நண்பர்களே!,
அலுவலக விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் நாளை முதல் இட்லிவடையில் சுட சுட (அல்லது சுட்ட ?) தேர்தல் செய்திகள் இடம் பெறாது என்று வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் இரண்டு மாதத்திற்கு பிறகு (அதாவது தேர்தல் முடிந்த பின் ) மீண்டும் சந்திக்கலாம். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
அன்புடன்,
இட்லிவடை
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Friday, March 31, 2006
ஓர் முக்கிய அறிவிப்பு !
Posted by IdlyVadai at 3/31/2006 05:31:00 PM 19 comments
தேர்தல் பற்றி நம்புங்கள் நாராயணன் !
இந்த் தேர்தலிலும் நம்புங்கள் நாராயணன் சில கணிப்புக்களை கூறியுள்ளார்.
* ஜெயலலிதாதா மீண்டும் முதல்வர் பதவிக்கு வருவார். சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். அதாவது 4ல் 3 பங்கு மெஜாரிட்டியுடன் அவர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார். கடந்த காலங்களைப் போல் இல்லாமல், மத்திய அரசுடன் அவர் சுமூக உறவை ஏற்படுத்திக் கொள்வார். பல திட்டங்களை செயல்படுத்துவார். அவரது ஆட்சியில் விவசாயம், கம்ப்யூட்டர் துறை மற்றும் தொழில் வளர்ச்சி மேம்படும். ( கொஞ்சநெஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது)
* அதிமுக ஆட்சிக்கு வைகோ முழுமையாக ஒத்துழைப்பார். வேறு அணிக்கு மாற மாட்டார். ஆட்சி சிறப்பாக நடக்க முடிந்தவரை பாடுபடுவார். ( அட அட இதெல்லாம் கூட சொல்ல முடியுமா )
* திமுக தலைவர் கருணாநிதிக்கு இது சோதனையான நேரம். தேர்தலில் பெரும் பின்னடைவை அவர் சந்திப்பார். ( அவர் வெற்றி பெற்றால் உங்களுக்கு சோதனை )
* விஜயகாந்த்தின் கட்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. தனித்துப் போட்டியிடுவதாக அவர் கூறி வந்தாலும் கூட அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையை அவர் எடுப்பார். அமைச்சராகும் யோகமும் அவருக்கு உள்ளது. ( அதுக்கு முதல்ல அவர் ஜெயிக்கனும்)
* நடிகர் ரஜினியைப் பொருத்தவரை திரையுலகில் அவர்தான் உச்சத்தில் இருப்பார். அவரது சிவாஜி படம் மிகப் பெரும் வெற்றியைப் பெறும். அரசியல் பக்கம் வரவே மாட்டார். தத்துவ வாழ்க்கையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். ( நீங்க ரஜினி ராம்கிக்கு நண்பரா ? )
* நடிகர் கமல்ஹாசனுக்கும் இந்த ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக அமையும். ரஜினிக்கு இணையான புகழை அவர் விரைவில் பெறுவார். அவருக்கு இருந்து வந்த கெட்டகாலம் முடிந்து விட்டது. மிகப் பெரிய நிறுவனத்தின் படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாவார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். (அதில் அவர் ஒரு பாட்டு பாடுவார், வித்தியாசமாக மேக்கப் போடுவார் என்று சொல்லாம் விட்டுவிட்டீர்களே )
* விரைவில் ஜோதிகா திருமண செய்தி வெளிவரும். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமையும் என்று கூறியுள்ளார் நாராயணன். ( தமிழ் நாட்டுக்கு ரொம்ப முக்கியம் )
(செய்தி உதவி தட்ஸ் தமிழ் )
Posted by IdlyVadai at 3/31/2006 03:10:00 PM 15 comments
விஜயகாந்த் வேட்பாளர் பட்டியல்
விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ( இது முதல் பட்டியல் )
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் அவர் போட்டியிடப் போவ தாக அறிவித்தார். இந்த தொகுதி யில் அ.தி.மு.க. சார்பில் காசிநாதனும், பா.ம.க. சார்பில் டாக்டர் கோவிந்தசாமியும் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் கோவிந்தசாமி வெற்றி பெற்றார்.
பண்ருட்டி தொகுதியில் விஜயகாந்த் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச் சந்திரன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ராஜேந்திரனும், பா.ம.க. சார்பில் வேல்முரு கனும் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் வேல்முருகன் வெற்றி பெற்றார்.
விருத்தாசலம் - விஜயகாந்த்
பண்ருட்டி : பண்ருட்டி ராமசந்திரன்
ஆர்.கே.நகர்-முகமதுகான்.
புரசைவாக்கம்-ஜாக்குலின் ஹோம்ஸ்
மதுரை மத்தி-ஆர்.சுந்தர்ரா ஜன்
திருவள்ளூர்-பார்த்தசாரதி
உத்தரமேரூர்-முருகேசன்
ஈரோடு-சந்திரகுமார்
ராயபுரம்-பாபு
பூ ங் காநகர்-பாலசுப்பிரமணி யன்
பெரம்பூர்-ஜெ.லிங்கன்
அண்ணாநகர்-கண்ணன்
தி.நகர்-பாண்டியன்
சேப்பாக்கம்-ஜெயக்குமார்
மயிலாப்பூர்-வி.என்.ராஜன்
சைதாப்பேட்டை-இரா. வேணுகோபால்
பொன்னேரி- ஸ்ரீஅங்க முத்து.
திருவொற்றிïர்- எஸ். முருகன்.
வில்லிவாக்கம்- வேல் முருகன்.
திருத்தணி-ஆர். சேகர்
பள்ளிப்பட்டு-நேதாஜி
அரக்கோணம்-உஷா
சோளிங்கர்-பிரபாகரன்
நாட்ரம்பள்ளி-கையாஸ் பாஷா
செங்கம்-சுரேஷ்
கலசப்பாக்கம்-சங்கர்
அணைக்கட்டு-வெங்கடேசன்
வேலூர்-ராஜேந்திரன்
ஆரணி-ரமேஷ்
செய்யாறு-சுபமங்கலம்
பெரணமல்லூர்-கார்த்தி கேயன்
மேல்மலையனூர்-சந்திரதாஸ்
செஞ்சி-ராஜேந்திரன்
வானூர்-ராஜா
முகைïர்-வெங்கடேசன்
உளுந்தூர்பேட்டை- சண் முகம்
நெல்லிக்குப்பம்- சிவக் கொழுந்து
புவனகிரி-சபியூதீன்
காட்டுமன்னார்கோவில்- உமாநாத்
சிதம்பரம்-ராஜமன்னன்
மங்களூர்-மகாதேவன்
ரிஷிவந்தியம்-கோவிந்தன்
சங்கராபுரம்-செழியன்
ஓசூர்-சந்திரன்
தளி-ஹரி
காவேரிப்பட்டணம்- சின் ராஜ்
கிருஷ்ணகிரி-அன்பரசன்
பர்கூர்-கோவிந்தராஜ்
பாலக்கோடு-விஜய்சங்கர்
தர்மபுரி-பாஸ்கர்
பெண்ணாகரம்- தண்ட பாணி
மேட்டூர்-மாலதி
தாரமங்கலம்-சுரேஷ்
ஓமலூர்-கமலக்கண்ணன்
ஏற்காடு-ராமகிருஷ்ணன்
சேலம் 1-தனசேகரன்
ஆத்தூர்-இளங்கோவன்
தலைவாசல்-கீதா
ராசிபுரம்-ராஜா கவுண்டர்
சேந்தமங்கலம்-காந்தி
நாமக்கல்-அமுதா
கபிலர்மலை-செல்வி
திருச்செங்கோடு-பொங்கி யண்ணன்.
சங்ககிரி-ஈஸ்வரன்
மேட்டுப்பாளையம்- சரஸ் வதி
அவினாசி-ஆனந்தராஜ்
தொண்டாமுத்தூர்- டென் னிஸ் கோவில்பிள்ளை
சிங்காநல்லூர்-பொன்னு சாமி
கோவை கிழக்கு- மேரி ராணி
பேரூர்-ராஜசேகர்
கிணத்துக்கடவு-லதாராணி
பொள்ளாச்சி- மீனாட்சி சுந்தரம்
வால்பாறை-முருகராஜ்
உடுமலைப்பேட்டை- ஞான சம்பந்தன்
தாராபுரம்- ஜோதிப் பாண்டியன்
வெள்ளக்கோவில்- ஜெக நாதன்
பொங்கலூர்-சிவா
பல்லடம்-சுப்பிரமணி
காங்கேயம்-குமாரசாமி
மொடக்குறிச்சி- விக் டோரியா
பெருந்துறை-ரவிச்சந்திரன்
பவானி-கோபால்
அந்திïர்-ஜெகதீஸ்வரன்
கோபிசெட்டிபாளையம்- நடராஜன்
பவானிசாகர்-சுப்பிரமணி யன்
சத்தியமங்கலம்-மனோகர்
குன்னூர்-சிதம்பரம்
ஊட்டி- பெஞ்சமின் ஜேக்கப்
கூடலூர்-கிருஷ்ணமூர்த்தி
ஒட்டன்சத்திரம்-பாலசுப் பிரமணியம்
பெரியகுளம்-ஷாகுல்அமீது
தேனி-முருகன்
போடிநாயக்கனூர்- அட் சயகண்ணன்
கம்பம்-ஜெகநாத்
ஆண்டிப்பட்டி-வி.எஸ். சந்திரன்
சேடப்பட்டி-சாமுண்டீஸ் வரி
திருமங்கலம்-தனபாண்டி யன்
உசிலம்பட்டி-ஏ.கே.டி.ராஜா
நிலக்கோட்டை- நித்யா
திருப்பரங்குன்றம்- ராஜ மாணிக்கம்
மதுரை மேற்கு- மணி மாறன்
மதுரை கிழக்கு- தாமோ தரன்
சமயநல்லூர்-பாஸ்கரன்
வேலூர்-ராமகிருஷ்ணன்
நத்தம்-கணேசன்
திண்டுக்கல்-கார்த்திகேயன்
ஆத்தூர்- ராஜேஷ் பெரு மாள்
வேடசந்தூர்-வெங்கடாசலம்
அரவக்குறிச்சி-பஷீர்அகமது
கிருஷ்ணாராயபுரம்-முரு கன்
மருங்காபுரி-ஜமால்முகமது
குளித்தலை-விஸ்வநாதன்
தொட்டியம்-மனோகரன்
உப்பிலியாபுரம்-மூக்கன்
முசிறி-ராஜலிங்கம்
பெரம்பலூர்-மணிமேகலை
வரகூர்-கணபதி
அரியலூர்-ஜெயவேல்
ஆண்டிமடம்-பன்னீர்செல் வம்
ஸ்ரீரங்கம்-ரமேஷ்
திருச்சி1- சசிகலா முருகேசன்
திருச்சி 2- செந்தூரேஸ் வரன்
திருவெறும்பூர்-தங்கமணி
பூம்புகார்-அப்துல்காதர்
வேதாரண்யம்- வீர வினாயகம்
திருத்துறைப்பூண்டி- மோகன் குமார்
பட்டுக்கோட்டை- செந் தில்குமார்
பேராவூரணி-பழனிவேல்
ஒரத்தநாடு-ரமேஷ்
திருவோணம்-மோகன்
திருவையாறு-மகேந்திரன்
வலங்கைமான்-சித்ரா
திருவிடைமருதூர்-சங்கர்
கடலாடி- முகம்மது அலி ஜின்னா
விருதுநகர்-நாகேந்திரன்
சிவகாசி-ராஜேந்திரன்
ஸ்ரீவில்லிப்புத்தூர்-தாமோ தர கண்ணன்
சேரன்மகாதேவி- ராஜேந்திர பிரசாத்
கன்னியாகுமரி-சுப காயத்ரி
பச்சை கலரில் இருப்பவர்கள் பெண் வேட்பாளர் ( முதல் பட்டியலில் 18 பெண் வேட்பாளர்கள், இன்னும் நிறைய பேர் அடுத்த பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார் )
Update: விஜயகாந்த் பேட்டி
கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி சேர திமுக, அதிமுக கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்ததா?
பதில்: காலம் கடந்து கேட்கிறீர்கள். அக்கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், தனித்துப் போட்டியிட ஏற்கனவே நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
கே: உங்கள் கட்சி தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?
ப: இரண்டு அல்லது மூன்று நாட்களில் எங்களுடைய தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். நாளை மறுநாள் காஞ்சிபுரத்தில் இருந்து மீண்டும் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்குகிறேன்.
கே: உங்கள் கட்சி ஜெயிக்கும் தொகு திகள் எவை என்று கூற முடியுமா?
ப: காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. எங்களைக் கேட்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றுதான் சொல்வேன். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு எதிர்பாராமல் தங்கம் கிடைப்பதில்லையா?
கே: நீங்கள் போட்டியிட விருத்தாசலம் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?.
ப: விருத்தாசலம் தொகுதி எனக்கு பிடித்துள்ளது. அதனால் அங்கு போட்டியிட நான் முடிவு செய்தேன்.
கே: எந்த சின்னத்தில் போட்டியிட போகிறீர்கள்?
ப: தேர்தல் ஆணையத்திடம் மொத்தம் 170 தேர்தல் சின்னங்கள் உள்ளன. ஏப்ரல் 22ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பிறகு தேர்தல் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும். நாங்கள் தேர்தல் சின்னத்தை தேர்ந்தெடுத்த பிறகு அதனை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
எங்கள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் 18 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு 35 பெண்கள் களத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது.
கே: திமுக தனது தேர்தல் அறிக்கையில் இலவச கலர் டிவி, 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்று ஏராளமான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பது குறித்து உங்களுடைய கருத்து என்ன?
ப: தேர்தல் வந்தால் இதுபோன்ற அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடுவது சகஜம் தான்.
கே: 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி தர முடியுமா?
ப: திமுகவின் தேர்தல் அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கும் கருணாநிதி தனது முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுத்திருக்க வேண்டியதுதானே?
கே: அதிமுக, திமுகவை எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் செய்வீர்களா?
ப: நாங்கள் தனித்துப் போட்டியிடுவதால் இவ்வாறுதான் பிரச்சாரம் இருக்கும். எல்லா கட்சிகளையும் விமர்சனம் செய்து தான் பிரச்சாரம் செய்வோம்.
கே: எதைச் சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்வீர்கள்?
ப: வீடுதேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று நான் பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்த விஷயம் புதியது தானே.
கே: விஜயகாந்த் ஒரு பொருட்டல்ல என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதாக சொல்லப்படுகிறதே?
ப: சன் டிவியில் இவ்வாறு சொன் னதாக என்னிடம் சொன்னார்கள். பத்திரிகைகளில் ஜெயலலிதா இப்படி சொன்னதாக செய்தி வெளியானதை நான் பார்க்கவில்லை. அதனால் இதுபற்றி எதுவும் கூறுவதற்கில்லை.
Posted by IdlyVadai at 3/31/2006 02:00:00 PM 14 comments
FLASH: நட்ராஜ் இடமாற்றம் - தீர்ப்பு
நேற்று தேர்தல் கமிஷன் சரியா தவறா என்று பதிவு எழுதியிருந்தேன்.
இன்று ஐகோர்ட் தீர்ப்பு வந்துள்ளது
தமிழக முதல்வரைப் புகழ்ந்து பேசியதாக சென்னை போலீஸ் கமிஷனர் நட்ராஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு தமிழக அரசை கட்டுப்படுத்தாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
Update:
தீர்ப்பின் விபரம் :
போலீஸ் அதிகாரி நடராஜ் இடமாற்றம் தொடர்பாக தேர்தல் கமிஷனுடன் தமிழக அரசு கலந்து பேசி தெளிவான நிலை எடுக்க வேண்டும். கமிஷனர் நடராஜ் இடமாற்றம் தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட உத்தரவு இப்போது தமிழக அரசை கட்டுப்படுத்தும் என்று நாம் கருத தேவை இல்லை, என்றாலும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்து பேசு வது நல்லது. ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிட்ட பிறகு தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் கிடைத்து விடும் என்பதால் அதற்குள் மாநில அரசு தேர்தல் கமிஷனுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
தமிழக அரசு இந்த விஷ யத்தில் தக்க முடிவு எடுப்பது நல்லது. இதில் தெளிவான நிலை இல்லாமல் இருப்பது நல்லது அல்ல.
கமிஷனர் நடராஜ் மாநில அரசின் பெரிய அதிகாரியாக இருப்பதால் தேர்தல் கமிஷன் மாநில அரசுடன் கலந்து பேசிய பிறகே முடிவு எடுத்து இருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் உத்தரவு கட்டுப்படுத்தாது. என்றாலும் 13-ந்தேதிக்கு பிறகு அந்த அதிகாரம் வந்து விடும்.
அரசியல் சட்டம் 324 வது பிரிவின்படி தேர்தல் கமிஷனுக்கு அதிக அதிகாரம் இப்போது உள்ளது என்று சொல்ல முடியாது. கமிஷனர் நடராஜ் சொன்ன கருத்துக்கள் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உடனே நிராகரிக்க இயலாது. இது குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தகைய விவகாரங்களில் நேரடியாக பேசாமல் தன் பதிவியை உணர்ந்து கவனத்துடன் பேசி இருக்க வேண்டும். இது பற்றி தேர்தல் கமிஷனும் மாநில அரசுக்கு முன் கூட்டியே நோட்டீசு அனுப்பி கலந்து பேசி இருக்க வேண்டும்.
தமிழக அரசும் தேர்தல் கமிஷனும் ஒரு ஆரோக்கியமான கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு இரு தரப்பினரும் கலந்து பேசி தக்க முடிவு எடுக்க வேண்டும்.
தீர்ப்பு குறித்து தேர்தல் கமிஷன் வக்கீல் ஜி.ராஜ கோபால் :
கமிஷனர் நடராஜ் பெண்கள் தினம் பற்றி கூறிய கருத்துக்கள் சரியாப தவறாப என்று தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்ய வேண்டும். கமிஷனரின் இடமாற்றம் உத்தரவு தொடர் பாக மாநில அரசுடன் கலந்து பேசி முடிவு எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.
தேர்தல்கமிஷன் மாநில அரசு இரண்டுக்கும் அதிக அதி காரங்கள் உள்ளன என் பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். தேர்தல் கமிஷனின் உத்தரவு ஏப்ரல் 13-ந் தேதி முதல் அமலுக்கு வருவதால் அதன் பிறகு அவர்கள் அதிகாரிகளை மாற்ற அதிகாரம் பெற்று விடுவார்கள். கமிஷனர் தனது கருத்தை தெரிவிக்கையில் ஜாக் கிரதையாக பேசி இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Posted by IdlyVadai at 3/31/2006 11:26:00 AM 3 comments
உதயசூரியனுக்கு வாக்கு கேட்கும் ம.தி.மு.க
மதிமுக பட்டியல் வெளியிட்ட போது சம்மட்டி தென்காசி தொகுதியில் வேட்பாளர் ராம உதயசூரியன் அப்படி என்றால் வைகோ உதயசூரியனுக்கு ஓட்டி கேட்பாரா ? என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்தார். இன்று வந்த தினமணி செய்தியில் இந்த பிரச்சனை மதிமுகவிற்கு இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
அந்த செய்தி இங்கே தந்துள்ளேன்....
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் வாக்கு கேட்பவர்கள் மதிமுக வேட்பாளருக்கும், மதிமுக சார்பில் வாக்கு கேட்பவர்கள் திமுகவுக்கும் வாக்கு கேட்பது மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி தொகுதியில் திமுகவும், மதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. திமுக வேட்பாளராக வீ.கருப்பசாமிப் பாண்டியன் போட்டியிடுகிறார். மதிமுக வேட்பாளர் பெயர் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. அவருடைய பெயர் உதயசூரியன்.
எனவே, மதிமுக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்வோர் வேட்பாளர் பெயரைக் கூறி ""உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்'' என்றால் அது திமுகவுக்கு வாக்கு கேட்பது போலத்தானே இருக்கும்.
அதே போல, திமுக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்வோர் அவர்களின் சின்னத்தைச் சொல்லி ""உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியனுக்கு அளியுங்கள்'' என்றால் அது மதிமுக வேட்பாளர் உதயசூரியனுக்கு வாக்கு கேட்பது போலத்தானே இருக்கும்.
எனவே, மதிமுக சார்பில் தென்காசி வேட்பாளராக உதயசூரியனை வைகோ தேர்வு செய்தபோது கட்சி நிர்வாகிகள் சிலர் வைகோவிடம் ""உதயசூரியனை நாம் வேட்பாளராக நிறுத்தினால் அவருக்கு வாக்கு கேட்பது, திமுகவுக்கு வாக்கு கேட்பது மாதிரி இருக்காதா'' என கூறினார்களாம்.
அதைக் கேட்ட வைகோ, ""அதை ஏன் அப்படி பார்க்கிறீர்கள், திமுகவினர் எப்படி வாக்கு கேட்பார்கள் என யோசித்து பாருங்களேன்.
திமுகவினர் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என பிரசாரம் செய்தால், அது நமது வேட்பாளர் உதயசூரியனுக்கு வாக்கு கேட்பது மாதிரிதானே இருக்கும்.
எனவே, அது நமக்கு "பிளஸ் பாயிண்ட்'தான். ஆதலால், தென்காசி தொகுதி வேட்பாளராக உதயசூரியனே இருக்கட்டும்'' என சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாராம் வைகோ
பிகு: தேர்தல் கவுண்ட் டவுன் என்ற பகுதி வலது பக்கத்தில் புதுசு
Posted by IdlyVadai at 3/31/2006 11:11:00 AM 2 comments
Thursday, March 30, 2006
பா.ம.க வேட்பாளர் பட்டியல்
1. மேட்டூர் - ஜி.கே.மணி
2. ஜெயங்கொண்டம் - ஜெ.குரு
3. விருத்தாசலம் - டாக்டர் கோவிந்தசாமி
4. செங்கல்பட்டு - கி.ஆறுமுகம்
5. திருத்தணி - கோ.ரவிராஜ்
6. பண்ருட்டி - தி.வேல்முருகன்
7. திருப்பத்தூர் - டி.கே. ராஜா
8. மேல்மலையனூர் - ப. செந்தமிழ்ச்செல்வன்
9. ஆற்காடு - கே.எல்.இளவழகன்
10. பெரணமல்லூர் - எதிரொலி மணியன்
11. ஓமலூர் - அ.தமிழரசு
12. திருவிடைமருதூர் - கோ.ஆலயமணி
13. சைதாப்பேட்டை - சி.ஆர்.பாஸ்கரன்
14. பூம்புகார் - மு.கே.பெரியசாமி
15. காஞ்சிபுரம் - சக்தி கமலம்மாள்
16. பவானி - கே.வீ.ராமநாதன்
17. காவேரிப்பட்டினம்- த.அ.மேகநாதன்
18. திண்டிவனம் - ந.ம.கருணாநிதி
19. பாலக்கோடு - கு.மன்னன்
20. கலசப்பாக்கம் - காளிதாஸ்
21. கும்மிடிப்பூண்டி - துரை ஜெயவேல்
22. வரகூர் (தனி)- கி.கோபி
23. புவனகிரி - தேவதாஸ் படையாண்டவர்
24. தாரமங்கலம் - கண்ணையன் என்கிற பி.கண்ணன்
25. முகையூர் - வி.ஏ.டி.கலிவரதன்
26. திருப்போரூர் (தனி) - டி.மூர்த்தி
27. வானூர் (தனி) - எம்.சவுந்திரராஜன்
28. கபிலர்மலை- டாக்டர் நெடுஞ்செழியன்
29. எடப்பாடி - வி.காவேரி
ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகளில் பென்னாகரம், அணைக்கட்டு ஆகிய இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்றோ, நாளையோ அறிவிக்கப்படுவார்கள் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
Posted by IdlyVadai at 3/30/2006 10:03:00 PM 5 comments
தேர்தல் கமிஷன் - சரியா ? தவறா ?
தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக கடந்த 2 நாட்களாக சென்னையில் தாண்டன் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நவீன்சாவ்லா, கோபாலசாமி ஆகியோர் முகாமிட்டு இருந்தனர். இந்தப் பணிகள் நேற்று முடிவடைந்தன. அதைத் தொடர்ந்து சென்னையில் ராஜ்பவனில் நிருபர்களுக்கு தலைமைத் தேர்தல் கமிஷனர் தாண்டன் பேட்டி அளித்தார்.
சோனியா பற்றி ஒரு கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
".....சோனியாகாந்தி மீதான புகாரும் தேர்தல் கமிஷனுக்கு வந்துள்ளது. இதுபோன்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக பல கட்ட விசாரணைகளை கடந்து செல்ல வேண்டும். கூறப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு உண்மை உள்ளதா? புகாருக்கு ஆதாரங்கள் உள்ளதா? என்பதை முதலில் அறிய வேண்டும். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரிடம் எழுத்துப் பூர்வமான பதில் பெற வேண்டும். அதைத் தொடர்ந்து புகார் கூறியவரையும் குற்றம் சாட்டப்பட்டவரையும் நேரில் அழைத்து கருத்து கேட்க வேண்டும். அதன் பின்னரே இந்த விவகாரத்தில் நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம். அந்த முடிவின் படி, அறிக்கை தயாரித்து ஜனாதிபதிக்கு (எம்.பி. என்றால்) அல்லது கவர்னருக்கு அனுப்பி வைப்போம். அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இதுதான் வழக்கமான நடவடிக்கை. இதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. புகார் மீது முடிவு எடுப்பதற்கு முன்பாக, இதுபோன்ற விவகாரங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள உத்தரவுகளை ஆராய்வோம்" ஆனால் சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றும் விஷயத்தில், தேர்தல் கமிஷன் இப்படி நிதானமாக செயல்படவில்லை. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. மகளிர் தினத்தையொட்டி 'டெக்கான் க்ரானிகல்' பத்திரிக்கை பலரின் கருத்துக்களை பெற்று, சிறிய செய்திகளாக வெளியிட்டது. போலீஸ் கமிஷனர் நடராஜ் 'தன்னுடைய சொந்த மற்றும் தொழில் ரீதியான விஷயங்களை நன்கு கவனிக்கிற பெண்மணிகள் சிறப்பானவர்கள். நமது முதல்வர் ஜெயலலிதா இதற்கு சிறந்த உதாரணம். எல்லா பெண்மணிகளும் அவரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்' என்று அந்தத் தொப்பில் கருத்து தெரிவித்திருக்கிறார். இது அவர் கருத்து. அதனால் இது தேர்தலை எப்படி பாதிக்கும் விஷயமாக கருத முடியும் ? இது தேர்தல் விதியை மீறிய செயல் என்று யாரும் கருத வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் கமிஷனரிடம் அல்லது தமிழக அரசிடம் விளக்கம் கூட கோரப்படவில்லை. புகார் வந்தவுடன் உத்தரவு என்று சூப்பர் ஃபாஸ்டாக செயல்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசுக்கு மூன்று பெயர்களை கொடுத்து அதிலிருந்து ஒருவரை போலீஸ் கமிஷனராக நியமிக்க சிபாரிசு செய்தது. இது கொஞ்சம் ஓவர். போலீஸ் கமிஷனரை தேர்ந்தெடுப்பது மாநில அரசின் வேலை.
ஒரு முறை தேர்தல் சம்பந்தமாக ஒரு அதிகாரி மாற்றப்பட்டால் அவர் ரிடையர் ஆகும் வரை தேர்தல் வேலைகளை கவனிக்க முடியாது என்று இருக்கிறது.
தேர்தல் கமிஷனின் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை தடுக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு.
சென்னை போலீஸ் கமிஷனரை இடமாற்றம் செய்த விவகாரம் தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதன் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று தெரிகிறது. பார்க்கலாம்.
கார்ட்டூன் உதவி : மதி, தினமணி
Posted by IdlyVadai at 3/30/2006 08:24:00 PM 3 comments
திமுக வேட்பாளர் பட்டியல் - சேப்பாக்கத்தில் கலைஞர்
சேப்பாக்கம்- மு.கருணாநிதி
அண்ணா நகர்- ஆற்காடு வீராசாமி
துறைமுகம் - அன்பழகன்
ராயபுரம் - சற்குணம் பாண்டியன்
எழும்பூர்(தனி)- பரிதி இளம் வழுதி
மயிலாப்பூர்-நெப்போலியன்
காட்பாடி- துரை முருகன்
கும்பகோணம்- கோ.சி .மணி
சேலம் 2- வீரபாண்டி ஆறுமுகம்
திருவல்லிகேணி - மு. நாகநாதன்
கன்னியாகுமரி: என்.சுரேஷ் ராஜன்
நாகர்கோயில்: ஏ.ராஜன்
பத்மநாபபுரம்: த.தியோடர் ரெஜினால்டு
விளாத்திகுளம்: சி.ராஜாராம்
ஒட்டபிடாரம் (தனி): எஸ்.எக்ஸ்.ராஜமன்னார்
திருச்செந்தூர்: ஏ.டி.கே.ஜெயசீலன்
தூத்துக்குடி: பி.கீதா ஜீவன்
சங்கரன்கோவில் (தனி): ச.தங்கவேலு
தென்காசி: வீ.கருப்பசாமி பாண்டியன்
ஆலங்குளம்: பூங்கோதை ஆலடி அருணா
திருநெல்வேலி: என்.மாலைராஜா
அம்பாசமுத்திரம்: இரா. ஆவுடையப்பன்
ராதாபுரம்: மு.அப்பாவு
கடலாடி: சுப.தங்கவேலன்
முதுகுளத்தூர்: கே.முருகவேல்
திருப்புத்தூர்: கே.ஆர்.பெரியகருப்பன்
இளையான்குடி: ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
அருப்புக்கோட்டை: தங்கம் தென்னரசு
சாத்தூர்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
சிவகாசி: வி.திங்கராஜ் ராஜபாளையம்(தனி): வி.பி.ராஜன்
பழனி (தனி): எம்.அன்பழகன்
ஒட்டன்சத்திரம்: அர.சக்கரபாணி
ஆத்தூர்: இ.பெரியசாமி
நத்தம்: எம்.ஏ.ஆண்டி அம்பலம்
பெரியகுளம்: எல்.மூக்கையா
ஆண்டிப்பட்டி: பா.சீமான்
போடிநாயக்கனூர்: எஸ்.லட்சுமணன்
கம்பம்: பெ.செல்வேந்திரன்
சேடப்பட்டி: கோ.தளபதி
திருமங்கலம்: வ.வேலுசாமி
உசிலம்பட்டி: பி.வி.கதிரவன் (அ.இ.பா.பி.,- வல்லரசு பிரிவு)
சோழவந்தான்: பி.மூர்த்தி
சமயநல்லூர் (தனி): ஏ.தமிழரசி ரவிகுமார்
மதுரை மத்தி: பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்
புதுக்கோட்டை: எம்.ஜாபர் அலி
கொளத்தூர் (தனி): சி.பரஞ்சோதி
அறந்தாங்கி: உதயம் சண்முகம்
மருங்காபுரி: ஏ.ரொக்கையா மாலிக் (எ) சல்மா
உப்பிலியபுரம் (தனி): இரா.ராணி
முசிறி: என்.செல்வராஜ் லால்குடி: அ.சவுந்திரபாண்டியன்
திருவெறும்பூர்: கே.என்.சேகரன்
திருச்சி-1: அன்பில் பெரியசாமி
திருச்சி- 2: கே.என்.நேரு
கரூர்: வாசுகி முருகேசன்
கிருஷ்ணராயபுரம் (தனி): பி.காமராஜ்
குளித்தலை: இரா.மாணிக்கம்
அரவக்குறிச்சி: எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் (தமிழ்நாடு மாநில இந்திய முஸ்லிம் லீக்)
பெரம்பலூர் (தனி): ம.ராஜ்குமார்
ஆண்டிமடம்: எஸ்.எஸ்.சிவசங்கர்
சீர்காழி (தனி): மு.பன்னீர் செல்வம்
குத்தாலம்: க.அன்பழகன்
வேதாரண்யம்: எஸ்.கே.வேதரத்தினம்
திருவாரூர் (தனி): உ.மதிவாணன்
பூங்காநகர்- அ. இராகுமான்கான்
புரசைவாக்கம்-வி.எஸ்.பாபு
திருவல்லிகேணி- பேராசிரியர். மு.நாகநாதன் தியாகராயநகர்-ஜெ.அன்பழகன்
பொன்னேரி(தனி)-வெ.அன்புவாணன்
திருவொற்றியூர்-கே..பி.பி.சாமி
வில்லிவாக்கம்-பா.ரங்கநாதன்
திருவள்ளூர்-ஈ.ஏ.பி.சிவாஜி
ஆலந்தூர்- தா.மோ. அன்பரசன்
தாம்பரம்- எஸ்.ஆர் .ராஜா
உத்திரமேரூர்- க.சுந்தர்
அச்சரப்பாக்கம்(தனி)- சங்கரி நாராயணன்
அரக்கோணம்(தனி)- பூவை ஜெகன்
வாணியம்பாடி- எச்.அப்துல் பாஸித்
ராணிப்பேட்டை- ஆர்.காந்தி பேரணாம்பட்டு(தனி)- அ.சின்னசாமி
நாட்ராம்பள்ளி- என்.கே.ஆர்.சூரியகுமார்
தண்டராம்பட்டு- எ.வ.வேலு
திருவண்ணாமலை- கு.பிச்சாண்டி ஆரணி- ஆர்.சிவானந்தம் வந்தவாசி(தனி)- எஸ்.பி.ஜெயராமன்
செஞ்சி- வே. கண்ணன்
கண்டமங்கலம்(தனி)- செ.புஷ்பராஜ்
திருநாவலூர்- வீ.சு.வீரபாண்டியன்
சின்னசேலம்- தா.உதயசூரியன்
சங்கராபுரம்- ஆ.அங்கயற்கன்னி
உளுந்தூர்பேட்டை(தனி)- கே.திருநாவுகரசு
நெல்லிக்குப்பம்- சபா.இராஜேந்திரன்
கடலூர்- கோ.அய்யப்பன்
குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
மங்களூர்(தனி)- வெ.கணேசன்
தஞ்சாவூர்- எ.ஸ்.என். எம். உபயதுல்லா
திருவையாறு- துரை.சந்திரசேகரன்
வலங்கைமான்(தனி)- சோம.செந்தமிழ்செல்வன்
ஒரத்தநாடு- பி.இராசமாணிக்கம்
கிருஷ்ணகிரி- டி.செங்குட்டுவன்
பர்கூர்-எம்.வி.வெற்றிசெல்வன்
தர்மபுரி- பி.என்.பெரியண்ணன்
மொரப்பூர்- வ.முல்லைவேந்தன்
வீரபாண்டி- ஆ.இராஜேந்திரன்
பனமரத்துப்பட்டி- இரா.இராஜேந்திரன்
சங்ககிரி(தனி)- வி.பி.துரைசாமி
ஏற்காடு(தனி)- சி.தமிழ்செல்வன்
தலைவாசல்(தனி)- கு.சின்னதுரை
ராசிபுரம்- கே.பி.இராமசாமி
சேந்தமங்கலம்(தனி)- கே.பொன்னுசாமி
திருச்செங்கோடு- செ.காந்திசெல்வன்
வெள்ளக்கோவில்- மு.பெ.சாமிநாதன்
ஈரோடு- என்.கே.பி.ராஜா
அந்தியூர்(தனி)- எஸ்.குருசாமி
தாராபுரம்(தனி)- பெ.பிரபாவதி
பவானிசாகர்- கீதா நடராசன்
சத்தியமங்கலம்- எல்.பி தர்மலிங்கம்
மேட்டுப்பாளையம்- பா.அருண்குமார்
கோவை(கிழக்கு)- பொங்கலூர் நா.பழனிசாமி
பேரூர்- நா.ருக்மணி
கிணத்துக்கடவு- நெகமம் கே.வி.கந்தசாமி
பொள்ளாச்சி- த.சாந்தி தேவி .
உடுமலைப்பேட்டை- செ.வேலுசாமி
பொங்கலூர்- எஸ்.மணி
பல்லடம்- எஸ்.எஸ்.பொன்முடி
குன்னூர்(தனி)- அ.செளந்திரபாண்டியன்
கூடலூர்- கா.இராமசந்திரன்
ஜெயை எதிர்த்து சீமான் போட்டி
எஸ்.வி.சேகரை எதிர்த்து நெப்போலியன்
திமுகவில் 13 பெண் வேட்பாளர்கள்
Posted by IdlyVadai at 3/30/2006 07:25:00 PM 4 comments
விசி வேட்பாளர் பட்டியல் - திருமா போட்டியில்லை
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ல விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.
1. ஸ்ரீபெரும்புதூர் இளமாறன்
2. முகையூர் சிந்தனைச் செல்வன்
3. செங்கம் (தனி) ஆற்றலரசு
4. உளுந்தூர்பேட்டை (தனி) வெற்றிச் செல்வன்
5. காட்டு மன்னார்கோவில் (தனி) எழுத்தாளர் ரவிக்குமார்
6. மங்களூர் (தனி) செல்வப் பெருந்தகை
7. அரூர் (தனி) கோவிந்தசாமி
8. வால்பாறை (தனி) சுசி கலையரசன்
9. சீர்காழி (தனி) துரைராஜன்
வைகோ வழியில் திருமா ?
Update - திருமா பேட்டி
கேள்வி:- விடுதலை சிறுத்தை கட்சியில் பெண் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையே?
பதில்:- கடந்த தேர்தலில் 2 பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். இந்த முறை வாய்ப்பு கொடுக்க இயல வில்லை. எதிர்காலத்தில் கட்டாயம் வாய்ப்பு கொடுப்போம்.
கே:-வைகோவும், நீங்களும் தேர்தலில் போட்டியிடாததற்கு என்ன காரணம்?
ப:- வைகோ போட்டியிடாதது எனக்கு தெரியாது. நேற்று இரவுதான் தெரிவித்து இருக்கிறார். அவர் போட்டியிடாதது அவருடைய விருப்பம். அவருடைய முடிவு. 12 நாட்கள் இடைவெளியில்தான் பிரசாரம் செய்ய வேண்டி இருப்பதால் நான் போட்டியிடவில்லை.
கே: இலவச கலர் டிவி வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட் டுள்ளதே?
ப: இலவச திட்டம் என அறிவித்து வாக்குகளை அல்ல திட்டமிட்டுள்ளார் கள். இலவச கல்வி என்று அளிக்காமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவச டிவி வழங்கு வோம் என்று அறிவித்திருப்பது அவர்களது சமூகப் பார்வையை காட் டுகிறது.
கே: அதிமுகவும் இலவச திட்டங்களை அறிவித்ததே?
ப: அதிமுக அறிவித்துள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக் கிள் என்ற திட்டம், யாராலும் குறை சொல்ல முடியாதது.
கே:- கேபிள் டி.வி.யை அரசு உடைமையாக்குவது சரியா?
ப: அது அற்புதமான திட்டம் வரவேற்க கூடியது. சுமங்கலி கேபிள் டி.வி. தமிழகத்தில் ஊடக ஏகாதிபத்தியத்தை காட்டுகிறது.
ஒரு பத்திரிகையின் விலையை உற்பத்தி செலவை விட பலமடங்கு குறைத்து கொடுப்பது மற்ற பத்திரிகையை நசுக்கும் செயலாகும். இது தமிழ் மக்களுக்கும், தமிழ் நாட்டின் நலனுக்கும் நல்லதல்ல. உற்பத்தி செலவை விட குறைத்து கொடுப்பதால் மற்ற பத்திரிகைகள் பாதிக்கப்படுகின்றன.
Posted by IdlyVadai at 3/30/2006 01:45:00 PM 3 comments
குமுதம் தேர்தல் கணிப்பு - இரண்டாவது ரவுண்ட்
நாகை மாவட்டம்
மெதுவாக சூரியன் கீழ்வானில் கிளம்பிக் கொண்டிருக்க, மெலிந்த விவசாயிகள் முண்டாசை இறுக்கியபடி டீக் கடைகளுக்கு நடந்து கொண்டிருந்தார்கள். அது சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட சிறிய ஊரான கொள்ளிடம்.
மழையின்போது ஏக்கருக்கு மூவாயிரம் வீதம் நிவாரணம் கிடைத்தது இந்த மக்களுக்குப் பெரிய திருப்தியைத் தந்துள்ளது. அதேசமயம் கிராம நிர்வாக அதிகாரியும், உள்ளூர்ப் பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவரும் அதை முழுமையாக சென்றடையவிடாமல் சொந்த ஆதாயம் தேடப் பார்த்ததையும் சிலர் வருத்தத்துடன் சொன்னார்கள். தைக்கால் கிராமத்தில் பாய் நெசவு செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் ஓட்டளித்தார்கள். இங்கே இஸ்லாமியப் பெண்கள் சொல்லி வைத்தாற்போல அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க, ஆண்கள் தி.மு.க. பக்கம் சாய்ந்தார்கள்.
மயிலாடுதுறை தொகுதியில் கடந்த முறை தி.மு.க. ஆதரவோடு வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவின் ஜெக வீரபாண்டியன் இந்த முறை கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறார்கள், அவரது கணிசமான ஆதரவாளர்கள்! ஒரு காலத்தில் தி.மு.க.வில் கிட்டப்பா, செங்குட்டுவன் என்று செல்வாக்கான தலைவர்கள் இருந்த இந்தத் தொகுதி இன்று கலகலத்து காணப்படுகிறது. சுற்றுபட்டு கிராமங்களில் ‘இரட்டை இலைக்குத்தான் எங்கள் ஓட்டு’ என்று அடித்துச் சொன்னார்கள் குடிசைப் பெண்கள்.
மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் அருகே ஓர் இளைஞர் ‘‘மணிசங்கர அய்யர்னு ஒருத்தரை மெட்ராஸ்ல பார்த்தா, இங்க வரச் சொல்லுங்க சார்... ஏதோ நேர்த்திக் கடன் போல ஓசை படாம விடியற்காலையில வர்றாரு. பெரிய ஓட்டல்ல தங்கி சொந்த வேலைய முடிச்சுட்டு சர்சர்னு கார்ல பறந்துடறாரு’’ என்று ரொம்பவும் உணர்ச்சிவயப்பட்டார்.
நாகை, கீழ்வேளூரில் கிராமத்து மக்களே க்யூ அமைத்து, ஓட்டுப் போட்டது வித்தியாசமானது. கூலி வேலைக்குப் போகும் சில பெண்களிடம் பேச்சு கொடுத்தபோது, ‘‘நிவாரண தொகையாக அம்மா கொடுத்த ஆயிரம் ரூபாயை அப்படியே செலவழிக்காம வச்சிருக்கோம். ஒரு நடை வீட்டுக்கு வந்து பார்த்துட்டு மோர் குடிச்சுட்டுப் போங்க...’’ என்றார்கள் பாசத்துடன்!
சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட அக்கரைப் பேட்டை மீனவர்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது தெரிந்தது! திருக்கை மீனுக்காக ஸ்பெஷல் வலை பின்னிக் கொண்டிருந்த வேலாயுதம், திடீர் குப்பத்திலும், ரோலிங் மில் அருகிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ரெடியாகிவிட்டதைப் பெருமிதத்துடன் சொன்னார். இங்குள்ள மீனவர்கள் அ.தி.மு.க. அரசோடு மாதா அமிர்தானந்தமயி மடத்தின் நிவாரணப் பணிகளையும் மனதார பாராட்டினார்கள். நல்ல உச்சி வெயிலில் வேளாங்கண்ணி மாதா கோயிலில் நம் வாகனம் நின்றபோது, ஏதோ குலுக்கல் போட்டி என நினைத்துக் கொண்டு ஏகப்பட்ட வெளிமாநில டீ ஷர்ட் அழகுப் பெண்கள் ஓடிவந்தனர். ‘உங்களுக்கு இங்கே ஓட்டு இல்லை’ என்று சொல்லி அவர்களை அனுப்பிவைக்கப் பெரும்பாடு பட்டோம்.
திருவாரூர் மாவட்டம்
பேரளம், பூந்தோட்டம், முடிகொண்டான், சன்னா நல்லூர், பனங்குடி என்று சிறிய ஊர்கள் அடங்கிய தனித் தொகுதி நன்னிலம். பெரும்பாலும் விவசாயக் கூலிகள். இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனுக்காக அ.தி.மு.க. விட்டுக் கொடுத்த இடம். இரண்டு கழகங்களுமே இந்தத் தொகுதியைப் பல காலமாகவே கண்டு கொள்ளவில்லை என்பது மனதை வருடும் உண்மை.
‘‘செ.கு. நல்ல மனுஷன்தாங்க. அதிர்ந்து பேசத் தெரியாது. ஆனா அதுமட்டும் போதுமா? தொகுதி பக்கம் வர வேண்டாமா? ஏதாவது செய்ய வேண்டாமா?’’ என்று பூந்தோட்டத்தில் வருத்தப்பட்டார்கள் விவசாயிகள்.
கலைஞரின் பிறந்த மண்ணான திருவாரூரில் நம் வாகனம் நுழைந்தபோது, கமலாலயக் குளத்தில் இளம் காலைத் தென்றல் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. தி.மு.க. எம்.எல்.ஏ. அசோகன் கைவசம் உள்ள தொகுதி.
‘‘எம்.எல்.ஏ. தொகுதிக்கு வர்றாரா?’’
‘‘திருவாரூரைச் சுற்றி அவருக்கு என்ன ஆவப்போவுது? தளபதியைச் சுற்றினா சீட் வாங்கிப்புடலாம். எங்க ஆளுங்க பல பேர் இப்படித்தானே கட்சியைக் கெடுத்து வச்சிருக்காங்க. தலைவருக்கோ பிள்ளைப் பாசம் கண்ணை மறைக்குது. இல்லாட்டா ஒரே ஒரு சீட்டு அதிகம் கேட்ட வைகோவை விட்டிருப்பாரா?’’ என்றார் பஜாரில் நின்று கொண்டிருந்த கலைஞர் அனுதாபியான ஒருவர்.
இந்த ஐந்து வருடத்தில் தொகுதி பெரிய அளவில் எந்த வளர்ச்சியையும் காணவில்லை என்பது பெரும்பான்மையினரின் கசப்பான அபிப்பிராயம்.
‘‘எம்.எல்.ஏ.வை கல்யாண வீட்டுக்குக் கூப்பிட்டா முறையா வந்து மொய் வச்சுட்டு போனா தொகுதி வளர்ந்துடுமா?’’ என்று நக்கலடித்தார் தியாகராஜர் கோயில் வீதியில் கடைவைத்திருக்கும் பெரியவர். அடியக்கமங்களம், ஆண்டிப்பாளையம், கானூர் போன்று இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஏரியாக்களில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது.
தஞ்சை மாவட்டம்
கும்பகோணத்தில் மீண்டும் களம் இறங்கலாம் என்று கோ.சி.மணி நினைத்தால் இரண்டுக்கு மூன்று முறை யோசிக்க வேண்டும்.
‘‘அ.தி.மு.க.வுல கூட ஆளுங்க மாறிக்கிட்டே இருக்காங்க. குடை ராட்டினம் மாதிரி உச்சியில இருக்கிற ஆளு அடுத்த சுற்றுல தரைக்கு வந்துடறாரு. இங்க பாருங்க. அதே ஆற்காடு, அதே அன்பழகன், அதே கோ.சி.மணின்னு எத்தனை வருஷங்கள் இவங்களே யாரையும் அண்ட விடாம கட்சியை ஓட்டிட்டு இருக்கிறது?’’ நாச்சியார் கோயில் பெருமாள் கோயில் வாசலில் சில இளசுகள் வெறுப்புடன் கேட்டார்கள்.
வியாபாரம் பெருகிவிட்டதால் கும்பகோணத்தில் எங்கு திரும்பினாலும் டிராபிக் நெருக்கடி விழி பிதுங்கும் நிலையில். இதைக் கட்டுப்படுத்த புதிய மேம்பாலங்கள், புதிய சாலை வசதிகள் இல்லை என்பது பலரது குற்றச்சாட்டு.
‘‘மூப்பனாரின் பூர்வீக பூமியான பாபநாசத்தில் இன்னமும் நிறைய காங்கிரஸ் ஓட்டுக்கள் இருக்கின்றன. ஆனால், தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம்குமார் கதர் வேட்டி சகிதம் ஜீப்பில் ஏறி கை கூப்பினால், மாற்றிப் போட்டுவிடுவார்கள். ஒன்று, வேட்பாளரை மாற்ற வேண்டும் அல்லது தி.மு.க. போட்டியிட வேண்டும்’’ என்கிறார்கள்.
தஞ்சாவூரில் நுழைவதற்கு முன்பு கரந்தை கிராமத்திலேயே நமது வாகனத்தை வளைத்துக் கொண்டனர். வாக்களித்த அத்தனை பேரும் உழைக்கும் தொழிலாளிகள். தி.மு.க.வின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதி, கொஞ்சம் அசந்தாலும் ‘அம்மா’விடம் கைமாறிவிடும் நிலையில் உள்ளது. காரணம், பெரும் வசதிபடைத்த உள்ளூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வான உபயதுல்லாவின் குடும்பத்தினர் கொலை வழக்கில் மாட்டிக் கொண்டதில், மக்களிடையே அதிருப்தி தலைதூக்கியுள்ளது. தவிர, தி.மு.க.வில் உள்ள உட்கட்சிப் பூசல்!
அந்த மதிய வேளையில் திருவையாறு வந்தபோது ஊர் லேசாகத் தூங்கிக் கொண்டிருந்தது.
தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யாறு வாண்டையாருக்குப் பதவி தந்து அதே வேகத்தில் ஜெயலலிதா பறித்துக் கொண்டதில் பலருக்கு வருத்தமுள்ளது.
நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் விஜயகாந்த் கட்சியைப் பற்றிச் சொல்லவில்லையே என்று நீங்கள் அவசரப்பட்டால் ஸாரி... கேப்டனின் தே.மு.தி.க. இந்த மூன்று மாவட்டங்களிலும் கால் பதிக்கவே இல்லை.
‘‘அவர் முதலமைச்சருக்கா போட்டியிடறாரு?’’ என்று ஒரு சிலர் நமட்டுச் சிரிப்புடன் கேட்டுவிட்டுக் கழகங்களுக்கு டிக் செய்தார்கள்.
பெரம்பலூர் மாவட்டம்.
தஞ்சை மாவட்டத்தை முடித்துக் கொண்டு அரியலூர் தொகுதிக்கு உட்பட்ட திருமானூர் கடைத்தெருவிற்கு வந்தபோது விலாங்குமீன் பாட்டிற்கு (சுயேச்சைகள் யாருக்காவது விலாங்குமீன் சின்னம் கிடைத்தால் அமோகமாக ஓட்டு விழுமோ?) தாளம் போட்டுக் கொண்டிருந்த டீக் கடை இளம்வட்டம் திபுதிபுவென்று ஓடிவந்தது. உடையார், வன்னியர் மற்றும் மூப்பனார் சமூகம் அதிகமுள்ள தொகுதி. உள்ளூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இளவழகன் மீது புகார்கள். இத்தனைக்கும் ஜெயலலிதா பக்தர்கள் ஏராளமானவர்கள் உள்ள தொகுதி என்பது பலரிடம் பேசியபோது புரிந்தது. அதே சமயம், பெரம்பலூர் தி.மு.க. மாவட்டச் செயலாளரும், மத்திய அமைச்சருமான ராஜா மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
‘‘அவர் 99_ம் வருஷம் வாஜ்பாய் அமைச்சரவையிலேயே மந்திரியா இருந்தவர். தொடர்ந்து மந்திரியா இருக்கார். ஏழு வருஷமா முழுக்கைச் சட்டை கலையாம கோபாலபுரத்தை எதுக்கு சுத்தி சுத்தி வரார்னு யாராவது கேட்டுச் சொல்லுங்க. தாழ்த்தப்பட்ட ஜனங்களுக்கு எதிரிகள் வெளியில இல்லீங்க’’ _ கொதிப்புடன் பேசினார்கள் காட்டுபிரிங்கியம் கிராமத்தில் பல கூலித் தொழிலாளிகள்.
இளநீரை ஜில்லென்று தொண்டை குழிக்குள் இறக்கிவிட்டு பெரம்பலூர் தொகுதிக்குள் நுழைந்தோம். குறும்பலூர், பாலிகண்டபுரம், பாளையம், அம்மாபாளையம் என்று நிறைய அமைதியான கிராமங்கள்.
‘பெரம்பலூருக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டம், கொள்ளிடத்திலிருந்து குழாய்மூலம் காவிரி குடிநீர், வேப்பந்தட்டை பகுதியில் விசுவகுடியில் ஏழரைக் கோடியில் விசுவகுடி அணை திட்டம், பேரூராட்சியாக இருந்த பெரம்பலூரை நகராட்சியாக அறிவித்தது’ என்று இந்தத் தொகுதியில் ஜெயலலிதா காலத்தில் நிறைவேறிய நல்ல திட்டங்களை அடுக்கினார் நான்கு ரோட்டு சந்திப்பில் பெட்டிக்கடை வைத்திருப்பவர். தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் வழக்கறிஞருமான ராஜரத்தினம் கூப்பிட்ட குரலுக்கு ‘என்ன அண்ணே’ என்று ஓடிவந்துவிடுவார் என்று பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பெரம்பலூர் பெரிசுகள்.
திருச்சி மாவட்டம்
பெரம்பலூர் மட்டுமல்ல... உப்பிலியாபுரத்திலும் கண்ணை மூடிக்கொண்டு ‘இரட்டை இலையைத் தவிர எங்களுக்கு வேறு சின்னம் தெரியாது’ என்று சொல்லும் கிராமத்து மக்கள் ஏராளமாக உள்ளனர். வெங்கடாசலபுரம், நந்தியாபுரம், சிக்கத்தமூர் என்று இன்னமும் டி.வி.யை அதிசயமாகப் பார்க்கும் முன்னேறாத கிராமங்கள். உள்ளூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரோஜா மீது பெரிய அபிப்பிராயம் இல்லை என்றாலும் இலவச சைக்கிள் திட்டத்தை நன்றியுடன் சொல்கிறார்கள். இங்குள்ள கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல பெண்களை ஒட்டுமொத்தமாக இரட்டை இலை பக்கம் திருப்பியுள்ளது.
‘‘ஒரு சாதாரண ஆளை அம்மா தூக்கிவிட்டாங்க. அவர் நடந்து வந்த பாதையை மறக்கலாமா? தன்னோட சேர்ந்து கஷ்டப்பட்ட ஏழை கட்சிக்காரர்களை மறக்கலாமா? மறந்துவிட்டு சர்புர்னு சுமோவுல, மூச்சுவிடாம ‘செல்’லுல பேசிகிட்டு பறக்கிறாரே’’ என்று லால்குடி தொகுதிக்குட்பட்ட வாளாடி கிராமத்தில் வியாபாரம் செய்யும் ஒருவர் கோபப்பட்டார். அவர் சொல்வது லால்குடி எம்.எல்.ஏ. பாலனை! கடந்த அ.தி.மு.க. தேர்தலில் தி.மு.க. பிரமுகர் நேருவை எதிர்த்து வென்றவர். தொகுதியில் இன்னமும் நேருவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. முத்தரையர், உடையார் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமுள்ள தொகுதி.
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நேர்மாறாக பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் விஜயகாந்தின் ரசிகர்களை குக்கிராமங்களிலும் பார்க்க முடிந்தது.
எந்த ஊருக்கு யார் ராஜாவாக இருந்தாலும் இந்த ஊருக்கு நான்தான் ராஜா என்பது போல படுகம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கப் பெருமாளின் ராஜகோபுரம் நம்மை வரவேற்க... நான்கு வீதிகளைச் சுற்றிலுமுள்ள அழகான பெண்கள், போன தடவை நாம் அங்கு கருத்துக் கணிப்புக்காக வந்ததை சந்தோஷத்துடன் ஞாபகப்படுத்திவிட்டு வாக்களித்தனர். உள்ளூர் எம்.எல்.ஏ. கே.கே.பாலசுப்ரமணியம் பெயரைக் கெடுத்துக் கொள்ளவில்லை.
திருச்சி 1_ம் தொகுதிக்குள் நுழைந்தபோது காந்தி மார்க்கெட் பரபரப்பாக இருந்தது. இங்கே வியாபாரிகள் மற்றும் சுற்று கடைத்தெருவிலுள்ள கடைக்காரர்கள் மத்தியில் நிறைய புகார்கள். மீண்டும் கந்துவட்டி பிரச்னை ஜாஸ்தியாகிவிட்டதாக சொன்னார்கள்.
‘‘அவர் எங்க ஊர்ல இருக்காரு? திரும்பிப் பார்த்தா, தளபதியைப் பார்க்க மெட்ராஸ் போய்டுவாரு. எப்பவும் கூடவே ஒரு பந்தா கோஷ்டி. நல்லாத்தான் இருந்தார். ஆனா இப்போ ரொம்ப மாறிப் போய்ட்டாரு...’’ என்று தி.மு.க. எம்.எல்.ஏ பரணிகுமாரை சற்று வருத்தத்தோடு நக்கலடித்தார் பாலக்கரையில் நாம் சந்தித்த ஒரு மார்க்கெட்டிங் அதிகாரி.
தொகுதி இரண்டு கழகங்களுக்குமே ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. அ.தி.மு.க.வில் திருவெறும்பூர் ரத்தினவேலுவுக்கு தொகுதியில் நல்ல பெயர் உள்ளது.
இரண்டாவது சுற்றை முடித்தபோது, நமக்கு தோன்றியதெல்லாம் முதல் சுற்றைப் போலவே ஏறத்தாழ அதே மனநிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான்! அவர்களுக்கு ஆடம்பர அறிவிப்புகள், பல கோடிகளில் மூன்று வருடம் கழித்து எழும்பப் போகும் கட்டிடங்களுக்கு இன்றைய அடிக்கல் நாட்டு விழாக்கள், ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு உலகத்தோடு பேசலாம் போன்ற கவர்ச்சித் திட்டங்கள், மொழிக்கு உயர்ந்த அந்தஸ்து தந்த பெருமை ஆகியவையெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டியது உடனடி நிவாரணம். அதை ஜெயலலிதா அரசு செய்கிறது. செய்துள்ளது.
அடுத்தது, உதவித் தொகையில் முதல்வர் காட்டிய தாராளம். மூன்றாவது, கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி யார் வேண்டுமானாலும் உயர்ந்த இடத்தில் உட்காரலாம் என்கிற நம்பிக்கையை கட்சிக்காரர்களுக்கு முதல்வர் தந்துள்ளது.
தி.மு.க.வின் பெரிய பலவீனம் திரும்பத் திரும்ப அதே தலைகள். அங்கே இளம் ரத்தத்திற்கு இடமில்லை. நந்தி போல உட்கார்ந்திருக்கும் இந்தத் தலைகளைப் பார்த்து மக்கள் சலித்துப் போய்விட்டனர். கலைஞரை ஏற்கும் மக்கள், அவருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின் என்பதை ஜீரணிக்கக் கஷ்டப்படுகிறார்கள்.
அடுத்த ரவுண்ட் ரிசல்ட்...
புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள்.
கூட்டணி அறுபது இடங்களை தாண்டாது’’
தமிழருவி மணியன் (காங்கிரஸ்)
‘‘சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்கள் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களிடம் மட்டும் கருத்துக் கேட்டுவிட்டு அதையே பெரும்பான்மையினர் கருத்தாக முத்திரை குத்தி வெளிப்படுத்துவது எந்த வகையில் அறிவியல்பூர்வமான தேர்தல் கணிப்பு என்று புரியவில்லை.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது வீட்டுச் சமையலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், நாட்டு மக்களின் எண்ணப் போக்கை நாடிபிடித்துப் பார்க்க ஒரு போதும் சரிப்படாது. 1998_ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கருத்துக் கணிப்புக்கு மாறாக அ.தி.மு.க. அணி 30 இடங்களில் வென்றது. 2001_ம் வருட சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. நின்ற 141 இடங்களில் 132 இடங்களைப் பெறும் என்று எந்தக் கருத்துக் கணிப்பும் வெளிப்படுத்தவில்லை. எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்று இறுதிநாள் வரை முடிவெடுக்காத வாக்காளர்களின் எண்ணிக்கையே தேர்தல் கணிப்புகள் தவறிப்போவதற்கு முக்கியமான காரணம்!
ஜெயலலிதா அரசு இன்று சலுகை சாளரங்களைத் திறந்து வைப்பது நாளை உரிமைக் கதவுகளை இழுத்து சார்த்துவதற்காகவே என்ற உள்ளார்ந்த அச்சம் பாமரர்கள் வரை பரவியிருக்கிறது. வெளிப்படையாக அனுதாப அலை அல்லது கடுமையான எதிர்ப்பு அலை வீசுகிறபோது மட்டுமே தேர்தல் கணிப்புகள் சரியாக செலாவணியாகின்றன. ஆயிரம் கைகள் தூக்கிப் பிடித்தாலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி அறுபது இடங்களைத் தாண்டாது’’
முதுமை முகாரி காளிமுத்து
இந்தக் கருத்துக்கணிப்பு பற்றி உங்கள் அபிப்ராயம்?
‘‘இதை மக்களின் நாடித்துடிப்பாக நினைக்கிறேன். ஆரம்பத்திலேயே முதலமைச்சர் சொன்னார் _ ‘இது மக்கள் கூட்டணி’ என்று. அடித்தளத்து மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத்தான் குமுதம் துல்லியமாக காட்டியுள்ளது. ‘கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி’ என்றொரு பழமொழி உண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக கிராமங்களில் நிறைவேறாத பல திட்டங்கள் நிறைவேறியுள்ளது. பாலம், பள்ளிக் கட்டிடம், சுகாதார நிலையம் போன்ற ஏதாவது ஒரு நன்மை நம்முடைய ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றுள்ளது. எங்கள் அடிப்படை பலமே அதுதான். வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் எங்கள் கூட்டணியில் இருப்பது பலம்.
சாயப்போகும் சர்வாதிகாரிகளுக்குக் கடைசியாக ஏற்படும் குமட்டல் நோய் தி.மு.க. தலைவருக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் கருத்துக்கணிப்புக்காக தி.மு.க. தலைவர் சொல்வது போல பெட்டி வாங்கியதாக இருந்தால், சன் டி.வி.யை விட பணக்கார நிறுவனமாக பத்திரிகைகள்தான் இருக்கமுடியும்.
கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மனை என்ன செய்யும்? மக்கள் எண்ண ஓட்டம் இவரது அணிக்கு எதிராக இருந்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தவிக்கிறார். கொதிக்கிறார். வெடிக்கிறார். சீறுகிறார். சபிக்கிறார். இவ்வளவு தூரம் கருணாநிதி கொந்தளிப்பதற்குக் காரணம், குடும்ப ஆதிக்கத்தின் கொடியை _ அதாவது ஸ்டாலினை அடுத்து அரியணையில் ஏற்றத் திட்டமிட்டார். அதற்கு மக்கள் சக்தி இடம் கொடுக்கவில்லை.
முசோலினியைப் பற்றி ஒரு விமர்சன வாசகம் உண்டு. ‘அவன் உபதேசங்களை செவிமடுப்பதில்லை. அவன் பேச்சுக்குக் கைதட்டல் சத்தம் மட்டுமே அவனுக்குப் பிடிக்கும்.’ கருணாநிதிக்கும் அதே பிரச்னை. விமரிசனங்களைத் தாங்க வலு இல்லாத நொய் அரிசியாக தி.மு.க. தலைமை இருக்கிறது. எனவேதான் வாரா வாரம் குமுதத்தைப் பார்த்து குமுறல் வருகிறது. இது, முதுமை முகாரி. விருதாப்பிய வேதாந்தம் என்று கருதுகிறேன். கருணாநிதி பேச்சுக்கு அதைவிட முக்கியத்துவம் கிடையாது!’’
முதலமைச்சரின் நிவாரண உதவிகளால் அ.தி.மு.க. முன்னணியில் இருந்தாலும், சில தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்களே?
‘‘எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தகுதியுள்ள நல்ல வேட்பாளர்களை நிறுத்துவார் முதல்வர் என்ற நம்பிக்கை எனக்குண்டு!’’
குமுதம் தேர்தல் கணிப்பு முதல் ரவுண்ட்
நன்றி: குமுதம்
Posted by IdlyVadai at 3/30/2006 09:30:00 AM 2 comments
மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் - வைகோ போட்டியில்லை
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தேர்தலில் போட்டியிடவில்லை. வைகோ சிவகாசி தொகுதியில் அவர் நிச்சயம் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வைகோ நேற்று இரவு அறிவித்தார். அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சிவகாசி தொகுதியில் ஞானதாஸ் என்பவர் போட்டியிடுகிறார்.
ம.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:
1. துறைமுகம் - சீமா பஷீர்
2. எழும்பூர் - மல்லை சத்யா
3. பெரம்பூர் - மணிமாறன்
4. அண்ணாநகர் - விஜயா தாயன்பன்
5. தாம்பரம் - பாலவாக்கம் சோமு
6. பூந்தமல்லி - டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்
7. வேலூர் - சுப்ரமணி
8. திருப்பத்தூர் - கே.எஸ்.அழகிரி
9. செஞ்சி - மாசிலாமணி
10.நெல்லிக்குப்பம் - சபாபதி மோகன்
11. குறிஞ்சிப்பாடி - ராமலிங்கம்
12. பட்டுக்கோட்டை - விஸ்வநாதன்
13. மயிலாடுதுறை - மகாலிங்கம்
14. திருச்சி 1 - மலர்மன்னன்
15. தொட்டியம் - நடராஜன்
16. அரவக்குறிச்சி - பி.ராமசாமி
17. தாரமங்கலம் - தாமரைக்கண்ணன்
18. கபிலர்மலை - குருசாமி
19. தர்மபுரி - வி.எஸ்.சம்பத்
20. தொண்டாமுத்தூர் - மு.கண்ணப்பன்
21. திருப்பூர் - சு.துரைசாமி
22. வெள்ளகோவில் - கணேசமூர்த்தி
23. சத்தியமங்கலம் - டி.கே.சுப்ரமணியம்
24. மதுரை கிழக்கு - பூமிநாதன்
25. திருமங்கலம் - வீர இளவரசன்
26. கம்பம் - ராமகிருஷ்ணன்
27. திண்டுக்கல் - செல்வராகவன்
28. ராமநாதபுரம் - கராத்தே பழனிசாமி
29. சிவகங்கை - செவந்தியப்பன்
30. விருதுநகர் - வரதராஜன்
31. தென்காசி - ராம உதயசூரியன்
32. வாசுதேவநல்லூர் - சதன் திருமலைகுமார்
33. சாத்தான்குளம் - நாசரேத் துரை
34. நாகர்கோவில் - ரத்தினராஜ்
35. சிவகாசி - ஆர்.ஞானதாஸ்
புதுச்சேரி:
1. திருநள்ளாறு - பி.ஆர்.சிவா
2. திருபுவனை - கோமளா
படம் உதவி: தினமலர்
Update - 1
வைகோ சிவகாசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ஏராளமான கட்சி தொண்டர்கள் விருப்ப மனு கொடுத்து இருந்தனர். ஆட்சி மன்றகுழுவிலும் வற்புறுத்தப்பட்டது. அப்போது வைகோ சம்மதம் தெரிவித்த தாகவும் திடீர் என்று அவர் முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட வைகோ கடைசியாக `சிவகாசி தொகுதி என்று கூறி நிறுத்தினார். உடனே தொண்டர்கள் ஆர்வத்தில் வைகோ என்று ஆரவாரம் செய்தார்கள். ஆனால் வைகோ திடீர் என்று ஞானதாஸ் என்று அறிவித்தார். இதைக் கேட்டு தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே மேடையில் இருந்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் மற்றும் முன்னணி தலைவர்கள் வைகோவை சமரசம் செய்தனர். ஆனால் வைகோ உடனே எழுந்து சென்று விட்டார்.
வைகோவின் அறிவிப்பால் சோர்ந்துபோன கட்சி நிர்வாகிகள் இன்று காலை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு படை எடுத்தனர். அதில் மாவட்ட செயலாளர்கள், ம.தி.மு.க. வேட்பாளர்கள், 35 பேரும் இடம் பெற்று இருந்தனர்.
அவர்கள் வைகோ சட்டசபை தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் வைகோ எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை.
Posted by IdlyVadai at 3/30/2006 08:32:00 AM 7 comments
Wednesday, March 29, 2006
திமுக தேர்தல் அறிக்கை மற்றும் கலைஞர் பேட்டி
இன்று கலைஞர் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் விவரம்:
* தமிழகத்திலுள்ள எல்லா விமான நிலையங்களிலும் வந்து போகும் விமானங்களிலும் செய்யப்படும் அனைத்து அறி விப்புகளும் தமிழ் மொழியிலும் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம்.
* தமிழ் அறிஞர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படவிருக்கும் விருதுகளுக்கு "தொல்காப்பியர் விருது'', "திருவள்ளுவர் விருது'' என்று பெயர் வைத்திடுமாறு வலியுறுத்துவோம்.
* திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பதற்கு வலியுறுத்துவோம்.
* சிறு குறு விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட கூட்டுறவுக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வோம்.
* கரும்பு விவசாயிகள் இதுவரை செலுத்தி வந்த லாரி வாடகையை நிர்வாகமே செலுத்த வழி வகை செய்வோம்.
* தமிழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 55 இலட்சம் ஏக்கர் தரிசு நிலங்களைப் பயன்படுத்தி, நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம்.
* தென் மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.
* கிராமப்புறக் குடிசைத் தொழில், மற்றும் சுய வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட கிராமப்புற குறுநிதிக் குழுக்களை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவோம்.
* கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள் இயற்கை மரணமடைந்தால் அவர்கள் கூட்டுறவு வங்கி களுக்கு செலுத்த வேண்டிய கடனும் வட்டியும் அறவே தள்ளுபடி செய்வோம்.
* சிறு வாணிபம் செய்வோர் வளம் பெறவும் அவர்கள் தண்டல் வட்டியிலிருந்து விடு படவும் கூட்டுறவு வங்கி களின் மூலம் எளிய முறையில் வாராந்திரக் கடன் பெற உரிய நடவடிக்கைகள் மேற் கொள்வோம்.
* மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள ஆசிரி யர் பணி இடங்களை உடனடியாக நிரப்புவோம்.
* மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற குறிக்கோளை நடை முறைப் படுத்துவோம்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசுக் கல்லூரி யில் ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பும் பட்டயப் படிப்பும் துவக்க நடவடிக்கை மேற் கொள்வோம்.
* பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கு அவர்களுடைய முழுக்கல்விக்கட்டணம் தங்கும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை அரசே ஏற்று அவர்கள் கல்வி பெற துணை நிற்போம்.
* மாணவர்களுக்கு சத்துணவோடு வாரம் இரண்டு முறை, திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முட்டை வழங்கப்படும்.
* விளையாட்டரங்கங்கள் இல்லாத மாவட்டத் தலைநகரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.
* கிராமப்புற இளைஞர்களுக்கு கணினிப் பயிற்சி எட்டாக்கனியாக இருப்பதால் கிராமப் பகுதிகளில் கணி னிப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு, இலவசமாகப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடை முறைப்படுத்துவோம்.
* தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியைப் பயன்படுத்தி கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்கி வேலை வாய்ப்பு பெருகுவதற்கு முயற்சி மேற் கொள்வோம்.
* அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 300 ரூபாய் வழங்குவோம்.
* மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களுடைய வரு மானத்தை பெருக்கிக்கொள் ளும் வகையில் உணவுப் பொருட்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* தற்போதுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை போலவே, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக சுய உதவிக் குழுக்கள் திட்டம் ஒன்றை புதிதாக தொடங்குவோம்.
ஐந்தாண்டு காலமாக கூட் டுறவு தேர்தலையே நடத்த வில்லை என்பதை சுட்டிக்காட்டுவதோடு உடனடியாக கூட்டுறவு தேர்தல்களை நடத்துவோம்.
* நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைக்கு தற்போது கிலோ அரிசி ரூ.3.50 என்று விற்பதற்கு பதிலாக கிலோ அரிசி இரண்டு ரூபாய் வீதம் தரமான அரிசி வழங்கி தாய் மார்களின் உள்ளத்தை குளிர்விக்கும் பபசாதனை புரிவதுடன், தாய்மார்களின் பொழுது போக்குகளை மனதில் கொண்டு, பொது அறிவை பரப்புவதற்கும் பயன் படும் வகையில் தொலைக் காட்சி பெட்டியில்லாத ஒவ்வொரு வீட்டுக்கும் அறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்களையொட்டி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங் கும் திட்டம் தொடங்கப் பட்டு செயல்படுத்தப்படும்.
* கருவுற்ற ஏழை பெண்களுக்கு மகப்பேறுக்கு முன் மூன்று மாதங்களுக்கும், பின் மூன்று மாதங்களுக்கும் பேறு கால உதவியாக மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும்.
* ஏழையெளிய மக்களின் சமையல் எரிவாயு கடன்களை ரத்து செய்து, மீண்டும் தாய் மார்கள் சமையல் எரி வாயு அடுப்பு பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
* தமிழகத்தில் உள்ள அனைத்து நகர பகுதிகளிலும் அனுமதியில்லாமல் இதுவரை கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வோம். அந்த பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்போம்.
* தமிழகத்தில் உள்ள முக்கிய இரண்டு வழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாகவும், நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாகவும் படிப்படியாக மாற்றுவோம்.
* சென்னை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையையும், வாகன எண்ணிக் கையையும் கருத் தில் கொண்டு முக்கிய சந்திப்பு களில் புதிய பாலங்கள், மேம் பாலங்கள் அமைக்க ஆவன செய்வோம்.
* கிழக்கு கடற்கரை சாலையை கடலூர் தொடங்கி கன்னியாகுமரி வரை விரிவு படுத்துவதோடு, இருவழிச் சாலைகள் நான்கு வழிச்சாலை களாக மாற்றப்பட நடவடிக்கை எடுப்போம்.
* சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பெருநகர் மெட்ரோ சுரங்க வழி ரெயில் போக்குவரத்தை கொண்டு வருவோம்.
* தஞ்சையில் உள்ள ராணுவ விமானதளத்தை பொது மக்கள் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றிட முயற்சிகள் மேற்கொள்வோம்.
* மத மாற்ற தடைச்சட்டத்தை நீக்குவோம்.
* ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அனைத்து மதங்களிலும் இருக்கின்ற ஆதிதிரா விடர்களுக்கும் கிடைக்குமாறு செய்வோம்.
* மதிப்புக்கூட்டு வரியை நடைமுறைப்படுத்த மாட்டோம்.
* சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை எதிர்ப்போம்.
* முதியோர், ஊனமுற்றோர், கணவனால் கை விடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் போன்றவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் இரு நூறு ரூபாய் ஓய்வூதியம் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டு எண்ணிக்கை வரம்பு எதுவுமின்றி வழங்குவோம்.
* வேலை வாய்ப்பில் ஊன முற்றவர்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 200 ரூபாய் என்பது 500 ரூபாயாக உயர்த்தப்படும்.
சேலம், ஈரோடு, காஞ்சீபுரம், கரூர், அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில் நெசவுத் தொழில் சார்ந்த பூங்காக்களை அமைப்பதற்கு பாடுபடுவோம்.
* கிழக்கு கடற்கரை குதிகளிலும் மற்றும் கச்சத்தீவு அருகிலும் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், கடத்தப்படுவதையும், சுட்டுக்கொல்லப்படுவதையும் தடுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
* சுனாமி நிவாரண நிதி வழங்கியதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும், உண்மையான பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நிதி உதவி வழங்காதது குறித்தும் முறைகேடான முறையில் ஆளுங்கட்சியினருக்கு வழங் கப்பட்ட நிதி உதவி குறித்தும் விசாரணை நடத்துவோம்.
* உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி சுற்றுலாத் தளங்களில் கம்பி வழி ஊர்திகள் அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்வோம்.
* திருவள்ளுவர்பபபசிலையை அருகில் சென்று காண்பதற்கு நவீன படகு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவோம்.
* கண்ணகி சிலை மீண்டும் கடற்கரை சாலையில் அதே இடத்தில் நிறுவுவோம்.
* ரயில் கட்டண அளவுக்கு பேருந்து கட்டணத்தை சீராக்குவோம்.
* சினிமா வெளிப்புறக்காட்சி படப்பிடிப்புக்கு அரசு உயர்த்தியுள்ள கட்டணங்களை பெரிதும் குறைப்போம்.
* எம்.ஜி.ஆர். திரைப்பட நகரை, மீண்டும் புதிதாக உருவாக்குவோம்.
* நடிகர் திலகம் சிவாஜிக்கு பாண்டிச்சேரி அரசு அமைத்துள்ளது போன்ற சிலையையும், அத்துடன் மணி மண்டபத்தையும் விரைவில் அமைப்போம்.
* பெருந்தலைவர் காமராஜருக்கு பல நினைவு சின்னங்களையும், குமரிமுனையில் மணி மண்டபத்தையும் அமைத்துள்ள தி.மு.க. அரசு காமராஜர் பிறந்த நாளாம் ஜுலை 15-ந் தேதியை கல்விக்கண் திறந்த நாளாக அறிவித்து பள்ளிகளில் விழா எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.
சென்னை புறநகர் பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள ஏரிப்பகுதிகளை சீரமைத்து புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்க செயல் திட்டங்களை வகுப்போம்.
தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டு வர உரிய அரசியல் சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.
* `டெஸ்மா' சட்டத்தை அறவே ரத்து செய்வோம்.
* மத்திய அரசு தற்போது அமைக்க முன் வந்துள்ள 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்திலும் உடனடியாக நடைமுறைப்படுத்துவோம்.
* காவலர் குறை தீர்க்க, காவல்துறை மறுமலர்ச்சி பெற மூன்றாவது போலீஸ் கமிஷன் அமைப்போம்.
* கிராமப்புற மாணவர்கள், விவசாயிகள் வணிகர்கள் பயன்பெறும் வகையில் கழக ஆட்சிக் காலத்தில் இயக்கப்பட்ட சிறிய பேருந்துகளை மீண்டும் அறிமுகப்படுத்துவோம்.
* சென்னை மாநகரிலே போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகி உள்ள பகுதிகளில் `பறக்கும் சாலை' திட்டத்தைச் செயல்படுத்துவோம்.
* சென்னை நகரின் முக்கிய வணிக மையங்கள் பணி இடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பல அடுக்கு மாடி கார் நிறுத்துமிடங்களை கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்வோம்.
இதை தொடர்ந்து கலைஞர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்:
கேள்வி:- தேர்தல் அறிக்கையில் இலவச டி.வி. வழங்கப்படும் என்று கூறியுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இவை வழங்கப்படும்.
பதில்:- வண்ண டி.வி. பெட்டி இருக்கிறதா இல்லையா என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
கே:- ரேசன் அரிசி கிலோ 2 ரூபாய்க்கு வழங்குவதாக கூறியுள்ளீர்கள். யாருக்கு எல்லாம் வழங்கப்படும்.
ப:- ரேசன் அரிசி வாங்கும் எல்லா குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.
கே:- வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?
ப:- இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். இதே போன்று திடீரென்று பட்டியல் வெளியிடப்படும். தாமதமாக வந்தாலும் தரமான பட்டியலாக இருக்கும்.
கே:- தி.மு.க. சந்திக்கும் கடைசி தேர்தல் இது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
ப:- அது அவர்கள் பண்பாட்டை காட்டுகிறது.
கே:- அரசியல் எதிரிகளால் தேர்தல் ஆணையம் அரசு திட்டங்களுக்கு தடை போட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே?
ப:- தேர்தல் ஆணையம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு இரு சாரா ருக்கும் துணை போகக்கூடாது என்ற அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.
அதன் செயல்பாட்டிலும், நடவடிக்கையிலும் நோக்கம் கற்பிக்கும்போது பதில் சொல்ல வேண்டியது அதன் பொறுப்பு.
கே:- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முக்கியமாக எதை கருதுகிறீர்கள்.
ப:- மத்திய சர்க்கார் நிகழ்ச்சிகளில் கருணாநிதி இனி கலந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்வோம் என்பது முக்கிமான விஷயம். இது மக்களுக்கு தேவையான ஒன்று.
கே:- நுழைவு தேர்வு மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே?
ப:- இது சட்டம் ஆக்கப்படுவது அரசு ஆணை வெளியிடுவது, நீதிமன்ற தீர்ப்புகள் வருவது, அதை சரி செய்ய திருத்தம் செய்வது என்று மாணவர்கள் மத்தியில் இரண்டு ஆண்டாக குழப்பம் இருந்து கொண்டிருக்கிறது.
கே:- கூட்டணி ஆட்சி வராது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே.
ப:- அது அவரது கருத்து.
கே:- மத்திய அரசு திட்டங்களுக்கு தடை போடப்ப டுவதாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதே?
ப:- மத்திய அரசு பெருந்தன்மையாக பதில் சொல்லாமல் இருக்கலாம். அந்த பொறுப்பில் இருந்து மக்க ளுக்கு உண்மையை சொல்ல வேண்டியது எங்களை போன்றவர்களின் கடமை.
கே:- உழவர் சந்தை திட்டம் திரும்ப வருமா?
ப:- நாங்கள் திரும்பி வந்தால் எல்லாம் வரும்.
Posted by IdlyVadai at 3/29/2006 01:52:00 PM 12 comments
தேர்தல் கொசுறு
தனித்தே போட்டி
எங்களது கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக, திமுக கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்தன. ஆனால், கூட்டணி அமைக்க நாங்கள் மறுத்து விட்டோம். ஆதாயம் பெறும் எண்ணம் இருந்தால் 20 அல்லது 30 தொகுதிகளை கேட்டிருப்போம்.
தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவில் எந்த மாற்றும் வராது - விழுப்புரத்தில் நடிகர் விஜயகாந்த்
அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ள 182 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் `சீட்' கிடைக்கும் என்று காத்திருந்த ஏராளமான பேருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் வேட்பாளர்களாக அறிவித்தவர்கள் மீது ஏராளமான புகார்களை கட்சி தலைமைக்கு பேக்ஸ், தந்திகள் மூலம் அனுப்பினர்.
இதற்கிடையே 4 வேட்பாளர்களை மாற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுரை மத்தியில் காளிமுத்துவுக்கு பதிலாக எஸ்.டி.கே. ஜக்கையன், பேரூரில் கே.பி.ராஜ×வுக்கு பதிலாக எஸ்.பி.வேலுமணி, அந்திïரில் செல்வி துரைசாமிக்கு பதிலாக சுப்பிரமணியமும், போடி நாயக்கனூரில் பரமசிவத்துக்கு பதிலாக ஆர்.பார்த்திபன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. அவைத்தலைவர் காளிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அ.தி.மு.க.வில் உள்ள நல்ல பேச்சாளரும் இவரே என்பதால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் தேர்தலில் நின்றால் அவரது உடல் நலம் ஒத்துழைக்காது என்று கூறப்படுவதால் போட்டியிடவில்லை என தெரிகிறது. அவரிடம் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பு இல்லை என்றாலும் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
கோவை பேரூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.பி.ராஜ× மீது கட்சி தலைமைக்கு ஏராளமான புகார்கள் பேக்ஸ், தந்திகள் மூலம் தலைமை கழகத்துக்கு அனுப்பினர். அதன் காரணமாகவே இவரை மாற்றிவிட்டு எஸ்.பி. வேலுமணி நிறுத்தப்பட்டுள்ளார்.
அதேபோல் செல்வி துரைசாமி, பரமசிவம் ஆகியோர் மீதும் ஏராளமான புகார்கள் எழுந்ததால் இவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
மதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
ம.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 35 தொகுதிகளுக்கும் ஏராளமான ம.தி.மு.க. நிர்வாகிகள் போட்டி போட்டு மனு செய்தனர்.
மனு செய்தவர்களிடம் கடந்த 2 நாட்களாக ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் நேர்காணல் நடந்தது.
ஒவ்வொரு தொகுதிக்கும் மனு செய்தவர்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் கட்சி நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினார்கள். தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, கட்சிக்கு ஆற்றிய பணி ஆகியவை பற்றி நேரடியாக கேட்கப்பட்டது.
நேர்காணல் முடிந்ததும் ம.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்றது. இந்தப் பணி முடிவடைந்து பட்டியல் தயாராகி விட்டது.
வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை சென்னை அண்ணா நகர் புல்லாரெட்டி அவென்யூரோட்டில் நடை பெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ வெளியிடுகிறார். வேட்பா ளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றுகிறார்.
Posted by IdlyVadai at 3/29/2006 01:48:00 PM 0 comments
Tuesday, March 28, 2006
அறிவாலயத்தில் அறிவுரை
தி.மு.க. பேச்சாளர்கள் தேர்தலில் எப்படி பேச வேண்டும், என்ன கருத்துக் களை வலியுறுத்த வேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு ஆதர வாக எவ்வாறு பிரசாரம் செய்வது குறித்து பேச்சாளர் களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் இன்று அறிவாலயத் தில் நடந்தது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, துணை பொதுச் செயலாளர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், சற்குண பாண்டியன், பரிதி இளம்வழுதி ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர்கள் திருச்சி சிவா, கோபி செழியன், கூத்தரசன், புதுக்கோட்டை விஜயா, சேலம் சுஜாதா உள்பட 200 பேச்சா ளர்கள் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில் கருணாநிதி, பேச்சாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். எதிர்க்கட்சி தலைவி ஜெயலலிதா, தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற வைகோ ஆகியோரை திட்டி பேசவோ, விமர்சிக்கவோ கூடாது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் சந்தித்த பிரச்சினை கள், சர்வாதிகார ஆட்சி, ஏகாதிபத்தியம் பற்றி பேச வேண்டும்.
இந்த ஆட்சியில் ஒரு சிலரே ஆதாயம் பெற்று உள்ளனர். விவசாயிகள், நகர்ப்புற ஏழை கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் எந்த புதிய தொழிற்சாலையும் வர வில்லை என்ற கருத்தை மக்கள் இடையே எடுத்துரைக்க வேண்டும்.
ஆவேசமாக பேசவோ, கீழ்த்தரமாக திட்டவோ கூடாது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவதே குறிக்கோளாக கொள்ள வேண்டும். கூட்டணி கட்சிகளை ஆதரித்து தெருமுனை பிரசாரம், பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும் என 10 அம்சங் களை பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு பேச்சாளர் களுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞருக்கு பாராட்டுக்கள் !
Posted by IdlyVadai at 3/28/2006 07:29:00 PM 2 comments
மீண்டும் அதிமுக ஆட்சி - ஜெ பேட்டி
கேள்வி: வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?
பதில்: வேட்பாளர் தேர்வில் பல விஷயங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
கழகத்துக்கு ஆற்றிய சேவை, சீனியாரிட்டி, எதிர ணியில் எந்த கட்சி நிற்கிறது. யார் போட்டியிடுகிறார்கள் என்றெல்லாம் ஆராயப் பட்டது. எத்தனை பேர் விண் ணப்பம் கொடுத்தார்கள் என்ற விவரத்தை கூட இப் போது தான் வெளியிட்டேன். அதற்கு காரணம், தமிழகத்தில் போட்டியிட விண்ணப்பித்த 11 ஆயிரத்து 850 பேரில் 182 பேருக்குத்தான் வாய்ப்பளிக்க முடிந்தது.
அ.தி.மு.க. வரலாற்றில் இந்த முறை தான் இவ்வளவு இடங்களில் கழகம் போட்டி யிடுகிறது. வாய்ப்பு கிடைக்காத வர்களுக்கு தகுதி இல்லை என்று பொருள் அல்ல.
விண்ணப்பித்த கழக உடன்பிறப்புகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் வருத்தப் பட வேண்டாம். வருத்தப்படக் கூடாது. ஒரே தொகுதியில் தகுதி உள்ள பல பேர் இருக்கி றார்கள். கல்வி தகுதி, கழகத் துக்கு பணியாற்றிய தகுதி, மக்களுக்கு செய்த சேவை இப்படி பல அளவுகோல்கள் பார்க்கப்பட்டன. மற்றவர் களுக்கும் தகுதி இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.
எத்தனையோ பேர் நீண்ட காலம் கழக பணியாற்றி உள்ளனர். உதாரணத்துக்கு துரை கோவிந்தராஜன் 20 ஆண்டுகாலம் கழக பணியாற்றினார். இப்போது தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டு இருக்கிறது.
ஆகவே வாய்ப்பு கிடைக் காதவர்கள் வருத்தப்பட வேண்டாம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் வரும்போது வாய்ப்பு அளிக்கப்படும்.
கே: புதுமுகங்களை நிறைய நிறுத்தி உள்ளீர்களே?
ப: நான் எதை செய்தாலும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டேன்.
கே: எதை முன் வைத்து பிரசாரம் செய்வீர்கள்?
ப: கடந்த 5 ஆண்டுகள் மக்களுக்கு கழக அரசு ஆற் றிய சாதனைகளையும் மக்க ளுக்காக செய்த நன்மைகளை யும் முன் வைத்து பிரசாரம் செய்வோம்.
கே: கேரளாவில் நிறைய தொகுதிகளில் நிற்கிறீர்களே? காரணம் என்ன?
ப: கேரளாவில் எங்களுக்கு அமோக ஆதரவு இருப்பதாக பல்வேறுபட்ட தகவல்கள் மூலம் அறிந்தோம். எங்கள் பலத்தை சோதிக்க விரும்பினோம். இதனால் நாங்கள் இழக்கப்போவது எதுவும் இல்லை. கேரளாவில் இது புது அனுபவம்.
கே: தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வும், காங்கிரசும் நெருங்க வாய்ப்பு உள்ளதா?
ப: அந்த மாதிரி நாங்கள் நினைக்கவில்லை. அதற்கான சாத்தியம் இருப்பதாகவும் நினைக்கவில்லை.
மக்கள் தீர்மானிப்பார்கள்
கே: சோனியா ராஜினாமா வால் அ.தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பு இருக்குமா?
ப: தமிழக தேர்தலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் மக்கள் தீர்மானிக்க உள்ளனர்.
182 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்
கே: எத்தனை தொகுதிகளில் ஜெயிப்பீர்கள்?
ப: 182 தொகுதியிலும் பெற்றி பெறுவோம்.
கே: கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
ப: அ.தி.மு.க. தமைமை யிலான மக்கள் ஜனநாயக கூட்டணிக்கு மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது. 234-ல் மெஜாரிட்டி தொகுதி களில் இக்கூட்டணி வெற்றி பெறும்.
கே: கூட்டணி ஆட்சி தான் வரும் என்று பேசப்படு கிறதே?
ப: நாங்கள் தனிப்பெரும் பான்மையோடு ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டில் அமையாது.
கே: விஜயகாந்தால் உங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்குமா?
ப: அ.தி.மு.க.வை பொறுத்த வரை தமிழ்நாட்டில் நாங்கள் அரசியல் ரீதியாக எதிரியாக கருதுவது தி.மு.க.வை மட்டும்தான். போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தான்.
தேர்தலில் பரம எதிரியான தி.மு.க.வை தோற்கடிப்போம். அ.தி.மு.க. சந்திக்கும் கடைசி தேர்தல் இது தான். அடுத்த தேர்தலில் பரம எதிரியை சந்திக்கும் சூழ்நிலை இருக்காது.
கே: மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பிரசாரம் செய்வீர்களா?
ப: அதை பெரிய விஷயமாக எடுக்கவில்லை
Posted by IdlyVadai at 3/28/2006 07:18:00 PM 0 comments
அதிமுக தேர்தல் அறிக்கை
அ.தி.மு.க. தேர்தல் அறிக் கையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். படிக்க பொருமை வேண்டும். கொஞ்சம் பெரிசாக இருக்கிறது :-)
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
அனைத்துத் தரப்பு மக்க ளின் நலமும் பேணி பாதுகாக்கப்படுவதுடன், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தைச் சர்வதேச வாழ்க்கை தரத்திற்கு இணையாக உயர்த்திட உள்ள உறுதியுடன் உரிய முயற்சிகள் எடுக்கப்படும்.
* மொழியின் பெயராலும், கலை யின் பெயராலும், தமிழ் நாட்டு மக்களின் இனம், இலக்கியம், பண்பாடு, ஆகியவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பண்பாட்டுப் படையெடுப்புகளையும் முறியடித் துத் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும், தமிழ்க் கலைகளும் அவை சார்ந்த பிறவும் ஊக்கமும் ஆக்கமும் பெற்றுச் சிறந்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
* அமைதியான நாடு, அமைதி யான சமூகம், அமைதியான இல்லம், அமைதி தவழும் வாழ்க்கை முறை என்பதை நூறு சதவீதம் எதிர் காலத்தில் பெற்றிட வேண்டும் என்பதும், அனைத்து தரப்பு மக்களின் நல் வாழ்விற்கு உத்தரவாதம் அளிப்பதும் காவல் துறையின் தலையாய பணியாய் அமையும் எனவும் உறுதி அளிக்கிறோம்.
நவீன மயம்
* தமிழ்நாடு காவல் துறையை மாறி வரும் தேவை களுக்கு ஏற்ப நவீன மய மாக்குவதில் அளிக்கப்பட்டு வரும் முன்னுரிமை, கணினி மயமாக்குதல், அதி நவீன தகவல் தொடர்பு, ஆயுதங்கள், வாகனங்கள், பயிற்சிகள் தொடர்ந்து செயல் படுத்தப்படும்.
* சிறைகளையும், நீதி மன்றங்களையும், வீடியோ மூலம் இணைக்கும் வகையில் 78 இடங்களில் அம்மா அவர்களின் அரசு வீடியோ மூலம் கலந்தாய்வு முறையினை அறிமுகப்படுத்தி உள்ளது. இத் திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும்.
11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலுகின்ற மாணவ-மாணவியர் அனைவருக்கும் இலவச சைக்கிள் வழங்கி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மாபெரும் புரட்சி செய்துள்ளார். இது இந்தியாவிலேயே எந்த மாநிலமும் செய்யாத சரித்திர சாதனை ஆகும்.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் மற்றும் இப் பள்ளிகளில் சுயநிதி அடிப்படையில் நடத்தப்படும் வகுப்புகளிலும் பயிலும் மாண வர்கள் அனைவருக்கும் 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவசப் பாட நூல் அளிக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சர் ஜெய லலிதாவின் ஆணைப்படி மொத் தம் 1 கோடியே 12 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் சரித்திர சாதனை ஆகும்.
* பள்ளிகளில் வசூலிக்கப்படு கின்ற சிறப்புக் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு அத் தொகையை பள்ளி கூடங்களுக்கு அரசே மானியமாக வழங்க நட வடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்துப் பள்ளிகளிலும் கணினி பயிற்சிக் கூடம் அமைக் கப்படும்.
* நிரந்தரமான, தகுதியான கணினி ஆசிரியர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும் வகையில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சுய தொழில் பயிற்சி அளிக் கப்படும்.
* கிராமப்புற மாணவர்களின் நலன் காக்க கொண்டு வரப் பட்ட நுழைவுத் தேர்வினை ரத்து செய்து இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த, தேவைப்படும் அனைத்துச் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும்.
* நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அதிகாரத்தை கையில் வைத்து தி.மு.க. மற்றும் பா.ம.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மாணவர் விரோத செயல்பாட்டை எதிர்ப்பதுடன் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தேவையான அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்படும்.
* மாணவர்களின் நலன் பாதுகாக்கப்பட கல்விக் கொள் கையையும் தரத்தினையும் மாநிலங்களே முடிவு செய்யும் வகையில் தற்பொழுது பொதுப் பட்டியலில் உள்ள கல்வித் துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இந்திய தொழில் நுட்பக் கழகத்திற்கு (ஐ.ஐ.டி.) இணையான உலகத் தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* மாவட்டங்களில் பிரபலமாக உள்ள விளையாட்டுகளில் திறமையுள்ளவர்களை ஊக்கு விக்க, பெரிய மாவட்டத் தலைநகரங்களில் அனைத்து வசதிகளுடன் அமைந்த இருப்பிட விளையாட்டு அகாடமி அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
முதன்மை மாநிலமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டுத் தமிழ கம் தகவல் தொழில் நுட்பவி யல் துறையில் இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் கவனத்தையும் கவர எல்லாவித முயற்சிகளும் மேற் கொள்ளப்படும்.
* தமிழகத்தில் 2-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* தகவல் தொழில் நுட்பம் படித்த இளைஞர்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் சுய தொழில் செய்ய வாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்குத் தகவல் தொழில்நுட்பத் துறை யில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.
* தமிழை `உயர் தனிச் செம்மொழி' என அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மேலும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள் என்பதால் மத்திய அரசு மாநிலங்களுடன் தொடர்பு கொள்ள அந்தந்த மாநில மொழியையே பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழ் உள்ளிட்ட 19 தேசிய மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்கள் இந்தி பேசும் மாநிலங்களோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமே தொடர்பு மொழி என்ற கொள்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், மைய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
* மாநில அரசு அலுவலகங்கள், கீழ் நீதி மன்றங்கள் ஆகியவற்றில் முழு அளவில் தமிழ் உறுதியாகப் பயன்படுத்தப்படும்.
மேம்பாடு
* அருங்காட்சியகம், தொல் லியல் துறை, அகழாய்வுப் பிரிவு, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை, செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலிடத்திட்ட இயக்கம், கலை பண்பாட்டுத்துறை, அரசு இசைப் பள்ளிகள், கவின் கலைக்கல்லூரிகள், அரசினர் கட்டட மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் என்று அனைத்துத் துறைகளிலும் தனிக்கவனம் செலுத்தப்பட்டு தமிழ், தமிழர், தமிழ் நாடு மேம்பாடு அடைய அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
* தமிழ் மொழியின் மேம் பாட்டையும், வளர்ச்சியையும் சிதைக்கும் பண்பாட்டுத் துரோகிகளை அடையாளம் காட்டும் அதே நேரத்தில், தமிழ் மொழி வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடனும் தெளிவான அணுகு முறை களுடனும் திட்டங்கள் மேற் கொள்ளப்படும்.
உணவு பூங்கா
* விவசாயிகள், தொழில் முனை வோர் மற்றும் ஏற்றுமதி யாளர்கள் பயன்பெறும் வகை யில், அனைத்து உள் கட்ட மைப்பு வசதிகளுடன் கூடிய உணவுப்பூங்கா அமைக்கப்படும். தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும். ஆழ் துளைக் கிணறுகளுக்கு, மின் இணைப்பு, முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் உணவு பதப்படுத்தும் குளிர் பதனக் கிடங்கு அமைக்கப்படும். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டு காலத்தில் 15 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் தமிழ் நாட்டில் அமைக்கப்படும். "நாட்டுக்குத் தேவை கூட்டுப் பண்ணை விவசாயம்'' எனும் வாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம் உற்பத்தித் திறனைப் பெருக்கும் வகையில் "கூட்டுப் பண்ணை'' திட்ëடம் கொண்டு வரப்படும்.
* வேளாண்மை பல்கலைக்கழ கங்களிலும், கல்லூரிகளிலும் கல்வியின் தரத்தை ஆராய்ச்சித் திறத்தை மேம்படுத்தி, விஞ்ஞானப்பூர்வமான எழுச்சியைப் பெற்றிடும் வண்ணம், தக்க நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.
ரூ.2900 கோடி
* மாதிரி மண் மற்றும் நீர்ப் பாதுகாப்புத் தொழில் நுட்பச் செயல்விளக்கப் பூங்கா ஒன்று அண்ணா பண்ணையில் ரூ.98 லட்சம் செலவில் அமைக் கப்படும்.
* நீர்வள ஆதாரத் தொகுப்புத் திட்டம்-2 தமிழ்நாட்டின் பாசன விவசாயப்பகுதிகளை நவீ னப்படுத்துதல் மற்றும் நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்தல் என்ற பெயரில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.2900 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்த புதுமைத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தண்ணீரைப் பயன்படுத்தும் பல்வேறு துறை களையும் ஒருங்கிணைத்து தமிழ கத்தில் உள்ள 17 ஆற்று வடி நிலங்களில் உள்ள விவசாய நிலங்களையும் அதனைச் சார்ந்த தொழிலாளர்களையும் முன் னேற்றும் வகையில் திட்டமிடப் படும்.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப் பது குறித்து ஆய்வு மேற் கொள் ளப்படும்.
* காவேரியில் தமிழ்நாட் டிற்கு உரிய பங்கைப் பெற்றே தீருவோம். அதுவரை ஓய மாட்டோம். நீதிமன்றம் மூலம் காவேரி நீர்ப் பிரச்சனையில் தமிழகத்தின் ஜீவா தார உரிமையை அடைந்தே தீருவோம். அதற்குரிய ஆக்கப் பூர்வமான, சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை மாண்புமிகு அம்மா அவர் களின் தலைமையிலான தமிழ் நாடு அரசு தொடர்ந்து மேற் கொள்ளும் என உறுதியளிக்கிறோம்.
* மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அடுக்குப் பாலங்கள் அமைக் கப்படும்.
* சென்னைப் பெருநகர எல்லை யில் உள்ள உள் கட் டமைப்பு வசதிகளை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப் பில் மாபெரும் திட்டம் இறுதி செய்யப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது. சாலைப் பணிகள், மேம்பாலப் பணிகள், கீழ்ப்பால பணிகள், சாலை பழுது பார்ப்புப் பணிகள், சென்னை நகரைச் சுற்றி ஆரச் சாலைகள் அமைத்தல் என சாலை மேம்பாட்டுப் பணிகளில் தனிக் கவனம் செலுத்தப்படும்.
தரம் உயர்வு
* அடுத்து வரும் ஐந்தாண்டு களுக்குள் 360 கால்நடைக் கிளை நிலையங்களைக் கால்நடை மருந் தகங்களாக தரம் உயர்த்த வழி வகை செய்யப்படும்.
* இந்தியாவில் வெண்மைப் புரட்சி ஏற்படுத்தி வரும் தமிழ் நாட்டின் தன்னிறைவு பெற்ற கிராமங்கள் அனைத்திலும் புதிதாக 504 கால்நடைக் கிளை நிலையங்கள் அமைக்கத் திட்டம் தீட்டப்படும். கிராமப் புற மக்கள் கால்நடை வளர்ப்பு மூலம் அவர்களது பொருளாதாரத்தைப் பெருக்கிடச் சிறப்பு கால்நடை பராமரிப்புத் திட்ட முகாம்கள் குக்கிராமங்களில் நடத்தப்பட்டு, கிராமப்புறங்களில் உள்ள கால் நடை வளர்ப்போர் மிகுந்த பயன டைய ஏதுவாக, தற்போது ஓர் ஆண்டுக்கு நடத்தப்படும். 5005 முகாம்களை அதிகப்படுத்தி ஆண்டுக்கு 7000 முகாம்களாக நடத்த, நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்படும்.
* தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பசும்புல் சாகு படிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்போருக்குப் பசும்புல் தீவனம் குறைந்த விலை யில் கிடைக்க வழி வகை செய்யப் படும்.
* கால்நடைகளுக்குக் காப்பீட்டு நலத் திட்டம், மானியத்துடன் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும் ஆடு, மாடு, கோழிகளைத் தாக்கும் நோய்களுக்குப் புதிய தடுப்பூசி மருந்துகள் கண்டு பிடித்துத் தமிழ் நாடு முன்னோடியாக விளங்க ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* கால்நடைகளுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கும் பொருட்டு, கால்நடை மருத் துவ நிலையங் களில் பணி புரியும் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு நவீன சிகிச்சை முறைகள் குறித்த உரிய பயிற்சிகள் அளிக்கப்படும்.
* தமிழகத்தில் 17 மாவட்டப் பால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பால் உற்பத்தி அதிகம் உள்ள இரண்டு மாவட்டங்களான பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் தாலுகா வில் புதிதாக மாவட்ட அளவிலான ஒரு பால் பண்ணையும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் ஒரு பால் பண்ணையும், பால் பவுடர் தொழிற்சாலையும் துவக்கப்படும்.
* கூட்டுறவு அமைப்பில் தற்போது பயன்பெறும் 6 லட்சம் பால் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையை 7 லட்சமாக உயர்த்தி தினசரி கொள்முதல், 23 லட்சம் லிட்டரிலிருந்து 30 லட்சம் லிட்டராக உயர்த்தப் படும்.
* சுத்தமான பால் கொள் முதல் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தி உற்பத்தி செய்யும் பாலின் தரத்தை உயர்த்தி பால் குளிர் விப்பு மையங்களைத் தமிழகம் முழுவதும் நிறுவி, தரமான பாலை உற்பத்தி செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாய மான விலை கிடைக்க வழி வகை செய்யப்படும்.
* தேவைப்படும் இடங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* உயர்நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து அதிக வழக்குகள் இன்றி இருக்கும் நீதிமன்றங்களை வழக்குகள் அதிகம் உள்ள இடங்க ளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* வழக்கறிஞர் நல நிதியில் இருந்து வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்த நடவடிக்கை மேற் கொள் ளப்படும்.
* முழுச் சுகாதாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களிலும் திட்டத்தினைச் செயலாக்கி இந்தியாவிலேயே அதிக மாவட்டங்களில் முழுச் சுகாதாரத் திட்டத்தினைச் செயலாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இச் சாதனைகளின் அடிப்படையில் அனைத்துக் கிராமங்களுக்கும் அடிப்படை வாழ்க்கை வசதிகளை முழு மையாகப் பெற்றிட ஆக்க பூர்வமான திட்டங்கள் மேற் கொள்ளப்படும்.
* இந்திய நாட்டிற்கே முன்னோடியாய் நிறைவேற்றப்பட்டு வரும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 72 ஆயிரத்து 341 அரசுக் கட்டடங்கள் உட்பட தனியார் வீடுகள், வணிக வளாகங்கள், நீர் ஆதாரங்கள், சாலை யோரங்கள், நடைபாதைகள், தெருக்கள், குளங்கள், பாலங்கள் உட்பட ஆக மொத்தம் 2 கோடியே 57 லட்சம் இடங்களில் மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மேலும் விரிவு படுத்தப்படும்.
* சென்னை நகர மக்களின் குடிநீர் பஞ்சத்தைப் போக்கி 180 மில்லியன் லிட்டர் குடிநீரை தினசரி வழங்கும் பொருட்டு புதிய வீராணம் திட்டம் 720 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெற்றி கரமாக செயலாக்கப்பட்டுச் சென்னை மாநகர மக்களுக்குத் தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
* சென்னை மாநகரின் மொத்த குடிநீர் தினசரி தேவை 840 மில்லியன் லிட்டர் ஆகும். இந்த இலக்கை எட்டுவதற்காக பல்வேறு திட் டங்களை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு செயல் படுத்தி வருகின்றது. அதில் ஒன்று தான் புதிய வீராணம் திட்டம்.
* மகளிரின் சிரமத்தை குறைக்க கை பம்புகளுக்கு பதிலாக 39,726 சிறு மின் விசை பம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் தாய்மார்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.
* கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்தின் கீழ் சென்னைக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
* 15.20 கோடி ரூபாய் செலவில் 9688 எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் தொட்டிகள் வாங்கப்பட்டுச் சென்னை மாநகரின் வெவ்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. மேற்கண்ட பணிகளின் செயல் பாட்டினாலும் மற்றும் நீர் ஆதாரங்கள், விநியோகம் மற்றும் சிறந்த முறையில் நீர் பகிர்மாணத்தினாலும் அனைத்துக் குடியிருப்பு பகுதிகளுக்கும், சரிவிகித குறைந்தபட்ச நீர் வழங்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும், நகர்ப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கத்திட்டங்கள் நிறைவேற் றப்பட்டுள்ளன.
* ஐந்தாண்டுகளில் 34 ஆயிரத்து 063 ஊரகக் குடியிருப்புகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
* 39 ஆயிரத்து 796 சிறு மின் இறைப்பான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில் 1,678 ரூபாய் மதிப்பீட்டில் 256 கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. நகரங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* சென்னை மாநகர மக்களுக்குத் தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்காகக் கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டம் ஒன்றினைக் கொண்டு வர அனைத்துப் பூர்வாங்க பணிகளும் முடிக்கப்பட்டு மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காத காரணத்தால் சர்வதேச ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுத் தொழில் நுட்ப வல்லுநர்களின் ஆலோ சனைகளைப் பெற்று நிறுவனம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டு விட்டது.
இத்திட்டம் உடனடியாகத் தொடங்கப்படுவதற்கு ஆயத்த நிலையில் இருக்கின்ற வேளையில் புகழ் அனைத்தும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கே சென்று விடும் என்ற காழ்ப்புணர்ச்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். அதன் காரணமாக இன்று வரை இத்திட்டத்தைத் தொடங்க முடியாத நிலை நீடித்து வருகிறது.
* 4750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து பாது காக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்க அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளன.
* அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், அடுத்த ஐந்தாண்டுகளில், படிப்படியாக புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும். இரண்டு புதிய பல் மருத்துவக் கல்லூரிகளும், 21 புதிய செவிலியர் கலலூரிகளும் துவக்கப்படும். தற்போதுள்ள 10 செவிலியர் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு செவிலியர் கல்லூரிகளாக்கப்படும்.
* அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேர மும் செயல்படும். அதற்காக மூன்று செவிலியர்களும் கூடு தல் பணியாளர்களும் அமர்த்தப் படுவார்கள்.
* வாடகைக் கட்டடங்களிலுள்ள 2172 துணை சுகாதார நிலையங்களுக்குப் புதிய சொந்தக் கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.
* பாம்புக்கடி, தேள்கடி, நாய் கடிக்கான மருத்துவ வசதி அனைத்து ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் 24 மணி நேரமும் அளிக்கப்படும்.
* கிராமப் புறங்களில் நவீன வசதிகளுடைய மருத்துவ மனைகளைத் தொடங்க முன் வருவோருக்கு அனைத்து உதவிகளும் ஊக்கமும் அளிக்கப்படும்.
* கோவில் குன்றுகளில் சுழல் மறு சீரமைப்புத் திட்டம், நிலங்கள் பாலைவனமாவதைத் தடுக்கும் திட்டம், தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டம், சுனாமி தாக்குதலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக கடலோரப் பகுதிகளில் கடலோர தொடர் தடுப்பு தோட்டங்கள் மற்றும் சதுப்பு நிலக்காடுகளில் மறு சீரமைப்பு பணிகள் ஆகியவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து இத்திட்டங்கள் செயல் படுத்தப்படும்.
* கழிவு நீர்களும் நச்சுப் புகையும், மற்றைய வேதிப்பொருட்களும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசு படுத்துவதோடு, மனித சமுதாயத்திற்கும் மற்ற உயிரினங்களுக்கும் பெரிதும்பபபாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தக்கேடுகளை தடுத்து சுற்றுப்புற தூய்மை பேணிப் பாதுகாக்கப்பட விரைவான செயல் திட்டங்களும் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
* சுனாமி பேரழிவால் ஏற்கெனவே குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டு குழந்தைகளை இழந்த பெற்றோர்க்கு இலவச மறு அறுவை சிகிச்சை செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சை ஒன்றுக்கு ஆகும் செலவாக 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
* மதுரையை உற்பத்தி மைய மாக கொண்டு விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களை துணை உற்பத்தி மையமாகக் கொண்டு தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப் படும்.
* தூத்துக்குடியை முக்கிய ஏற்றுமதி மண்டலமாக ஆக்க முயற்சி எடுக்கப்படும்.
* சென்னையை போல், கோயம் புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளை மேம்ப டுத்தி அதைச்சுற்றி உள்ள கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* தற்போது இளைஞர்கள் வேலை வாய்ப்பினை தேடி காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. மேலும் தொழில் செய்ய விரும்பு வோர் மற்றும் சொந்த முயற்சியினால் வெவ்வேறு வகையில் வேலை வாய்ப்பினை தாமாகவே ஏற்படுத்திக்கொள்ள முன் வரு வோர் போன்றவர்களை ஊக்கு விக்கும் பொருட்டு தகுந்த பல திட்டங்களை தீட்டி வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும், தொழிற்சாலைகளுக்கேற்ற மனித வளத்தை மேம்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
* உடல் ஊனமுற்ற தொழிலா ளர்கள் பயனடையும் வகையில் செயற்கைக்கால், கை, காது கேட்கும் கருவி போன்ற உபகர ணங்கள் நல வாரியங்களின் வாயிலாக வழங்கப்பட்டு அவர் களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப் படும்.
அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு மூலக்காரணங்களாக விளங்குபவை சிறு தொழில் நிறுவனங்களே. ஆகவே சிறு தொழில்களை ஊக்குவிக்கவும், கிராமங்களில் தொழில் வளர்ச் சியை ஏற்படுத்தவும், "புதிய அண்ணா மறுமலர்ச்சித்திட்டம்'' "நமது கிராமம் திட்டம்'' போன்ற பல்வேறு புரட்சிகரமான செயல் திட்டங்கள் தொடர்ந்து மேற் கொள்ளப்படும்.
* நெசவாளர்களின் நலம் பேணும் வகையில் "தமிழக முதல்-அமைச்சரின் நெசவா ளர் நலன் பாதுகாப்பு திட்டம்'' என்ற ஒரு திட்டம் அறிமுகப்ப டுத்தப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படும்.
* சிட்டா நூலுக்கு விதிக்கப்படும் வரியில் இருந்து விலக்கு அளிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
* ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அந்நாட்டின் மனித வளம், சமூக நலம் பேணுவதில்தான் உள்ளது. எனவே குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரின் நலத்திற்கும் பல்வேறு உன்னதத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, அதிகார பிரநிதித்துவ அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக பெற் றுத்தர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
* புதிய முதியோர் இல்லங்கள் துவக்க முன் வரும் தொண்டு நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளும் ஊக்கமும் அளிக்கப்படும். வயது முதிர்ந்தோருக்கு வரக்கூடிய பிரத்யேகமான நோய்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு முறையான சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்ட மருத்துவ மனைகளிலும் முதியோர் நல மருத்துவ பிரிவு தொடங்கப்படும்.
* தமிழ்நாட்டில் மொத்தம் 81,787 குடியிருப்புகள் உள்ளன. அவைகளில் 37,165 ஆதி திராவிடர்கள் உள்ள குடியிருப்புகளும், 3,632 பழங்குடியினர் உள்ள குடியிருப்புகளும் ஆகும். இக்குடியிருப்புகளில் படிப்படி யாக மாலை நேர அரசு தனி பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தொழில் பயிற்சி மையம் உருவாக்கப்படும்.
* சமுதாயத்தில் நலிவுற்ற நிலையில் வாழும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அரவணைத்துப் பாதுகாப்பதில் என்றென்றும் தனி கவனத்துடன் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
* முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இருந்து பெறப்பெற்ற கோரிக்கை மனுக்களை கவனமாக பரிசீலித்து பொருத்தமான பரிந்துரைகள் அளிப்பதற்காக அவை திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். திருத்தியமைக்கப் பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பதவிக்காலம் ஓராண்டு காலம் ஆகும். ஆணையத்தின் பரிந்துரைகளின்படி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும்.
* தொழிலாளர் சேம நல நிதிக்கான வட்டி வீதத்தை 9.5 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைத்த மைய தி.மு.க. கூட்டணி ஆட்சியின் முடிவைக் கடுமையாக எதிர்ப்பதுடன், மீண்டும் 9.5 சதவீத வட்ëடி கிடைக்கக் கழக அரசு வற்புறுத்தும்.
* நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தல் பணியாற்றுகின்ற பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்க வகை செய்யும் வகையில் தனியாருக்கு தாரை வார்க்கும் மைய அரசின் முடிவைக் கடுமையாக எதிர்ப்போம்.
* உள்ளூர் தொழில் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப, தொழிற் சார்ந்த பயிற்சி மையங்கள் அமைத்து வேலையில்லா திண் டாட்டத்தை போக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* பனை ஏறும் தொழிலாளர் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்.
* அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன் பேணப்படும். இவர்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு கழக அரசு தனிக் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக் கும்.
அனைவருக்கும் வீடு என்ற குறிக்கோளை ஒரு இலக்காக கொள்கையாக கடைபிடித்து செயல்படுத்தும் விதமாக தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம், வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ஆகிய அமைப்புகளின் மூலம் தகுந்த குடியிடங்களை உருவாக்கி தரும் அரும்பெரும் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படும்.
* கிராமப்புறங்களிலும், நகர் புறங்களிலும் புற நகரங்களிலும் வாழ்கின்ற மக்கள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உயர்ந்த தரத்தோடு அனைத்து வசதிகளையும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வீட்டு வசதியோடு சேர்த்து பெற அனைத்து முயற்சி களும் தொடர்ந்து மேற்கொள் ளப்படும்.
* நடைபாதை வாழ் மக்களுக்கு வாழ்விடம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
* அறநிலையத்துறையில் ஏற்படும் இளநிலை உதவியாளர் பணியிடங்களில் திருக்கோவில் பணியாளர்களை தகுதி அடிப்படையில் நியமிக்கப்படுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* திருக்கோவில் பணியாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி பெற மருத்துவக்காப்பீட்டு திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* மத்திய, மாநில அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய கடலோர மீனவர் சேமிப்பு நிவாரண திட்டத்தில் மீன் பிடிப்பு தொழில் செய்ய முடியாத நான்கு மாத காலத்திற்கு தற்போது மீனவர் பங்கு 600 ரூபாய், மாநில அரசின் பங்கு 300 ரூபாய், மத்திய அரசின் பங்கு 300 ரூபாய், ஆக மொத்தம் 1200 ரூபாய் வழங்கப்படுகிறது. இது மீனவ மகளிருக்கும் பொருந்தும். இதில் மத்திய அரசின் பங்கை உயர்த்தக்கோரி வலியுறுத்தி அதன் மூலம் மாநில அரசின் பங்கும் உயர்த்தப்படும். அதன்படி மீனவர் பங்கு அதே 600 ரூபாய், மாநில அரசின் பங்கு 600 ரூபாய், மத்திய அரசின் பங்கு 600 ரூபாய் என்று உயர்த்தப்பட்டு மொத்தம் 1800 ரூபாயாக உயர்த்தி வழங்க முயற்சி எடுக்கப்படும். இந்த உயர்த்தப்பட்ட நிவாரண திட்டம் மீனவ மகளிருக்கும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* மீன்வர்களின் வாழ்வாதாரமான விசைப்படகுகள், சிறிய விசைப்படகுகள், நாட்டுப் படகுகள், வல்லம், உட்பொருத்தும், வெளிப்பொருத்தும், இயந்திரம் பொருத்தப்பட்ட சிறிய கட்டு மரம் மற்றும் கண்ணாடி இழைப்படகுகள் இயற்கை சீற்றத்தினாலோ, எதிர்பாராத சூழ்நிலையிலோ சேதம் ஏற் படும் பட்சத்தில் அதற்கான காப்பீடு செய்ய வசதி இல்லாத காரணத்தால் மீனவர்களது வாழ்வே கேள்விக்குரியதாகி விடுகிறது.
இதிலிருந்து மீனவர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த குறைந்த தொகை பெற்று காப்பீடு செய்ய வழிவகை செய்யப்படும். இதன் மூலம் மீனவர்கள் பாதிப்பு ஏதுமின்றி தங்களது மீன்பிடி தொழிலை தொடர இயலும்.
* தமிழக கடலோர பகுதிகளில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள் ஏற்படுத்தப்படும்.
* கடல் மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.
* கடலோர மீனவர்களின் இழுவை விசைப்படகுகளை ரத்த சூரை மீன்களை பிடிக்க ஏதுவாக ஆழ்கடல்பபபமீன்பிடி கலன்களாக மாற்ற தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* உழவர் பாதுகாப்பு திட்டம் போன்றே மீனவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* கச்சத்தீவை சுற்றியுள்ள பாக் ஜலசந்தியில் தமிழ்நாடு மீன வர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இதை தடுக்கும் விதமாக கச்சத்தீவு பகுதியில் இயல்பான மீன்பிடி நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதுகாக்கும் நல்ல நோக்கத்தில் இந்திய அரசு கச்சத்தீவை, நிரந்தர குத்தகை அடிப்படையில் பெற வேண்டும் என்பதை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* தமிழ் இசை, நாட்டுப்புறக்கலைகள், தெருக்கூத்து, கிராம நாட்டியம், நாடகம், பரதக்கலை, கர்நாடக இசை, ஆகிய தமிழ்ப் பண்பாட்டுக் கலைகள் பேணிப் பாதுகாக்கப்படும்.
* தமிழ் மொழிக்காக வாழ்ந்த, வாழ்கின்ற அறிஞர்களின், கவிஞர்களின் சிந்தனையாளர்களின் படைப்புக்களும், வாழ்க்கை நிலையும் போற்றிப் பாதுகாக்கப்படும்
* உலகில் பல பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, கலை, மரபு, வாழ்க்கை முறைகளுக்கு எந்த சக்தியாலும் ஊறு நேரா வண்ணம் அவர்களின் சுயமரியாதையும் அமைதியான வாழ்வும் நிலைத்திட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.
* அயல் நாட்டு இந்திய வம்சா வழித்தமிழர்களின் தொழில் முனைவோர் கூட்டம் ஆண்டு தோறும் நடத்தப்படும்.
* 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கை அகதிகளுக்கு மலிவு வகையில் ஒரு கிலோ அரிசி 57 பைசா என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படுகிறது. ஆனால் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மத்திய அரசு இத் திட்டத்திற்குக் கொடுக்கும் மானியத்தை நிறுத்தி விட்டது. உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுப்போம் என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் தி.மு.க.வின் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் இந்த முடிவை கண்டிக் காமல் வாய் மூடி மவுனம் காத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 50,730 இலங்கை அகதி களின் வாழ்வையே கேள்விக்குறி ஆக்கிவிடும் மத்திய அரசின் இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று வற்புறுத்தப்படும்.
* மைய அரசின் அரிசி கொள்முதல் விலை ஏற்றத்தையும், அரிசி அளவு குறைப்பையும் கடுமையாக எதிர்ப்பதுடன், தொடர்ந்து பொது விநியோக முறையில் அதே குறைந்த விலை யிலேயே அரிசி வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவி குழுக்கள் நியாய விலைக்கடைகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அதிக எண்ணிக்கையிலான கடைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்கப் புதிய சமாதானத் திட்டம் அனைவரும் ஏற்கக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.
* மதிப்பு கூட்டு வரியினை அமர்படுத்துவதனால் வணிகர் களுக்கு ஏற்படும் சிரமங்களைப் போக்குகின்ற வகையில், மைய அரசு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் அனைவரும் ஏற்கக்கூடிய அளவில் சட்டத் திருத்தம் கொண்டு வரும் வரையில், தமிழகத்தில் மதிப்புக் கூட்டுவரி அமல்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் அதே நேரத்தில், வணிகர்கள் நலன் பாதுகாக்க அனைத்து நடவடிக் கையும் எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறோம்.
* சிறு வணிகர்கள் நலன் காக்க, அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில் புதிய திட்டங்கள் மேற்கொள் ளப்படும்.
* மத்திய அரசு மறைமுகமாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விநியோகத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்கள் எரிவாயு எளிதாக பெறுகின்ற சூழ்நிலையை மாற்றி பல நிபந்தனைகளை விதித்து கடுமையான கட்டுப்பாட்டை விதிப்பதன் காரணமாக, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். மத்திய அரசின் தவறான கொள்கைகளின் காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்து மக்கள் மீது பாரத்தைச் சுமத்தும் மத்திய அரசின் மக்கள் விரோதச் செயலுக்கு முற்றுப் புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்போம்.
தமிழ், தமிழன், தமிழ்நாடு மேம்பாடு அடையவும், தமிழ் நாட்டு மக்களின் இயல்பு வாழக்கை, எதிர்காலம், பண்பாடு, நாகரீகம், கலைகள், மனித நேயம், மனித மதிப்பு, ஆளுமைத் திறன், கல்வி, அறிவியல் ஆற்றல், உளவியல் மேம்பாடு என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு சிறக்கவும், அல்லும் பகலும் சிந்தனையாலும், செயலாலும் உழைக்கும் அரிய தலைவி அம்மா அவர்களின் சீரிய வழி காட்டுதலில் உயரிய தலைமை யில் உண்மையான மக்கள் இயக்கமாக இயங்கி வரும் அ.தி.மு.க. மீண்டும் இந்தத் தேர்தலில் வெற்றி வாகை சூடிட ஆதரவு தாருங்கள். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகிறோம்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Posted by IdlyVadai at 3/28/2006 05:46:00 PM 0 comments
தேர்தல் கொசுறு
நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரம் ?
கேள்வி:- தேர்தல் பிரசாரத்துக்கு அழைப்பு வந்தால் போவீர்களா?
குஷ்பு பதில்:- நான் உண்டு என் குடும்பம் உண்டு என் வேலை உண்டு என்று இருக்கிறேன். நான் தேர்தல் பிரசாரத்துக்கு போவதாக இல்லை. அவர்களும் அழைக்க மாட்டார்கள்.
மதுரை ஆதினம் கார்த்திக் சந்த்திப்பு
நேற்று காலை நேர்காணல் நடந்து கொண்டிருந்த போது மதுரை ஆதீனம் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் நடிகர் கார்த்திக்கிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார். மதுரையை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு அவர் நடிகர் கார்த்திக்கிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
ராமநவமி அன்று பா.ஜ.க பட்டியல்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் ராமநவமி அன்று வெளியிடப்படும். காங்கிரசார் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாங்கள் ராமராஜë ஆட்சி வேண்டும் என்கிறோம் - வெங்கையா நாயுடு.
டி.ராஜேந்தர் தனித்து போட்டி ?
தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? இல்லை கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது பற்றி விஜய டி.ராஜேந்தர் ஏப்ரல் 2-ந் தேதி அறிவிக்கிறார
தேர்தலில் நிற்க சீட் கேட்ட பெண் போலீஸ் `சஸ்பெண்டு'.
நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருபவர் லட்சுமி. லட்சுமிக்கு தேர்தலில் நிற்க ஆசை ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் சேந்தமங்கலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட மனுதாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.போலீசாக பணியாற்றும் ஒரு நபர் அரசியல் கட்சிகளில் உறுப்பினராகவோ, ஈடுபாடு உள்ளவராகவோ இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் போலீஸ் நடத்தை நெறி முறைகளுக்கு மீறிய செயல் ஆகும்.ஆனால் போலீஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் ஈடுபடலாம்.
அதிருப்தியாளர்களுக்கு திமுக எச்சரிக்கை
தொகுதி கிடைக்கவில்லை என்பதற்காக கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் எவரேனும் செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் எச்சரித்துள்ளார்.
ஒரே ஒரு வாக்காளருக்காக தனி ஓட்டுச்சாவடி
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், பாம்படி மலைப்பகுதியில் உள்ள எஸ்டேட்டில் செரங்காட்டு தாசன் என்ற ஒருவர் மட்டும் வசித்து வருகிறார். முன்பு 350 வாக்காளர்கள் இருந்தார்கள் இப்போது தாசன் மட்டும் இருக்கிறார்.
அந்த பகுதியில் ஏப்ரல் 29-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டு போடுமாறு தாசனிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் தாசன் மறுத்துவிட்டார். இதனால் அவர் ஒருவருக்காக மட்டும் அந்த பகுதியில் ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது.
ஓட்டுப்பதிவு அன்று அங்கு தாசன்தான் முக்கிய பிரமுகர். அவருக்காக தனி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு ஒரு போலீஸ்காரர், டிரைவர், உள்பட அரசு ஊழியர்கள் 6 பேர் பணியில் அமர்த்தப்படுவார்கள
Posted by IdlyVadai at 3/28/2006 11:15:00 AM 0 comments
Monday, March 27, 2006
காணாமல் போன செய்தி
'இது நம்முடைய பணம்' என்று முன்பு எழுதியிருந்தது ஞாபகம் இருக்கலாம். இல்லாதவர்கள் இங்கு படிக்கவும் .
நட்வர் சிங் பற்றிய இந்த தகவல் சோனியா ராஜிநாமா, தொகுதி பட்டியல், பறவைக் காய்ச்சல் போன்றவற்றால் காணாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். அதனால் இங்கே..
எதிர்பாராத ஒருதிருப்பமாக ஊழலில் நட்வர்சிங் ரூ. 8 கோடி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ரூ. 8 கோடி நட்வர்சிங்கின் லண்டன் நண்பர் ஆதித்யகண்ணா என்ற தொழிலதிபரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆதித்தியகண்ணாவை அமாலாக்கப்பிரிவு அதிகாரகிள் விசாரித்து வருகின்றனர். அவரின் பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊழலில் கிடைத்த ரூ. 8 கோடியை ஆதித்யசன்னா தன் லண்டன் வங்கியில் முதலில் டெபாசிட் செய்துள்ளார். பின்னர் அதனை டெல்லி வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார் ஆதித்யகண்ணா.
இது போல அவரது வங்கி கணக்கில் அடிக்கடி பணம் போடப்பட்டு எடுக்கப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பார்க்கலாம் என்ன செய்ய போகிறார்கள் என்று.
Posted by IdlyVadai at 3/27/2006 07:18:00 PM 0 comments
ரீடிப்.காம் தளத்தில் வைகோ பேட்டி
வைகோ ஜெயா டிவியில் சென்ன பல விஷயங்களை இங்கு ஆங்கிலத்தில் திருப்பி சொல்லியிருக்கிறார்.
முதல் பாகம் : http://in.rediff.com/news/2006/mar/24inter.htm
இரண்டாம் பாகம்: http://in.rediff.com/news/2006/mar/27inter.htm
Posted by IdlyVadai at 3/27/2006 04:00:00 PM 4 comments
அதிமுக வேட்பாளர் பட்டியல் - ஆண்டிப்பட்டியில் ஜெ
அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். அந்த பட்டியலில்பபஇருந்து பொருத்தமான ஒருவரை தேர்வு செய்ய முதல் அமைச்சர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
பட்டியலில் இடம் பெற்றுள்ள தொகுதி மற்றும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-
1. ஆண்டிப்பட்டி - ஜெயலலிதா
2. ராயபுரம் - ஜெயக்குமார்
3. ஆர்.கே. நகர் - சேகர்பாபு
4. பூங்காநகர் - கு. சீனிவா சன்,
5. புரசைவாக்கம் - வெங்கடேஷ் பாபு
6. தி.நகர் - வி.பி. கலை ராஜன்
7. ஆயிரம்விளக்கு - ஆதிராஜாராம்
8. திருவல்லிக்கேணி - பதர் சயீத்
9. மயிலாப்பூர் - எஸ்.வி. சேகர்
10. சைதாப்பேட்டை - வி. செந்தமிழன்
11. கும்மிடிப்பூண்டி - விஜயகுமார்
12. பொன்னேரி - பி. பலராமன்
13. திருவொற்றிïர் - வி. மூர்த்தி
14. ஆலந்தூர் - பா. வளர்மதி
15. திருப்போரூர் - தனபால்
16. செங்கல்பட்டு - எஸ் ஆறுமுகம்
17. மதுராந்தகம் - கோ. அப்பாதுரை
18. அச்சரபாக்கம் - சரஸ்வதி முத்துகிருஷ்ணன்
19. உத்தரமேரூர்- அமைச்சர் சோமசுந்தரம்
20. காஞ்சீபுரம் - மைதிலி திருநாவுக்கரசு
21. திருவள்ளூர் - ரமணா
22. திருத்தணி - கோ. அரி
23. பள்ளிப்பட்டு - பி.எம். நரசிம்மன்
24. அரக்கோணம் - ரவி
25. சோளிங்கர் - பி. கோபால்
26. ராணிப்பேட்டை - இரா. தமிழரசன்
27. ஆற்காடு - பி.ஆர். சந்திரன்
28. காட்பாடி - பி. நாரா யணன்
29. குடியாத்தம் -ஜே.கே.என். பழனி
30. பேரணாம்பட்டு - சந்திரா சேட்டு
31. நாட்ராம் பள்ளி - கே.ஜி. சுப்பிரமணி
32. தண்டராம்பட்டு - எஸ். ராமச்சந்திரன்
33. திருவண்ணாமலை - பவன்குமார்
34. கலசபாக்கம் - `அக்ரி' கிருஷ்ணமூர்த்தி
35. போளூர் - தா. வேடி யப்பன்
36. அணைக்கட்டு - அமைச்சர் பாண்டுரங்கன்
37. ஆரணி - பைïர் சந்தானம்
38. செய்யாறு - பாவை ரவிச்சந்திரன்
39. வந்தவாசி - எம். சக்ரபாணி
40. பெரணமல்லூர் - ஏ.கே.எஸ். அன்பழகன்
41. மேல்மலையனூர் - தமிழ்மொழி ராஜதத்தன்
42. திண்டிவனம் - அமைச்சர் சி.வி. சண்முகம்
43. வானூர் - என். கணபதி
44. கண்டமங்கலம் - வி. சுப்பிரமணியன்
45. விழுப்புரம் - ஆர். பசுபதி
46. திருநாவலூர் - இரா. குமரகுரு
47. கடலூர் - வி. குமார்
48. பண்ருட்டி - இரா. ராஜேந்திரன்
49. புவனகிரி - செல்வி ராமஜெயம்
50. சிதம்பரம் - அருண் மொழி தேவன்
51. விருத்தாசலம் - பி.ஆர். காசிநாதன்
52. ரிஷி வந்தியம் - ஆதி. நாராயணன்
53. சின்னசேலம் - மோகன்
54. சங்கராபுரம் - சன்னியாசி
55. ஓசூர் - கம்பங்கி ராமையா
56. பென்னாகரம் - எஸ்.ஆர். வெற்றிவேல்
57. காவேரிப்பட்டினம் - கே.பி. முனுசாமி
58. கிருஷ்ணகிரி - கோவிந்தராஜ்
59. பர்கூர் - டாக்டர் மு. தம்பிதுரை
60. மொரப்பூர் - கே. சிங்காரம்
61. பாலக்கோடு - கே.பி. அன்பழகன்
62. மேட்டூர் - கே. கந்தசாமி
63. ஓமலூர் - பி. கிருஷ் ணன்
64. ஏற்காடு - அலமேலு
65. சேலம்-1 - ரவிச்சந்தி ரன்
66. சேலம்-2 - சுரேஷ் குமார்
67. வீரபாண்டி- விஜயலட்சுமி பழனிச்சாமி
68. பனமரத்துப்பட்டி - ஆர். இளங்கோவன்
69. ஆத்தூர் - மஞ்சினி ஏ.கே. முருகேசன்
70. தலைவாசல் - பா இளங்கோவன்
71. ராசிபுரம் - பி.ஆர். சுந்தரம்
72. சேந்தமங்கலம் - கு. சந்திரன்
73. நாமக்கல் - ஆர். சாரதா
74. திருச்செங்கோடு - பி. தங்கமணி
75. சங்ககிரி - எஸ். சாந்த மணி
76. எடப்பாடி - எடப்பாடி பழனிசாமி
77. மேட்டுப்பாளையம் - ஓ.கே.சின்னராஜ்
78. அவினாசி -ஆர்.பிரேமா
79. கோவை மேற்கு -தா.மலரவன்
80. கோவை கிழக்கு -டி.கோபாலகிருஷ்ணன்
81. பேரூர் -கே.பி.ராஜு
82. கிணத்துக்கடவு -தாமோதரன்
83. பொள்ளாச்சி -பொள்ளாச்சி ஜெயராமன்
84. உடுமலைப்பேட்டை -பி.சண்முகவேல்
85. தாராபுரம் -சிவகாமி வின்சென்ட்
86. பொங்களூர் -டி.பி.தாமோதரன்
87. பல்லடம் -அமைச்சர் செ.மா.வேலுசாமி
88. காங்கேயம் -ஆடிட்டர் என்ற என்.எம்.எஸ்.பழனிசாமி
89. மொடக்குறிச்சி -அமைச்சர் பி.சி.ராமசாமி
90. பெருந்துறை -பொன்னுதுரை
91. ஈரோடு -இ.ஆர்.சிவக்குமார்
92. பவானி -கே.சி.கருப்பண்ணன்
93. அந்திïர் -செல்வி.துரைசாமி
94. கோபிசெட்டிபாளையம் -செங்கோட்டையன்
95. பவானிசாகர் -சிந்து ரவிச்சந்திரன்
96. குன்னூர் -எம்.செல்வராஜ்
97. ஊட்டி -கே.என்.தொரை
98. கூடலூர் -மில்லர்
99. பழனி -ஆர்.தமிழரசி
100. ஒட்டன்சத்திரம் -கே.பி.நல்லசாமி
101. பெரியகுளம் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
102. தேனி -ஆர்.டி.கணேசன்
103. போடிநாயக்கனூர் -எம்.பரமசிவம்
104. சேடப்பட்டி -டி.துரைராஜ்
105. உசிலம்பட்டி -ஐ.மகேந்திரன்
106. நிலக்கோட்டை -எஸ்.தேன்மொழி
107. மதுரை மத்தி -முன்னாள் சபாநாயகர் காளிமுத்து
108. திருப்பரங்குன்றம் -ஏ.கே.போஸ்
109. மதுரை மேற்கு -எஸ்.வி.சண்முகம்
110. சமயநல்லூர் -பி.லட்சுமி
111. மேலூர்-ஆர்.சாமி
112. நத்தம் -இரா.விசுவநாதன்
113. ஆத்தூர் -திண்டுக்கல் சீனிவாசன்
114. வேடசந்தூர் -பழனிச்சாமி
115. கரூர் -வி.செந்தில்பாலாஜி
116.கிருஷ்ணராய புரம் (தனி) -சசிகலா ரவி
117. மருங்காபுரி -செ.சின்னசாமி
118. குளித்தலை -ஏ.பாப்பாசுந்தரம்
119. உப்பிலியாபுரம் -பெ.முத்துசாமி
120. முசிறி -ப.ட.பூனாட்சி
121. லால்குடி -டி.ராஜாராம்
122. பெரம்பலூர் (தனி) -எம்.சுந்தரம்
123. வரகூர் (தனி) -மா.சந்திரகாசி,
124. அரியலூர் -ம.ரவிச்சந்திரன்
125. ஆண்டிமடம் -என்.கே.பன்னீர்செல்வம்
126. ஜெயங்கொண்டம் -கே.ராஜேந்திரன்
127. ஸ்ரீரங்கம் -எம்.பரஞ்சோதி
128. திருச்சிராப்பள்ளி 2 - என். மரியம்பிச்சை.
129. பூம்புகார் - எஸ்.பவுன் ராஜ்.
130. குத்தாலம்-எஸ்.ராஜேந் திரன்.
131. நன்னிலம் (தனி)- க.அறிவானந்தம்.
132. திருவாரூர் (தனி)-ஏ.தங்கமணி.
133. நாகப்பட்டினம்-கே.ஏ.ஜெயபால்.
134. வேதாரண்யம்-ஓ.எஸ். மணியன்.
135. திருத்துறைப்பூண்டி (தனி)-ஏ.உமாதேவி.
136. மன்னார்குடி-ஆர்.காமராஜ்.
137. பேராவூரணி-எம்.வி.ஆர். வீரகபிலன்.
138. ஒரத்தநாடு- ஆர்.வைத்தி லிங்கம்.
139. திருவோணம்-கு.தங்கமுத்து.
140. தஞ்சாவூர்-எம்.ரங்கசாமி.
141. திருவையாறு-துரை கோவிந்தராஜன்
142. பாபநாசம்- இரா. துரைக்கண்ணு.
143. வலங்கைமான் (தனி)- இளமதி சுப்பிரமணி யன்.
144. கும்பகோணம்-ராம.ராமநாதன்.
145. திருவிடைமருதூர்-ஆ.கே.பாரதிமோகன்.
146. திருமயம்-எம்.ராதா கிருஷ்ணன்.
147. கொளத்தூர் (தனி)- ந.சுப்பிரமணியன்.
148. புதுக்கோட்டை-ஆர்.நெடுஞ்செழியன்.
149. ஆலங்குடி-ஆ.வெங்கடாசலம்.
150. அறந்தாங்கி-பி.எம்.பெரியசாமி.
151. திருப்பத்தூர்-கே.கே.உமாதேவன்.
152. காரைக்குடி-ஓ.எல். செல்லையா (எ) வெங் கடாசலம்.
153. திருவாடானை-சி.ஆணிமுத்து.
154. இளையான்குடி-க.அய்யாச்சாமி.
155. மானாமதுரை (தனி)- ம.குணசேகரன்.
156. பரமக்குடி (தனி)- எஸ்.சுந்தரராஜ்.
157. கடலாடி-வ.சத்திய மூர்த்தி.
158. முதுகுளத்தூர்-எஸ்.பி.காளிமுத்து.
159. அருப்புக்கோட்டை- க.முருகன்.
160. சாத்தூர்-ஜி. சொக் கேஸ்வரன்.
161. ஸ்ரீவில்லிபுத்தூர்-இரா. விநாயகமூர்த்தி.
162. ராஜபாளையம் (தனி)- மு.சந்திரா.
163. விளாத்திகுளம்-பி. சின்னப்பன்.
164. ஒட்டப்பிடாரம் (தனி)- பெ. மோகன்.
165. கோவில்பட்டி-எல். ராதாகிருஷ்ணன்.
166. சங்கரநயினார் கோவில் (தனி)-சொ.கருப்பசாமி.
167. கடையநல்லூர் - எம். அïப்
168. ஆலங்குளம் - வி.பி. ஈஸ்வரன் (எ) மூர்த்தி
169. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
170. சேரன்மகாதேவி - பி.எச். மனோஜ் பாண்டியன்
171. அம்பாசமுத்திரம் - ஆர். முருகையா பாண்டியன்
172. நாங்குநேரி - எஸ்.பி. சூரியகுமார்
173. ராதாபுரம் - எல். ஞானபுனிதா
174. திருச்செந்தூர் - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
175. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி. சண்முகநாதன்
176. தூத்துக்குடி - எஸ். டேனியல் ராஜ்
177. கன்னியாகுமரி - என். தளவாய் சுந்தரம்
178. குளச்சல் - ஓ.ப. பச்சைமால்
179. பத்மநாபபுரம் - கே.பி. ராஜேந்திர பிரசாத்
180. திருவட்டார் - பி.சி. என். திலக்குமார்
181. விளவங்கோடு - ஊ. பிராங்கிளின்
182. கிள்ளிïர் - டாக்டர் தே. குமாரதாஸ்.
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 182 பேரில் 24 பேர் பெண் வேட்பாளர் ஆகும். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-
1. ஆண்டிப்பட்டி - ஜெ. ஜெயலலிதா
2. திருவல்லிக்கேணி - பதர் சயீத்
3. ஆலந்தூர் - பா. வளர்மதி
4. அச்சரப்பாக்கம் (தனி) - சரஸ்வதி முத்துகிருஷ்ணன்
5. காஞ்சீபுரம் - மைதிலி திருநாவுக்கரசு
6. பேரணாம்பட்டு (தனி) - சந்திரா சேட்டு
7. செய்யார் - பாவை. ரவிச்சந்திரன்
8. மேல்மலையனூர் - தமிழ்மொழி ராஜதத்தன்
9. புவனகிரி - செல்வி ராமஜெயம்
10. ஏற்காடு (தனி) - ஜெ. அலமேலு
11. வீரபாண்டி - விஜயலட்சுமி பழனிச்சாமி
12. நாமக்கல் (தனி) - ஆர். சாரதா
13. சங்ககிரி (தனி) - எஸ். சாந்தா
14. அவினாசி (தனி) - ஆர். பிரேமா
15. தாராபுரம் (தனி) - சிவகாமி வின்சென்ட்
16. அந்திïர் (தனி) - செல்வி துரைசாமி
17. பழனி (தனி) - ஆர். தமிழரசி
18. நிலக்கோட்டை (தனி) - எஸ். தேன்மொழி
19. சமயநல்லூர் (தனி) - பி. லெட்சுமி
20. கிருஷ்ணராயபுரம் (தனி) - சசிகலா ரவி
21. திருத்துறைப்பூண்டி (தனி) - ஏ. உமாதேவி
22. வலங்கைமான் (தனி) - இளம்மதி சுப்பிரமணியன்.
23. ராஜபாளையம் (தனி) - மு. சந்திரா
24. ராதாபுரம் - எல். ஞானபுனிதா.
புதுவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
1. முத்தியால்பேட்டை- ஏ.காசிலிங்கம்
2. உப்பளம் - அன்பழகன்
3. உருளையன்பேட்டை - நேரு என்ற குப்புசாமி
4. நெல்லித்தோப்பு - ஓம்சக்தி சேகர்
5. மண்ணாடிப்பட்டு- சுத்துக்கேணி ஏ.பாஸ்கர் என்ற வெங்கடேஸ்வரன்
6. ஊசுடு (தனி) - செல்வராசு
7. உழவர்கரை - நடராஜன்
8. தட்டாஞ்சாவடி - குணசேகரன்
9. ரெட்டியார் பாளையம்- கிருஷ்ணமூர்த்தி
10. லாஸ்பேட்டை - ஆனந்த முருகேசன்
11. கோட்டுச்சேரி - ஓமலிங்கம்
12. காரைக்கால் - செல்வகணபதி
13. நிரவி-திருப்பட்டினம் ஜெயபால்
14. மாஹே - விஜயன்
15. பள்ளூர் - கே.லட்சுமணன்
16. ஏனாம் - மாஞ்சாலா
தகவல் : மாலைமலர்
Posted by IdlyVadai at 3/27/2006 02:26:00 PM 12 comments