பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 02, 2006

கூட்டணி செய்திகள் - 5

1. திருச்சியில் திமுக மாநில மாநாட்டையொட்டி, மாநாட்டுத் திடலுக்குச் செல்லும் சாலையில் மதிமுகவினர் கட்டியிருந்த கொடிகள் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது - தினமணி


2. தி.மு.க.வின் 7 கட்சி கூட்டணியில் உள்ள 2 முக்கிய கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு வரும் என்று பேசப் படுகிறது - மாலைமலர்

3. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது மகிழ்ச்சியில்லை - திருமாவளவன் பேச்சு - தினமணி, தினமலர்.


4. "நண்பர்களைப் போல் நடிக்கும் தி.மு.க.,வை பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்யும் அ.தி.மு.க.,விற்கு வரும் தேர்தலில் ரஜினி ஆதரவு தெரிவிக்க வேண்டும்" என்று மக்கள் கட்சியின் தலைவர் தீரனும், வன்னியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் நடராஜனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் - தினமலர்

5. தமிழக சட்டசபை தேர்தலுக்கு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார். ( தயவு செய்து யாரும் சிரிக்க வேண்டாம் )

0 Comments: