பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 29, 2005

பெங்களூரில் தீவிரவாதம்

பெங்களூரில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) கழகத்தில் மாலை நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் டெல்லி இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி., )யின் பேராசிரியர் எல்.என்.பூரி பலியானார். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். சுட்டவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சென்னை ஐ.ஐ.டியிலும் போலிஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதம் எங்கு எப்படி நடந்தாலும் அதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. வீட்டில் கொசு, கரப்பான், மூட்டை பூச்சி போன்றவற்றை அழிக்க 'ஹிட்' போன்ற ஒரு சாதனத்தை தீவிரவாதிகளுக்கும் கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

படம் உதவி : தினமலர்

6 Comments:

ENNAR said...

மிசா அல்லது எமர்ஜென்சி உடனடித்தேவை அது இல்லையென்றால் இப்படித்தான்

அனுசுயா said...

இதற்கெல்லாம் மிசா என்றால் ஜனநாயகம் செத்துவிடும்

Anonymous said...

காஞ்சி பெரியவா சங்காராச்சாரியாரை கைது செய்து சிறையில் அடைத்ததால்தான் இதுபோல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன! என்னமோ போங்கோ..! நாட்டுல ஒன்னுமே நன்னால்லே!

பிரதீப் said...

இந்த நிகழ்ச்சி கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எப்படியாயினும் நாட்டின் ஒரு சிறந்த அறிவாளி கொல்லப்பட்டது வேதனைக்குரியது.

பாதுகாப்பின்மைக்காகத் தலைகுனிய வேண்டிய இந்நேரத்தில் இதைக் களைய மிசா என்பது அகப்பைக்குத் தப்பி அடுப்பில் விழ்ந்த கதைதான்

Anonymous said...

"காஞ்சி பெரியவா சங்காராச்சாரியாரை கைது செய்து சிறையில் அடைத்ததால்தான் இதுபோல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன! என்னமோ போங்கோ..! நாட்டுல ஒன்னுமே நன்னால்லே!"

கொலைகாறனை வெளியில விட்டா இது நடவாதா? இரு நிகழ்வுக்கும் என்ன வேறுபாடு இருபகுதியும் தலா ஒரு கொலை பன்னி இருக்கு.

Dr.Srishiv said...

எபபடியோ, இந்த நாட்டில் ஒரு விஞ்ஞானிக்கு பாதுகாப்பு இல்லை, என் போன்ற இளம் ஆராய்ச்சியாளர்கள் சிந்திக்க வேண்டிய விசயம், பேசாம ஆராய்ச்சி முடிஞ்சதும், அமெரிக்கா போயிடலாமானு நேத்து ராத்திரில இருந்தேநெனைக்க ஆரம்பிச்சிட்டேன்...
ஸ்ரீஷிவ்..