பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 30, 2006

இட்லிவடை கருத்துக் கணிப்பு - முடிவுகள் !



1. திமுக கூட்டணி தொடருமா ? [51 votes total]

தொடராது (27) 53%
தொடரும் (13) 25%
போகப்போக தெரியும் (11) 22%

2. அடுத்த முதல்வர் யார் ? [51 votes total]

ஜெயலலிதா (34) 67%
கலைஞர் (17) 33%

3. ரஜினி என்ன செய்வார் [49 votes total]

வாய்ஸ் கொடுப்பார் (0) 0%
நாய்ஸ் கொடுப்பார் (3) 6%
இமையமலைக்கு போவார் (46) 94%

4. விஜயகாந்தால் யாருக்கு லாபம் ? [51 votes total]

அ.தி.மு.க.வுக்கு (48) 94%
தி.மு.க.வுக்கு (3) 6%

5. மூன்றாவது அணி உருவாகுமா ? [45 votes total]

உருவாகும் (16) 36%
உருவாகாது (29) 64%


6. ஐந்து ஆண்டுகள் ஜெ ஆட்சி எப்படி ? [54 votes total]
சூப்பர் (14) 26%
சுமார் (32) 59%
மோசம் (8) 15%

ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றிகள் !

Read More...

Tuesday, January 24, 2006

இட்லிவடை கருத்துக் கணிப்பு

CNN-IBN, மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகம் பற்றி எந்த செய்தியும் இல்லை. அதனால் அதே ஸ்டைலில் Sparklit, மற்றும் இட்லிவடை சேர்ந்து நடத்தும் கருத்துக் கணிப்பு. நம்ம தமிழ் வலைப்பதிவாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

1. திமுக கூட்டணி தொடருமா ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

2. அடுத்த முதல்வர் யார் ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

3. ரஜினி என்ன செய்வார் ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

4. விஜயகாந்தால் யாருக்கு லாபம் ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

5. மூன்றாவது அணி உருவாகுமா ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

6. ஐந்து ஆண்டுகள் ஜெ ஆட்சி எப்படி ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

Read More...

Monday, January 23, 2006

சைவம் x அசைவம்

"இந்து சமயம் என்றால் அது சைவ சமயம் தான். திருமாவளவன் சைவ உணவு தான் சாப்பிடுகிறேன் என்றார். அவரை நாம் ஆசீர்வதிக்கிறோம். தலைவன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி! தன் தொண்டர் களும் சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என திருமாவளவன் உத்தரவிட வேண்டும். விடுதலை சிறுத்தைகள் சைவ உணவை உட்கொள்ள வேண்டும். மீனை விட்டு விடுங்கள். மாடு, ஆடு, ஒட்டகத்தை வெட்டாதீர்கள். இதுதான் ஜீவகாருண்யம்..." - மதுரை ஆதீனம்

"உணவுக்கு காய்கறிகளை மட்டுமே நாம் எடுத்துக் கொண்டால் அது நடக்காத காரியம். சைவ உணவு என்பது பல இடங்களில் மாறுபடுகிறது. வங்காளத்தில் பிராமண ஓட்டலுக்குச் சென் றால் அங்கே சைவ உணவு விடுதியில் மீன் இருக்கும். மீன் அங்கே சைவம். ஆதீனம் கொல்கட்டாவிற்குப் போய் பார்க்க வேண்டும். இல்லையேல் அவரை நான் அழைத்து போகிறேன். திருமாவளவன் சைவம் என்பது ஆதீனம் மூலம் தான் தெரிந்தது. சிறுத்தைகள் சைவமாக இருக்கக் கூடாது. கூண்டில் உள்ள சிறுத்தைகள், புலிகள், சிங்கங்களுக்கு சைவ உணவு கொடுக்க முடியாது..." - தி.க., வீரமணி.
( செய்தி: தினமலர் )

முன்பு நான் இதை பற்றி எழுதிய பதிவு : 'நான்' வெஜிடேரியன்!

Read More...

Sunday, January 22, 2006

கேபிள் சண்டை

பயமுறுத்தும் செய்தி : கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் சேவைகளை தமிழக அரசே ஏற்கிறது. இந்த கையகப்படுத்தும் மசோதா நேற்று தாக்கல் செய்யபட்டது.

பயந்தவர்கள்: கலைஞர் குடும்பம்.

இலக்கு : எஸ்.சி.வி., (சுமங்கிலி கேபிள்), ஹேத்வே.

உண்மையான இலக்கு : எஸ்.சி.வி

காரணம்: பொதுமக்கள் நலன்.

உண்மையான காரணம்: ஜெயா ப்ளஸ் செய்தி அலைவரிசையின் அப்லிங்கிங் வசதிக்கான உரிமத்தைக் கொடுக்காமல் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம்(தயாநிதி மாறன்) இழுத்தடித்தது.

சந்தோஷப் படுபவர்கள்: ராஜ் டிவி, விஜய் டிவி.

விலக்கு: Last Mile அப்பரேட்டர்கள் அல்லது உங்கள் வீட்டுக்கு வசூல் செய்ய வருபவர்கள்.

சிக்கலான நிலை : ஆளுநருக்கு

என்ன நடக்கும்: அடுத்த வாரம் தெரியும்.

என்ன நடக்கலாம்: குங்குமம், தமிழ் முரசு ஆகியவற்றை தமிழக அரசு ஏற்று நடத்தலாம்.

Read More...

Wednesday, January 18, 2006

பேச்சு போட்டி 18/01/2005

Image hosted by Photobucket.com வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்தே போட்டியிடும். தி.மு.க பற்றி எம்.ஜி.ஆர். கூறிய ரகசியங்களை வெளியிடுவேன் - விஜயகாந்த் பரபரப்பான அறிவிப்பு


தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் நிவாரண நிதி `தி.மு.க. கூட்டணி கட்சிகள் தடுக்கின்றன'
ஜெயலலிதா குற்றச்சாட்டு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்று கட்சி மேலிடத்தை வற்புறுத்தியுள்ளேன் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி

""அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி கல்யாண மண்டபத்துக்கு கார் பார்க்கிங் எங்கேன்னு கேட் டப்போ, முன்னாடி இருக் கற இடத்தைக் காட்டினாங்க. அப்புறம் மாநகராட்சி அந்த இடத்தை பூங்காவாக்கணும்னு பிரச் னையை ஆரம்பிச்சதும் சினிமாவில் செட் போடற மாதிரி திடீர்னு ரெண்டு சேர் போட்டு, கொஞ்சம் பூச்செடிகள் வெச்சு அதில் சாயங்காலம் ஆட் களை உட்கார வெச்சு அது ஒரு பூங்காவா தான் இயங்குதுன்னு காட்டினாங்களே... அரசாங்கம் கேட்டதும் அந்த இடத் தைத் தூக்கிக் கொடுத் திருக்க வேண்டியது தானே... அவங்ககிட்ட இல்லாத சொத்து சுகமா... காசு பணமா...? அறிவாலயத்து சொத்துக்கு ஆபத்துன்னா மட்டும் சட்டப்படி சாதிப்பாங் களாம்... என் மண்டபத் துக்கு பிரச்னைன்னா பெரிசா எடுத்துக்கக் கூடாதாம்... நல்ல காமெடிங்க இது! போக்குவரத்து வசதிக்காக கோயம்பேட்டில் பாலம் கட்டணும்ன்னு கல்யாண மண்டபத்தை இடிக்கப் போறீங்க... சரி, அதே மாதிரி சென்னையில் கோடம்பாக்கம் மேம் பாலம்ன்னு ஒண்ணு இருக்கே... தினம் தினம் டிராபிக்கில் திணறுதே அதை ஏன் சின்னதா கட்டினாங்கன்னு விசாரிச்சுப் பாருங்க, ஒரு வரலாறு இருக்கும். ஏன், ஸ்டாலின் மேயரா இருந்தப்போ அதை இடிச்சு இன்னும் பெரிசா கட்டியிருக் கலாமே... பாலத்துக்கு கீழே முரசொலி இருக்கு... அதனால் தான் அதைத் தொடலைன்னு மக்கள் சொல் றாங்களே, அது உண்மையா... பொய்யா? கோயம்பேடு பாலமா, கோடம்பாக்கம் பாலமா எது சென்னைக்கு முதலில் முக்கியம்ன்னு மக்களிடம் கேளுங்க சார், அவங்க பதில் சொல் வாங்க...!'' தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேட்டி.

""கோடம்பாக்கம் ஆற் காடு சாலையில் உள்ள பாலம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அந்தப் பாலம் கட்டப் பட்ட காலத்தில் முரசொலி அலுவலகம் அந்த இடத் தில் இல்லை. எனவே, புதிய அரசியல்வாதியாக உருவாகியுள்ள விஜயகாந்த் தனது திருமண மண் டபத்தின் ஒரு பகுதியில் பாலம் வருவதால், ஆத்திரத்தில் ஆலோசிக்காமல் தி.மு.க.,வையும், முரசொலி அலுவலகத்தையும் தேவை யில்லாமல் விமர்சிக்கிறார்...'' தென்சென்னை மாவட்ட தி.மு.க., செயலர் ஜெ.அன்பழகன் அறிக்கை.

வரும் சட்டப் பேரவைத் தேர்தலின்போது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் - தமிழ் மாநிலத் தலைவர்- நடிகர் கார்த்திக்

"எங்களை யாரும் ஏமாற்ற முடியாது. சிறுமைப்படுத்தவும் முடியாது. சென்ற தேர்தலை போல் ஒதுக்கவும் முடியாது. இனி எங்களுக்கு தோல்வி என்பதே கிடையாது. தகவல் பெறும் உரிமையை பொதுமக்கள் அனுபவிக் கும் நிலையில் வரும் தேர்தலில் ம.தி.மு.க., விற்கு எத்தனை இடம் என்ற செய்தியை சம்பந் தப்பட்டவர்கள் சொல்ல வேண்டும்.

எங்களுக்கு எத்தனை இடம்? எந்த இடம் என்பது தெரிந்து ஆகணும். நாட்களை கடத்தி சென்று கடந்த தேர்தலில் நாங்கள் பட்ட அனுபவம் எங்களுக்கு போதும். இனி அது நடக்காது. திராவிட இயக்க வரலாற்றில் வைகோவின் சாதனையை ஈ.வெ.ரா., அண்ணாதுரை கூட செய்தது கிடையாது...''

- ம.தி.மு.க.,வின் கொள்கை விளக்க அணி செயலர் நாஞ்சில் சம்பத்

""பா.ம.க.,வில் இருந்து விலகிய சிவகாமி வின் சென்ட் மற்றும் முருகவேல் ராஜன் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக விலை போனது நாடறிந்த உண்மை. இதில், மர்மம் எதுவும் இல்லை. இப்போது அவர்கள் பா.ம.க., வில் இருந்து விலகியதாக துரோக நாடகம் அரங்கேற்றப்பட்டு உள் ளது. சட்டசபையில் இருந்து பா.ம.க., பலமுறை வெளிநடப்பு செய்த போதும் இவர்கள் இரண்டு பேரும் எங்கள் கட்சிக்கு ஒத் துழைக்கவில்லை. எதிர்க் கட்சிகள் சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஓட்டளிப்பு நடத்திய போதும் பா.ம.க.,வுக்கு எதிராக செயல்பட்டனர். வளர்த்து ஆளாக்கியவர் களுக்கு துரோகம் செய்து விட்டு சேற்றை வாரி இறைக்கிற இந்த இரண்டு பேருடைய மனிதாபிமானமற்ற செயலை மக்கள் மன்னிக் கவே மாட் டார்கள்...'' - பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, அறிக்கை.

""கோஷ்டி பூசல் காங்கிரசில் மட்டுமில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளிலும் உண்டு. தமிழக காங்கிரசைப் பொறுத்த வரையில், தலைவர்களுக் குள் கருத்து வேறுபாடு இருப்பது இன்றைக்கு மட்டுமில்லை, எப்போதும் உண்டு. இருப்பினும், தலைமை எடுக்கும் முடிவு, அதன் பாதை, சோனியாவின் வழிகாட் டல் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை...'' - தமிழக காங்., தலைவர் வாசன்

""ஏ.சி.சண்முகம் புதிய நீதிக்கட்சி நடத்துகிறார். அது நீதிக்கட்சியா அல்லது சாதிக் கட்சியா என்பது வேறு விஷயம்... அவருடைய பண பலத் துக்கு, இன பலத்துக்கும் பயப்படாமல் ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ள உத்தரவிட்டாரே, அதான் ஜெயலலிதா! இந்தத் துணிச்சல் கருணாநிதிக்கு வருமா? இன் றைக்கு தமிழகத்திலிருந்து மத்தியில் மந்திரியாக இருப்பவர்கள் யார் யார்? அவர்கள் தங்கள் கைகளால் துண்டு அறிக் கையையாவது தொட்டுப் பார்த்திருப்பார்களா? எந்தவொரு ஏழைக்காவது சிங்கிள் டீயாவது வாங்கிக் கொடுத்திருப்பார்களா? செல்லப் பேரன்களுக் கும், அன்புப் பிள்ளைகளுக்கும், பதவியும், அதிகாரமும் வாங்கித் தருவது தான் இவர்கள் தமிழர்களுக்கு செய்கிற நல்ல காரியமா...''

-விஜய டி.ராஜேந்தர்

""தமிழகத்தின் மிகப்பெரிய பகுத்தறிவுக் கட்சி என்று தி.மு.க., தன்னை பறைசாற்றிக் கொள்கிறது. உண் மையிலேயே கடவுளை வணங்குபவர்களுக்கு கூட சாமி கண்ணைக் குத்தி விடுமென்ற பயம் இருக்காது. ஆனால், இவர்களை போன்ற பகுத்தறிவுவாதிகளுக்குத் தான் சாமி கண்ணைக் குத்தி விடுமென்ற பயம் இருக்கும். அந்த பயத்தினால் தான் மாநாட்டு வேலைகளை பூஜைகள் போட்டு தொடங்கியிருக்கின்றனர். துள்ளுகிற மாடு தான் பொதி சுமக்கும்'ன்னு கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வர். அதுமாதிரி இவர்களெல்லாம் துள்ளுகிற பகுத்தறிவுவாதிகள். எது எப்படியிருந்தாலும், இந்த பகுத்தறிவு கோமாளிகளின் பரிணாம வளர்ச்சிக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...''

- இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்

Read More...

Tuesday, January 17, 2006

பழையன கழிதலும் புதியன புகுதலும்

Image hosted by Photobucket.com Image hosted by Photobucket.comபா.மா.காவில் இருந்து மேலும் இரு எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்துள்ளனர். கடந்த வாரம் அந்தியூர் (தனி) எம்.எல்.ஏ. எஸ்.ஆர். கிருஷ்ணன் பா.ம.க.வில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜிநாமா செய்தார். இப்போது மேலும் இருவர் விலகியுள்ளனர். வந்தவாசி தனி தொகுதியில் வெற்றி பெற்ற முருகவேல்ராஜன், தாராபுரம் தனி தொகுதியில் வெற்றி பெற்ற சிவகாமி வின்சென்ட் ஆகியோர் தங்களது ராஜிநாமா கடிதங்களை சட்டப் பேரவைத் தலைவர் கா. காளிமுத்துவிடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, சட்டப் பேரவையில் பா.ம.க.வின் பலம் 16 ஆகக் குறைந்துள்ளது. மேலும், சட்டப் பேரவையில் 3 உறுப்பினர் பதவிகள் காலியாகியுள்ளன.

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற தமிழ் பண்டிகையை நன்றாக கொண்டாடுகிறது பா.மா.க!.

Read More...

Friday, January 13, 2006

சன் டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் - டாப் டென்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு சன் டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள். ஒரு மாறுதலுக்கு எல்லாமே காமெடி நிகழ்ச்சிகள்.

1. வணக்கம் தமிழகம் (காலை 8 மணிக்கு)

Image hosted by Photobucket.com

2. அரட்டை அரங்கம் (காலை 9 மணிக்கு)

Image hosted by Photobucket.com




3. சின்னபாப்பா பெரியபாப்பா (காலை 10 மணிக்கு)

Image hosted by Photobucket.com




4. காமெடி டைம் (காலை 11 மணிக்கு)

Image hosted by Photobucket.com

5. டாப் டென் (மதியம் 12 மணிக்கு)

Image hosted by Photobucket.com



6. மீண்டும் மீண்டும் சிரிப்பு (மதியம் 1 மணிக்கு)

Image hosted by Photobucket.com





7. அண்ணாமலை (மதியம் 2 மணிக்கு)

Image hosted by Photobucket.com



8. சென்ற வார உலகம் (மதியம் 3 மணிக்கு)

Image hosted by Photobucket.com



9. மெட்டி ஒலி (மாலை 4 மணிக்கு)

Image hosted by Photobucket.com



10. சொர்க்கம் (மாலை 5 மணிக்கு)

Image hosted by Photobucket.com






சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குவது தமிழ் முரசு - "சும்மா நச்சுனு இருக்கு"

நன்றி: கார்ட்டூன் உதவி மதி, தினமணி.

எல்லோருக்கும் என் அட்வான்ஸ் மாட்டுபொங்கல் வாழ்த்துக்கள்.

Read More...

Tuesday, January 10, 2006

ஆர்.எஸ்.மனோகர் - காலமானார்

RS Manohor in Varaguna Pandiyan ஆர்.எஸ்.மனோகர் காலமான செய்தி கேட்டு வருந்தினேன். அவருடைய நாடகங்களை சிலவற்றை பார்த்திருக்கிறேன். தந்திரக்காட்சிகள் மூலம் அரங்கத்தையே கலக்கிவிடுவார்.

1951ல் தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்த அவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். அவருக்கு வயது 81. இதயநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் செவ்வாய்கிழமை அதிகாலை காலமானார்.

தமிழ் நாடகத்துறைக்கு மனோகரின் இழப்பு ஈடு இணையற்றது. அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

Read More...

Thursday, January 05, 2006

ஹார்ம்லெஸ் விஜயகாந்த் ?

Image hosted by Photobucket.com ".. புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கிற விஜயகாந்த், ஊர் ஊராகப் போய் '40 எம்.பி.க்களும் வேஸ்ட்!' னு மக்களிடம் கடுமையாகப் பேசி வருகிறாரே?"

"அது அவராகப் பேசுகிறார் என்று நான் கருதவில்லை. தவிர, அவரைப் பத்தி என்னனு சொல்றது... அவரு ஹார்ம்லெஸ்!"

"கொஞ்ச நாளைக்கு முன்னால் அவர் ஒரு விஷயமா என்னை வந்து பார்த்துப் பேசினார். ஆனா வெளியே போய், எந்த விஷயத்துக்காக என்னைச் சந்திச்சாரோ, அதுக்காகப் பார்க்கலை, அப்படி எதுவும் பேசலை" னு பொய் சொன்னார். அப்புறம் இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு?"
- (ஆனந்த விகடனில் கலைஞர் பதில் )

கலைஞர் இந்த விடியோவை பார்த்திருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டார்.

( விஜயகாந்த் மோதிரத்தில் உள்ள சின்னத்தை கவணிக்கவும் )

Read More...

Wednesday, January 04, 2006

எச்சரிக்கை: 2006 சட்டசபை தேர்தல்

தமிழகம் புதுவை உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை பொதுத் தேர்தல் இன்னும் நான்கு மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கும் முன்னரே தமிழகத்தில் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.



தொகுதி பங்கீட்டை எப்படி கலைஞர் சமாளிக்க போகிறார் ?
புதுவையில் ப.மா.க-காங்கிரஸ் பிரச்சனை நீடிக்குமா ?
அ.தி.மு.க - எதாவது செய்து கூட்டணியை உடைக்குமா ?
வைகோ என்ன செய்ய போகிறார் ?
ப.ஜ.கா தனியாக கொடி பிடிக்க போகிறார்களா ?
தே.மு.தி.க ('ஹார்ம்லெஸ்') தலைவர் விஜயகாந்த் என்ன செய்ய போகிறார் ?
மூன்றாவது அணி இந்த முறையாவது உருவாகுமா ?
ரஜினி 'வாய்ஸ்' காமெடி இந்த முறையும் இருக்குமா ?
தமிழகம் களைகட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.


எச்சரிக்கை: இட்லிவடையில் இனி கொஞ்சம் அரசியல் இருக்கும்.

Read More...