பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 02, 2006

குட்டிக்கதை போட்டி

இப்போதெல்லாம் தினமும் ஒரு குட்டிக்கதை படிக்காவிட்டால் தலை வலிக்கிறது!.

ஒரு சிங்கம் தன் பக்கத்தில் ஒரு செத்த எலியை வைத்துக்கொண்டு நரியிடம் 'இது என்ன?" என்றதாம். நரி, 'எலினு சொல்றாங்க!' என்றதாம். 'போய் உங்க இனத்துக்கிட்டே கேட்டுக்கிட்டு வா!' என்று கூறி அனுப்பியதாம் சிங்கம். கேட்டு வந்த நரி 'எலினு சொல்லச் சொல்றாங்க!' என்று பதில் சொன்னதாம். 'சரி ... நீ இதைப் பத்தி என்னதான் நினைக்கிற?" என்று சிங்கம் இறுதியாகக் கேட்டபோதும் 'நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையேதான் நானும் நினைக்கிறேன்' என்றதாம் நரி, பட்டும் படாமல்.

இந்த கதையை எந்த அரசியல் தலைவர் சொன்னால் நன்றாக இருக்கும் ? பின்னூட்டத்தில் சொல்லவும் :-)

கதை உதவி: தென்கச்சி கோ. சுமாமிநாதன்.

7 Comments:

rv said...

புரட்சித்தலைவி அல்லாமல் வேறு யாரும் சொல்ல முடியாது.

நரி இங்க ஓ.பி.பன்னீர் செல்வம்னு வச்சுக்கலாமா?

IdlyVadai said...

இராமநாதன் - நல்ல டிரை :-)

Boston Bala said...

இன்னொரு obvious choice:
எலி - திருமா
நரி - தமிழ்க்குடிதாங்கி
சிங்கம் - கருணாநிதி

புஷ் வருவதினால்:
நரி - இந்தியா
எலி - ஈரான்
சிங்கம் - அமெரிக்கா

IdlyVadai said...

பாஸ்டன் பாலா - பலே பலே !

குசும்பன் said...

யோவ் இட்லி,

ஏதோ போட்டி வைச்சி பிரைஸ் கொடுப்பேள்னு பாத்தா... :-)

என் பின்னூட்டத்தைப் படிச்சிட்டு அப்புறம் கொஞ்சமா யோசிச்சுப் பாத்தா:

எலி: அங்கதம்
நரி: உம்ம வாசகர்கள்
சிங்கம்: இட்லி

ஸ்மைலி போட்டுட்டேன்பா :-)

IdlyVadai said...

குசும்பரே வாருங்கள் - பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கே :-) :-)

நான்னும் இரண்டு ஸ்மைலி போட்டுடேன்பா :-) :-)

Unknown said...

ஒரு பக்கம் பார்த்தா...

சிங்கம் - கருணாநிதி
நரி - கிருஷ்ணசாமி

இன்னொரு பக்கம் பார்த்தா...

சிங்கம் - ஜெயலலிதா
நரி - வைகோ