பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 08, 2006

தேர்தல் ஆணையத்தின் 13 கட்டளைகள்

அமைச்சர்கள், வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள்:

1. மத்திய, மாநில அமைச்சர்கள் எவரும் தேர்தல் பிரசாரத்துக்காக தங்களது தொகுதிக்குச் செல்ல அரசு கார்களைப் பயன்படுத்தக் கூடாது.

2. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் எவருக்கும் அமைச்சர்கள் சம்மன் அனுப்பக்கூடாது. அரசு விருந்தினர் மாளிகையைப் பயன்படுத்தக் கூடாது.

3. அலுவலகப் பணிக்கு மட்டுமே தலைநகரில் அமைச்சர்கள் கார்களை பயன்படுத்த வேண்டும்.

4. காரைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மக்களவைத் தலைவர், துணைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர், துணைத் தலைவர், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கும் பொருந்தும்.

5. அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு விஷயத்தில், அவரவருக்குள்ள அச்சுறுத்தலின் தன்மைக்கேற்ப பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துக்கொள்ளலாம். புல்லட் புரூப் கார்களைப் பயன்படுத்தும் தனி நபர், அதற்குரிய செலவை ஏற்க வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகளுக்கான செலவை மாநில அரசு ஏற்கும்.

6. தில்லியிலிருந்து தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அரசுப் பணியாக வரும் மத்திய அமைச்சர்கள், அதற்குரிய தகவலை தலைமைச் செயலரிடம் சமர்ப்பித்தால் மத்திய அமைச்சருக்கு அளிக்கப்படும் கார் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.

7. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொள்ளும்போது சிவப்பு சுழல் விளக்கு மற்றும் தேசியக் கொடி மற்றும் அரசு சின்னம் பொருத்திய காரைப் பயன்படுத்தக்கூடாது.

8. அரசுப் பணிக்காக செல்லும்போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மாநில அரசு சின்னம் பொருத்திய கார்களைப் பயன்படுத்தலாம்.

9. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டப்பேரவை உறுப்பினரோ பிறப்பிக்கக்கூடாது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகள் நடைபெற்றால், அதற்கான நிதியை தேர்தல் முடியும் வரை வழங்கக் கூடாது.

10. புதிதாக எந்தப் பணிக்கான உத்தரவும் அளிக்கக்கூடாது. அப்படி பணி உத்தரவு வழங்கப்பட்டிருந்தாலும் அந்தப் பணிகளைத் தொடங்கக்கூடாது.

11. அமைச்சர்கள், அதிகாரிகள் செய்யக்கூடாதவை:

அ. எந்த வகையான நிதி உதவி, வாக்குறுதியை அளிக்கக் கூடாது.

ஆ. அரசு அதிகாரிகள் தவிர வேறு எவரும் அடிக்கல் நாட்டு விழா நடத்தக்கூடாது.

இ. சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை அமைப்பதாக எவ்வித வாக்குறுதியும் அளிக்கக்கூடாது.

ஈ. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் எவரையும் நியமிக்கக்கூடாது.

12. அரசு செலவில் செய்தி மற்றும் தொலைக்காட்சியில் எத்தகைய விளம்பரமும் செய்யக்கூடாது. குறிப்பாக ஆளும்கட்சியினர் இதுபோன்று விளம்பரம் செய்வது கூடாது.

13. அரசு கட்டடங்கள் மற்றும் பள்ளிகளில் சுவர் விளம்பரம் செய்திருந்தால், வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது, அதை நீக்குவதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பே, சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டிருந்தால், அவையும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வைக்கப்படும் போஸ்டர், பெயிண்டிங் உள்ளிட்டவை அனைத்தும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.

தகவல் உதவி: தினமணி

0 Comments: