பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 01, 2006

நம்முடைய பணம்.

Image hosting by Photobucket
குஷ்பு, குட்டி ரேவதி போல் க்வாட்ரோச்சி விவகாரம் அவ்வளவு சீரியஸ் இல்லை என்பதால் வலைப்பதிவுகளில் அவ்வளவாக யாரும் விவாதிக்க வில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி கிடையாது!. சீரியஸ் தான்.

ஒரு ஃபிலாஷ் பேக். இருபது வருடத்திற்கு முன்பு...

1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடமிருந்து 5,400 கோடி ரூபாய் விலை குடுத்து, பீரங்கிகள் வாங்குவது என்று இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த சமயத்தில் ஜெர்மனியிலிருந்து இந்திரா காந்தி அரசு அப்போது வாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் விவகாரத்தில் ரூ.150 கோடி லஞ்சம் பெறப்பட்டது என்கிற செய்தி வெளிவர ஆரம்பித்தது. விசாரணை செய்ய உத்தரவிட்ட வீ.பி.சிங்கை பதவியிலிருந்து ராஜிவ் காந்தி விலக்கினார்.

இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டு ரேடியோவில், 1986 ஆம் ஆண்டு ராஜிவ் அரசு பீரங்கி வாங்க லஞ்சம் பெற்றனர் என்று செய்தி வந்தது. ஹிந்து பத்திரிக்கை மூலம் ஊழலின் முழு உருவம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தொடங்கியது. ராஜிவ் காந்தி, சோனியா காந்திக்கு க்வாட்ரோச்சி பல தரகு வேலை செய்தார். க்வாட்ரோச்சி வெளிநாட்டில் சரண் புகுந்தார். அவருடைய வங்கி கணக்குகள் முடக்கபட்டன. முடகப்பட்ட தொகை 21 கோடி ரூபாய். க்வாட்ரோச்சி குற்றவாளி என்பதை கடைசி வரை நிருப்பிக்க முடியாமல் போகலாம். ஆனால், செய்திதாள்களில் ராஜிவ் காந்தி குடும்பத்தினரும் குவாட்ரோச்சிக்கும் உள்ள தொடர்பு/ஆதாரங்களை தெளிவாக வெளிப்படுத்திவிட்டன. சட்ட பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை அல்லது அரசு விடவில்லை அல்லது தாமதப்படுத்தி இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது அவ்வளவுதான்.

சி.பி.ஐ க்வாட்ரோச்சியின் மீதான வழக்கை கைவிடவில்லை; அவரை இந்திய நீதிமன்றம் முன் கொண்டு வந்து நிறுத்தும் முயற்சிகள் கைவிடப்படவில்லை; அவர் குற்றவாளியாக அறிவிக்கபட்ட நிலை மாறவில்லை என்று இருக்க, இந்திய அரசு பிரிட்டனிடம் க்வாட்ரோச்சியின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அவருடைய வங்கிக் கணக்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிபாரிசு செய்கிறது. ஓசைப்பட்டமல் இந்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் இதற்கு கூடுதல் சொலிஸிடர் ஜெனரலை பிரிட்டனுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கிறார்.
( இதற்கு முன்பும் இதே போல் ஒரு முயற்சி நடந்திருக்கிறது என்று செய்தியும் வெளியாகியுள்ளது )

வழக்கம் போல் பத்திரிக்கைகள் இதை அம்பலப் படுத்துகிறது. சி.பி.ஐ தன்னை கலந்தாலோசிக்காமல் பிரதமர் அலுவலகம் எடுத்த முடிவு என்கிறது. அதாவது சி.பி.ஐ குற்றவாளி என்று கூறுகிறது ஆனால் மத்திய அரசு அவருக்கு நிரபராதி என்று சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறது!.

15 வருடங்களாக க்வாட்ரோச்சி குற்றவாளி; அவர் மீதான குற்றப் பத்திரிகையை நாங்கள் வாபஸ் பெறவில்லை, அவர் மீது சர்வதேச எச்சரிக்கை தொடர்கிறது; அவர் இந்திய நீதிமன்றத்தில் நிறுத்துவது எங்கள் கடமை என்ற சி.பி.ஐ நான்கு நாட்களில் ஒரு பல்டி அடித்து சி.பி.ஐ முழுப் பொறுப்பேற்கிறது அதாவது க்வாட்ரோச்சி குற்றவாளி இல்லை என்கிறது.

க்வாட்ரோச்சியின் கணக்குகளை விடுவிக்கக் கூடாது என்று பொதுநல மனு உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட, அதனை விசாரித்து தடை போடும் முன் க்வாட்ரோச்சி பணத்தை எடுத்துவிட்டர்.

பட்ஜட் கூட்டத் தொடர் ஆரம்பித்தவுடன் இது பெரும் சர்ச்சையை ஆரம்பிக்கும். சட்ட அமைச்சர் ராஜினாமா செய்வார். கூட்டணி கட்சிகள் வாய் மூடி மெளனம் காக்கும் நாடகம் அரங்கேரும்.

சோனியா காந்திக்கு இந்த இத்தாலியர் உறவினர்களும் தப்பித்தால் போதும் இல்லையென்றால் இவ்வளவு ஓபனாக செய்திருப்பார்களா ? அல்லது சி.பி.ஐக்கு 15 வருடத்திற்கு பிறகு தீடீர் ஞானோதயம் வருமா ?

இந்த ஊழலில் கைமாறிய பணம் நம்முடையத அதாவது நம் வரிப் பணம். இது இந்திய மக்களுக்கு இந்த அரசு இழைத்த மிகப்பெரிய தூரோகம். அதுவும் ராணுவ சம்பந்தப்பட்ட குற்றம். தேசத்தின் பாதுகாப்பே கேள்விகுறியாகும் விஷயம்.

நீதி: காந்தி என்ற பெயர் முடிகிற எல்லோரும் காந்தியவாதி இல்லை

படம் உதவி : தினமணி

10 Comments:

Karthik Jayanth said...

//கூட்டணி கட்சிகள் வாய் மூடி மெளனம் காக்கும் நாடகம் அரங்கேரும்//

//நீதி: காந்தி என்ற பெயர் முடிகிற எல்லோரும் காந்தியவாதி இல்லை//

புரிந்தால் சரி ..

Anonymous said...

Dear IdliVadai

Excellent post. Our bloggers are more obsessed with Kutti Revathis and thuppattas than any national issue. Good one keep it up.

Thanks
Sa.Thirumalai

சிறில் அலெக்ஸ் said...

நம்ம வரிப்பனத்தை நம்மாட்கள் சுட்டாலும் பரவாயில்லை. :)

கவுண்டமணியின் 'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா'த்தான் ஞாபகம்வருகிறது.

சுஜாதா அடிக்கடி சொல்றமாதிரி நாம திருட்டு வி.சி.டில படம் பாக்கிறத நிறுத்திட்டா எல்லாம் சரியாயிடும் பாருங்க. :)

IdlyVadai said...

கார்த்திக், திருமலை, சிறில் அலெக்ஸ் -நன்றி.

Voice on Wings said...

Thanks for this post.

But I wish to disagree with one commenter above, who says that other trivial issues are being given more prominence.
(1) No one prevented him from starting a blog and writing about this issue. Why wait for IdlyVadai to write a post on it, a full two weeks after the issue became public knowledge?
(2) Issues concerning social justice are as important (if not more), as the 'national' issues.

IdlyVadai said...

Voice on Wings - சற்றே யோசித்து பார்த்தால் இரண்டு social பிரச்சனையும் சினிமா சம்பந்தம் உள்ளவை :-).

தருமி said...

ஏற்கெனவே ஜூன்5, 2005-ல் நான் பதிந்த பதிவை மீள்பதிவாக இங்கே தருகிறேன்.

18. யாருக்கு வேண்டும் இப்படி ஒரு சி.பி.ஐ.?

போஃபர்ஸ் வழக்கில் ஹிந்துஜா சகோதரர்கள் விடுவிப்பு; சரியான ஆதாரங்கள் சி.பி.ஐ. தரவில்லை; இந்த வழக்கிற்கான செலவு 250 கோடி அல்ல, பத்து கோடிதான்; - சென்ற வாரத்தில் அடுத்தடுத்த பத்திரிகைச் செய்திகள்.

இது ஒன்றும் புதிது அல்ல. சி.பி.ஐ. தொடுத்த வழக்குகள், அதுவும் சிறப்பாக பெரிய அரசியல் புள்ளிகள் தொடர்புள்ள வழக்குகள் ஏதும் வெற்றி பெற்றதாகவே தெரியவில்லை. Accountability (சரியான தமிழ்ச் சொல் எனக்குத் தெரியவில்லை; உதவவும் ) என்று எதுவும் சி.பி.ஐ.-க்கு கிடையாதா?
அந்த அமைப்பிற்காகச் செலவிடப்படும் பொதுப்பணம் எல்லாம் வீண் என்றால் எதற்கு அந்த அமைப்பு?
அங்கு பெரிய பொறுப்பில் வேலை பார்க்கும் பெரிய மனிதர்களுக்கு சுய கெளரவமே இருக்காதா?
எதிர் கட்சிக்காரங்களை அவ்வப்பொழுது பயமுறுத்துவதற்கு மட்டுமே இந்த அமைப்பா?

IdlyVadai said...

தருமி - சுட்டிக்கு நன்றி. ஹிந்துஜா சகோதரர்கள் விடுவித்த சி.பி.ஐ க்வாட்ரோச்சியை விடுவிக்கவில்லை. சி.பி.ஐ விடுவித்த பின்னர் சட்ட அமைச்சர் இவ்வாறு செயல்பட்டிருந்தால் சந்தேகம் வந்திருக்காது. அவசர பட்டுவிட்டார்!

Anonymous said...

Sir. Globalization sir! Oru italian vandhu indian govt help oda sweden kitta irundhu money vaangi london bank la poattu vakkaraar
Globalization sit!

IdlyVadai said...

நண்பா - அந்த பணம் இவ்வளவு சுற்றி பின் திரும்பவும் இந்தியா வந்துவிடும் :-)