பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 02, 2006

வைகோவுக்கு காளிமுத்து மீண்டும் அழைப்பு!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. அவைத்தலைவரும் முன்னாள் சபாநாயகருமான காளித்து `மாலை மலர்' நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் புரட்சித் தலைவி தனது சிறப்பான ஆட்சி மூலம் தமிழகத்தில் அரும்பணி ஆற்றி உள்ளார். அதன் காரணமாக சட்டசபை தேர்தலில் வெற்றியை அ.தி.மு.க. வலுவோடு எதிர் நோக்கி உள்ளது.

தி.மு.க. கூட்டணியோ பறவை காய்ச்சல் கண்ட கோழி பண்ணை போல பரிதாப நிலையில் காட்சி அளிக்கிறது. நான் வருத்தப்படுவது எல்லாம் சகோதரர் வைகோவை நினைத்துதான்.

ராமாயண இந்திரஜித்தை போலவும் மகாபாரத அபிமன்யூ போலவும் அவரது நிலை உள்ளது.

அபிமன்யூவுக்கு ஏற்பட்டது என்ன என்று அபிமன்யூ படத்தின் பழைய வசனகர்த்தாவான கருணாநிதியை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

துரியோதனன் அமைத்த சக்கர வியூகத்தில் நுழைய தெரிந்த அபிமன்யூவுக்கு வெளியில் வர தெரியவில்லை. பீமன் வெளியில் வந்து விடு என்று சொன்னது போல நான் வைகோவை அழைக்கிறேன்.

உள்ளே நுழைந்த அபிமன் யூவாக இருக்கும் வைகோ அங்கு இருந்து வெளியில் வரும் வழியை கண்டறிந்து விரைவில் வந்து விட வேண்டும். அது தான் அவருக்கு நல்லது.

குமாரசாமியை தேவேகவுடா முதல் அமைச்சர் ஆக்கியது போல இங்கே நாஞ்சில் சம்பத் கூறிய கருத்து தி.மு.க.வை அலற வைத்து விட்டது. ஸ்டாலினை எப்படியாவது முதல்-அமைச்சர் ஆக்குவது தான் தி.மு.க.வின் அரசியல் வரைபடம்.

அந்த திட்டம் வெளியில் தெரிந்து விட்டது. அவர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. எதிர்கால தமிழகத்தின் நலன் கருதி அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் ஒரே திராவிட இயக்கம் என்ற அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்து சேருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பதை வைகோ உணர்ந்து விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இந்த மாத இறுதி வரை ஓய்வு எடுக்குமாறு எனக்கு டாக்டர்கள் அறிவுரை கூறி உள்ளனர். ஏப்ரல் முதல் வாரததில் இருந்து புரட்சித் தலைவி அனுமதியுடன் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

இவ்வாறு காளிமுத்து கூறினார்.

நன்றி மாலைமலர்

2 Comments:

சதயம் said...

நன்றி: இட்லி வடை

Haranprasanna said...

நல்லா அப்டேட் பண்றீங்க. நன்றி.