பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 01, 2006

பட்ஜெட் 2006

* சமூக அமைப்புகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் மின்சார உற்பத்தி இலக்கு 34 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மின்சார பற்றாக்குறையை போக்க 82 மின் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் 33 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும், ஆறாயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தனியார் துறை மூலமும் உற்பத்தி செய்யப்படும்.
* தங்க நாற்கர சாலை திட்டத்தின் 98 சதவீத பணிகள் மார்ச் மாதத்துடன் முடிந்து விடும்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்துக்கான ஒதுக்கீடு
ரூ. 4 ஆயிரத்து 87 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* ராஜிவ் காந்தி குடிநீர் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 4 ஆயிரத்து 680 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* கிராம மேம்பாட்டு திட்டத்துக்கு 2006-07ம் ஆண்டில் ரூ. 14 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்படும். இதில் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 11 ஆயிரத்து 300 கோடியாகவும், சம்பூர்ணா கிராமின் ரோஜனர் யோஜனா திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 3 ஆயிரம் கோடியாகவும் இருக்கும்.
* கிராமப்பகுதிகளுக்கு மின்சார வசதி அளிக்க ஒட்டுமொத்த ஆயிரத்து 100 கோடியும் இந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 10 ஆயிரத்து 366 கிராமங்கள் மின் வசதி பெறும்.
* ராஜிவ் காந்தி கிராமின் வித்யூதிகரண் யோஜனா திட்டத்தில் மேலும் 40 ஆயிரம் கிராமங்கள் சேர்க்கப்பட்டு மின் இணைப்புகள் கொடுக்கப்படும்.
* சரக்கு ரயில் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டு வரும் கிழக்கு- மேற்கு மற்றும் வடக்கு- தெற்கு ரயில் பாதைகள் 2008ம் ஆண்டுக்குள் முடிந்து விடும்.
* ஜவகர்லால் நேரு நகர சீரமைப்பு திட்டத்துக்கு ரூ. 4 ஆயிரத்து 595 கோடி மானியமாக வழங்கப்படும்.
* மாதம் தோறும் வழங்கப்படும் முதியோர் பென்ஷன் தொகை ரூ. 75ல் இருந்து ரூ. 200 ஆக உயர்த்தப்படுகிறது.
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 4 ஆயிரத்து 863 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* வரும் 2007ம் ஆண்டுக்குள் போலியோ நோயை முற்றிலுமாக அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
* ஐதராபாத் நகரில் மெட்ரோ ரயிலை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
* எஸ்.சி., எஸ்.டி., மக்களின் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
* அனைத்து உள்ளடக்கிய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மசோதா அறிமுகப்படுத்தப்படும். கே.பி. நரசிம்மன் கமிட்டி அளித்த பரிந்துரைகளின்படி இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
* கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி அமைப்புக்கான ஒதுக்கீடு
ரூ. 10 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் வடகிழக்கு பகுதிக்கான ரூ. 346 கோடியும் அடங்கும்.

* வடகிழக்கு பகுதிக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 12 ஆயிரத்து 41 கோடியாக இருக்கும். இதில் வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரத்து 350 கோடி ரூபாய் தொகையும் அடங்கும்.
* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க திட்ட கமிஷன் ஒரு திட்டத்தை தயார் செய்துள்ளது.
* சிறப்பு திட்டங்களின் மூலம் புதிய நகரங்கள் அமைக்கப்படும்.
* நான்கு ஓட்டல் நிர்வாக நிறுவனங்கள் சட்டீஸ்கர், அரியானா, ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் மாநிலங்களில் திறக்கப்படும்.
தொலை தொடர்பு:
* வரும் 2007ம் ஆண்டுக்குள் 25 கோடி போன் இணைப்புகள் கொடுக்கப்படும்.
* டெலிகாம் துறைக்கு யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் நிதி திட்டத்தில் இருந்து ஆயிரத்து 500 கோடி அளிக்கப்படும்.
* கிராமப்பகுதிகளில் 5 கோடி போன் இணைப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கிராமப் பகுதிகளுக்கு என்று ஒரு மொபைல் போன் திட்டத்துக்கான மசோதாவை பார்லிமென்ட்டில் தொலை தொடர்பு அமைச்சகம் கொண்டு வருகிறது.
* தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கு ரூ. 9 ஆயிரத்து 945 கோடி ஒதுக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 39.2 லட்சம் பேராக உயர்ந்துள்ளது. 15 சுற்றுலா மேம்பாட்டு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
திட்ட ஒதுக்கீடுகள் :
*மத்திய அரசு மேற்கொண்டு வரும் எட்டு முக்கிய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ. 34 ஆயிரத்து 927 கோடியில் இருந்து ரூ. 50 ஆயிரத்து 15 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* பொதுத் துறை நிறுவனங்களுக்கு பட்ஜெட் மூலம் அளிக்கப்படும் கடன் தொகை ரூ. 16 ஆயிரத்து 901 கோடியாக இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ரயில்வே துறைக்கான ரூ. 2 ஆயிரத்து 791 கோடியும் அடங்கும்.
* தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 7.5 சதவீதமாக உள்ளதால் 10வது ஐந்தாண்டு திட்டத்தில் சராசரி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக்கும்.
* பாரத் நிர்மாண் திட்டத்துக்கு ரூ. 18 ஆயிரத்து 696 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* பல்வேறு தலைப்புகளின் கீழ் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 28 ஆயிரத்து 737 கோடியாக இருக்கும்.
* நடப்பு ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.1 சதவீதமாகவும்,
உற்பத்தி வளர்ச்சி 9.4 சதவீதமாகவும், விவசாய துறை வளர்ச்சி 2.6 சதவீதமாகவும் இருக்கும்.
* ராணுவ துறைக்கான ஒதுக்கீடு ரூ. 83 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.89 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ. 37 ஆயிரத்து 458 கோடியாக இருக்கும்.
* வரும் 2006-07 பட்ஜெட்டுக்கான ஒதுக்கீடு 20.4 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 788 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இது ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 497 கோடி ரூபாயாக இருந்து.
* அடுத்த நிதியாண்டுக்கு மத்திய திட்ட ஒதுக்கீடு ரூ.ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 285 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இது ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 385 கோடியாக உள்ளது.
* கல்வி துறைக்கான ஒதுக்கீட்டில் 31.5 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ. 24 ஆயிரத்து 150 கோடி வழங்கப்படும். சுகாதார துறைக்கு 22 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ. 12 ஆயிரத்து 546 கோடி வழங்கப்படும்.
* தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 8 ஆயிரத்து 207 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கல்வி:
* சென்னையில் உள்ள தேசிய துறைமுக மேலாண்மை கழகம் மத்திய பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தப்பட்டு இனி தேசிய கடல்சார் அகடமி என்று அழைக்கப்படும். இதன் மண்டல கிளைகள் மும்பை, விசாகாப்பட்டனம், கோல்கட்டாவில் அமைக்கப்படும்.
* சென்னை, மும்பை, கோல்கட்டா பல்கலைக்கழகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள ரூ. 50 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகங்கள் 150 ஆண்டு விழாவை கொண்டாடுவதையொட்டி இந்த தொகை ஒதுக்கப்படுகிறது.
* பசுமை புரட்சிக்கு சிறந்த பங்களிப்பு அளித்த பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகத்துக்கு ரூ. 100 கோடி மானியம் அளிக்கப்படுகிறது.
* உருது மொழி மேம்பாட்டுக்கான தேசிய கவுன்சிலுக்கு ஒதுக்கப்படும் தொகை ரூ. 13 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* சிறுபான்மையினர் நலன்கள் மேம்பாட்டுக்காக மவுலானா ஆசாத் கல்வி அமைப்புக்கான நிதி ஒதுக்கீடு ரூ.200 கோடியாக உயர்த்தப்படுகிறது.
* ஒரு மாணவி 8ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றால் அவரது பெயரில் வங்கி கணக்கு துவக்கப்பட்டு அதில் ரூ. 3 ஆயிரம் டிபாசிட் செய்யப்படும். பின்னர் அந்தப் பெண் மேஜரானபிறகு அந்த தொகை பெற்றுக் கொள்ளலாம்.
* மதிய உணவு திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ. 3 ஆயிரத்து 14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இது ரூ. 4 ஆயிரத்து 813 கோடியாக
உயர்த்தப்படும்.
* எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்ட, சிறுபான்மையின பெண்களுக்காக ஆயிரம் பள்ளிகள் அமைக்கப்படும்.
* சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 5 லட்சம் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
விவசாயம்:
* வரும் நிதியாண்டில் (2006-07) ஆண்டுக்கான விவசாய கடன் தொகை ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த ஆண்டு இந்த தொகை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 500 கோடியாக இருந்தது. இதன் மூலம் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பலன் அடைவர்.
* விவசாயிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடனுக்கு 7 சதவீத வட்டியே வசூலிக்கப்படும்.
* துரித நீர்பாசன பலன் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 7 ஆயிரத்து 121 கோடி. இதில் மத்திய அரசின் மானியம் ரூ. 2 ஆயிரத்து 350 கோடி.
* காரீப் மற்றும் ரபி பருவத்துக்காக பயிர் கடன் வாங்கிய விவசாயிகள் செலுத்திய வட்டித் தொகையில் இரண்டு சதவீதத்துக்கு சமமான தொகை அவர்களது வங்கி கணக்கில் மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தப்படும். இதற்காக ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வரும் ஆண்டில் 20 ஆயிரம் நீர் நிலைகளை மேம்படுத்த ரூ. 4 ஆயிரத்து 281 கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் 14.7 லட்சம் எக்டேர் நிலங்கள் பலன் பெறும். இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களிடம் கேட்கப்படும்.
* நாகாலாந்தில் மத்திய தோட்டக்கலை நிறுவனம் அமைக்கப்படும். தேசிய மீன்பிடி மேம்பாட்டு வாரியமும் அமைக்கப்படும்.
* விவசாய காப்பீட்டு திட்டம் தொடரும்.
* டீ துறைக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்படுகிறது.
தொழில் துறை:
* சில்லறை விற்பனை முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்க முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும். அபராத தொகை வசூலில் இருந்து இதற்கு நிதி ஒதுக்கப்படும்.
* தகவல் தொழில்நுட்ப துறையில் முதலீடு செய்வதை கண்காணிக்க ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இந்த அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கு செயல்படும்.
* உற்பத்தி துறையில் சேவை துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் வரி வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் ரூ.18 ஆயிரம் கோடி வந்துள்ளது. வரும் ஆண்டில் இந்த தொகை மேலும் உயரும்.
* ஜவுளி, உருக்கு, மெட்டல்ஸ் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் உற்பத்தி மையங்கள் துவக்க இந்தியாவில் அனுமதி அளிக்கப்படும்.
* ஜவுளி துறையை தரம் உயர்த்துவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 55 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 12 ஜவுளி தொழில் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் ஏற்கனவே ஏழு பூங்காக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது.
* பங்கு சந்தையில் வெளிநாட்டு முதலீடு செய்வதற்கான கட்டுப்பாடு
ரூ. 7 ஆயிரத்து 875 கோடியில் இருந்து ரூ. 9 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படுகிறது.
* தொழிற்சாலை தொகுப்புகளின் மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சரவையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது.
* வரும் 2006-07ம் ஆண்டில் தேசிய சணல் தொழில்நுட்பம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* வங்கி கடன் பெறுவதில் உணவு பதப்படுத்துதல் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
* ஆபரண கற்கள் மற்றும் நகை துறைக்கு ஏற்றுமதி அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.

நன்றி தினமலர்

0 Comments: