பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 21, 2006

200 அமைப்புக்கள் அதிமுகவிற்கு ஆதரவு !

அதிமுகவிற்கு இந்த தேர்தலில் ஆதரவு அளிக்கும் சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளின் எண்ணிக்கை 200யை தாண்டிவிட்டது.

நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், ஐ.என்.டி.யு.சி., இந்திய தேசிய லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், முமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

இது தவிர பல்வேறு அமைப்புகள் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ஆதரவு அமைப்புகளின் எண்ணிக்கை இது வரையிலும் 200யை தாண்டிவிட்டன. தொடர்ந்து ஒவ்வொரு நாள் 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இன்று தலைமை கழகத்தில் மக்கள் மாநில கட்சி, இந்திய தேசிய வாத கிறிஸ்துவ கட்சி, முஸ்லிம் மக்கள் கட்சி, அம்பேத்கார் புரட்சி புலிகள், அகில பாரத குடியரசு கட்சி, முற்போக்கு முஸ்லிம் லீக், தமிழ் நாடு ரெட்டியார் நல சங்கம், அம்பேத்கார் மக்கள் தேசிய இயக்கம், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், தமிழ் நாடு கிறிஸ்துவ நல உரிமை கழகம், தெரசா பொது நல சேவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் சுலோச்சனா சம்பத் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட வரை சந்தித்து தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ஜி. காளன், முமுக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோர் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து கண்டறிவதற்காக அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினர்.

படம்: எங்களை மறந்துடாதீங்க: தேர்தல் நெருங்குவதையொட்டி எல்லா தரப்பினரும் அரசியல் கட்சிகளை சந்தித்து ஆதரவு தெரிவிக்கின்றன. அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அதன் தலைமை அலுவலகத்திற்கு கொடிகளுடன் கூட்டமாக வந்த நரிக்குறவர்கள்.

செய்தி & படம்: மாலைச்சுடர்

0 Comments: