பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 09, 2006

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 48 சீட்

தி.மு.க. கூட்டணியில் உள்ள 6 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்கனவே 10 தொகுதிகள் ஒதுக்குவது என உடன்பாடு ஏற்பட்டது. மற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள 2-வது பெரிய கட்சியான காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்குவதில் இன்று உடன் பாடு ஏற்பட்டது. அந்த கட்சிக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, சட்டபேரவை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், பொருளாளர் சுதர்சன் ஆகியோர் காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தனர். அப்போது காங்கிரசுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதற்கான உடன்படிக்கையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ண சாமி ஆகியோர் கையெழுத் திட்டனர். உடன்படிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2006-ம் ஆண்டு மே 8-ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலை யொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ் சார்பில் அதன் மாநில தலைவர் எம்.கிருஷ்ணசாமி யும் இன்று தொகுதி உடன் பாடு குறித்து கலந்து பேசி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 48 சட்டப்பேரவை தொகுதிகளை பங்கீட்டுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொகுதி உடன்பாடு முடிந்து வெளியே வந்த கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் தொகுதி உடன்பாடு யூகங்களுக்கு அப் பாற்பட்டு சுமூகமாக முடிந்துள்ளது. தொகுதி பங்கீடு திருப்தி அளிக்கிறது. எந்தெந்த தொகுதிகள் என்பதை இனிமேல் பேசி முடிவு செய்வோம்.

கேள்வி:- பா.ம.க. வரவில்லையேப

பதில்:- அதை அவர்களிடம் கேளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சிக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து அதன் மாநில செயலாளர் என்.வரதராஜன் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் பேச்சு நடத்தினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சிக்கு 13 தொகுதிகள் ஒதுக்க உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான உடன்படிக்கையில் கருணாநிதி, வரதராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

முன்னதாக இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் காதர் மொகிதீன் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

இதில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கு வது என்றும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி யிடுவது என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான உடன் படிக்கையில் இருவரும் கையெ ழுத்திட்டனர். பேச்சு நடத்தி விட்டு வந்த காதர்மொகிதீன் கூறுகையில், "தங்களுக்கு 3 தொகுதி ஒதுக்கப்பட்டது சந் தோசம் அளிப்பதாக'' தெரிவித்தார்.

பா.ம.க.வுக்கு ஒதுக்கும் தொகுதிகள் நேற்று அறிவிக்கப்பட இருந்தது. ஜி.கே.மணி வெளிïர் சென்று விட்டதால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அக்கட்சிக்கும் இன்று தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் கிடைக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 2001 தேர்தலில் பா.ம.க. 27 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
படம், செய்தி : மாலை மலர்

15 Comments:

krishjapan said...

CPM gets 13... How much for PMK, your guess?

ஏன்? எப்படி? எதற்கு? said...

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 13 உடன்பாடு ஏற்பட்டது.

Muthu said...

இட்லி,

உங்களுக்கு ஏதும் வருத்தம் இல்லையே? (விடுங்க..நாளைக்கே பா.ம.க தி,மு.க வை விட்டு விலகலாம்.அங்க போய் நக்கல் அடிச்சுக்கலாம்)

ஏன்? எப்படி? எதற்கு? said...

27 for PMK.

IdlyVadai said...

கிருஷ்ணா, ஏஎஎ - update செய்துவிட்டேன் !

ஏன்? எப்படி? எதற்கு? said...

யாரு அது கிருஷ்ணா?

krishjapan said...

seeing this break up, MK, unusually being generous means, he wants all of their committed support and i suppose he will get it. He defintely sacrifised his partys seats, i feel. Can we say, he walked the talk of sacrificing in an alliance...

krishjapan said...

//யாரு அது கிருஷ்ணா? //

????

G.Ragavan said...

கருணாநிதியின் எண்ணம் இப்பொழுது புரிகிறது. வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் என்று முடிவு கட்டி விட்டார். அப்படி அமைந்தால் வைகோவை நம்பி நிச்சயமாக ஆட்சி அமைக்க முடியாது என்றும் முடிவு கட்டியிருக்கலாம். ஸ்டாலின் பட்டாபிஷேகத்திற்கு அவர் நிச்சயம் தடையாக இருப்பாரே. அதுவுமில்லாமல் அவர் இருந்தால் அவர் பின்னால் போவதற்கும் திமுகவில் சிலர் முயலலாம். ஆகையால் முதலில் வைகோ வெளியே போக வேண்டும். போயாகி விட்டது. பாமகவை முழுதாக நம்ம முடியாமல் இருந்திருக்கலாம். அப்பொழுது காங்கிரஸ்தான் மிச்சம். மத்தியில் நீ ஆட்சி. நான் கூட்டு. மாநிலத்தில் நான் ஆட்சி. நீ கூட்டு என்று நம்பிக்கையாகச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்து காங்கிரசுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்கியிருக்கலாம்.

IdlyVadai said...

முத்து - அட நம்ம கட்சிக்கு பலம் என்றால் எனக்கு சந்தோஷம் தானே :-)

ஏஎஎ - சும்ம சும்ம கேள்வி கேட்க கூடாது மேலே பாருங்க

IdlyVadai said...

G.Raghavan - இருக்கலாம் ஆனால் கலைஞர் காய் நகர்த்துவதில் கில்லாடி. அவ்வளவு ஈசியாக ஊகித்துவிட முடியாது. பொருத்திருந்து பார்க்கலாம்.

krishjapan said...

G.R sir, If he doesnt beleive PMK, then he could ahve had seats to himself and no need to give to Congress. I feel, this time he is fair.

IdlyVadai said...

கிருஷ்ணா உங்களுக்கு பாமக பற்றி தெரியவில்லை. வைகோ கொஞ்சம் யோசித்தார், ஆனால் ராமதாஸ் யோசிக்கவே மாட்டார். முன்பு என் குடும்பத்திலிருந்து யாராவது பதவி/அரசியலுக்கு வந்தால் என்னை சாட்டையால் அடி என்றார் :-).

சரி இந்த படத்தை பாருங்கள்
http://img.photobucket.com/albums/v76/idlyvadai/mindum_mindum_siripu_new.jpg

krishjapan said...

No, no. I also very well understand PMK. Before finalising with others MK might have finished PMK seats in consultation with ramdas. No doubt about it. MK knows at any time he will switch over. My point was, whats the need for him to give more to congress ( if as per G.R, it is meant for Kootani atchi), he could have had them for himself which is more safe than congress getting the seats. I feel Mk would have got some asurances from Cong, like VaiKo should be sent out from alliance at centre, no kootani atchi even if no single majority, ragul/priyanka campaign, ...

In case, if PMK is the deciding factor in koottani atchi, then it will be hell. Ramdas will switch to any side at any time and even demand CM post

Anonymous said...

MK managed to satisfy congress and communists at the cost of MDMK. I anticipate PMK will insist MK to allot them 35 seats since MDMK got same number from ADMK.Another trouble brewing in DMK camp?.