பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 06, 2006

திமுக - அதிமுக வெற்றி

தேர்தல் முடிவுகள் மே 11ம் தேதி அறிவித்தவுடன் தலைவர்கள் எப்படிப் பேட்டி கொடுப்பார்கள் என்று ஒரு சின்ன டிரைலர்:

திமுக அணி வெற்றிபெற்றால் - கலைஞரின் அறிக்கை:
இந்த வெற்றி நாங்கள் எதிபார்த்தது தான். இந்தக் கூட்டணி வெற்றி பெறாவிட்டால் தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அம்மையாரின் காட்டாட்சியால் மக்கள் எந்தளவிற்கு பாதிக்கபட்டிருக்கிறார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆளும் கட்சியினர் பல அத்துமீறல்கள் செய்த போதும், தேர்தலை நாணயமாக நடத்திய தேர்தல் கமிஷனைப் பாராட்டுகிறோம்.

அரசு கஜானாவை நேற்று தம்பி துரைமுருகன் எட்டிப்பார்த்த போது ஒரே இருட்டாக இருந்தது என்றார். கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டின் போது ஏற்பட்ட சில காயங்களுக்கு இந்த வெற்றி நிச்சயம் மருந்தாக இருக்கும். பிரதான எதிர்க்கட்சித் தலைவியாக அம்மையார் சட்டசபைக்கு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். பத்திரிகைகள் இனிமேலாவது தங்கள் விஷமத்தனமான பிரசாரத்தைக் கைவிட வேண்டும்.அதிமுக அணி வெற்றிபெற்றால் - ஜெ'யின் அறிக்கை: தமிழக மக்களுடன் கூட்டணி என்ற போது பலர் சிரித்தனர். பத்திரிகைகள் ஏளனம் செய்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் மூலம் தமிழக மக்கள் என் பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டேன். இதை வயதான காலத்தில் கருணாநிதி புரிந்து கொண்டால் நல்லது. பிரதான எதிர்க்கட்சியான திமுக போன முறை போல் செயலாற்றாமல் இந்த முறையாவது ஒழுங்காக இருப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழகத்தை முதல் இடத்திற்குக் கொண்டு வரும் வகையில் மீண்டும் பாடுபடுவேன். தேர்தல் நேரத்தில் சில அறிவிப்புகள் செய்ததனால் கஜானா காலியாகிவிட்டது. அதைச் சீர் செய்ய இந்த அரசு பாடுபடும். மத்திய அரசு எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காத போதும் அதைப் பொருட்படுத்தாமல் நான் செயல்பட்டேன். அதனால் கிடைத்தது வெற்றி. மேலும் சில கோயில்களுக்கு அன்னதானம் திட்டம் கொண்டுவருவேன். புரட்சித் தலைவர் பாதையில் ஏழைகளுக்கு மேலும் வசதிகள் செய்து தர உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் இந்தத் தருணத்தில் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.

தோல்வி அறிக்கை அடுத்த பதிவில்

0 Comments: