பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 02, 2006

ஜார்ஜ் புஷ் டாப் டென்

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வந்துவிட்டர். அமெரிக்கத் தொலைக்காட்சி, செய்தி ஊடகங்கள் எல்லாம் அமெரிக்கா தான் அவர்களுக்கு உலகம் என்று நினைக்கும். ஆனால் நேற்று நம் டிவிக்களை பார்த்தால் அவர்களுக்கு இவர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று ஆனது; ஓயாமல் புஷ் புராணம் பாடித் தீர்த்துவிட்டார்கள்.

பிரபு தன் வலைத்தளத்தில் சொல்லுவதை போல் இன்னும் மூன்று நாட்கள் புஷ் புராணம் தான் இங்கு பார்த்தாலும் இருக்கும்... இந்த மாதிரி நியூஸ் வந்தால் ஆச்சரியபட கூடாது.

1. புஷ் ஹோட்டலில் இட்லி, வடையை விரும்பி சாப்பிட்டார். அவர் சாப்பிட்டதைப் பார்த்த தயாநிதி மாறன், 'ரெண்டு இட்லி ஒரு வடை பார்சேஏஏல்!!' என்று உணர்ச்சி வசப்பட்டுக் கத்திவிட்டார்.

2. அதிபர் புஷ்சின் தந்தையான சீனியர் புஷ் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ஏற்கனவே நட்டு வைத்த மாமரத்திற்கு புஷ் மற்றும் லாரா புஷ் தண்ணீர் ஊற்றுகின்றனர். அதில் உள்ள மாங்காய்களை உப்பு, மிளகாய்ப் பொடி தொட்டுக்கொண்டு சாப்பிடுகிறார்கள்.

3. புஷ், கிளிண்டன் தாஜ் மஹாலில் உட்கார்ந்த இடத்துக்கு எதிர்ப்பக்கம் உட்கார்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.

4. புஷ் மூன்று கைக்குட்டை வைத்துள்ளார். அவை குண்டு துளைக்காதவை என்பது குறிப்பிடத்தக்கது.

5. புஷ் டிவியில் கிரிக்கேட் மாட்ச் பார்த்துவிட்டுத் தான் தூங்கப் போகிறார். தோனி'க்கு முடி திருத்த மாதம் $100 அனுப்பிவைப்பார் என்று PTI செய்தி தெரிவிக்கிறது.

6. விஜயகாந்த் திவிரவாதிகளை அடித்து நொறுக்கும் படத்தைப் பார்த்துவிட்டு இவரை அமெரிக்காவிற்கு அனுப்ப முடியுமா என்று புஷ் ஜோக்கடித்தார்.

7. பிரதமருடன் பேசும் போது வலது காலை இடது கால் மேல் போட்டுப் பேசியதால் இடதுசாரிகளுக்குக் கோபம். காங்கிரஸுக்கு ஆதரவு கொடுக்கலாமா வேண்டாமா என்ற அறிவிப்பு அவர்களிடமிருந்து விரைவில் வரும்.

8. விவசாயிகளைப் பார்த்த புஷ் ஒரு விவசாயியின் மூக்கு பின்லேடன் மூக்கு போல் இருந்ததால் அப்செட்டானார்.

9. புஷ் ஹிந்தி கற்றுக்கொண்டுவிட்டார்!. 'அச்சா' என்ற ஹிந்தி வார்த்தையை எல்லாவற்றிருக்கும் பயன் படுத்துகிறார். பாகிஸ்தான் அதிபர் பற்றிய கேள்விக்கும் 'அச்சா' என்றே கூற, எல்லோரும் சிரித்துவிட்டனர்.

10. மன்மோகன் சிங் போல் தனக்கு தலைப்பா வேண்டும் என்ற புஷ் அடம்பிடித்தார். ப.சிதம்பரம் அவருக்கு தலைப்பா கட்டிவிட்டார். விருந்தில் டான்ஸ் ஆடிய புஷ்ஷின் தலைப்பா நழுவி விழுந்தது. நல்ல வேளை ப.சிதம்பரம் புஷ்ஷுக்கு வேட்டி கட்டிவிடலை என்று காங்கிரஸில் பலர் பேசிக்கொண்டனர்.

சற்று முன் கிடைத்த செய்தி: அமெரிக்க அதிபர் புஷ் இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி கலாம் அவருக்கு வரவேற்பு அளித்தனர். குதிரைப் படை, ராணுவ அணிவகுப்பு மரியாதையை அதிபர் புஷ் ஏற்றுக் கொண்டார். அப்போது குதிரைப் படையில் ஒரு குதிரை சாணம் போட்டதை ஆர்வமாகப் பார்த்தார் புஷ்.

6 Comments:

Unknown said...

:)))))

யாரா இருந்தாலும், இட்லி வடைக்கு ஒரு மவுசு கொடுக்காம இருக்க முடியுமா?

நானும் என் பங்குக்கு ஒன்று செய்திருக்கிறேன். பாருங்க...

ஜோ/Joe said...

ஹி..ஹி.ஹி

Anonymous said...

:-)))))

IdlyVadai said...

துபாய் வாசி - நன்றாக இருந்தது.
ஜோ மற்றும் சங்கர் - நன்றி

சீனு said...

நீர் எழுதியது உண்மையே...ஆனால், அதில் சற்று மாற்றம்...

-> ஏர்கலப்பையுடன் போஸ்
-> பூசனிக்காயை தூக்கினார்
-> புஷ்க்கு ஒரு பாட்டி முத்தம்

சீனு said...

நீர் எழுதியது உண்மையே...ஆனால், அதில் சற்று மாற்றம்...

-> ஏர்கலப்பையுடன் போஸ்
-> பூசனிக்காயை தூக்கினார்
-> புஷ்க்கு ஒரு பாட்டி முத்தம்