பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 10, 2006

இடியாப்ப சிக்கலில் திமுக கூட்டணி

தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடனபாடு சுமூகமாக போய்க்கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென புதிய சிக்கல் ஒன்று உருவானது. தொகுதி பகிர்வு சரியாக இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அவர்களது திடீர்கோபத்துக்கு காரணம், நேற்றுதி.மு.க. வுடன் நடந்த தொகுதி உடன்பாட்டில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டுகட் சிக்கு 13 தொகுதிகள் கொடுக்கப்பட்டதுதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு இவ்வளவு தொகுதிகளை தி.மு.க. கொடுத்திருப்பது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்த போது இந்திய கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்கள் ஒரு விஷயத்தை வலியுறுத்தி வந்தனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கப்படுகிறதோ, அதற்கு இணையாக சமமான அளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் தொகுதிகள் தரவேண்டும் என்று கூறி இருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை விட குறைவான தொகுதிகள் தந்தால், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை மிகவும் சிறிய கட்சி என்று தொண்டர்கள் நினைக்க கூடும் என்று அவர்கள் தி.மு.க. தலைவர்களிடம் தெரிவித்திருந்தனர். தி.மு.க. தலைவர்களும் இதை கருத்தில் எடுத்துக் கொள்வதாக இருந் தனர்.

இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 13 இடங்கள் கொடுக்கப்பட்டதும், இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர்கள் கொந்தளிப்புக்குள்ளானார்கள். எஙகளுக்கு 10 இடங்கள் போதாது என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். நேற்றிரவு அவர்கள் இது தொடர்பாக பேச்சு நடத்த அறிவாலயத்துக்கு சென்றனர்.

அவர்களுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேச்சு நடத்தினார். கூட்டணிக்காக தி.மு.க. முன் வந்து செய்துள்ள தியாகத்தை எடுத்துக் கூறினார் என்றாலும் இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் சமாதானம் அடையவில்லை என்று தெரிகிறது.

இந்திய கம்யூனிஸ்டுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டை விட 3தொகுதிகள் குறைவாக இருப்பது குறித்து நேற்றிரவும், இன்று காலையிலும் மாநில செயலாளர்தா. பாண்டியன் மற்றும் நல்லக்கண்ணு, சுப்பராயன், மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகளில் ஒருவர் கூறுகை யில் மார்க்சிஸ்டுக்கு தி.மு.க. 11 தொகுதிகள் ஒதுக்கும் என்று நாங்கள் நினைத்தோம் ஆனால் கடைசி வரை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகள் பற்றி தி.மு.க. எங்களிடம் சொல்லவே இல்லை.

2004 பாராளுமன்றத் தேர்தலில் எங்கள் இரு கட்சிக்கும் தலா 2 தொகுதிகளை தி.மு.க. தந்தது. இந்த தடவை நாங்கள் ஒருநாள் முன்னதாக சென்று உடன்பாடு செய்ததால், நாங்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையின்போது அறிவா லயம் சென்று வந்திருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருத் துறைப்பூண்டி எம்.எல்.ஏ. பழனிசாமியிடம் இதுபற்றி கேட்ட போது அவர் கூறியதாவது:-

கே:- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சிக்கு 13 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஏன் அதிருப்தியுடன் பார்க்கிறீர்கள்?

ப:- ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையை பார்க்கும்போது எங்கள் கட்சிக்கு 10 தொகுதிகளை முன்கூட்டியே ஒதுக்கியது மிகுந்த மனவருத்தத்தை தருகிறது. எங்கள் கட்சி தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

கே:- அப்படியானால் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கியதில் திருப்தி இல்லையா?

ப:- எப்படி திருப்தி ஏற்படும்.

எப்போதும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு சரிசமமாக தான் தொகுதி ஒதுக்கப்படுவதுண்டு. தற்போது வேறு விதமாக நடந்து கொண்டுள்ளனர்.

2 கம்யூனிஸ்டு கட்சிக்கும் சரிசமமாக தொகுதிகள் ஒதுக்கப்படும். என்று கூறி இருந்தனர்ë. ஆனால் சொன்னபடி தி.மு.க. நடக்கவில்லை.

கே:- இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிறிய கட்சி, மார்க்சிஸ்டு பெரிய கட்சி என்ற நிலை, தொகுதி உடன்பாடு மூலம் வெளிப்படுகிறதே?

ப:- அதுமாதிரி உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு 13 தொகுதிகளை ஏன் ஒதுக்கினீர்கள் என்று நாங்கள் கேட்கவில்லை.

எங்கள் கட்சிக்கு முன்கூட்டியே 10 தொகுதிகளை தந்து விட்டு மற்ற கட்சிகளுக்கு ஏன் அதிக தொகுதிகள் கொடுத்துள்ளார்கள் என்பதுதான் கேள்வி.

கே:- அப்படியானால் தி.மு.க. கூட்டணியில் இன்னும் அதிக இடம் ஒதுக்கி தர வேண்டும் என்கிறீர்களா?

ப:- கண்டிப்பாக... 10 தொகுதிகள் தந்ததை எங்கள் கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எங்கள் கட்சிக்கு மரியாதை வேண்டும்.

தொண்டர்களின் கேள்விக்கு எங்களால் பதில்சொல்ல முடியவில்லை. அவர்களை சமாளிக்க முடியவில்லை.

கே:- அதிக தொகுதிகேட்டு மீண்டும் கருணாநிதியை சந்திப்பீர்களா?

ப:- கருணாநிதியை சந்திக்க மாட்டோம்.

கே:- 10 தொகுதிகள் ஒதுக்கியதை கையெழுத்து போட்டு வாங்கி இருக்கிறீர்களே?

ப:- அது என்ன பெரிய அக்ரிமெண்டா? இப்படி ஒரு உடன்பாட்டை முன்பு வைகோ மீறவில்லையா?

கே:- அதிக தொகுதி கிடைக்காவிட்டால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவீர்கள்போல் தெரிகிறதே?

ப:- எங்கள் கட்சியில் எந்த ஒரு தனிமனிதரும் உடனே முடிவு எடுக்க முடியாது கட்சியின் பொதுகுழுதான் எதையும் முடிவு செய்யும்.

கே:- பொதுகுழு கூடுகிறதா?

ப:- ஆமாம் மாநில பொது குழுவை சென்னையில் அவசரமாக கூட்டுகிறோம். இதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் 110 பேர்களுக்கு தகவல் கொடுத்து வருகிறோம்.

இன்னும் 2 நாளில் சென்னையில் கூடும் பொதுக் குழுவில் கூடி முக்கிய முடிவு எடுப்போம்.

கே:- தி.மு.க.கூட்டணியில் 10 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது என கூறி விட்டால்...

ப:- நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றுவோம். அது தனித்து போட்டியிடுவதாக கூட இருக்கலாம்.

எங்கள் பலத்துக்கு ஏற்ற வகையில் தொகுதி ஒதுக்க வில்லை என்பதுதான் எங்கள் வருத்தம். பதட்டமாக தொண்டர்கள் உள்ளனர்.

காங்கிரசுக்கு 48, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு -13, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு-3 இடம் என ஒரே நாளில் ஒதுக்குகிறார்கள்.

எங்களுக்கு மட்டும் குறைத்து இடம் ஒதுக்கி முன் கூட்டியே முடித்தது ஏதோ சூழ்ச்சியாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியனிடம் கருத்து கேட்டபோது அவர் எதையும் வெளிப்படையாக சொல்ல மறுத்துவிட்டார். மனநிறைவு பெறாத அவர் கட்சி மூத்த பிரமுகர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

3 Comments:

நாமக்கல் சிபி said...

எதிர் பார்த்ததுதானே! நடக்கட்டும் நடக்கட்டும்!

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

ஏன்? எப்படி? எதற்கு? said...

இட்லி,வடை சலிப்பின் காரணமாக

இடியாப்பம்

நல்ல வியாபாரம்.

krishjapan said...

PMK given 31. CPM, onnu kodukkuma CPI ikku?