வரும் தேர்தலில் தி.மு.க.வின் வியூகம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
"தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஐந்து ஆண்டு காலம் நடந்து கொண்டிருக்கிற ஜெயலலிதாவின் ஆணவ ஆட்சிக்கு, மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற வகையில், எங்களது வியூகத்தை அமைத்திருக்கிறோம்.
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பைத் தந்த தமிழக மக்கள், இம்முறையும் வெற்றிக்கனியை எங்களுக்குத் தருவார்கள்."
உங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் நிறையப் பேருக்கு காளிமுத்து வலை வீசுகிறாரே?
"காளிமுத்து அலங்கார வார்த்தைகள் பேசக்கூடியதில் எந்த அளவிற்கு வல்லவராக இருக்கிறாரோ, அதுமாதிரி கட்சி மாறுவதிலும் வல்லவர். தன் சுகத்திற்காக கொள்கையை விட்டுக் கொடுப்பதிலும் வல்லவர். சுய லாபத்திற்காக வானுயர, பலரைப் பாராட்டுவதிலும் வல்லவர். அதே போல், அதற்கு எதிர்ப்பதமாக கீழ்த்தரமாக நாராச நடையில் பேசுவதிலும் வல்லவர். சட்டமன்றத்தில் நியாயமான முறையில் பேசவிடாமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும், தூக்கி வெளியேற்றுவதிலும் வல்லவர். இப்போது தூக்கிக் கொண்டு வருவேன் என்று புலம்புகிறார். பெற்ற கூலிக்கு மாரடிப்பதிலும் வல்லவர்."
உங்கள் சுயதிறமையில் நீங்கள் முன்னுக்கு வந்தாலும் உங்கள் மேல் வாரிசு என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கிறதே?
"இதைக் கேட்டுக் கேடிருக்ட்டு புளித்துப் போயிடுச்சு. தி.மு.கழகத்தில் யாரையும் வாரிசாக, நினைத்த நேரத்தில் உருவாக்கி விடமுடியாது. காரணம், தி.மு.க. ஒரு ஜனநாயக அமைப்பு. என்னைப் பொறுத்தவரையில், பள்ளி மாணவப் பருவத்தில் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற மன்றத்தை நிறுவி, அதன் மூலம் பொதுப்பணியில், கழகப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு, அந்த வட்டப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து மாவட்ட அளவில் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுக்குழு, செயற்குழு என்ற பொறுப்புகளிலெல்லாம் படிப்படியாக இருந்து பேச்சாளராக, பிரசார நாடகத்தில் வேடம் ஏற்று நடிக்கக் கூடிய நடிகராக உருவாகி, தி.மு.க. இளைஞர் அணியின் அமைப்புக் குழு உறுப்பினராகி, அமைப்பாளராகி அதைத் தொடர்ந்து இளைஞரணிச் செயலாளராக, இப்போது கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக, இப்படிப் படிப்படியாக இந்தப் பொறுப்பிற்கு வந்திருக்கிறேனே தவிர, வாரிசு அடிப்படையில் நேரடியாக வந்தவனில்லை."
நடிகர்கள் நிறையப் பேர் அ.தி.மு.க.விற்குப் போய்க் கொண்டிருக்கிறார்களே?
"எதையோ எதிர்பார்த்துப் போய்க் கொண்கிறார்கள். சிலருக்கு ஆசை காட்டி இழுக்கும் பணியை இன்றைய ஆளும்கட்சியான அ.தி.மு.க. செய்துகொண்டிருக்கிறது."
சட்டமன்றத்தில் நீங்கள் சரியாக செயல்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
"சட்டமன்றத்தில் நான், பல விவாதங்களில் பங்கேற்று உரையாற்றியது எல்லோருக்கும் தெரியும். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் கூட, நான் பல பிரச்னைகளை மையமாக வைத்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள் பலவற்றைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் அதை எடுத்துக்கொள்ளவில்லை. சட்டமன்றம், சட்டமன்றமாக நடந்திருந்தால், நான் சிறப்பாகப் பணி ஆற்ற வேண்டிய உணர்வு தானாக வந்திருக்கும். சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சர்வாதிகாரத் தன்மையோடு சபாநாயகராக அன்றைக்கு இருந்த காளிமுத்து, சட்டமன்ற அவைத் தலைவராக இல்லாமல், அ.தி.மு.க. அவைத் தலைவராகவே செயல்பட்டார் என்பதை, நாடு நன்கு அறியும். அதனால்தான் அவருக்கு இப்போது அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவி கிடைத்திருக்கிறது."
அ.தி.மு.க. ஆட்சி பற்றி உங்கள் விமர்சனம்?
"அ.தி.மு.க. என்பதை நாங்கள் என்றைக்கும் ஒப்புக் கொண்டது இல்லை. தி.மு.க.விற்கு முன்னால் ‘அ’ வைப் போட்டிருப்பது அதிகாரம், அகங்காரம், அட்டூழியம் அதற்காகத்தான். அண்ணா என்பதற்காகப் போடவில்லை."
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி முதல்வர் இல்லை, ஸ்டாலின்தான் முதல்வராகப் போகிறார் என்று அ.தி.மு.க. பிரசாரம் பண்ணுகிறதே?
"அ.தி.மு.க. மட்டுமல்ல, பல மீடியாக்களும், பத்திரிகைகளும் கூட அந்தப் பிரசாரத்தைத் திட்டமிட்டு செய்கின்றன. கூட்டணியைச் சிதைக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். அந்தப் பிரசாரம் முற்றிலும் தவறானது. மீண்டும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான்."
விஜயகாந்த் உங்களைப் பற்றி சொல்லும் விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?
"அவர் அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அரசியலில் இருந்துகொண்டு மற்ற அரசியல் கட்சியில் இருப்பவர்களை விமர்சிப்பது, அவருக்கு இருக்கும் உரிமை. அதை மக்கள் எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்வார்கள் என்பதைப் பொறுத்துதான். விமர்சனத்தின் தன்மை அமையும்."
வைகோவைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
"அவரிடத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அவருடைய போராட்ட குணம்."
உங்களை எதிர்த்து குஷ்பு நிற்கப் போவதாகச் செய்திகள் அடிபடுகிறதே?
"பத்திரிகையில் பார்த்தேன். அதே பத்திரிகையில் அவரது மறுப்பு செய்தியும் வந்திருக்கிறது."
விஜய்யை வைத்து உங்கள் மகன் உதயநிதி படம் தயாரிக்கப் போகிறார் என்று செய்தி வருகிறதே?
"எனக்கு அதைப் பற்றி அதிகம் தெரியவில்லை. நடிகர் விஜய்யும், என் மகன் உதயநிதியும் நீண்ட கால நண்பர்கள். என் மகன் ஆரம்பித்த ஸ்நோ பெளலிங் விளையாட்டு நிறுவனத்தை விஜய்தான் திறந்து வைத்தார். என் மகன் உதயநிதி திரைப்படம் எடுக்க விருப்பப்பட்டு விஜய்யிடம் சொன்னபோது, அவர் ஒப்புக் கொண்டாராம்."
தாத்தா ஆகிவிட்டீர்களே? பேரனைப் பற்றி?
"சந்தோஷமாயிருக்கிறது. என்னைத் தாத்தா என்று முறையோடு அழைக்கக் கூடிய குழந்தைகள், எங்கள் இல்லத்தில் பல இருந்தாலும் அவர்களிடம், தாத்தா என்று அழைக்கக் கூடாது, ‘அங்கிள்’ என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அப்படி கூப்பிட்டால், எனக்கு வயதானது தெரிந்துவிடும் என்ற சுயநலம்தான். (சிரிக்கிறார்) இப்போது என் பேரன் இன்பன் என்னை தாத்தா, தாத்தா என்று அழைக்கும்போதெல்லாம், என்னையே மறந்து விடக்கூடிய சுகம் கிடைக்கிறது.
இரவு நேரங்களில் பொதுக் கூட்டம் போன்ற கட்சிப் பணிகளை முடித்துவிட்டு எவ்வளவு நேரம் கழித்து வீட்டிற்குச் சென்றாலும் என்னுடைய பேரனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன். ஒருவேளை தூங்கிக் கொண்டிருந்தாலும் அவனை எழுப்பி, அவனிடம் பேசாமல், அவனிடம் விளையாடாமல் நான் தூங்குவது கிடையாது."
சுனாமி நிதி வழங்க ஜெயலலிதாவை சந்தித்தீர்களே, என்ன பேசினீர்கள்?
மரியாதை தெரியாத பெண்மணி என்பது அந்தச் சந்திப்பில் தெரிந்தது. சட்டமன்ற உறுப்பினர் என்ற மரியாதையையோ எதிர்க் கட்சித் தலைவர் கொடுத்த இருபத்தொரு லட்ச ரூபாயை கொண்டு வந்திருக்கிறோம் என்ற மரியாதையையோ தரவில்லை. கியூவில் நின்றுதான் உள்ளே சென்றோம். உட்காரக் கூடச் சொல்லவில்லை. ‘உங்கள் தந்தைக்கு நன்றி சொல்லுங்கள்’ என்று ஒரு வரி சொல்லிவிட்டு, அடுத்த மனிதரை கவனிக்க சென்றுவிட்டார்.
கடைசியாக ஒரு கேள்வி. ஐந்து வருட ஜெ. ஆட்சியை ஐந்து வரிகளில் சொல்லுங்கள்?
"ஐந்து வரிகள் என்ன ஐந்தே வார்த்தைகளில் சொல்கிறேன்.
அராஜகம், ஆணவம், அக்கிரமம், அகங்காரம், அத்துமீறல்."
நன்றி : குமுதம்
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Tuesday, February 28, 2006
மு.க.ஸ்டாலின் பேட்டி
Posted by IdlyVadai at 2/28/2006 05:07:00 PM 5 comments
திருமாவளவன் பேட்டி
விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்:
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து உள்ளீர்களே. மனநிலை எப்படி உள்ளது.
பதில்:- மகிழ்ச்சியாக இருக்கிறேன். அ.தி.மு.க-விடுதலை சிறுத்தை இயக்க கூட்டணி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் இந்த கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்குவார்கள்.
தி.மு.க. கூட்டணியில் எங்களை சேர்க்க ஓராண்டுக்கும் மேலாக முயற்சி எடுத்த டாக்டர் ராமதாசுக்கு நன்றி. பா.ம.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினோம். ஆனால் அந்த எண்ணம் ஈடேற கலைஞர் விரும்பவில்லை. பா.ம.க. தலைமையில் மாற்று அணி அமைக்க அழைப்பு விடுத்தோம். அதற்கும் பலன் கிட்ட வில்லை. தாழ்த்தப்பட்டோர், வன்னியர் ஒரு திரட்டப்பட்ட அரசியல் சக்தியாக எழுச்சி பெறுவதை கருணாநிதி விரும்பவில்லை. தந்தையின் கருணை இல்லாதபோது தாயின் கைகள் அரவணைக்கும் என்பதை போல அ.தி.மு.க. எங்களை அரவணைத்துள்ளது.
விடுதலை சிறுத்தைகளுக்கு உரிய மதிப்பளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி. ஜெயலலிதா மீண்டும் முதல்வ ராக வேண்டும் என்ற விருப்பத்தை விடுதலை சிறுத்தைகள் நிறைவேற்றும்.
கே:- 9 தொகுதிகள் புதுவைக்கும் சேர்த்தா?
ப:- தமிழகத்தில் மட்டும் 9 தொகுதிகள எங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. புதுவை தேர்தல் தொடர்பாக தொகுதி உடன்பாடு பற்றி எதுவும் பேசவில்லை.
கே:- பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர் களை நிறுத்த மாட்டோம் என்று கூறி இருந்தீர்களே?
ப:- தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேற மாட்டேன் என்றும், அதே நேரம் விடுதலை சிறுத்தைகள் உறவை கைவிட விரும்பவில்லை என்றும் ராமதாஸ் அறிவித்தால் அது போன்ற முடிவை எடுக்க தயாராக இருந்தோம். ஆனால் தற்போது இருவரும் வெவ்வேறு அணியில் இருக்கிறோம். இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு இருக்காது என்றே கருதுகிறேன்.
கே: பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் வேண்டாம் என்று அ.தி.மு.க.விடம் கூறுவீர்களா?
ப:- கூட்டணி கட்சியிடம் இது போன்ற நிபந்தனை விதிக்க முடியாது.
கே:- ஈழப்பிரச்சினையில் வேறு கொள்கையுடைய அ.தி.மு.க.வுடன் சேர்ந்து உள்ளீர்களே?
ப:- ஈழத்தமிழர் பிரச்சினையில் எங்களுக்கு என்ன நிலைப்பாடு இருக்கிற தோ அதே நிலைப்பாடு அ.தி.மு.க.வுக்கும் இருக்கிறது. சமீபத்தில் இலங்கை அகதிகள் வந்தபோது 1983-ல் நடந்த இனக்கலவரத்தை அகதிகள் வருகை நினைவுப்படுத்தியது என்று ஜெயலலிதா குறிப்பிட்டார். ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கை அதிபரை தமிழகத்தில் வரவேற்க தயாராக இல்லை என்றும் மறுதளித்தார். இப்பிரச்சினையில் அ.தி.மு.க-விடுதலை சிறுத்தை இயக்க நிலைப்பாட்டில் முரண்பாடு இல்லை.
அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளத்தான் கூட்டணி வைத்துள்ளோம், கொள்கை வெவ்வேறாக இருக்கலாம். கம்ïனிஸ்டு கொள்கைகளை தி.மு.க. நிறைவேற்றும் என்றோ அல்லது தி.மு.க. கொள்கைகளை கம்ïனிஸ்டு நிறைவேற்றும் என்றோ அறிவிப்பு செய்து கூட்டணி வைப்பது இல்லை. எனவே கொள்கையில் சமரசத்திற்கு இடமில்லை.
கே:- கூட்டணி ஆட்சி ஏற்பட வேண்டும் என்று கூறினீர்களே?
ப:- கூட்டணி ஆட்சியை உருவாக்க தகுதியுள்ள கட்சிகள் அதை சொல்ல தயங்குகின்றன. காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாற்று அணியை உருவாக்கி இதை செய்து இருக்க முடியும். ஆனால் அவைகள் வாய் திறக்க முடியாமல் நிற்கின்றன.
கே:- கருணாநிதியை விமர்சித்ததால் கூட்டணியில் உங்களை சேர்க்கவில்லையா?
ப:- கருணாநிதியை நாங்கள் விமர்சித்தது இல்லை. பாராளுமன்ற தேர்தலில் இடம் கேட்டோம். தரவில்லை. ஆதங்கத்தை வெளிப்படுத்த எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகினேன். கடும் சொற்களை பயன்படுத்தவில்லை. விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும் ஒரே அணியில் இருக்க விரும்பி கூட்டணியில் எங்களை சேர்க்க ராமதாஸ் முயற்சித்தார். ஆனால் கருணாநிதி பா.ம.க. உள் ஒதுக்கீடு செய்யலாம் என்று சொல்லி அக்கட்சியின் வலிமையை குறைத்து மதிப்பிட்டார்.
பந்தியில் இடம் இல்லை. வேண்டுமானால் பா.ம.க. இலையில் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்பதுதான் அதன் பொருள். கிட்டத்தட்ட எச்சி இலையை எடுப்பது போன்றதுதான் அது. ஒடுக்கப்பட்ட மக்களை இந்த வார்த்தை காயப்படுத்தியது. இந்த நிலையில் பா.ம.க. தரப்பில் கலைஞர் இது போன்ற வார்த்தையை சொல்லி இருக்க வேண்டாம் என்று கூறுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை.
கே:- அ.தி.மு.க. அணியில் விஜயகாந்தை சேர்த்தால் என்ன செய்வீர்கள்?
ப:- அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எங்கள் முடிவை தெரிவிப்போம்.
கே:- அ.தி.மு.க.விடம் எந்தெந்த தொகுதிகளை கேட்டு உள்ளீர்கள்?
ப:- தென் மாவட்டம், வட மாவட்டங்களில் கேட்டு இருக்கிறோம். சென்னையிலும் கேட்டு உள்ளோம். தொகுதிகள் பெயர்களை எழுதி கொடுத்து உள்ளோம். இரண்டொரு தினங்களில் தெரியும்.
கே:- தேர்தல் பிரசாரத்தில் எதை முன் நிறுத்துவீர்கள்?
ப:- அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கான பிரச்சார விïகங்களை அ.தி.மு.க. முன் எடுத்து வைக்கும். அதை ஏற்றுக்கொண்டு விடுதலை சிறுத்தைகள் பிரசாரம் செய்யும். அ.தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகள் எதிர் பார்த்தோம். ஆனாலும் மன நிறைவான தொகுதிகளை பெற்றுள்ளோம். 2001-ல் 8 தொகுதிகளில் நின்று ஒரு தொகுதியில் வென்றோம். இப்போது 9 தொகுதிகள் பெற்றுள்ளோம்.
கே:- ம.தி.மு.க. குழப்பத்தில் உள்ளதே? அக்கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர வேண்டும் என்று அழைப்பீர்களா?
ப:- ம.தி.மு.க. வந்தால் வரவேற்போம். ம.தி.மு.க. மட்டுமல்ல, பா.ம.க.வும் வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். இது என் தனிப்பட்ட அழைப்பு தான். விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும் ஒரே அணியில் இருந்தால் நல்லது என்ற சமூக அக்கறையோடு இந்த அழைப்பை என் தனிப்பட்ட விருப்பமாக விடுக்கிறேன். பா.ம.க. வரவேண்டும் என்று அழைக்கிறேன்.
கே:- பா.ம.க.வை அழைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் நீங்கள் பேசுவீர்களா?
ப:- அந்த நிலை பா.ம.க.வுக்கு இல்லை. அவர்கள் பேசுவதற்கான `சேனல்' இருக்கிறது.
கே:- நுழைவு தேர்வு ரத்து செல்லாது என்று தீர்ப்பு வந்துள்ளதே?
ப:- தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டியது மக்கள் கடமை. நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டதால் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து அவற்றை களைய சட்டப்பூர்வமாகவோ, அரசியல்ரீதியாகவே அரசு முயற்சிக்கவேணடும்.
நன்றி: மாலைமலர்
Posted by IdlyVadai at 2/28/2006 02:37:00 PM 0 comments
பாம்பு - தவளை குட்டி கதை - வைகோ
குரோம்பேட்டையில் நடைபெற்ற ம.தி.மு.க. கொடி ஏற்று விழாவில் பாம்பு, தவளை பற்றிய கதையை வைகோ கூறினார்.
நிழல் தேடுகிறோம் என்கிறபோது காளிதாசன் சாகுந்தலத்தில் ஒரு காட்சியை சொல்கிறார்.
நெருப்பு வெயிலில் ஒரு தவளை எப்படியோ சாலைக்கு வந்து விடுகிறது. நிழல் தேடுகிறது. நிழல் கிடைக்கவில்லை. தவளை கொதிக்கிற வெயிலில் சுருண்டு செத்து போய்விடும். இந்த நேரத்தில் ஒரு நிழலை பார்க்கிறது. அந்த நிழலில் போய் இந்த தவளை உட்காருகிறது. அந்த நிழல் என்ன நிழல் தெரியுமா? பார்த்த மாத்திரத்திலேயே தவளையை விழுங்கக்கூடிய நாக பாம்பின் நிழல்.
நாக பாம்பு நிழல் தேடி அலைகிறது. நிழல் கிடைக்கவில்லை. ஆகவே அது என்ன செய்கிறது. தனது வாலை தரையில் ஊன்றி வேறு வழியில்லாமல் தலையை முழுவதும் தூக்கி படமெடுத்து நிற்கிறது. கீழே விழுந்தால் பாம்பு கருகி செத்துவிடும்.
கை தட்டல்
இந்த படமெடுத்து நிற்கும் பாம்பின் கீழே நிழலாக இருப்பதால் தவளை நாக பாம்பின் கீழே நிற்கிறது. பசிக்கு கொஞ்சம் வேண்டும் என்றாலும் தவளையை பாம்பு விழுங்கிவிடும். ஆனால் இப்போது விழுங்கமுடியாது. ஏன் விழுங்கமுடியாது என்றால், தன்னை காப்பாற்றிக் கொள்ளத்தான். தவளை, பாம்புக்கு கீழே இருக்கிறது. தவளைக்கு பாம்பு எமன். ஆனால் வேறு வழியில்லாமல் தவளை, பாம்பின் நிழலில் நிற்கிறது. (பலத்த கைதட்டல்) எதையோ நினைத்து கை தட்டாதீர்கள். நான் சங்க இலக்கிய கதையை சொன்னேன்.
இங்கே, ம.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர். அர்ஜூனனுக்கு கண்ணன் தேர் செலுத்துவது போல. ம.தி.மு.க. தொடங்கி 13-வது ஆண்டு நடைபெறுகிறது. அஞ்ஞாதவாச கட்டத்தில் இருக்கிறோம். இந்த கட்டத்தில்தான் அர்ஜூனனின் வில்லின் வீரம் வெளிப்பட்டு தெரிந்தது.
தேர்தல் வரட்டும்
வெள்ளித்திரையில் மீதத்தை காணுங்கள் என்பார்கள். தேர்தல் தேதி அறிவிக்கட்டும். புதிய கருத்துக்களோடு தேர்தல் நேரத்தில் வந்து மீதியை சொல்கிறேன்.
நன்றி : தினத்தந்தி
Posted by IdlyVadai at 2/28/2006 01:02:00 PM 3 comments
Monday, February 27, 2006
தேர்தல் சிறப்பு பக்கம்
வாஸ்துபடி வலது பக்கம் தேர்தல் சிறப்பு பக்கம் :-)
[ கூகிள் புச்சா கொடுத்த பக்கத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை அதனால் இந்த ஏற்பாடு ஹி ஹி ]
Posted by IdlyVadai at 2/27/2006 10:19:00 PM 1 comments
கூட்டணி எதற்கு - கல்கி தலையங்கம்
வைகோ சொல்வது ரொம்ப வேடிக்கைதான்!"ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகும் எண்ணம் எனக்கு ஒருபோதும்
இருந்ததில்லை" என்கிறார். கூடவே, "என் தாயார் என்னைப்
பெரியவர் (கருணாநிதி) கட்சியுடன் தொடரும்படி
அறிவுறுத்தியிருக்கிறார்" என்கிறார்! "அம்மா வற்புறுத்தவில்லை;
அறிவுறுத்தினார்" என்பது வைகோ கூற்று! அப்படியானால், அந்த
அறிவுரைக்கு ஓர் அவசியம் இருந்தது; அதாவது தி.மு.கவுடன் ம.தி.மு.கவுக்கு உறவுச் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அது தெரிந்துதானே வைகோவின் அம்மா பேசியிருக்கிறார்!
ம.தி.மு.கவின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கூட்டணித் தலைவரான கருணாநிதியை ஏசிப் பேசுகிறார். இந்த ஏச்சுப் பேச்சுக்கு அவர் பேரில் ம.தி.மு.க. தலைமை கண்டனம்
தெரிவிக்கவுமில்லை; நடவடிக்கை எடுக்கவுமில்லை. ஆனால், வைகோ அவர் சார்பில் மன்னிப்புக் கேட்கிறார்! கூடுதல் இடங்களுக்காக தி.மு.க. தலைமையுடன் ம.தி.மு.க பேரம் பேசி வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். பேரம் படியாத நிலையில் எழுந்த பரஸ்பர மனக்கசப்பில் கட்சிகளின் அடிநிலைத் தொண்டர்கள் அவசரப்பட்டுப் பேசினால், மூத்த தலைவர்கள்தான் அவர்களுக்கு அறிவுரை கூறி பொறுமை காக்கும்படி வலியுறுத்த வேண்டும். ஆனால் ம.தி.மு.கவிலோ மூத்த தலைவர்களே பொறுமையிழந்து கடுமையாகப்
பேசியிருக்கிறார்கள்.
தி.மு.க. தலைவர், தாம் பலமுறை வைகோவுடன் தொடர்பு கொண்டு சமரசத்துக்கு முயன்றதாகவும் அவர் பிடிகொடுக்கவே இல்லை என்றும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதையும் வைகோ மறுக்கவில்லை; தமது கட்சியினரிடையே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தி
நிலவியதையும் அவர் மறுக்கவில்லை!
ஆனால் திடீரென்று, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை விட்டு
விலகும் நோக்கமே தமக்கு இருந்ததில்லை என்கிறார்! அப்படியெனில், "நாங்கள் ஜ.மு கூட்டணியில் தொடருவோம்" என்று வைகோ ஓர்
அறிக்கை விடவேண்டிய அவசியம் என்ன!
ஆக, வைகோ எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் உரசல்கள் இருந்ததும் உண்மை; தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர் தி.மு.கவுக்கு அழுத்தம் கொடுத்ததும் உண்மை... அந்த ‘விருப்பம்’ என்ன? அது எந்த அளவுக்கு நிறைவேறியது? அதற்காக யார், எதை
விட்டுக் கொடுத்தார்கள் என்பனவெல்லாம் இப்போது நமக்குத்
தெரியாது. ஆனால், இக் கூட்டணியில் தி.மு.க. - ம.தி.மு.க. நட்பு மீண்டும் சோதனைக்குள்ளானால் அத்தனை திரை மறைவு சங்கதிகளும் அம்பலமாகிவிடும்.
அப்படியெல்லாம் நடக்காமலிருக்க வேண்டுமானால், வரவிருக்கும் தேர்தலைப் பற்றிய தெளிவு ம.தி.மு.கவுக்கும் இருக்கவேண்டும்; தி.மு.கவுக்கும் இருக்க வேண்டும்.
ஆட்சியைப் பிடிப்பது மட்டுமா குறிக்கோள்? குறிக்கோள் அதுவாயின், மிகக் குறுகலான அந்த நோக்கில், அடிப்படையான கொள்கை மாய்ந்துபோகும்! யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்கொள்ளத் துணிவு பிறக்கும்.
மக்களையும் எதிர்கட்சிகளையும் ஒடுக்கும் ·பாஸிஸ போக்குக்கு முடிவுகட்ட வேண்டும். அதிகார துஷ்பிரயோகம்; ஆதிக்கப் போக்குக்கு இடங்கொடுக்கலாகாது...
இதுபோன்ற நெகடிவ் சிந்தனைகளுடன், நல்லாட்சி அமைவது குறித்த பாஸிடிவ் கொள்கைகளும் தேவை. அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் ஏற்கத்தக்கதான குறைந்த பட்ச செயல் திட்டத்துடன் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தேர்தல் களத்தில் இறங்குமானால், அதில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்கள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து ஒத்துழைப்பார்கள்; ஒத்துழைக்க வேண்டும்! அப்போதுதான் தொண்டர்களும் ஒருங்கிணைந்து உழைப்பார்கள்.
வைகோவுக்கு ஸ்டாலினை ஏற்க முடியாமல் இருக்கலாம்; அதற்காக ம.தி.மு.கவின் எதிர்காலத்தையே அவர் விட்டுக்கொடுக்கத்
தயாராயிருக்கலாம்... ஆனால் தமிழக மக்களின் எதிர்காலத்தை அவர் அபாயத்துக்கு உள்ளாக்குவது என்ன நியாயம்?
இப்போது மலர்ந்துள்ள நல்லெண்ணம், அனைத்துக் கூட்டணிக்
கட்சிகளிடையேயும் சுமுகமான, நியாயமான தொகுதிப் பங்கீடாகக் கனியட்டும்.
நன்றி: கல்கி
Posted by IdlyVadai at 2/27/2006 03:38:00 PM 14 comments
திருமாவளவன் - அதிமுக கூட்டு
விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இன்று அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தது. விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் இன்று அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கு 9 தொகுதிகள் வழங்கப்படும் என ஜெயலலிதா தெரிவித்தார்.
இவருக்கே 9 சீட் என்றால் வைகோவிற்கு நிச்சயம் 40 சீட் கிடைத்திருக்கும்.
- * -
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவன் அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட கூட்டணி குறித்து அளித்த பேட்டி:
கே. அ.தி.மு.க.வுடன் கூட்டணி மன நிறைவை தருகிறதா?
ப:- மிகுந்த மன நிறைவை தருகிறது.
கே:- உங்களுக்கு 9 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதே? எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்.
ப:- அது 2 நாளில் முடிவாகும்.
கே:- அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதால் பா.ம.க.வுடன் உள்ள உறவு பாதிக்குமா?
ப:- பா.ம.க.வுடன் உள்ள உறவு பாதிக்காது. நட்பு தொடரும்.
கே:- உங்களை தொடர்ந்து டாக்டர் ராமதாசும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வாய்ப்பு உண்டா? ராமதாசை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுப்பீர்களா?
ப:- அது அ.தி.மு.க. எடுக்க வேண்டிய முடிவு. அல்லது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அணுகு முறையை பொறுத்தது.
கே:- தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.தி.மு.க. பக்கம் வர வாய்ப்பு உண்டா?
ப:- போகப்போகத்தான் அது பற்றி தெரிய வரும்.
( நன்றி : மாலைமலர் )
Posted by IdlyVadai at 2/27/2006 02:02:00 PM 24 comments
ஜெ அழைத்தால்...வைகோ பேட்டி
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ `இந்தியாடுடே' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
8 சதவீத ஓட்டு
கேள்வி:- நீங்கள் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுத்து இருக்கிறீர்களா?
பதில்:- 96-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரிய பிரளயமே ஏற்பட்டபோதுகூட ம.தி.மு.க. 8 சதவீத வாக்குகள் பெற்றது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். பொடா சிறைவாசத்துக்கு அப்புறம் நாங்கள் வலுப்பெற்று இருக்கிறோம். சில இடங்களில் 14 சதவீதம், சில இடங்களில் 8 சதவீதம், சில இடங்களில் 4 சதவீதம்-ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 8 சதவீத வாக்குகள் எங்களிடம் உள்ளன. இவை தவிர, ஒரு நிலையான வாக்காளர்களை கவர்கிறவர்களாக இருக்கிறோம். ம.தி.மு.க. மீதான நம்பகத்தன்மை வாக்காளர்கள் மத்தியில் இருக்கிறது. வாக்காளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி?
கேள்வி:- உங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் சேரலாம் என்று சொல்வதாக தெரிகிறதே?
பதில்:- அது உண்மைதான். ம.தி.மு.க. குறைவான தொகுதிகளில் போட்டியிட்டுக்கொண்டு இருக்காமல், அ.தி.மு.க. கூட்டணிக்குப்போய் நிறைய இடங்களைப்பெற்று, ஜெயித்து இன்னும் பலமான கட்சியாக மாறலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். இது ஒன்றும் லட்சியக்கூட்டணி இல்லையே என்று அவர்கள் நினைத்து இது வெறும் தொகுதி உடன்பாடுதானே என்ற எண்ணத்துக்கு அவர்கள் வந்தது உண்மைதான்.
நல்லதை செய்வது
கேள்வி:-ஆனால், தொண்டர்களின் எண்ணத்துக்கு எதிராக முடிவு எடுத்து இருக்கிறீர்களே?
பதில்:-ஜனநாயகமான கட்சி அமைப்பில் பக்குவமாக எடுத்துச்சொல்லித்தான் அவர்களுடைய மனதை மாற்ற முடியும். தொண்டர்களுக்கு அவர்கள் விரும்புவதை செய்து தருவது ஒன்று-தொண்டர்களுக்கு எது நல்லதோ, அதைச்செய்து தருவது என்பது ஒன்று.
கேள்வி:- உங்கள் கட்சியில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் கூட தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கிறார்களே?
பதில்:- தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்கள் பெறவேண்டும் என்ற துடிப்பு அவர்களிடம் இருக்கிறது. அந்த துடிப்பில் ஆவேசமாக பேசி வருகின்றனர். அது தவறுதான். அதை தவிர்க்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்.
நாணயமான அரசியல்
கேள்வி:- ஆற்காடு வீராசாமி, " இது நாணயமான அரசியலாக இல்லை'' என்று உங்களை விமர்சித்து இருக்கிறாரே?
பதில்:- கூட்டணி நலனை பாதுகாக்கவேண்டும் என்கிற பொறுப்பு எனக்கும் இருக்கிறது. தி.மு.க.வைப்பற்றி ம.தி.மு.க. பேச்சாளர்கள் பேசியதை கண்டித்ததை தவறு இல்லை. ஆனால், ம.தி.மு.க. வேறு இடத்தில் பேரம் பேசுகிறது என்ற வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள். அதற்கு பதில் அளிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, நானும் வார்த்தைகளை பயன்படுத்துவது கூட்டணி நலனுக்கு உகந்தது அல்ல. அதனால்தான் அறிக்கையில் எனது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தி இருக்கிறேன்.
பா.ம.க.வுக்கு முக்கியத்துவம்
கேள்வி:- பா.ம.க.விற்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ம.தி.மு.க.வினர் விமர்சிக்கிறார்களே?
பதில்:- இன்னொரு கட்சியுடன் ஒப்புமைப்படுத்தி நான் கணக்கு பார்ப்பது இல்லை. பா.ம.க.வினரும் என்னிடம் பிரியமாக இருக்கிறார்கள். எங்களுக்கு உரிய பங்கு எங்களுக்கு கிடைத்தால் போதும்.
கேள்வி:- ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் கூடுதல் இடங்கள் கேட்பீர்களா?
பதில்:- 35 மாவட்டங்களில் கட்சி அமைப்பாக இருக்கிறோம். எனவே மனநிறைவு அளிக்கத்தக்க வகையில் இடங்கள் தரப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கேள்வி:- இந்த தடவையாவது தரப்படும் இடங்கள் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களாக இருக்குமா?
பதில்:- கடந்த காலத்தில் நடந்து முடிந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். எங்களுக்கு மனதில் கவலை ஏற்படாத அளவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஜெயலலிதாவே அழைத்தால்...
கேள்வி:-`வாங்க வைகோ' என ஜெயலலிதாவே தேர்தல் கூட்டணிக்கு அழைத்தால்..?
பதில்- (நீண்ட மவுனத்துக்குப்பின்)- அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
கேள்வி:- தி.மு.க கூட்டணி வென்றால், ஸ்டாலின்தான் முதல்வர் என்று சொல்லப்படுகிறதே?
பதில்:- கற்பனையான ஆரூடங்களுக்கு எல்லாம் பதிலே சொல்லக்கூடாது. கலைஞரே பரிபூரண நலத்தோடு முதல்வராக இருப்பார். முழு 5 ஆண்டுகள் ஆட்சி நடத்துவார்.''
Posted by IdlyVadai at 2/27/2006 10:10:00 AM 8 comments
Sunday, February 26, 2006
வைகோ - காளிமுத்து சந்திப்பு
அ.தி.மு.க., அவைத் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான காளிமுத்து இருதினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இரண்டாவது முறையாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பெற்றுவரும் அவரை ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று இரவு 8.30 மணியளவில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Posted by IdlyVadai at 2/26/2006 08:21:00 AM 0 comments
Saturday, February 25, 2006
வைகோ தில்லி பயணம் பின்னனி
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை திடீரென தில்லி சென்று உடனேயே திரும்பி வந்தார்.
மதியம் விமானம் மூலம் தில்லி சென்ற அவர், இரவு விமானத்தில் சென்னைக்குத் திரும்பி வந்தார்.
தில்லியில் பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமரின் அலுவலகத்தில் அவர் கேட்டிருந்ததாகத் தெரிகிறது. இருந்தபோதிலும், பிரதமரை அவர் சந்திக்கவில்லை.
மற்றபடி காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது சந்தித்தாரா என்பது பற்றியும் தெரியவில்லை. தங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தில்லியில் யாரைச் சந்தித்தார், எதற்காக தில்லி வந்தார் என்று தங்களுக்குத் தெரியாது என்று தில்லியில் ம.தி.மு.க. எம்.பி. ஒருவரே தெரிவித்தார்.
அந்த அளவுக்கு வைகோவின் தில்லி பயணம் இன்று காலை வரை ரகசியமாக இருந்தது.
இன்று மத்தியம் வந்த செய்தி இவ்வாறு இருக்கிறது.
திமுக, மதிமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை. எதிர்பார்ப்பதைவிட ஓரிரு தொகுதிகள் குறைவாகத் தர திமுக முன்வந்துள்ளதால் மதிமுகவுக்கு நெருடல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் தலையிடக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்திக்க வைகோ வெளிளிக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் இப்பிரச்சினையில் காங்கிரஸ் தலைமை தலையிட விரும்பாததால் வெள்ளி இரவே வைகோ சென்னை திரும்பினார்.
Posted by IdlyVadai at 2/25/2006 06:52:00 PM 0 comments
வைகோ தாயார் பேட்டி
இந்த வார ஆ.வியில் வைகோ தாயார் சிறப்பு பேட்டி. ...
கடந்த 2001&ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டு கட்சிகளாலும் வேண்டாத மருமகளாகப் பார்க்கப்பட்ட வைகோ, இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் புதுமணப் பெண்ணாகக் காட்சியளிக்கிறார். ஜெயலலிதா, கருணாநிதி இரண்டு பேருமே அவரைக் கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள போட்டிப் போட்டுக்கொண்டு ஆரத்தித் தட்டு தூக்கி நிற்கிறார்கள். காரணம், கணிசமான தொகுதிகளில் வெற்றி&தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக ம.தி.மு.க. இருப்பதால்தான்!
இதை வைகோ மட்டுமல்ல... தமிழக உளவுத் துறையும் உணர்ந்திருப்பதால்தான் ‘எந்தக் கூட்டணி ம.தி.மு.க&வின் எதிர்காலத்தை ஒளிரவைக்கும்’ என முடிவெடுக்க முடியாமல் சற்றே குழம்பிப் போனார் வைகோ. மாற்றி மாற்றி உளவுத்துறை உசுப்பேற்றியதால், ஏகத்துக்கும் தடுமாறிவிட்ட வைகோ... இப்போதுதான் சரியான நிலைக்குத் திரும்பியிருக்கிறார் என்று அவருடைய கட்சியின் இரண்டாம் கட்ட தலைகளே ஆறுதல்படும் அளவுக்கு ஒரு முடிவை இப்போது எடுத்திருக்கும் வைகோ, தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு உழைக்கப் போகிறேன். கலைஞர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றெல்லாம் அறிவித்திருக்கிறார்.
வைகோவின் இந்த அறிவிப்புக்குப் பின்னணியில், அவருடைய பாசத்துக்குரிய தாய் மாரியம்மாளின் கனிவான ஆலோசனையும் இலைமறைகாயாக இருந்ததை வைகோவே ஒப்புக் கொண்டிருக்கிறார். மகனை தி.மு.க. கூட்டணியில் இழுத்து நிறுத்தியதைத் தனக்கு நெருக்கமானவர்களிடம் பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார் மாரியம்மாள்.
"தி.மு.க. கூட்டணியில்தான் நீடிக்கிறோம்" என்ற வைகோவின் அறிவிப்பைக் கேட்டு கலிங்கப் பட்டியிலுள்ள வடக்கத்து அம்மன் கோயிலில் ஐம்பத்தோரு சூறைத்தேங்காய் உடைத்து நேர்ச்சை செலுத்தியிருக்கிறார்கள் வைகோவின் அபிமானிகள். இந்த நிலையில் வைகோவின் தாயார் மாரியம்மாளை கலிங்கப்பட்டியிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.
அண்ணாவின் படத்துக்குக் கீழே உட்கார்ந்தபடி பேட்டிக்குத் தயாரான மாரியம்மாள், "கருணாநிதி படத்த எத்துகு ரா (எடுத்துக்கிட்டு வா)’’ என்று வீட்டில் உள்ளவர்களுக்குத் தெலுங்கில் உத்தரவிட்டபடி நம்மிடம் பேசினார்.
"போன வெள்ளிக்கிழமை தான் மெட்ராஸ்ல இருந்து இங்க வந்தேன். ‘எனக்கு என்ன பண்றதுனு தெரியலம்மா. எல்லாமே குழப்பமா இருக்கு... இந்த நேரத்துல நீ எம்பக்கத்துல இருந்தீனா, தெம்பா இருக்கும்மாÕனு வைகோ சொன் னான். ‘என்னடா புள்ள இப்புடி சொல்றானே’னுட்டு ஒரு மாசமா அவன்கூட மெட்ராஸ்ல இருந்தேன். வெள்ளிக்கிழமை நானும் அவனும்தான் ஒண்ணா கலிங்கப்பட்டிக்கு வந்தோம். வந்த ரெண்டு நாள்ல என்னென்னமோ நடந்துருச்சு, பாத்துக்குங்க’’ என்றவரிடம்,
நீங்க சொன்னதால்தான் வைகோ ‘தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம்’னு அறிக்கை விட்டதா சொல்றாங்களே? என்று கேள்வியைப் போட்டோம்.
"மதுரையில இருந்து காருல ஊருக்கு வந்துகிட்டிருந்தப்ப எங்ககூட இன்னும் ரெண்டு பேரு வந்தாங்க. அவங்க எந்தக் கட்சிக்காரங்கனு தெரியல. அவங்ககூட வைகோ பேசிக்கிட்டே வந்தான். எங்கெல்லாம், எப்புடியெல்லாம் ஜெயிக்கலாம்னு அவங்க விவரமா பேசிக்கிட்டு வந்தாங்க. வீட்டுக்கு வந்ததுமே, ‘ஐயா, நீ ஜெயலலிதா கூட்டுல சேரப்புடாது. என்னானாலும் கருணாநிதி கூடத்தான் இருக்கணும்’னு சொன்னேன். அதைக்கேட்டு அவன் சிரிச்சான். அன்னிக்கி ராத்திரியே மறுபடியும் அவன் மெட்ராஸ§க்குப் புறப்பட்டப்ப, ‘ஐயா, அந்தம்மாவால நாம பட்டதெல்லாம் போதும்யா. நெட்டையோ, குட்டையோ... நீ கருணாநிதிக்கிட்டயே இருந்துறய்யா’னு சொன்னேன். அதுக்குப் பின்னாடி அவன்கிட்ட நான் எதுவும் பேசல.’’
அரசியலில் அணி மாறுவது சகஜம். அப்படி இருக்கும்போது, அ.தி.மு.க&வோட வைகோ அணி சேருவதில் உங்களுக்கென்ன வருத்தம்?
"நீங்க கேட்ட மாதிரிதான் எங்க சாதி சனத்துலயும் ‘எதுக்குக் கருணாநிதியோட கூட்டு சேர சொல்றே?’னு கேட்டாங்க. பொடா கேஸ்ல வைகோவோட சேர்த்து என் வயித்துல பொறக்காத எட்டுப் புள்ளைங்களயும் அந்தம்மா அரஸ்ட் பண்ணுனாங்களே... அவங்கள கொஞ்ச பாடா படுத்துனாங்க! வைகோ மேல வெய்யில்கூட படாம வளத்தாரு, அவங்க அப்பா. வெளியில எங்க போனாலும் அவன்கூட துணைக்கி ஒரு ஆள அனுப்பி விடுவாரு. அப்புடி வச்சுருந்த மகன, ஜெயில்ல போட்டுப் பத்தொன்பது மாசமா என்ன கொடுமைப் படுத்துனாங்க! அமெரிக்காவுல இருந்து வந்து இறங்குன புள்ளய, கொலைக் குத்தவாளிய புடிக்கிற மாதிரியில்ல குண்டுக்கட்டா பிடிச்சுத் தூக்கிட்டுப் போனாங்க! அத்தோட விட்டாங்களா, இம்புட்டுப் பெரிய மனுஷன் வீட்டுக்குள்ள போலீஸ்காரங்க நொழைஞ்சு சோதனை போட்டாங்களே. அதை இந்த ஊரே கூடி வேடிக்கை பாத்துச்சே! இந்த வேதனைகளை எல்லாம் நாங்க தாங்கிக்கிட்டோம். ஆனா, மறக்க முடியாதே! இதையெல்லாம் மனசுல வச்சுத்தான், ‘அந்தம்மா சகவாசம் வேணாம்யா’னு சொன்னேன்.’’
"எல்லாம் இருக்கட்டும்...நீங்கள் குற்றம்சாட்டும் அதே ஜெயலலிதாதானே கூட்டணிக்குத் தூது விடுகிறார் என்கிறார்கள்... அதை ஏற்றால் தப்பென்ன?"
"அவங்களுக்குப் பதவி ஆசை... அதனால பழசை எல்லாம் மறந்துட்டு, கூசாம கூட்டணிக்குக் கூப்புடுறாங்க. ஆனா, பட்ட துன்பத்தை நாங்க மறந்துட முடியுமா? ஒரு பேச்சுக்கு, அந்தம்மா கூட்டணிக்கு வைகோ போறான்னு வச்சுக்குவோம், அப்ப மேடைக்குமேடை இம்புட்டு, அம்புட்டுல இருந்து பெரிய மனுஷன் வரைக்கும் ‘வைகோ... வைகோ’னுட்டு இவம்பேர சொல்லுவாங்க. அதை அந்தம்மாவால தாங்கிக்கிட முடியாது. அந்தம்மா மனசும் அத ஏத்துக்கிடாது.’’
ஜெயலலிதாகிட்ட நாற்பது தொகுதிகளும், அதுக்கு செலவு செய்ய நாற்பது கோடி ரூபாய்க்கும் வைகோ சரண்டர் ஆகிட்டதாகக்கூட பேச்சு வந்ததே?
"பணத்துக்கோ, பதவிக்கோ ஆசைப்படறவனில்லை வைகோ. அரசியலுக்கு வந்து நாங்க எதையும் சம்பாதிச்சுக் கிடல. அட்டை கம்பெனி, பெட்ரோல் பங்க், பண்ணை வீடு, புஞ்சைக்காடு... இப்புடி ஏகப்பட்ட சொத்துகளை இழந்துருக்கோம். அதனால பணம் அவனுக்குப் பெரிசில்ல!’’
இடையில் நடந்த குழப்பங்களை சாக்காக சொல்லி, தி.மு.க. அணியில் வைகோவுக்கு ஸீட் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டால்..?
"இப்ப வைகோ, தன்னோட முடிவ தெளிவா சொல்லிட்டான். இப்ப பந்து, கருணாநிதி கையில இருக்கு. வைகோவோட செல்வாக்குத் தெரிந்து ம.தி.மு.க&வுக்குத் தொகுதிகள குடுக்கணும் கருணாநிதி. அவன் கேக்குறது நியாயமா இருந்தா குடுக்கட்டும். இல்லாட்டி குறைச்சுக்கட்டும். அவரு என்ன செய்யப் போறாருனு யாரு கண்டது? ஆனா அவரு குடுத்தாலும், குறைச்சாலும் வைகோவுக்கு உள்ளது உள்ளபடி இருக்கும். அதுக்காக அவன் கூட்டு மாறமாட்டான்.’’
தி.மு.க&வைவிட தாராளமாகத் தொகுதிகளை விட்டுத் தருவதாக ஜெயலலிதாசொன்னால்..?
"அந்தம்மா நூறு தொகுதிகளைக் குடுத்தாக்கூட வேணாம். இது சம்பந்தமா ஜெயலலிதாவே நேருல கூப்புட்டுப் பேசினாலும் எம்புள்ள எம்பேச்ச தட்டிட்டு, அந்தப் பக்கம் போகமாட்டான்.’’
வைகோவைக் கூட்டணியில தக்க வைக்கிறதுக்காகக் கருணாநிதி வீட்டுப் பெண்கள் உங்களிடமும், உங்கள் மருமகளிடமும் பேசியதாக சொல்கிறார்களே...?
"என்கிட்ட அப்படி யாரும் பேசல. ஒருக்கா மருமகள்ட்ட யாராச்சும் பேசியிருப்பாங்க...
கூட்டணி முடிவை அறிவித்தபிறகு மகன்கிட்ட பேசுனீங்களா?
"நேத்திக்கிப் பேசுனேன். 'மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்குப்பா'னு சொன்னேன். அவனும் நிம்மதியா இருக்கற மாதிரி சிரிச்சான்."
நன்றி: ஆனந்த விகடன்
Posted by IdlyVadai at 2/25/2006 02:33:00 PM 4 comments
காளிமுத்து - கலைஞர் சந்திப்பு !
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமியின் மகன் கஜராஜன் இருதய ரத்தகுழாயில் அடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை 6.30 மணி அளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று கஜராஜனை பார்த்தார். அங்கிருந்த ஆற்காடு வீராசாமியிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் அதே ஆஸ்பத்திரியில் கீழ்தளத்தில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவையும் கருணாநிதி சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
அவருடன் தி.மு.க. துணை பொது செயலாளர் மு.க.ஸ்டாலின், தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோரும் சென்றனர்.
Posted by IdlyVadai at 2/25/2006 08:19:00 AM 13 comments
Friday, February 24, 2006
எனக்கு தி.மு.க-அ.தி.மு.க.தான் போட்டி - விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். படித்து பாருங்கள் ஜாலியா இருக்கு.
கேள்வி: 1 மாத சுற்றுப் பயணத்தில் எப்படி உணர்ந்தீர்கள்?
பதில்: 12 மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தேன். மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். வெற்றி கண்ணுக்கு தெரிகிறது.
கே: கூட்டணி வைப்பது இல்லை என்ற முடிவை மாற்றும் எண்ணம் உண்டா?
ப: என் முடிவில் மாற்றம் இல்லை.
கே: தனித்து நின்றால் வெற்றி பெற முடியுமா?
ப: ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறவன் முதலில் வரவேண்டும் என்று தான் நினைக்க வேண்டும். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். எம்.ஜி.ஆர். படைத்த வரலாற்றை நான் படைக்க கூடாதா?
கே: தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?
ப: ஜோசியம் எல்லாம் பார்க்ககூடாது. முதலிடத்தில் வருவேன் என்று ஏற்கனவே கூறிவிட்டேனே.
கே: தேர்தல் சின்னம் முடிவு செய்து விட்டீர்களா?
ப: மனதில் இருக்கிறது. இப்போது கூற முடியாது.
கே: நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்?
ப: எல்லா தொகுதியும் என் தொகுதிதான். பண்ருட்டியில் கூட நான் போட்டியிட பண்ருட்டி ராமச்சந்திரன் மனு செய்துள்ளார்.
கே: பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?
ப: 60 சீட் வரை ஒதுக்குவேன். இப்போதே 40 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
கே: அறிமுகம் இல்லாத வேட்பாளர்களால் உங்கள் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமா?
ப: அந்தந்த தொகுதியில் உள்ளவர்களை மக்களுக்கு தெரியாதாப அதில் பிரச்சினை ஒன்றும் இருக்காது.
கே: வாரிசு அரசியலை வரவேற்கிறீர்களா?
ப: மக்கள் ஏற்றுக் கொண்டால் யார் வேண்டுமானாலும் வரலாம். வாரிசு அரசியலை நான் எப்போதும் எதிர்க்கவில்லை.
கே: உங்கள் மனைவி தேர்தலில் போட்டியிடுவாரா?
ப: இல்லை.
கே: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் 2-ம் கட்ட தலைவர்கள் யாரும் இல்லையே?
ப: எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது யார் இருந்தார்கள். மதுரை முத்து, கே.ஏ. கிருஷ்ணசாமி எல்லாம் அதன்பிறகு தானே வந்தார்கள்.
கே: தேர்தல் செலவை சமாளிக்க என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்?
ப: சந்திப்போம், சமாளிப்போம். மக்கள் ஓட்டு போட்டால் போதும்.
கே: தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு கிராமங்களில் உள்ள செல்வாக்கு நகர்புறத்தில் இருப்பதாக தெரியவில்லையே?
ப: அப்படி இல்லை. நகர்புறத்திலும் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது.
கே: அ.தி.மு.க.வை விட தி.மு.க.வை அதிகம் தாக்கி பேசுவது ஏன்?
ப: அப்படி இல்லை. 2 கட்சிகளையும் சமமாகத்தான் தாக்கி பேசுகிறேன்.
கே: பா.ம.க.வை விமர்ச் சிப்பது இல்லையே?
ப: எனக்கு தி.மு.க-அ.தி.மு.க.தான் போட்டி.
கே: நீங்கள் அரசியலுக்கு வந்த பிறகு உங்கள் சக நடிகர்கள் வேறு கட்சிக்கு அதிகளவில் சென்று சேரு கிறார்கள். அது உங்களை தனிமைப்படுத்தும் திட்டமா?
ப: என்னை யாரும் தனி மைப்படுத்த முடியாது. சினிமாவில் தனியாக போராடியே ஜெயித்தேன். அரசியலிலும் ஜெயிப்பேன்.
கே: சினிமாவில் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் கள், உதவியை பெற்றவர்கள் பற்றி கடுமையாக தாக்கி பேசுகிறார்களே என்று வருத்தப்பட்டது உண்டா?
ப: இல்லை. அவர்கள் இருக்கிற இடத்திற்கு தகுந்தாற் போல் பேசுகிறார்கள். இதை தவிர்த்து தனிப்பட்ட முறையில் நண்பர்கள் தான்.
கே: சினிமா பைட்டை (சண்டை) சமாளித்ததால் அரசியல் பைட்டை சமாளித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா?
ப: சினிமாவில் சண்டை காட்சிகளில் நான்தான் அதிகம் ரிஸ்க் எடுப்பேன். ஆனால் அரசியல் பைட்தான் ரொம்ப கஷ்டமாக இருக்குது. இதையும் சமாளிப்பேன்.
கே: அரசியல் கட்சி தொடங்கியதால் உங்கள் சுதேசி, பேரரசு படத்தை வாங்க பயப்படுகிறார்களா?
ப: இல்லை. தியேட்டர் கிடைக்காததுதான் பிரச்சினை. சுதேசி 3-ந்தேதி ரீலிசாகிறது. பேரரசு அடுத்ததாக வெளி வரும்.
கே: முதல்வரானால் முதல் கையெழுத்து எதில் போடுவீர்கள்?
ப: அதை இப்போது கூறமுடியாது.
கே: சினிமாவில் போலீசாக அதிக படத்தில் நடித்தீர்கள். அவர்களுக்கு நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள்?
ப: மனிதாபிமான முறையில் நடத்துவேன். அவர்களை பழிவாங்க மாட்டேன்.
நன்றி: மாலை மலர்
Posted by IdlyVadai at 2/24/2006 05:06:00 PM 2 comments
Thursday, February 23, 2006
மீண்டும் ஒரு குட்டி கதை - ஜெ
2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் இன்று காலை நடந்தது.
இந்த விழாவில் விருதுகள் வாங்க திரையுலக நடிகர்- நடிகைகள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள் என ஏராளமான பேர் வந்திருந்தனர்.
முதல்-அமைச்சர் ஜெய லலிதா, விருதுகள் வழங்கசரியாக 11 மணிக்கு மேடைக்கு வந்ததும் விழா தொடங்கியது.
அனைவரையும் செய்தி- விளம்பரம் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வரவேற்றார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
தமிழ் திரைப்பட உலகின் கலைஞர்களே அரசு அலுவலர்களே, விழாவை காண திரளாக வந்திருக்கும் பொதுமக்களே உங்கள் அனைவருக்கும் எனது கணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
விழாவில் கலந்து கொண்டு தமிழக அரசின் திரைப்பட விருதுகளை நட்சத்திரங்களுக் கும், தொழில்நுட்ப கலைஞர் களுக்கும் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
2003-2004-ம் ஆண்டு திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகர்-நடிகைகள் மட்டு மல்லாமல் திரைப்பட உல கில் சகாப்தம் படைத்த பெருமைக் குரியவர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருதும் வழங்க உள்ளேன்.
வாழ்நாள் முழுவதும் கலை சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட கலைத்துறை வித்தகர்களையும் நான் பார்க்கிறேன்.
பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தர்ராஜன், எம்.எஸ்.ரஜேசுவரி, நகைச்சுவை நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த டி.பி. முத்துலட்சுமி, திரைப்பட டைரக்டர் கே.சங்கர், யோகா னந்த் இப்படிப்பட்ட வித்தகர்களையும் பார்க்கிறேன்.
இந்த வரிசையில் பி.லீலா அவர்களும் உண்டு. நானே அவரது பரம ரசிகை.
நெஞ்சை சுண்டி இழுக்கும் பாடலை பாடும் பி.லீலா அவர்களுக்கு மத்திய அரசின் பத்மவிபூஷன் விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தேன். ஆனால் காலம் கடந்து அவருக்கு கிடைத்தது.
91-96-ம் ஆண்டிலே நான் முதல்-அமைச்சராக இருந்த போது பி.லீலாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கினேன்.
கலைத்துறையில் அப்படி சேவை செய்தவர்களுக்கு கடந்த காலத்தில் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டிருக்கும் என நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் கடந்த ஆட்சி காலத்தில் வழங்கப்படவில்லை.
இத்தகைய கலைத்துறை சாதனையாளர்கள் ஊக்கு விக்கப்பட்டிருக்கிறார்களா? என்றால் இல்லை.
எனவே கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களின் பட்டியலை கொண்டு வர சொல்லி கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட் டிருக்கிறதா என பார்த்தேன்.
டி.எம்.சவுந்தரராஜன், பி.லீலா அவர்களுக்கு அந்த விருது வழங்கப்படவில்லை என்றால் அந்த விருதுக்கே மரியாதை இல்லை என கருதி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்தேன்.
பி.லீலாவுக்கு விருது அறிவிக்கும்போது அவர் உயிருடன் இருந்தார். ஆனால் இந்த விருது வழங்கும்போது அவர் நம்மிடம் இல்லை.
அவர் மறைந்தாலும் அவர் பாடிய அற்புத பாடல்கள் இன்றும் நம்முடன் உள்ளது.
கலைத்துறையில் உச்சத்தில் இருக்கும் எல்லோரும் பொருள் ஈட்டலாம், வீடு, சொத்து சேர்க்கலாம்.
ஆனால் அதை எல்லாவற் றையும் விட இப்படிப்பட்ட அரங்கத்தில் கிடைக்கும் கை தட்டல்தான் அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். இவை தான் கலைஞர்களுக்கு கிடைக்கும் உற்சாக மூச்சு, உந்து சக்தி இந்த பாராட்டுதான்.
மற்றவர்களை மகிழ்விக்கும் திரையுலகினர் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஊக்கத்தை யும் மகிழ்ச்சியையும் உருவாக்க தமிழக அரசு இந்த விருது வழங்குகிறது.
தமிழ் திரை உலகம் என்தாய் வீடு. பரிசு வழங்குவது தமிழக அரசு. இவற்றை வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏற்கனவே சாதனை புரிந்த பெரியவர்களையும் இவ்விழாவில் கவுரவிக்கிறோம்.
பொதுவாக எந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போதும் நாம் ஒரு எச்சரிக்கையுடன் இருப்போம்.
இப்படி பேசினால் தவ றாகிவிடுமோ, அப்படி சொன்னால் தவறாகி விடுமோ என உள்ளுக்குள் ஒரு நினைப்பு இறுக்கும். இது எல்லோருக்கும் உள்ள ஒன்றுதான்.
நம்மை அறியாமலேயே ஒரு இருக்கம் இருக்கும். ஆனால் அதே வேளையில் அது நம் வீடு என்றால் அந்த இறுக்கம் இருக்காது.
அதேபோல்தான் இங்கு என் தாய் வீட்டு இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உணர்வு எனக்கு உள்ளது.
தமிழ் திரை உலகம் அழிந்து போகும் சூழ்நிலையில் இருந்த போது அதற்கு புத்துணர்ச்சி ஊட்ட நடவடிக்கைகள் மேற் கொண்டேன்.
திருட்டு வி.சி.டி.களை ஒழித்தது, வரி விதிப்பு முறைகளை மாற்றம் செய்தது? குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களுக்கு மானியத்தை உயர்த்தியது, தியேட்டர்களின் கேளிக்கை கட்டணத்தை நீக்கி நடவடிக்கை எடுத்தது, இத்துறையை அழிவில் இருந்து காப்பாற்றினேன்.
என்னை வளர்த்து விட்டது திரைப்படதுறை. அதை என்றென்றும் மறக்க மாட்டேன்.
இந்த சமயத்தில் ஒரு கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
ஒரு ஊரிலே காய்கறி வியாபாரி, பழ வியாபாரி, மண் பாண்ட வியாபாரி, கண்ணாடி பொருள் விற்கும் வியாபாரி இருந்தனர்.
இவர்களுக்கு வாடகைக்கு ஒட்டகம் கொடுக்கும் ஒருவர் இருந்தார். அவர்களோடு ஒட்டக வியாபாரி கூட்டு அமைத்து கொண்டு ஊருக்கு நன்மை செய்வதாக கூறினார்.
டெல்லி சந்தையிலே பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ஊர் மக்களிடம் முன் பணமும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லி சந்தைக்கு சென்று இந்த வியாபாரிகள் பொருட்களை வாங்கினர். காய்கறி வியாபாரி காய்கறிகளை வாங்கினார். பழ வியாபாரி பழங்களை வாங்கினார். மண்பாண்ட வியாபாரி நிறைய மண்பாண்டங்களை வாங்கினார். கண்ணாடி வியாபாரி கண்ணாடி பொருட்களை வாங்கினார்.
எல்லாவற்றையும் ஒரு கயிற்றில் கட்டி ஒட்டகத்தில் ஏற்றினார்கள்.
ஒரு பக்க கயிற்றில் பழம்-காய்கறிகளையும், மறுபக்க கயிற்றில் கண்ணாடி, மண்பாண்ட பொருட்களையும் ஒட்டகத்தில் தொடங்க விட்டிருந்தனர்.
ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு இவர்கள் எல்லோ ரும் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வழியில் வியாபாரிகள் சோர்வடைந்து பின்தங்கி விட்டனர். ஆனால் ஒட்டக வியாபாரி மட்டும் ஒட்ட கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தார். நடந்து வந்த ஒட்டகம் ஒரு பக்க கயிற்றால் தொங்கிக்கொண்டிருந்த காய் கறிகளை இழுத்து தின்றது.
அகப்பட்டதை அந்த ஒட்டகம் இழுத்து இழுத்து தின்றது. பிறகு பழத்தையும் சாப்பிட்டபடி சென்றது. ஒட்டகம் சென்ற வழியில் காய்கறி பழங்கள் துண்டு துண்டாக மிச்சம் சிதறி கிடந்ததை பார்த்து பின்னால் வந்த வியாபாரிகள் அலறி யடித்து ஒட்டகம் அருகே ஓடினார்கள்.
ஒட்டகத்தை ஓட்டி சென்ற நண்பர் இதை பார்த்து கொண்டு தான் சென்றார். இதை தடுக்க அவர் முயற்சி எடுக்கவில்லை. ஒட்டக தீனி செலவு மிச்சம் என கருதி வேண்டுமென்றே அவர் அதை தடுக்கவில்லை.
நண்பா உனக்கு இரக்கம் இல்லையா என அவர்கள் கேட்டனர்.
இதற்குள் ஒருபக்க காய்கறி -பழங்களை ஒட்டகம் தின்றதால் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த மண்டபாண்டங்கள், கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்து நொறுங்கியது. ஒரு பக்கம் எடை குறைந்ததால் மறுபக்கம் தானாகவே பொருட்கள் கீழே விழுந்து நொறுங்கி விட்டது.
இந்த வியாபாரியை நம்பி பணம் கொடுத்த மக்கள் இதனால் ஏமாற்றப்பட்டு பெருத்த நஷ்டம் அடைந்த னர்.
சில மாதங்கள் கழித்து மீண்டும் இந்த வியாபாரிகள் (தி.மு.க. கூட்டணியினர்) கூட்டு சேர்ந்தனர்.
சென்னை சந்தைக்கு சென்று மலிவு விலையில் பொருட்கள் வாங்கி தருவதாக அவர்கள் கூறினர்.
ஆனால் அந்த மக்கள் இப்போது ஏமாற தயாராக இல்லை. அப்போது நம்பிக்கை துரோகம் செய்தது போல் சென்னை சந்தையை சொல்லி நம்பிக்கை துரோகம் செய்ய முடியாது.
ஏனென்றால் நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். தமிழக மக்களும் எங்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
அந்த மக்களை மகிழ்விக்க நீங்கள் சமுதாய பொறுப்புகளுடன் தமிழ் கலாசாரமும், சமூக நெறிகளையும் பாதுகாக்கும் வகையில் திரைப்படம் தயாரிக்க வேண்டும். தமிழக மக்களும் எங்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
திரையுலகத்தினருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.கலை கலைக்காக அல்ல, கலைஞருக்காக அல்ல, கலை மக்களுக்காக. மாமேதைகள் சிலர் சிந்திக்க வேண்டிய கருத்துக்களை சொல்லி விட்டு போய் உள்ளனர்.
வாழ்க்கை என்பது பள்ளிக்கூடம். நாம் எங்கே திரும்பினாலும் புதிதாக கற்றுக் கொள்ள ஏதோ இருக்கும்.
நீங்கள் எந்த பாதையை தேர்ந்தெடுத்தாலும் எங்கே சென்றாலும் திறமையை வளர்த்து நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும்.
இன்று சாதனை படைக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களை தெரிவித் துக்கொள்கிறேன்.
தமிழ் திரை உலகத்தினருக்கு 2 மகிழ்ச்சியான தகவல்களை தெரிவிக்கிறேன்.
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களுக்கு மானியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தேன். இதற்கான காசோலை நாளையே வழங்கப்படும்.
இன்னொன்று திரைப்படத்துறைக்கு வழங்கப்படுவது போல் தொலைக்காட்சி கலைஞர்களுக்கும் அரசு விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு முதல் தொலைக்காட்சி துறைக்கும் தமிழக அரசின் விருது வழங்கப்படும்.
செய்தி: மாலை மலர்
படம்: குமுதம்
Posted by IdlyVadai at 2/23/2006 04:12:00 PM 3 comments
Wednesday, February 22, 2006
Tuesday, February 21, 2006
போட்டுத்தாக்கு
உள்கட்சி பூசல் இல்லாமல் கட்சியை நடத்துவேன்- புதிய காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ( அப்போ கட்சியில நீங்க மட்டும்தான் இருப்பீங்கன்னு சொல்லுங்க )
ஜாமீன் கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் - ஜெயலட்சுமி (சீக்கிரம் வாங்க அப்பதான் சரியான போட்டியா இருக்கும் )
ஊழலுக்கு மூலகாரணம் திமுக, அதிமுக தான் - விஜயகாந்த் ( நல்ல கண்டுபிடிப்பு, இந்த ஆண்டு நோபல் பரிசு உங்களுக்கு தான் )
வைகோ அ.தி.மு.க பக்கம் போவார் - செய்தி ( பொடா சட்டத்தில் 19 மாதம் இருந்ததற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது டிரை பண்ணுங்க)
காப்பி அடிப்பதைத் தடுக்க தேர்வு மையங்களில் வீடியோ கேமரா - பிகார் அரசு அறிவிப்பு ( மாணவர்கள் என்ன ப.ஜ.க எம்பிக்களா வீடியோவிற்கு போஸ் கொடுக்க )
ரயில்களில் வழங்கப்படும் 'சிக்கன்' உணவு தாற்காலிக நிறுத்தம் - செய்தி ( சிக்கன உணவுன்னு சொல்லுங்க )
தாம்பரத்தில் குடிநீர் குழாயில் மீன்கள் - செய்தி ( தேர்தல் நேரத்தில் எல்லாம் இலவசம் போலும்)
இவ்ளோ நாளு சினிமாவுல அடிவாங்கிக்கிட்டு இருந்தேன். இனிமே கருணாநிதிக்கு என்னோட பேச் சால மரண அடி தரப்போறேன்னு சொன்னேன். பின்ன என் னங்க? அம்மா எது செஞ் சாலும் பாயாசத்துல உப்பு இல்ல; சாம் பார்ல சர்க்கரை இல்லன்னு குறை சொல்லிக் கிட்டே இருக்காரு. கேபிள் "டிவி' விஷயத்துல மக்களுக்கு நல்லது பண்ணின அம்மாவுக்கு எதிரா பேசிக் கிட்டு இருக்காரு. இவரு உண்மையிலேயே மாவீரன்னா... ஒண்டிக்கு ஒண்டி தேர்தல்ல மோதணும். ஏழு பேரைக் கூட்டிகிட்டு வர்றாரு... அதான் எனக்கு கோபம்..." - நடிகர் செந்தில் ( கவுண்டமணியிடம் வாங்கிய திட்டு+அடி போதவில்லை என்று நினைக்கிறேன் )
Posted by IdlyVadai at 2/21/2006 11:50:00 PM 3 comments
சுபம், பயம், மாயம் !
எவ்வளவு நாள் தான் பத்திரிகைகள் சினிமா நடிகர்/நடிகைகளைப் பற்றிக் கிசுகிசு எழுதுவார்கள்; ஒரு மாறுதலுக்கு பத்திரிகை/எழுத்தாளர்கள் பற்றி கிசுகிசு...
* அவர் ஒரு எழுத்தாளர்; ஆறு மணிக்கு டிவியில் 'வந்தே மாதரம்' முடிந்தவுடன் பிரபலங்களைப் பேட்டி எடுப்பார். ஒரு நாள் 'தீர்த்தம்' கொஞ்சம் ஓவராகப் போய், ஏதோ சில உண்மைகளை ஒளறிவிட்டார். அதை, தற்போது 'குங்குமம்' வைத்துக்கொள்ளும் ஒரு எழுத்தாளர் பாக்கு சாப்பிட்டுக்கொண்டே கேட்டுவிட்டு 'ரிப்போர்டர்'-க்குப் போட்டுக்கொடுக்க, பேட்டி எடுக்கும் எழுத்தாளர், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுபம்!
* இவர் புதுசாக சினிமாவிற்கும் வசனம் எழுத ஆரம்பித்திருக்கிறார். இவர் ஒரு பக்கக் கதை எழுதினாலும் ஒரு விழா வைக்க ஏற்பாடு செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார். அதனால் இவரை கண்டால் எல்லா பதிப்பகங்களும் 'துண்டைக் காணோம்! துப்பட்டாவைக் காணோம்!!' என்று தலைதெறிக்க ஓடுகிறார்கள். பயம்!
* ஒரு பிரபல வார பத்திரிக்கையில் எழுத்தாளர்களை பற்றி வந்த தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது; அதில் அந்த தொடர்க்கு வரைந்த ஓவியரின் பெயர் மற்றும் அவரைப் பற்றிய விபரங்கள் மட்டும்...மாயம்!
தொடரும்...
Posted by IdlyVadai at 2/21/2006 11:30:00 AM 2 comments
Monday, February 20, 2006
திமுக கூட்டணியில் மதிமுக தொடரும்: - வைகோ
திமுக கூட்டணியில் மதிமுக இருக்குமா அல்லது இருக்காதா என்று கடந்த சில நாள்களாக இருந்து வந்த சந்தேகங்கள் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணி வெற்றிக்குப் பாடுபடப்போவதாக வைகோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் அக்கட்சியின் தொண்டர்களும் மனம் காயப்படும் வகையில் சொல்லப்பட்ட கருத்துகளுக்காக அவர் அந்த அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்துப் பூர்வாங்கமாகப் பேசிவிட்ட நிலையில் கட்சி நிர்வாகிகளுடனும் மாவட்டச் செயலாளர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் வைகோ.
Posted by IdlyVadai at 2/20/2006 02:54:00 PM 6 comments
செய்தியும் படமும்
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு கைகளில் விலங்கிட்டு அதனை அரசின் சாதனையாக தெரிவித்துள்ளனர். பின்னர் எதிர்ப்பு கிளம்பவே அதனை மறைக்கும் அளவிற்கு இரவோடு இரவாக ஜெ படம் வைக்கப்பட்டது!
Posted by IdlyVadai at 2/20/2006 12:58:00 PM 3 comments
Saturday, February 18, 2006
முடிவு வைகோ கையில் - கருணாநிதி
கூட்டணியில் இருப்பதா என்ற முடிவு வைகோ கையில் - கருணாநிதி
திமுக கூட்டணியில் இருப்பதா என்பது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கையில் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் பேரவைத் தொகுதிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் விபரம் அளிக்கும்படி ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி பாமக, இந்திய .யூனியன் முஸ்லீம் லீக் விபரங்களை தந்திருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை தொகுதிகளின் பட்டியலை தருவதாக கூறியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி அதன் தமிழக தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி 25ஆம் தேதி சென்னை வரும்போது அப்பட்டியல் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறது.
ஆனால், மதிமுக தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை. அவர்கள் ஏதோ முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. முடிவு செய்திருந்தால் எங்கள் முடிவுப்படி நாங்கள் நடந்து கொள்வோம் என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
Posted by IdlyVadai at 2/18/2006 04:08:00 PM 2 comments
Friday, February 17, 2006
திமுக கூட்டணி !
திமுக தொகுதி பங்கீடு 90% முடிந்துவிட்டது என்று தெரிகிறது.
இந்த முதல்கட்ட திட்டப்படி காங்கிரஸ் - 35, பா.ம.க., - 25, ம.தி.மு.க., -18, மார்க்சிஸ்ட் - 10, இந்திய கம்யூனிஸ்ட் - 9 என்ற கணக்கில் தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்படும் 25 தொகுதிகளில் 5 தொகுதிகள் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு செல்லும் என்று தெரிகிறது. தி.மு.க., 130 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் எஞ்சியுள்ள ஏழு தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் தமிழ்தேசம், மூ.மு.க., ஆகிய சிறிய கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதால் தி.மு.க., 137 தொகுதியில் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
(படம் நன்றி : ஆ.விகடன் )
Posted by IdlyVadai at 2/17/2006 02:15:00 PM 2 comments
Thursday, February 16, 2006
ரஜினிகாந்த் சொன்ன 2 குட்டிக் கதைகள்
இப்போது குட்டி கதை சீசன் என்று நினைக்கிறேன்.
கே.பாலசந்தர் டைரக்டு செய்துள்ள `பொய்' பட விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு 2 குட்டி கதைகள்சொன்னார்.
``அஸ்தினாபுரத்தில் பீஷ்மர் தனது பேரன்களுக்கு மல்யுத்தம், வில்யுத்தம் கற்றுக்கொடுக்க ஒரு குருவை தேடினார். அந்த குரு வேறு யாருமல்ல. துரோணர்.
திருதராஷ்டிரன் போய் துரோணரிடம் குருவாக இருக்கும்படி கேட்டார். அப்போது துரோணர், ``சிஷ்யர்களை நான்தான் தேர்வு செய்வேன் என்றார். அதன்படி எல்லா சிஷ்யர்களுக்கும் ஒரே மாதிரி உடையுடுத்தி, நடக்க- உட்கார சொல்லி அவர்களின் சாமுத்ரிகா லட்சணத்தை பரிசோதித்தார்.
ஏனென்றால், அவருடைய உத்தி வீணாகி விடக்கூடாது என்பதால்தான். துரோணர் போல்தான் பாலசந்தர் சார்.
என் முதல் குருவும் அவர்தான். முதல் ரசிகரும் அவர்தான். எனக்கு சிகரெட்டை தூக்கிப்போட்டு ஸ்டைல் கற்றுக்கொடுத்தவர் அவர்தான். இப்படி செய்... ஜனங்களுக்கு பிடிக்கும் என்று சொல்லிக் கொடுத்தவர் அவர்தான்.
என்னை வாழ வைத்த தெய்வம், பாலசந்தர். அவர் எனக்கு தொழிலை மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை. எனக்கு கஷ்டங்கள் ஏற்பட்டபோது, முன்னால் வந்து நின்று என் கஷ்டங்களை போக்கினார். ஆனால் அவருக்கு துன்பம் ஏற்பட்டபோது, நான் போய் முன்னால் நிற்கவில்லை. அதற்காக, அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
ஒரு ஊரில் இரண்டு பேர் தவம் இருந்தார்கள்.
அவர்கள் கனவில் கடவுள் தோன்றி, அந்த இடத்துக்கு போ. அங்கே ஒரு குரு இருப்பார். நீங்கள் கேட்டதை கொடுப்பார்'' என்றார்.
அதன்படி அவர்கள் இரண்டு பேரும் அந்த குருவை சந்தித்தார்கள். ``உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று குரு கேட்டார். ஒருவன் சொன்னான் எனக்கு பணம், பெயர், புகழ், பட்டம், பதவி வேண்டும் என்றான். எடுத்துக்கொள்'' என்று குரு சொன்னார்.
இன்னொருவன், ``எனக்கு நிம்மதி மட்டும் போதும்'' என்றான். ``எடுத்துக்கொள்'' என்றார் குரு.
5 வருடங்கள் கழித்து அந்த குரு, பணம் கேட்ட சிஷ்யனை சந்தித்தார். ``எனக்கு பணம் வந்தது. ஆனால் நிமëமதி இல்லை'' என்று சொன்னான். நிம்மதி கேட்டவன், ``எனக்கு நிம்மதி இருக்கிறது. சந்தோஷம் இல்லை என்றான்.
பணம் கேட்டவனிடம் ``நீ சம்பாதித்த பணத்தை நீயே வைத்துக் கொண்டாய் அதனால்தான் நிம்மதி இல்லை'' என்று குரு சொன்னார்.
அடுத்த 5 வருடங்கள் கழித்து அந்த குரு அவனை சந்தித்தபோது, ``நீங்க சொன்னபடி நிறையபேருக்கு உதவி செய்தேன். ஆனால் உதவி பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் வந்து உதவி கேட்கிறார்கள்'' என்றான்.
``ஒருவனுக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே. புதுசு புதுசாக வருகிறவர்களுக்கு உதவி செய். அல்லது பணத்தை கொண்டு போய் ஆற்றில் போடு'' என்று குரு சொன்னார்.
பணம் நிறைய வந்தாலும், இஷ்டப்பட்ட தொழிலை செய்தால்தான் நிம்மதி கிடைக்கும். அதை செய் என்று குரு அறிவுரை சொன்னார்.
பாலசந்தர் சார் பணம் வருவதாக இருந்தால் கூட அதை விரும்பாமல், அவர் விருப்பப்பட்ட தொழிலைத்தான் செய்வார். இதேபோல் அவர் இன்னும் பத்து வருடங்கள், பதினைந்து வருடங்கள் டைரக்டு செய்து பல புதுமுகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்''
Posted by IdlyVadai at 2/16/2006 02:15:00 AM 5 comments
Wednesday, February 15, 2006
போட்டுத்தாக்கு
காளிமுத்து வார்த்தைகளை நம்பி வைகோ ஏமாற மாட்டார் - கருணாநிதி ( என் வார்த்தைக்கு தான் ஏமாறுவார் என்று படிக்கவும் )
கருணாநிதியிடம் இன்று தோழமைக் கட்சிகள் பட்டியல் ( கம்மியா கேளுங்க சார், அப்புறம் தோழமை இல்லாமல் போய்விடும் )
"கை' உன் கை அருகில்
"பம்பரம்' உன் பை அருகில்
"மாம்பழம்' உன் மடியில்
"செங்கொடிகள்' உன் கையில்
வைகோ போவது வேறு கைக்கோ
அப்படி பத்திரிகைகள் எழுதுவது
வெறும் "சைக்கோ' - கவிஞர் வாலி
( "போ என்றால் போய்கோ" என்று கலைஞர் எண்ணியிருப்பார் )
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்ற முடிவு ஓராண்டிற்கு முன்பே எடுத்தது - பொன்.ராதாகிருஷ்ணன் ( அடங்குங்கப்பா )
மத்தியில் கூட்டணி ஆட்சிவேண்டும்; மாநிலத்தில் வேண்டாம் என்பது நியாயமா? - விஜயகாந்த் ( சார் இது சினிமா இல்லை அரசியல் )
தமிழக காங்கிரஸýக்கு புதிய தலைவர் - செய்தி ( எந்த காங்கிரஸுக்கு ? )
""வெள்ளரிப்பழத்தை வெள்ளிப் பூட்டு போட்டு பூட்டி வைத்தாலும், அது வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதுபோல் தி.மு.க., கூட்டணியும் நிச்சயம் உடையும். இதை யாராலும் தடுக்க முடியாது...' - காளிமுத்து ( சார் உங்களுக்கு தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்)
திருடர்கள் வந்தாலும் அ.தி.மு.க., கதவு திறந்தே இருக்கும் - காளிமுத்து ( ஐயோ! )
வைகோ செல்போனில் என்னுடன் பேசியது உண்மையே - காளிமுத்து ( ஒரு ரூபாய் என்றவுடன் எல்லோருடனும் பேசரீங்க போல )
ஜோரா கை தட்டுங்க ( நன்றி தினமலர் )
* கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து நிச்சயம் வெற்றி பெறுவோம். கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கியே தீருவோம்-வைகோ (28.8.2005)
* முதல்வர் பதவி கருணாநிதிக்கு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளதா- வைகோ (1.5.2001)
* தமிழுக்காக மட்டுமல்ல, வரும் சட்டசபை தேர்தலிலும் திருமாவளவனுடன் இணைந்து நிற்பேன். அவரை தி.மு.க., கூட்டணியில் சேர்ப்பேன்-ராமதாஸ் (7.1.2006)
* தமிழகத்தில் ஜாதி சண்டை வர வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார். அதனால் தான் "அடங்க மறு, அத்து மீறு' என்று பேசி வரும் கும்பலுடன் (விடுதலைச் சிறுத்தைகள்) கூட்டணி வைத்துள் ளார்- ராமதாஸ் (10.4.2001).
* தமிழ்நாட்டில் பேயாட்சி நடக்கிறது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை- மணிசங்கர் அய்யர்(23.10.2005)
* அ.தி.மு.க., கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இதற்காக நான் ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டவும் தயார்- மணிசங்கர் அய்யர்(1.4.2001)
Posted by IdlyVadai at 2/15/2006 03:23:00 PM 15 comments
Tuesday, February 14, 2006
காதலர் தின வாழ்த்துக்கள் !
படத்தில் இருப்பவர்கள் தான் கண்ணை மூடிகொண்டு இருக்கிறார்கள்.
நீங்க அப்படி இருக்காதீங்க : -)
[ படத்தை கிளிக் செய்தா பெரிசா தெரியும் ]
கடைசி செய்தி: "எல்லை மீறாமல் காதலர்கள் அன்பை காட்டவேண்டும்" - சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்
Posted by IdlyVadai at 2/14/2006 11:15:00 AM 3 comments
Monday, February 13, 2006
தமிழ்மணத்தில் வைரஸ் !
தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை ! கொஞ்ச நாள்களாக தமிழ்மணத்தில் இரண்டு வைரஸ்கள் எல்லோரையும் பாடாய்ப் படுத்துகின்றன. அவை பற்றி அடிக்கடி கேட்க நினைக்கும் கேள்விகள்
இந்த வைரஸ்களை எப்படிக் கண்டுபிடிப்பது ?
கண்டுபிடிப்பது சுலபம். தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் இவர்களின் படம்/பதிவு எங்கு பார்த்தாலும் இருக்கும்.
அதனால் யாருக்கு என்ன பாதிப்பு ?
பெரிய பாதிப்பு கிடையாது. உங்கள் பதிவு மறைந்து போகும் அவ்வளவுதான். தமிழ்மணம் தளத்திற்கு வருபவர்களுக்கு BP ஏறும்.
ஐயோ! சரி இவர்களை எப்படி அடையாளம் காண்பது ?
தமிழ்மணத்துக்குள் போனால் ஒரே படம் நிறையா முறை தெரிந்தால் வைரஸ் வந்துள்ளது என்று அறியலாம். கண்ணாடி கழட்டிவிட்டு பார்த்தாலும் அப்படியே தெரியும்.
வேறு எதாவது அடையாளம் ?
அது வேண்டாமே!.
எப்படித் தப்பிப்பது ? ஏதாவது தடுப்பு மருந்து இருக்கிறதா ?
சுலபம், இவர்கள் எப்போது தூங்குவார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தூங்கியபின் பதிவு போடவேண்டும்.
வேறு எதாவது வழி ?
முச்சந்தி விநாயகருக்கு 108 தேங்காய், தமிழ்மணத்தின் பெயரில் அன்றைய நட்சத்திரத்தின் மேல் அர்ச்சனை செய்யலாம்.
வைரஸ் தாக்கினால் என்ன செய்யலாம் ?
வைரஸால் பதிவுகள் எழுதி மறைந்துவிட்டால், பிளாகரில் ஏதோ கோளாறு, அதனால் மீண்டும் பதிவு செய்கிறேன் என்று சொல்லாம். 'திரும்பிப் பார்க்காமல்' ஓடலாம்.
அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளில் வைரஸ் இருக்கிறதா ?
இருக்கின்றன. அவை டோண்டூவிற்குச் சொந்தம்
எதனால் வருகிறது ?
நிறைய பதிவு வைத்திருப்பவர்கள், ரிடையர் ஆனவர்கள் போன்றவர்களால் வருகிறது.
வேறு ஆலோசனைகள் ?
1. தமிழ்மணத்தில் ஓரத்தில் பதிவு போட நல்ல நேரம்(இவர்கள் தூங்கும் நேரம்) என்று ஒரு பகுதி வைக்கலாம்.
2. இவர்களுக்கென்றே தமிழ்மணத்தில் ஒரு பக்கம் ஒதுக்கலாம்.
3. தேன்கூடை நாடலாம்.
[ இன்று - காதலர்கள் தினத்தன்று எடிட் செய்யபட்டது ]
Posted by IdlyVadai at 2/13/2006 12:50:00 PM 65 comments
போட்டுத்தாக்கு
கட்சிக்கரை வேஷ்டி, துண்டுகளுக்கு "ஆர்டர்' குவியத் துவங்கி உள்ளது. இதில் மற்ற கட்சிகளை விட அ.தி.மு.க., கரை வேஷ்டிகளுக்கு அதிகளவில் "ஆர்டர்' வந்துள்ளது - செய்தி ( சரிதான் தேர்தல் முடிந்தவுடன் தலையில் போட்டுக்க இப்போவே ரெடியா ?)
அரசியலில் எனது போட்டியைச் சமாளிக்கவே பல்வேறு திட்டங்கள், சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து வருகிறார் - கோவையில் விஜயகாந்த் ( என்ன சார் ஆச்சு ? நல்லாதானே இருந்தீங்க ? )
மூங்கில் காட்டில் தீ ஏற்பட்டால் சந்தன மரமும் எரிந்து சாம்பலாகும். திமுக கூட்டணியில் உள்ள நல்லவர், நியாயமானவர் வெளியேற வேண்டும். துரியோதனன் கூட்டத்தில் இருந்த துரோணர், பீஷ்மர், கர்ணன் போன்ற நல்லவர்களும் மாண்டனர். நல்லவரான கர்ணன் வெளியேற வேண்டும். நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். பாண்டவர் அணிக்கு வந்தால் வாழலாம். இதை வைகோ உணர்ந்தால் சரி - காளிமுத்து. ( அப்போ சகுனி யார் ? நீங்களா ?)
ஜெயலலிதாவுடன் சந்திப்பு மிகவும் சுமூகமான முறையில் நடைபெற்றது - விஜய டி.ராஜேந்தர் ( அடிவாங்காமல் வந்தார் என்று படிக்கவும் )
பஸ்சில் செல்லும் போது துணை நடிகையிடம் ரூ.20 ஆயிரம் அபேஸ் திருடன் தப்பி ஓட்டம் - செய்தி ( துணை நடிகையானாலும் துணைக்கு யாராவது வைத்துக்கொள்ள வேண்டும் )
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி: பாஜக பரிசீலிக்கும் - வெங்கய்ய நாயுடு பேட்டி ( அடுத்த தேர்தலுக்கா ? )
"மோகமுள் படத்துக்குப் பிறகு நான் ஒப்பந்தமான படம் தான் "உன் நினைவாக!' இந்த படத்தோட வேலை 70 சதவீதம் முடிஞ்சப் பிறகு திடீர்ன்னு படத்தை நிறுத்திட்டாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அதே படம் "காதல் கோட்டை' ங்கிற பேர்ல, அகத்தியன் இயக்கத்தல ரிலீசாச்சு. நான் நடிச்ச ஒவ்வொரு காட்சியிலயும் அஜீத் நடிச்சிருந்தாரு. அந்த காட்சிகளை பார்க்கப் பார்க்க என் மனம் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருக்கும்ன்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க. அந்தப் படத்துல மட்டும் நான் நடிச்சிருந்தேனா, இந்நேரம் அஜீத் இடத்துல நான் இருந்திருப்பேன்...- டிவி நடிகர் அபிஷேக் ( சாமியே சரணம் ஐயப்பா )
.நீதி வழங்குங்கள் - கருணாநிதி வேண்டுகோள் ( நீதியா ? நிதியா ? சரியா சொல்லுங்க )
இதோ, கரை போட்ட வேட்டி, கையில கட்சி கலரில் மோதிரம். இது தான் நம்ம அரசியல் கெட்அப். எப்போதும் இப்படி தான் இருப்பேன். இனிமேலும் இப்படி தான் இருப்பேன் - விஜயகாந்திடம் உங்களின் அரசியல் "கெட்அப்' மாறுமா என்ற கேள்விக்கு ( தேர்தலுக்கு பின் ? மொட்டையா ? )
Posted by IdlyVadai at 2/13/2006 07:43:00 AM 0 comments
Saturday, February 11, 2006
கூகிள் டிரைவ்
Posted by IdlyVadai at 2/11/2006 06:20:00 PM 1 comments
பட்டாளி மக்கள் கட்சி
பா.ம.க., ராமதாசுக்கு திடீரென தமிழ் மீது பாசம் வந்துவிட்டது. இனி கட்சியினர் எல்லாரும் தங்கள் இனிஷியலைக் கூட தமிழில்தான் போட்டுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறந்தது. இதற்கும் ஒரு படி மேலே போய் வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு பதில் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கு உதவியாக ஆங்காங்கே தமிழ் அகராதி போல விளக்கப் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து பல இடங்களில் பாட்டாளிகளின் முயற்சியால் விளக்க போர்டுகள் வைக்கப்பட்டன. குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில் அப்படி வைக்கப்பட்ட ஒரு போர்டில் "பாட்டாளி மக்கள் கட்சி' என்ற வாசகம் "பட்டாளி மக்கள் கட்சி' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஊரைத் திருத்தும் முன்னர் தங்கள் கட்சியினரை ராமதாஸ் முதலில் திருத்த முயற்சிக்க வேண்டும் என்று கிண்டல் அடிக்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.
செய்தி, படம் தினமலர்
Posted by IdlyVadai at 2/11/2006 09:40:00 AM 4 comments
மகாபாரதமும் மாமிபாரதமும்
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக அணியில் சேர வைகோ முன்வர வேண்டும் என்று அதிமுக அவைத் தலைவர் கா. காளிமுத்து அழைப்பு விடுத்தார்:
மூங்கில் காட்டில் தீ ஏற்பட்டால் சந்தன மரமும் எரிந்து சாம்பலாகும். திமுக கூட்டணியில் உள்ள நல்லவர், நியாயமானவர் வெளியேற வேண்டும். துரியோதனன் கூட்டத்தில் இருந்த துரோணர், பீஷ்மர், கர்ணன் போன்ற நல்லவர்களும் மாண்டனர். நல்லவரான கர்ணன் வெளியேற வேண்டும். நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். பாண்டவர் அணிக்கு வந்தால் வாழலாம். இதை வைகோ உணர்ந்தால் சரி !
காளிமுத்து கதைக்கு வைகோ தொண்டன் பதில் இங்கே
அதை தொடர்ந்து இன்று கருணாநிதி கண்ட கனவு -
துரியோதனன் அணியில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியேறி அதிமுக அணிக்கு வர வேண்டும் என சட்டப் பேரவை முன்னாள் தலைவர் கா. காளிமுத்து சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
அதை நினைவுபடுத்தி விளக்கம் அளிக்கும் வகையில் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
துரியோதனன் அணியில் இருந்து கர்ணனை தங்கள் பக்கம் வருமாறு பாண்டவர்கள் அழைப்பதைப் போல கனவு கண்டேன். உரையாடல் செல்போனில் நடந்தது.
முதலில் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் செல்போனில் பேசுகிறார். உன்னை போன்ற உத்தமர்கள் துரியோதனர் பக்கம் இருக்கக் கூடாது. எனவே, எங்கள் பக்கம் வந்துவிடு என்றார் அவர்.
பின்னர் செல்போனை வாங்கி பாஞ்சாலி பேசுகிறார். பாரதப் போரில் எங்கள் பக்கம் வந்து உதவலாமே. வெல்லப் போவது நாங்கள் தான் என்று அவர் கூறினார்.
""பாஞ்சாலியின் நம்பிக்கையைப் பாராட்டுகிறேன். ஆனால், வெற்றியினால் மட்டும் ஒருவரின் பெயரும் புகழும் நிலைத்திருப்பதில்லை. மகாபாரத யுத்தம் நடந்து முடிந்து, இப் போராட்டம் பற்றிய கதை மட்டும் வாழ்கிற போது, மனைவியைப் பணயம் வைத்து சூதாடியவன் தர்மன் என்பதும், சாவு சதிராடும் போர்க்களத்தில் கூட கொடை கொடுத்த வள்ளல் கர்ணன் என்பதும் அழியாத அத்தியாயங்களாக இருக்கும்'' என்று கர்ணன் சொல்கிறார்.
""ஆனாலும், ஒன்று சொல்கிறேன். அன்று பாரதப் போர் நடந்ததை நினைவில் வைத்துக் கொண்டு ஏமாந்து போகாதீர்கள். அந்தப் போரில் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் ஜெயித்துவிட்டீர்கள். அது வேறு யுகம். இது உங்கள் பாஷைப்படி கலியுகம். எங்கள் பாஷைப்படி ஜனநாயக யுகம். இந்த யுகத்தில் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளுக்கும், பாஞ்சாலியின் பசப்புகளுக்கும் இடம் இல்லை. அவை எடுபடாது. வெற்றி எங்களுக்குதான்'' என்று கர்ணன் மேலும் சொல்கிறார்.
இதன் பிறகு கர்ணனின் சிரிப்பொலியில் கண் விழித்தேன் என கூறியுள்ளார் கருணாநிதி.
Posted by IdlyVadai at 2/11/2006 03:26:00 AM 1 comments
Friday, February 10, 2006
அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு: ஆய்வுத் தகவல்
இப்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்காக மார்க்கெட்டிங் மற்றும் டெவலப்மெண்ட் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இத் தகவல் தெரிய வந்துள்ளது.
இதை இந்தியா பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த எஸ். தியாகராஜன் தெரிவித்தார்.
ஆய்வு முடிவுகள் பற்றி அவர் தெரிவித்த தகவல்கள்:
அதிமுகவுக்கு 44.5 சதவீத வாக்காளர்களும், திமுக கூட்டணிக்கு 43.7 சதவீத வாக்காளர்களும் ஆதரவாக உள்ளனர். இது அதிமுகவுக்கு 146 முதல் 151 தொகுதிகள் வரை பெற்றுத் தரும். திமுக அணிக்கு 78 முதல் 83 தொகுதிகள் வரை கிடைக்கும்.
தனியே போட்டியிடப் போவதாகக் கூறியுள்ள பா.ஜ.க.வுக்கு 1.5 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் எந்தத் தொகுதியிலும் அக் கட்சி வெற்றி பெற முடியாது.
சுயேச்சைகள் மற்றும் இதர சிறிய கட்சிகளுக்கு 10.3 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் 7 முதல் 9 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும்.
அதிமுகவுக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்ததைவிட 14.5 சதவீதம் அதிக ஆதரவு கூடியிருக்கிறது.
இந்த ஆய்வு நடந்தபோது 14 சதவீதம் பேர் வாக்குப் பதிவு நேரத்தில் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகக் கூறினர். அப்படி மாறும்போது அரசியல்கட்சிகளின் வெற்றி வாய்ப்பு மாறும்.
இப்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்களில், பலர் தேர்தலின்போது முடிவை மாற்றலாம் என தெரிகிறது. இதனால் திமுக அணி பாதிக்கப்படும்.
வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா?: கடந்த 5 ஆண்டுகளில் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா என்று கேட்கப்பட்டது. 30 சதவீதம் பேர் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதாகக் கூறினர். எந்த மாற்றமும் இல்லை என 58 சதவீதம் பேரும், மோசமடைந்திருப்பதாக 12 சதவீதம் பேரும் கூறினர்.
இல்லத்தரசிகளிடம் இதே கேள்வியைக் கேட்டதில் 27 சதவீதம் பேர் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தனர். எந்த மாற்றமும் இல்லை என 62 சதவீதம் பேரும், மோசமடைந்திருப்பதாக 11 சதவீதம் பேரும் கூறினர். மாணவர்களில் 42 சதவீதம் பேர் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்றனர். 50 சதவீதம் பேர் மாற்றம் இல்லை எனவும், 8 சதவீதம் பேர் மோசமடைந்திருப்பதாகவும் கூறினர்.
2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளில் 30 சதவீதம் பேர் தரம் உயர்ந்ததாகவும், 60 சதவீதம் பேர் மாற்றம் இல்லை எனவும் 10 சதவீதம் பேர் மோசமடைந்திருப்பதாகவும் கூறினர்.
2 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளில் 42 சதவீதம் பேர் முன்னேற்றம் இருப்பதாகவும், 53 சதவீதம் பேர் மாற்றம் இல்லை எனவும், 6 சதவீதம் பேர் மோசமடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
நல்ல முன்னேற்றம் இருப்பதாக இருக்கும் உணர்வுகள் வாக்குகளாக மாறுமா என ஆராயப்பட்டது. வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதாகக் கூறியவர்களில் 75 சதவீதம் பேர், இப்போது தேர்தல் நடந்தால் அதிமுகவுக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறினர்.
சாலை, கழிவுநீர் அகற்றல், குடிநீர், பொதுக் கழிப்பிடம், தெருவிளக்கு, போக்குவரத்து, மருத்துவமனை, மின்சாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வாக்காளர்கள் முக்கியத்துவம் கொடுப்பது ஆய்வில் தெரிய வந்தது.
2004-ல் மக்களவைத் தேர்தலில் அதிமுக தோற்ற பிறகு இலவச சைக்கிள் திட்டம், சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தியது, விவசாயிகளுக்குக் காப்பீட்டு வசதி, சுனாமி மற்றும் வெள்ள நிவாரணம் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதா தலைமையிலான அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
ஏழைகளுக்கு இலவச ஆடைகள், விதவை மற்றும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், பள்ளிகளில் இலவச உணவு ஆகியவையும் அரசின் சாதனைகளாகக் கருதப்படுகின்றன.
ரேஷன் அட்டை விநியோகத்தில் குளறுபடி இந்த அரசுக்கு எதிராக அமையும் என 25 சதவீத வாக்காளர்கள் தெரிவித்தனர். புயல், வெள்ள நிவாரணம் சரியாக வழங்கவில்லை என 20 சதவீதம் பேர் கூறினர். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்ததற்கு 15 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆட்சியில் திருப்தி: 62 சதவீத வாக்காளர்கள் ஜெயலலிதா ஆட்சியில் திருப்தி தெரிவித்தனர். 2004 மார்ச் மாதத்தில் 34 சதவீதம் பேர் மட்டுமே இந்த ஆட்சியில் திருப்தி தெரிவித்திருந்தனர்.
முந்தைய திமுக ஆட்சியைவிட இந்த ஆட்சி நன்றாக இருந்தது என பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருதுகின்றனர்.
அடுத்த முதல்வர் பதவிக்கு ஜெயலலிதாவுக்கு 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இப்போது முடிவெடுக்காத வாக்காளர்கள், வெற்றி வாய்ப்புள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என 56 சதவீதம் பேரும், திமுகவுக்கு 41 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர்.
கிறிஸ்தவர்கள், நாயுடு சமூகத்தவர்கள் தவிர மற்ற சமூகத்தவர் அனைவருமே தங்கள் சமூகத்தவர்களின் நலன்களை அதிமுக பாதுகாப்பதாகக் கூறினர்.
பல்வேறு தரப்பு மக்களில் திமுகவைவிட அதிமுகவுக்கு 15 முதல் 17 சதவீதம் பேர் அதிகமாக ஆதரவு தெரிவிக்கின்றனர். படித்தவர்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.
கிராமப் பகுதிகள், மகளிர் மற்றும் படிக்காதவர்கள் மத்தியில் அதிமுகவுக்கு அதிகமான ஆதரவு இருக்கிறது. நகர்ப்புறம், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் மத்தியில் திமுகவுக்கு சற்று அதிகமான ஆதரவு இருக்கிறது.
சுய உதவிக் குழுக்களுக்கு உதவி, விவசாயிகளுக்குக் காப்பீடு மற்றும் இலவச மின்சாரம், அன்னதானத் திட்டம் ஆகியவை அதிமுகவுக்கு பரவலாக ஆதரவைப் பெருக்கியுள்ளது.
மாணவர்கள், அரசு ஊழியர் மற்றும் பெரிய விவசாயிகளிடம் திமுகவுக்கு கூடுதல் ஆதரவு இருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களில் 90 சதவீதம் பேர் இப்போதும் அதே கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். திமுகவுக்கு முன்பு வாக்களித்தவர்களில் 73 சதவீதம் பேர் மட்டுமே இப்போது அக் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்.
கடந்த முறை பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் 85 சதவீதம் பேர் இப்போது அதிமுகவை ஆதரிக்கின்றனர். காங்கிரûஸ ஆதரித்தவர்களில் 30 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இடதுசாரிகளை ஆதரித்தவர்களில் 45 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல பா.ம.க.வை ஆதரித்தவர்களில் 11 சதவீதம் பேரும், ம.தி.மு.க.வை ஆதரித்தவர்களில் 17 சதவீதம் பேரும் இப்போது அதிமுகவை ஆதரிக்கின்றனர்.
நன்றி: தினமணி
Posted by IdlyVadai at 2/10/2006 12:13:00 PM 0 comments
கரடி விட்ட ஜெ - கலைஞர்
ஜெ சொன்ன குட்டி கதைக்கு கலைஞர் அறிக்கை
குட்டிக் கதை ஒன்றை கோயம்பேடு மாநாட்டில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஜெயலலிதா சொன்ன கதையில் அவர் அறிவிக்கும் சலுகைகளும், திட்டங்களும் கம்பளி மூட்டை போல காணப்பட்டாலும் உண்மையில் அது ஏமாந்தவர்களைக் கடித்துக் குதற காத்திருக்கும் கரடி என்பதை அவரே மனம் திறந்து வெளியிட்டிருக்கிறார். கதவு திறந்திருக்கிறது என்று கூறியவர் இப்போது கம்பளி மூட்டையைக் காட்டுகிறார். மனந் திறந்து அது கம்பளியல்ல; கரடி என்பதை இந்தக் கதை மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த மர்மத்தை முன்கூட்டியே கூறியதற்காக நாடு அவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறது.
கதவை திறந்து வைத்துப் பார்த்தார், இப்போது கரடி விட்டுப் பார்க்கிறார். இவரது கோயம்பேடு கோலாகலத்தையும் கரடிவிடும் வேலைகளையும் பிப்ரவரி 8 கூட்டணி கட்சிகளின் உறுதி வாய்ந்த முழக்கம், முடக்கிப் போட்டு விட்டது என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை.
- கலைஞர் கருணாநிதி
Posted by IdlyVadai at 2/10/2006 07:37:00 AM 3 comments
Thursday, February 09, 2006
'குரங்கு அப்பம் பகிர்ந்த' கதை
திமுகவுக்கு 140-க்கும் குறையாமல் தொகுதி தேவை - கலைஞர் கருணாநிதி
குரங்கு பூனைகளுக்கு அப்பம் பகிர்ந்து கொடுத்த கதை உங்களுக்குத் தெரியும்தானே?
நன்றி: மதி, தினமணி
Posted by IdlyVadai at 2/09/2006 10:48:00 PM 1 comments
'கரடி' கதை
தமிழக முதல்வர் திரும்பவும் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார். நேற்று அவர் சொன்ன கரடி கதை -
அது ஒரு மழைக்காலம். ஆறுகளில் புது வெள்ளம் பொங்கி வருகிறது. ஆற்றின் கரையோரத்தில் நின்ற 4 பேர் அக்கரைக்குச் செல்வது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது நடு ஆற்றில் கருமையான, மூட்டை போல ஏதோ ஒன்று மிதந்து வந்தது.
உடனே, "அது என்ன என்று பாரப்பா!' என்றான் ஒருவன். "அது, ஒரு கம்பளிபோல் தெரிகிறதே'! என்றான் இரண்டாமவன். "ஆமாம், கம்பளியேதான்,'என்றான் மூன்றாவன்.
தைரியசாலியான நான்காவது ஆள், "இதை மழைக் காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று கூறி ஆற்றில் குதித்து கம்பளியைத் தாவிப் பிடித்தான்.
ஆனால், கம்பளி மூட்டை போன போக்கிலேயே அவனும் வெள்ளத்தில் போனான்.
உடனே மற்ற மூவரும், "கம்பளியை விட்டு, விட்டு கரைக்குத் திரும்பு,' என்று கத்தினர்.
வெள்ளத்தில் சிக்கியவனோ, தனது நண்பர்களை நோக்கி, "நான் எப்போதோ கம்பளியை விட்டு விட்டேன். அதுதான் என்னை விடமாட்டேன்,' என்கிறது என்றான்.
உண்மையில், அது கருப்பு மூட்டை கம்பளி அல்ல. அது ஒரு நிஜமான கரடி.
வெள்ளத்தில் சிக்கிய கரடி தனக்கு ஏதாவது பற்று கிடைக்காதா, கரை சேர முடியாதா எனத் தவித்துக் கொண்டிருந்தது.
தனது உடலை மூட்டை போல சுருட்டிக் கொண்டு மிதந்தது. இதை நம்பி ஏமாந்து தன்னைப் பிடித்துக் கொண்டவனை வெள்ளத்தில் அமுக்கிக் கரை சேரப் பார்த்தது கரடி.
ஆனால், கரடியிடம் மாட்டிக் கொண்டவன் ஏமாளி அல்ல. தனது கால்களைப் பயன்படுத்தி கரடியிடம் இருந்து தப்பி கரை சேர்ந்தான் அவன்.
உடலைக் காக்க உதவும் என நினைத்த கம்பளி, உண்மையில் உயிரைப் பறிக்கக் காத்திருந்த கரடி என்ற விவரம் தாமதமாகத் தான் நண்பர்களுக்குத் தெரிந்தது.
இந்தக் கதையில் கரடி யார் என்பதையும், அப்பாவி நண்பர்கள் யார் என்பதையும் உங்களது ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.
தகவல் : தினமணி
Posted by IdlyVadai at 2/09/2006 11:06:00 AM 3 comments
Wednesday, February 08, 2006
கேலி சித்திரமும் கலவரமும்
இதை பற்றிய மேலும் தெரிந்துக்கொள்ள - [ http://en.wikipedia.org/wiki/Jyllands-Posten_Muhammad_cartoons_controversy ]
ஓட்டு பெட்டி இருக்குது பார் மேலே !
{ முடிவுகள் }
சரியா ? (26) 41%
தவறா ? (37) 59%
Posted by IdlyVadai at 2/08/2006 01:57:00 PM 10 comments
Tuesday, February 07, 2006
போட்டுத்தாக்கு
ஒரு நாள் போட்டிக்கான அணியில் மீண்டும் இடம்பெறுவேன் - கங்குலி உறுதி ( நல்லா விளையாடுவேன் என்று என்னிக்கு உறுதி எடுக்கப்போறீங்க ? )
ஒரு நாள் போட்டிகளில் பரிசோதனை முயற்சிகளில் இறங்க மாட்டோம்: திராவிட் ( சரியா விளையாடலைனா பிரேதபரிசோதனை தான் )
லட்சுமி விலாஸ் வங்கி லாபம் ரூ. 8 கோடி ( லட்சுமின்னு பேர் வெச்சி லாபம் வரலைனா எப்ப )
புதிய தமிழகம் கட்சி 150 இடங்களில் போட்டியிட முடிவு ( புதிய தமிழகத்தில் தான் இவர்கள் போட்டி போட முடியும் )
பின்லேடனைப் பிடிச்சா 10 கோடி கொடுப்போம் - அமெரிக்க அதிபர் புஷ் ( அப்படின்னா அந்த 10 கோடியை எனக்குக் கொடுங்க. பின்லேடனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.)
விமான நிலைய ஆணைய ஊழியர்கள் வேலைநிறுத்ததால் விமான நிலையம் குப்பை கூளமானது - செய்தி ( குப்பைகளை சுத்தம் செய்ய தனியாரிடம் விடப்போகிறீர்களா )
தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க கூட்டணிக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்க மாட்டோம் - மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன் ( கமெண்ட் தேவையா ?)
லட்சம் கிராமங்களில் கணினி உதவியுடன் தகவல் சேவை மையங்கள் - மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ( நிறைய கிராமங்களில் மின்சாரமே இல்லை அதுக்கு முதல்ல வழி செய்யுங்க )
எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை - ப.ஜ.கா ( கூட்டணி குழப்பமே இல்லாத ஒரே கட்சி )
Posted by IdlyVadai at 2/07/2006 12:23:00 PM 5 comments
Monday, February 06, 2006
Friday, February 03, 2006
போட்டுத்தாக்கு
ஒட்டுமொத்த அணியினரின் ஆட்டமே தோல்விக்குக் காரணம் - இந்திய அணியின் காப்டன் ராகுல் திராவிட் ( நல்ல வேளை, தோல்விக்கு காரணம் பாக்கிஸ்தான் தான் என்று சொல்லாமல் போனாரே )
கூட்டணி பங்கீடு பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும் - இளங்கோவன் ( கட்சி FEமெலிடம் என்று சொல்லுங்க சார்)
புதிய முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவியேற்கிறார் - செய்தி ( பார்த்து சார், கடவுள் பெயரால்... என்பதற்கு பதில் கொடா பெயரால் என்று பதவியேற்க போகிறீர்கள் )
திமுக கூட்டணியில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு - கலைஞர் ( So எதோ பிரச்சனை இருக்கு )
வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் மட்டும் போட்டி - விஜயகாந்த் ( சினிமாவை விட அரசியலில் நல்ல காமெடி பண்ணுறீங்க )
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெறும் எண்ணம் இல்லை - கங்குலி ( அப்பா பெரிய கவலை விட்டது )
"மேடம் ராப்ரி தேவிக்கு ஒதுக்கியுள்ள எண். 10 சர்குலர் சாலையில் உல்ள புது வீட்டுக்குச் செல்லத் தயாராகி விட்டோம். சில ஆடுகள், மாட்டுச் சாணத்தைத் தவிர எஞ்சிய அனைத்தையும் புதிய வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டோம்" - ( இதற்கு நல்ல பின்னூட்டமிடலாம், சிறந்த பின்னூட்டம் நாளை தேர்வு செய்யப்படும் )
Posted by IdlyVadai at 2/03/2006 01:10:00 PM 8 comments
Thursday, February 02, 2006
வராக் வராக் வராக்
நமது இந்திய அரசாங்க சட்டப்படி உணவுப் பொட்டலங்களைப் பொறுத்தவரை அது சைவமாக இருந்தால் பச்சை முத்திரையும் அசைவமாக இருந்தால் மெரூன் முத்திரையும் குத்தியிருக்க வேண்டும். எந்த உணவு தயாரிப்பாளராவது முத்திரையை மாற்றிக் குத்தியிருந்தால் பல வருடங்கள் கம்பி எண்ண வேண்டும். எல்லாம் சரி, அப்படியிருந்தால் ஸ்வீட் கடைக்காரர்கள் பலரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? சைவம் முத்திரை குத்தப்பட்ட பாதி இனிப்புகள் பாலினால் செய்யப்பட்டவை. பால் சுத்த சைவம்தானே. எதற்காக கைது செய்ய வேண்டும் என்று நீங்கள் குழம்பினால், உங்களுக்கு பகீர் செய்தி ஒன்று காத்திருக்கிறது!
மைதா மாவினாலோ, பாலிலோ செய்யப்பட்ட இனிப்புகள் சைவம்தான். ஆனால் அதன் மீது ஜிலு ஜிலு என்று மின்னும் ஜிகினா அசைவம் என்றால் உங்களால் நம்ப முடியாது. இந்த மினு மினு ஜிகினா எப்படி தயாரிக்கப்படுகிறது என்ற கதை ஸ்வீட் கடைக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இந்த ஜிகினாவை இந்தியில் ‘வராக்’ என்பார்கள். இதற்கு பின்னே ஒரு பயங்கர சோகம் இருக்கிறது. ஆயிரக்கணக்கான வாயில்லா ஜீவன்கள் இதற்காக கொல்லப்படுகின்றன.
நெஞ்சில் துணிவிருந்தால் மேலே படிக்கலாம். இந்தத் தொழிலுக்கு தோல் ரொம்ப மிருதுவாக இருக்க வேண்டியது அவசியம். நல்ல ஆரோக்கியமான செம்மறி ஆடு, வெள்ளாடு போன்ற கால்நடைகளை தேர்ந்தெடுத்து வெட்டிச் சாய்க்கிறார்கள். அவற்றின் தோலை உரித்து பிரமாண்ட அண்டாவிலிருக்கும் தண்ணீரில் ஊற வைக்கிறார்கள். அந்த தண்ணீரை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்றுகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். புழு பூச்சிகள் நெளியும் துர்நாற்றம் பிடித்த அந்த அழுக்கு நீரில் கால்நடைகளின் தோல் 12 நாட்கள் ஊறிய பிறகு தோலை வெளியே எடுத்து மேலுள்ள முடியை சுத்தமாக அகற்றுவது அடுத்த கட்டம். முடி நீக்கப்பட்ட தடியான தோலிலிருந்து மேல் தோலுக்கு கீழுள்ள மிருதுவான மெல்லிய தோலை மட்டும் உறித்து விடுவார்கள்.
இந்த மெல்லிய தோலை மீண்டும் அரை மணி நேரம் ஊற வைத்தால் இன்னும் மிருதுவாகிவிடும். அதை மரப் பலகைகளில் போட்டு நன்றாக காய வைத்துவிட்டால் பாதி வேலை முடிந்தது. இந்த தோலை துண்டு துண்டாக வெட்டி பை போல செய்து விடுவார்கள். இந்த பைக்குள் Silver foil எனப்படும் மெல்லிய வெள்ளி ஷீட்களை உள்ளே தள்ளி விடுவார்கள். இப்போது இந்த பைகளை ஒன்றன்பின் ஒன்றாக புத்தகம்போல அடுக்கி பெரிய பைல்களுக்குள் வைத்து மூடி விட்டால் அடுத்தது பாடம் பண்ணும் வேலை ஆரம்பமாகும். பெரிய ஃபைல் என்பது ஆட்டுக் குட்டியின் பதனிடப்படாத மேல் தோலால் ஆனது.
இப்போது உருட்டுக் கட்டையால் ஃபைல்களுக்கு மேல் மூன்று மணி நேரம் அடித்துக் கொண்டே இருந்தால் உள்ளே தோல்பைக்குள் இருக்கும் சில்வர், தக்கைபோல பறக்கும் ஜிகினாவாகிவிடும்!
இந்த ஜிகினாவைத்தான் இனிப்புகள் மேல் ஓட்ட ஸ்வீட் கடைக்களுக்கு அனுப்புகிறார்கள். அதாவது 12, 500 கால்நடைகள் ஒரு கிலோ ஜிகினா (வராக்)விற்காக கொடூரமாக கொல்லப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் முப்பதாயிரம் கிலோ ஜிகினா, மிட்டாய் கடைகளில் இனிப்புகளில் சுற்றி விற்கப்படுகிறது. (அப்போது எத்தனை லட்சம் கால்நடைகள் வெட்டப்பட்டு ரத்தம் சிந்துகிறது என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்!) கட்டையால் அடிக்கும்போது ஜிகினாவிற்குள் மிருகங்களின் திசுக்கள் ஒட்டிக் கொள்ளுவதை தவிர்க்க முடியாது.
இன்னொரு வேதனையைக் கேளுங்கள். ‘ஜீவ ஹிம்சை கூடவே கூடாது, எறும்புக்கும் துன்பம் இழைக்கக் கூடாது’ என்று காலம் முழுவதும் போதிக்கும் ஜைனர்கள்தான், நான் மேலே சொன்ன ஜிகினாவை நாட்டிலேயே அதிகம் வாங்குபவர்கள்! அவர்கள் வாங்கும் ஸ்வீட்களில் மட்டுமல்ல, அவர்களது கடவுள் விக்ரஹங்களுக்கு அலங்காரம் செய்ய லட்சக் கணக்கான கால்நடைகளை கொன்று அதன் தோல் மூலம் பாடம் பண்ணப்பட்ட இந்த ஜிகினாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
வட இந்தியாவில்தான் இந்த ‘வராக்’ அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அதுவும் எங்கே? புத்தர்களின் புனித ஸ்தலமான கயா உள்பட பாட்னா, பகல்பூர், முஸாஃபர்பூர், கான்பூர், மீரட் போன்ற நகரங்களில்! இந்துக்களின் புனிதமான வாரணாசியில் ‘வராக்’ அமோகமாக தயாரிக்கப்படுவது இன்னொரு அதிர்ச்சித் தகவல்!
வராக் எனப்படும் இந்த ஜிகினா மின்னும் இனிப்புகள் உடம்பிற்கு மிகவும் கெடுதல். சம்பந்தப்பட்ட இந்த ஸ்வீட்களை பண்டிகை நேரங்களில் நாம் விரும்பிச் சாப்பிடும்போது வயிறு ‘டம்’ மென்று இருக்கும். காரணம், உள்ளே போயுள்ள ஜிகினா ஜீரணமே ஆகாது!
அந்த சில்வரின் தரம் அங்கீகரிக்கப்பட்ட 99.9 சதவிகிதத்தைவிட மிகவும் கம்மி. இதனால் கேன்சர் உள்பட பல வியாதிகள் வர வாய்ப்புள்ளது. நமது நாட்டில் உணவுப் பொருட்களில் என்னென்ன உள்ளன என்பது குறித்து விரிவாக ஆராய்ச்சி நடத்தியுள்ள புனாவைச் சேர்ந்த ‘ப்யூட்டி வித்அவுட் குருயாலிட்டி’ என்கிற என்.ஜி.ஓ. நிறுவனம்தான் இந்த திடுக் உண்மைகளை அண்மையில் போட்டு உடைத்துள்ளது!
புது வருடத்தில் இந்த பிரச்சினையை நான் நிச்சயம் விடப் போவதில்லை. ஸ்வீட் கடைக்காரர்கள் தாங்கள் விற்கும் இனிப்பு பாக்கெட்டுகள் மீது அசைவ முத்திரை குத்தாததற்கு அவர்களை நீதிமன்றத்திற்கு இழுக்கப் போகிறேன். பார்த்துவிடலாம், எத்தனை பேர் கடையை இழுத்து மூடுகிறார்கள் அல்லது ஜெயிலுக்கு போகிறார்கள் என்று!
(நல்லதைச் சொல்கிறேன் - மேனகா காந்தி - நன்றி : குமுதம் )
Posted by IdlyVadai at 2/02/2006 11:46:00 AM 4 comments
Wednesday, February 01, 2006
நம்முடைய பணம்.
குஷ்பு, குட்டி ரேவதி போல் க்வாட்ரோச்சி விவகாரம் அவ்வளவு சீரியஸ் இல்லை என்பதால் வலைப்பதிவுகளில் அவ்வளவாக யாரும் விவாதிக்க வில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி கிடையாது!. சீரியஸ் தான்.
ஒரு ஃபிலாஷ் பேக். இருபது வருடத்திற்கு முன்பு...
1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடமிருந்து 5,400 கோடி ரூபாய் விலை குடுத்து, பீரங்கிகள் வாங்குவது என்று இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த சமயத்தில் ஜெர்மனியிலிருந்து இந்திரா காந்தி அரசு அப்போது வாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் விவகாரத்தில் ரூ.150 கோடி லஞ்சம் பெறப்பட்டது என்கிற செய்தி வெளிவர ஆரம்பித்தது. விசாரணை செய்ய உத்தரவிட்ட வீ.பி.சிங்கை பதவியிலிருந்து ராஜிவ் காந்தி விலக்கினார்.
இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டு ரேடியோவில், 1986 ஆம் ஆண்டு ராஜிவ் அரசு பீரங்கி வாங்க லஞ்சம் பெற்றனர் என்று செய்தி வந்தது. ஹிந்து பத்திரிக்கை மூலம் ஊழலின் முழு உருவம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தொடங்கியது. ராஜிவ் காந்தி, சோனியா காந்திக்கு க்வாட்ரோச்சி பல தரகு வேலை செய்தார். க்வாட்ரோச்சி வெளிநாட்டில் சரண் புகுந்தார். அவருடைய வங்கி கணக்குகள் முடக்கபட்டன. முடகப்பட்ட தொகை 21 கோடி ரூபாய். க்வாட்ரோச்சி குற்றவாளி என்பதை கடைசி வரை நிருப்பிக்க முடியாமல் போகலாம். ஆனால், செய்திதாள்களில் ராஜிவ் காந்தி குடும்பத்தினரும் குவாட்ரோச்சிக்கும் உள்ள தொடர்பு/ஆதாரங்களை தெளிவாக வெளிப்படுத்திவிட்டன. சட்ட பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை அல்லது அரசு விடவில்லை அல்லது தாமதப்படுத்தி இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது அவ்வளவுதான்.
சி.பி.ஐ க்வாட்ரோச்சியின் மீதான வழக்கை கைவிடவில்லை; அவரை இந்திய நீதிமன்றம் முன் கொண்டு வந்து நிறுத்தும் முயற்சிகள் கைவிடப்படவில்லை; அவர் குற்றவாளியாக அறிவிக்கபட்ட நிலை மாறவில்லை என்று இருக்க, இந்திய அரசு பிரிட்டனிடம் க்வாட்ரோச்சியின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அவருடைய வங்கிக் கணக்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிபாரிசு செய்கிறது. ஓசைப்பட்டமல் இந்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் இதற்கு கூடுதல் சொலிஸிடர் ஜெனரலை பிரிட்டனுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கிறார்.
( இதற்கு முன்பும் இதே போல் ஒரு முயற்சி நடந்திருக்கிறது என்று செய்தியும் வெளியாகியுள்ளது )
வழக்கம் போல் பத்திரிக்கைகள் இதை அம்பலப் படுத்துகிறது. சி.பி.ஐ தன்னை கலந்தாலோசிக்காமல் பிரதமர் அலுவலகம் எடுத்த முடிவு என்கிறது. அதாவது சி.பி.ஐ குற்றவாளி என்று கூறுகிறது ஆனால் மத்திய அரசு அவருக்கு நிரபராதி என்று சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறது!.
15 வருடங்களாக க்வாட்ரோச்சி குற்றவாளி; அவர் மீதான குற்றப் பத்திரிகையை நாங்கள் வாபஸ் பெறவில்லை, அவர் மீது சர்வதேச எச்சரிக்கை தொடர்கிறது; அவர் இந்திய நீதிமன்றத்தில் நிறுத்துவது எங்கள் கடமை என்ற சி.பி.ஐ நான்கு நாட்களில் ஒரு பல்டி அடித்து சி.பி.ஐ முழுப் பொறுப்பேற்கிறது அதாவது க்வாட்ரோச்சி குற்றவாளி இல்லை என்கிறது.
க்வாட்ரோச்சியின் கணக்குகளை விடுவிக்கக் கூடாது என்று பொதுநல மனு உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட, அதனை விசாரித்து தடை போடும் முன் க்வாட்ரோச்சி பணத்தை எடுத்துவிட்டர்.
பட்ஜட் கூட்டத் தொடர் ஆரம்பித்தவுடன் இது பெரும் சர்ச்சையை ஆரம்பிக்கும். சட்ட அமைச்சர் ராஜினாமா செய்வார். கூட்டணி கட்சிகள் வாய் மூடி மெளனம் காக்கும் நாடகம் அரங்கேரும்.
சோனியா காந்திக்கு இந்த இத்தாலியர் உறவினர்களும் தப்பித்தால் போதும் இல்லையென்றால் இவ்வளவு ஓபனாக செய்திருப்பார்களா ? அல்லது சி.பி.ஐக்கு 15 வருடத்திற்கு பிறகு தீடீர் ஞானோதயம் வருமா ?
இந்த ஊழலில் கைமாறிய பணம் நம்முடையத அதாவது நம் வரிப் பணம். இது இந்திய மக்களுக்கு இந்த அரசு இழைத்த மிகப்பெரிய தூரோகம். அதுவும் ராணுவ சம்பந்தப்பட்ட குற்றம். தேசத்தின் பாதுகாப்பே கேள்விகுறியாகும் விஷயம்.
நீதி: காந்தி என்ற பெயர் முடிகிற எல்லோரும் காந்தியவாதி இல்லை
படம் உதவி : தினமணி
Posted by IdlyVadai at 2/01/2006 02:13:00 AM 10 comments