.தி.மு.க. தொண்டர்களை யாராலும் ஏமாற்ற இயலாது- நாஞ்சில் சம்பத்.

பிப். 12:- அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் வைகோவுக்கு காளிமுத்து அழைபபு.

பிப். 14:- நிதானமாக அடி எடுத்து வைக்கிறேன்- வைகோ

பிப். 14:- வைகோ என்னுடன் போனில் பேசினார்- காளிமுத்து.

பிப். 15:- ம.தி.மு.க.வின் செயல்பாடு நாணயமான அரசியலாக இல்லை- ஆற்காடு வீராசாமி.

பிப். 16:- ம.தி.மு.க. தொடர்ந்து மவுனம்.

பிப். 17:- வைகோ பதில் சொல்ல மறுப்பு.

பிப். 18:- ம.தி.மு.க. ஒரு முடிவு எடுத்தால் நாங்கள் வேறொரு முடிவு எடுப்போம்- கருணாநிதி.

பிப். 19:- கண் எதிரே கனி இருக்க காயை ஏன் நாட வேண்டும்- பூந்தமல்லி திருமண விழாவில் வைகோ பேச்சு.

பிப். 20:- தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்கிறது- வைகோ.

பிப். 21:- இதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன்- கருணாநிதி.

பிப். 22:- கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு. [ நூறு தொகுதிகள் தந்தாலும் என் மகன் அதிமுக பக்கம் போக மாட்டான் - வைகோ தாயார் பேட்டி ]

பிப். 26:- ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம். கூடுதல் தொகுதி பெற நிர்வாகிகள் வலியுறுத்தல். வைகோ பாம்பு கதை சொல்கிறார்.

பிப். 27:- தி.மு.க. ஒதுக்கிய 20 இடங்களை ஏற்க ம.தி.மு.க. மறுப்பு. வைகோவுடன் ஆற்காடு வீராசாமி சந்திப்பு.

பிப். 28:- 21 தொகுதி தருவதாக தி.மு.க. சமரசம்.

மார்ச். 1:- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க ம.தி.மு.க. நிர்வாகிகள் வலியுறுத்தல்.

மார்ச். 2:- ம.தி.மு.க. அணி மாறுவதாக பரபரப்பு. திருச்சி மாநாட்டில் வைகோ படம் அகற்றம்.

மார்ச். 2:- வைகோவுக்கு காளிமுத்து மீண்டும் அழைப்பு.

மார்ச். 3:- ம.தி.மு.க.வுக்கு 22 தொகுதிகள்தான் தர முடியும். விரும்பினால் கூட்டணியில் தொடரலாம்- திருச்சியில் கருணாநிதி அறிவிப்பு.

மார்ச். 4:- தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறியது. அ.தி.மு.க.வுடன் புதிய கூட்டணி உதயமானது.

[ எது எதுவோ மாறுகிறது அதனால் எப்போதும் வைகோ கழுத்தில் இருக்கும் கருப்பு துண்டுக்கு பதில் வேறு கலர் :-) ]

2 Comments:

Anonymous said...

>>>>நூறு தொகுதிகள் தந்தாலும் என் மகன் அதிமுக பக்கம் போக மாட்டான் - வைகோ தாயார் பேட்டி

It is hurting that the media (and her son to an extend) made her the comedian in the whole show.

.:dYNo:.

IdlyVadai said...

ஒரு தடவை மனதில் அந்த எண்ணம் வந்துவிட்டால் பிறகு it is a matter of time. அம்மா அப்பா லாஜிக் எல்லாம் பிறகுதான்.