பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 30, 2005

2005 டாப் டென் (- 2) வலைப்பதிவுகள்

1. தவமாய் தவமிருந்து


சற்றே நம்பிக்கைக் குறைவுடன்தான் இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன் என்றுஆரம்பிக்க மாட்டேன் கவலைபடாதீர்கள். அமெரிக்க கிராமத்திலிருந்து ஹீரோ கோவைக்கு வந்து செட்டில் ஆகிறார். அமெரிக்காவில் தமிழ் வலைப்பூக்களுக்காக இவர் செய்த சாதனைகளை ஃப்ளாஷ்பேக்கில் இடைவேளை வரை ஓட்டுகிறார்கள். அத்தனை வலைப்பூக்களையும் ஒன்றிணைத்து திரட்டி ஒன்றை உருவாக்குகிறார். எல்லா வலைப்பூக்களையும் பாசத்துடன் ஒன்று திரட்டி வளர்த்து பெரிய ஆளாக்கும் பாசமிகு தந்தை ரோலில் (வலை) பின்னியிருக்கிறார்.

இடைவேளை வரை வில்லன் ரோல் என்று யாருக்கும் இல்லை. பிறகு திடீரென்று மெகாசீரியல் மாதிரி திரும்பிய இடமெல்லாம் வில்லன்கள் முளைக்கிறார்கள். தந்தை சற்று கண்டிப்பு காண்பிக்கும்பொழுது பாசபந்தங்கள் எப்படி வேஷம் போட்டார்கள் என்று முடிக்கிறார் இயக்குனர். அப்போது பின்னனி இசையில் 'ஷேம் ஷேம் பப்பி ஷேம்' பாடல் நம் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறது.2. வசூல் ராஜா எம்.பி.பி.ஸ்

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்!!! - டீ, காப்பி செலவுக்கு நிதி திரட்டும் இந்த காலத்தில் ஒரு ஏழை மாணவியின் படிப்பு செலவுக்கு உதவி செய்ய நீதி திரட்டுகிறார் படத்தின் கதாநாயகன் பாலா!!!!!!. அப்படி திரட்டிய நிதியை அந்த பெண்ணுக்கு தருகிறார்!!!. தமிழ் வலைப்பதிவில் இப்படியா என்று மழை பெய்கிறது!!. இதில் இயக்குனரின் டச் தெரிகிறது. ஹீரோ நடுவில் பல பாடல்களுக்கு பல்லவியை மட்டும் பாடி மற்றவர்களை சரணம் பாட வைப்பது நல்ல தமாஷ்!!!. மனிதநேயத்தை நன்றாக வலியுறுத்தியுள்ளதால் இயக்குனரை பாராட்டலாம்!!!
முக்கிய குறிப்பு: தமிழ் வலைப்பதிவில் இதெல்லாம் கூட நடக்கிறது என்பதைக் குறிக்க ஆச்சரியக் குறி !. வேறு எந்த உள்ளர்த்தமும் இல்லை!!! நம்புங்க !!!!

3. சண்டைகோழி

முழுக்க முழுக்க வெட்டு, குத்து என்று வன்முறைகள் நிறைந்த படம். ஹீரோ ஜப்பானிலிருந்து படித்துவிட்டு இந்தியா திரும்பும் வழியில் ஏர்போர்ட் பிரௌசிங்க் செண்டரில் ஒரு சண்டையில் ஈடுபட நேர்கிறது. தொடர்ந்து விமானத்தில் லாப்டாப் வைத்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டே தமிழ்நாடு வந்து சேர்கிறார். (ஏர்போர்ட்டில் டிக்கெட் கேட்கும் அதிகாரிகளை (கழுத்தை) அறுத்துவிடுவேன் என்று மிரட்டுவது நல்ல காமெடி)

சண்டையின் நடுநடுவே திருட்டு வி.சி.டியில் 'சந்திரமுகி' பார்த்து ரசிக்கிறார்.
ஒரு எலி க்வாண்டம் கணினி பற்றி சொன்ன பாய்ண்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். எலி எப்போதும் புலியாக முடியாது என்பதை வலியுறுத்தும் படம். இந்தப் படத்தில் இயக்குனருக்குச் சமமாக சண்டைக்காட்சிகள் அமைத்த ஸ்டண்ட் மாஸ்டரின் பங்கும் சிறப்பாக அமைந்திருக்கிறது. பலர் தாக்க வரும்போது 'இப்பொழுது நேரமில்லை, எனக்கு அவசரமாக போகனும் என்று சொல்லி கிளம்புகிறார். எங்கே போகிறார் என்பது எடிட்டரின் கைவண்ணத்தால் தெரியாமல் போகிறது. எதையாவது அறுத்துதொலைக்க போகிறார் என்று சென்சாரில் 'யூ' சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டதாக கேள்வி. வெங்கட் இந்த படத்துக்கு பிரமாதமாக இசையமைத்திருக்கிறார். ஜால்ரா ஒலி DTSசில் கேட்க வித்யாசமாக இருக்கிறது. பாடல்களில் ஆபாசம் இல்லை, ஆனால் திரைக்கதையில் வன்முறை, வசனத்தில் விரசம்.
முக்கிய குறிப்பு : கொஞ்சம் இருங்க டீ குடித்துவிட்டு சமயம் இருந்தால் இந்த பட ஸ்டிலுக்கு ஒட்டு வேலை செய்கிறேன்.
4. அந்நியன்

அந்நியன் - ஸ்பிலிட் பெர்சனாலிட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். படத்தின் ஹீரோ யாராவது 'சாதி' என்று சொன்னால், கோபம் வந்து கெட்ட வார்த்தையில் கண்டபடி திட்டுகிறார். படத்திற்கு 'A' சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள். சாதி பற்றி வசனம் பேசும் இவர் படத்தில் 'ஐயங்காரு வீட்டு அழகே' என்று பாடுவது நல்ல தமாஷ். ஒரே மனிதனுக்கு பல பர்சனாலிட்டி கதை என்று நினைத்தால், பல பர்சன்களும் ஒரே பர்சனாலிட்டியுடன் வெவ்வேறு ஆட்களாகக் கூட வருகிறார்கள். க்ராஃபிக்சுக்குப் பதில் ஹாக்கிங்க் நிறைய நிறைந்துள்ளது.

பொது மக்களிடயே இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குடும்பத்துடன் பார்க்க கூடாத படம். அந்நியனாக ஒரு சீனில் சிவபெருமான் போல் வேஷம் போட்டுக்கொண்டு கூலிங் கிளஸோடு வருவது நன்றாக இருக்கிறது. தியேட்டரில் டிக்கெட்டுடன் காதில் வைத்துக்கொள்ள பஞ்சையும் தருகிறார்கள்.

முக்கிய குறிப்பு: திருட்டு விசிடியில் பார்ப்பவர்கள் டிவியை மியூட் செய்து பார்க்கவும். இல்லை காதுலேர்ந்து ரத்தம் வரும்.
5. கஜினி

கஜினி - நல்ல தமிழ்ப் படம் என்று போனால் என்ன படம் என்றே தெரியவில்லை. சப் டைட்டில் German மற்றும் French மொழிகளில் மாறி மாறி வருகிறது. இவர் எதை எழுதினாலும் தன் உடம்பிலும் அதை எழுதுவது போல் உள்ள கதாப்பாத்திரம். தவறாமல் 4800161 என்ற எண்னையும் கூட சேர்த்து எழுதுகிறார். இவருக்கு மறதி வியாதி அதனால் எங்கு சென்றாலும் தன் நம்பர் & போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார். வில்லன்கள் இவரை போல் ஒரு போலி கதாபாத்திரத்தை கிளோனிங் மூலம் உருவாக்குகிறார்கள். அதனால் கதாநாயகன் எப்போது போலி போலி என்று பினாத்துகிறார். கடைசி கோர்ட் சீனில் இவருக்கு தேங்காய் போளி, பருப்பு போளி கொடுக்கிறார்கள். சுபமாக முடிகிறது. சோ, அருண் கவுரவ வேடம் ஏற்று படத்தை மேலும் சொதப்பி விடுகிறார்கள்.

முக்கிய குறிப்பு: இந்த சுட்டியில் உங்கள் விட்டிலிருந்து ஒரு எலியை பிடித்து அதன் வாலை அதன் மேல் வைக்கவும். 4800161 என்ற நம்பர் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய/சந்திர கிரகணத்தின் போது தெரியாது.

6. நியூ ( பெண்) அந்தாங்க புதுமை பெண்

இது ஒரு ஹீரோயின் சப்ஜக்ட். நேரில் பார்க்கும்போது சின்னவராகவும் எழுதும்போது வயதானவராகவும் மாறும் ஒரு வித்யாசமான பாத்திரம் பற்றிய கதை. படம் ஹாலிவுட் ரேஞ்சிற்கு இருக்கிறது-குறிப்பாக பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகள். இட்லிவடைக்கு மீசை முளைக்காததால் இந்தப் படத்தை மட்டும் தியேட்டர் போய்ப் பார்க்க முடியவில்லை. வி.சி.டி.யிலேயே பார்த்துவிட்டேன். திரைக்கதையில் நிறைய சொதப்பல்கள். 'வுமன்கைண்ட்' என்று ஒரு மாபெரும் இயக்கம் ஆரம்பித்து பெண்கள் எருமைகளுக்கு வாழ்க்கைப் படுவது பற்றி ஒரு கவிதை எழுதிகிறார். கவிதை எழுதிமுடித்த பிறகு ஹீரோயினே நுனிப்புல் மேயப்போவதைப் பார்த்தால் யார் எருமை என்று குழப்பம்தான் மிஞ்சுகிறது. வசனத்திலும் பாத்திரப்படைப்பிலும் கவனம் செலுத்திய அளவுக்கு அடிப்படைத் திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஹீரோ என்று யாரையுமே சொல்லிவிடக்கூடாது என்று கவனமாக எல்லா ஆண்களையும் வில்லன் ஆக்கி இருக்கிறார்கள். அதாவது பெண்கள் என்ன திட்டினாலும் எல்லா ஆண்களுமே அமைதியாக இருந்து ஆணாதிக்கத்தை நிரூபிக்கிறார்கள்.

ஆண்களை எதிர்த்துக்கொண்டே ஆணுடன் வாழ்வதுதான் புதுமைப்பெண்ணுக்கு அடையாளம் என்று க்ளைமாக்சில் ஹீரோயின் சொல்லும் காட்சி நெஞ்சை உருக்குகிறது. (டைவர்ஸ் வாங்கும் எண்ணமிருந்தால்) குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.
முக்கிய குறிப்பு: சிம்ரன் படத்தை கெடுக்க வேண்டாம் என்று நியூ பட ஸ்ட்லுக்கு ஒட்டு வேலை எதுவும் செய்யவில்லை. மன்னிக்கவும்.
7. மகா நடிகன்
படத்தை எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் பிரகாஷே நடித்து இருக்கிறார். படத்தின் ஹீரோ பொதுமக்களுடன் நன்றாகப் பழகிக்கொண்டே எல்க்ய வ்யாதியாகவும் அதே சமயம் Batman, spiderman, shakthiman போன்று வலைப்பதிவாளர்கள் சந்திப்பு ஒருங்கினைப்பாளராக பணிபுரியும் இளைஞராகவும் செம கலக்கு கலக்கியிருக்கார்.

அனைவரும் பாராட்டும்போது அடக்கமாக வேறு வேலை கிடைக்காததால்தான் இப்படியொரு வேலையைத் தேர்ந்தெடுத்தேன் என்று க்ளைமேக்சில் சொல்லும்போது நம் மனதைத் தொடுகிறார்.

பெண்களைத் தாயாக மதிப்பதாக மேடையில் பாடும் அந்த ஒரே ஒரே ஒரு பாட்டு மட்டும் நன்றாக உள்ளது. பாடலைப் பாடிமுடித்துவிட்டு மேல்கைண்ட் அங்கத்தினர்களைப் பார்த்து கண்ணடிப்பது அதைவிட நன்றாக உள்ளது.

படத்தில் பாடல்களை விட நேர்க்காணல்கள் அதிகமாக உள்ளன. இலக்கியவாதிகளுடன் ஆட்டோவில் செல்லும் போது பேசியதை பேட்டி என்று நன்றாக ஜல்லியடிக்கிறார். எழுதுவதைக் குறைத்துக்கொண்டு நிறையப் படிக்கப்போவதாக உருக்கமுடன் ப்ரகாஷ் சொல்வதுடன் தமாஷாக படம் முடிகிறது.
முக்கிய குறிப்பு: இந்த படத்திற்கு பிறகு நமிதாவுடன் நெருக்கமாக இருப்பதாக Blogwood'ல் கிசு கிசு. அப்படியா பிரகாஷ் சார் ?
8. குண்டக்க மண்டக்க

இட்லிவடை என்று பெயர் வைத்தால் தமிழர்கள் நிச்சயம் படம் பார்க்க வருவார்கள் என்ற இயக்குனரின் துணிச்சலை முதலில் பாராட்டவேண்டும். இட்லிவடை ஒருவரா அல்லது இரண்டு பேரா என்று கடைசி வரை சொல்லாமல் இருப்பது படத்துக்கு பிளஸ் பாய்ண்ட். இப்படி இட்லியையும் வடையையும் வைத்துக்கொண்டு எவ்வளவு நாள் குப்பை கொட்ட போகிறார் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

படம் முழுக்க பர்தா போட்டுக்கொண்டு வருவதால் யார் நடிக்கிறார்கள் என்பது கடைசிவரை தெரியவில்லை.

ஹீரோயின் கால்ஷீட் கிடைக்காததால் ஒரே ஒரு கவர்ச்சிப்படம் மட்டுமே காண்பித்து சமாளித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. படம் முழுக்க கிராபிக்ஸ் வைத்து ஏதோ ஒப்பேத்துகிறார் அவ்வளவுதான்.

குண்டக்க மண்டக்க படம் பார்த்தவுடன் கருத்து சொல்ல பின்னூட்டப் பெட்டி ஒன்று வைத்திருக்கிறார். அந்தப் பெட்டியை நீங்களும் பார்க்கவேண்டுமா? கீழே உள்ள comment சுட்டியை க்ளிக் பண்ணினால் போதும்.

முக்கிய குறிப்பு: எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

74 Comments:

PKS said...

Excellent. Enjoyed your naiyaandi. Happy New Year to you and your family.

Thanks and regards, PK Sivakumar

முகமூடி said...

யோவ் புத்தாண்டும் அதுவுமா ஆஃபிஸுல பைத்தியம் பட்டம் வாங்கி கொடுத்திருவ போலருக்கே... இவன் எதுக்கு 10 நிமிசமா விடாம சிரிக்கிறான்னு எல்லாம் கலவரமாயிட்டாங்க...

(சரி டாப் 10ல 8தான் இருக்கு?)

புத்தாண்டு வாழ்த்துக்கள்பா..

IdlyVadai said...

PKS, புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
முகமூடி - 10 நிமிடம் சிரித்தீர்களா ? 8 நிமிடம் தான் சிரிப்பு வரும் என்று நினைத்தேன். டைட்டிலை நன்றாக பார்க்கவும் 10-2 என்று எழுதியிருக்கிறேன்.

PKS said...

Idly Vadai, got a few minutes to expand my comments :-)

You are such an acute observer. I am amazed at how closely and accurately you have observed Tamil Blogs and bloggers. For example, sari ethai solrathu ethai vidurathu. example venaam :-)

Your choice of movie names as titles is so fitting and correct. I tried my best to rate titles from 1 to 8 based on their appropriateness, I could not. Each one competes for first slot. :-)

Keep rocking in 2006 too.

Thanks and regards, PK Sivakumar

Anonymous said...

Enjoyed, great observation. Since I dont want your comment box to be filled with the obsecenity of Anniyan (he would follow me wherever I go), I did not sign here.

Murali said...

Hello Idly Vadai

Great post. I was laughing for more than 10 minutes :)) after reading this post.

Wish you happy 2006

Murali

SnackDragon said...

இட்லிவடை, சிரிக்கும் படியாக இருந்தது. இட்லி வடை இரண்டுபேரா என்று குழப்பினாலும் நாங்கள் குழம்பமாட்டோம் ... கிரபிக்ஸ் கலக்கல்.. எஸ்பெஷல்லி பிரகாஷ் & நமீதா.

Anonymous said...

Arumai arumai.

Have a fun-filled 2006!!!

Siva

Kasi Arumugam said...

enjoyed the humour. Good observations. Happy new year!

Anonymous said...

அருமை!!

துளசி கோபால் said...

யப்பா..... சிரிச்சுச் சிரிச்சு இப்ப வயித்துலே புண்! நல்ல ஃபன்

கலக்கிட்டீங்க.

சிவா said...

Nalla irukku..Sema sirippu

Sundar Padmanaban said...

அய்யோ இட்லி வடையா இது! முழு விருந்துங்க!

சமீபத்துல படிச்ச மிகச் சிறந்த நையாண்டி. நல்ல வேளை ஆபிஸ் கேபின் கதவை மூடிக்கிட்டுப் படிச்சதால நான் பயங்கரமா சிரிச்சது யாருக்கும் கேட்ருக்காது.

இருக்கறதுலயே ரொம்பப் பிடிச்சது கஜினிதான். அதுலயும்

//தவறாமல் 4800161 என்ற எண்னையும் கூட சேர்த்து எழுதுகிறார். இவருக்கு மறதி வியாதி அதனால் எங்கு சென்றாலும் தன் நம்பர் & போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார்.//

தூள்! :)) :)) :))

பி.கே.எஸ். சொன்னமாதிரி ஒன்றையொன்று மிஞ்சும் அட்டகாசமான பொருத்தங்கள்.

பாராட்டுகள்.

அன்புடன்
சுந்தர்.

நிலா said...

கலக்கல்!

கிராஃபிக்ஸும் படப் பெயர்களும் மகா பொருத்தம். இன்னும் 2 கண்டுபிடிச்சு டாப் 10 ஆகவே போட்டிருக்கலாம்.

Anonymous said...

செம கலக்கல் மச்சி. ஆனா எனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியானும் அய்யன், நான் பாராட்டி எழுதும் எல்லோருமே அய்யன் என்பதை மறந்து விட்டீர்கள்!

கசி said...

தமிழ்கோமண அறிவிப்பு!
**********************************
தமிழ்கோமணம் நிர்வாகியின் மின்னஞ்சல் முகவரி உங்களுக்கு கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், இங்கு இதற்கு பதில் சொல்வதன் மூலம் பலருக்கும் இந்த பதில் எடுத்துச் செல்லப்படலாம் என்பதால் எழுதுகிறேன்.

1. முதலில், தமிழ்கோமணம் பிராமண வலைப்பதிவுகளை மட்டும் மனதில் வைத்துச் செய்யப்பட்ட ஒரு முயற்சி. ஆரம்ப கால வலைப்பதிவர்கள் பலரும் சில பிராமண யாஹூ குழுமங்கள் மற்றும் சில குறிப்பிட்ட இணைய இதழ்களில் புழங்கியவர்களே. எனவே முதலில் தளம் வெளியிடும்போது நீங்கள் இப்போது காணும் பிராமண தளங்களுக்கு மட்டும் தொடுப்பு கொடுக்கப்பட்டது. (இந்தத் தேர்வுகளுக்கு நான் மட்டுமே பொறுப்பு. ஆலோசனைக்குழு(பத்ரி,மீனாக்ஸ்,அன்பு,செல்வராஜ்)வோ, இணைநிர்வாகி(பரி,மதி)களோ இதில் பங்கேற்க தேவையோ வாய்ப்போ வரவில்லை) அது இன்றுவரை தொடர்கிறது. அன்றைய வலைப்பதிவுகளில் தலித் இணையங்கள் அதிகம் பேசப்படாதிருந்திருக்கலாம். மேலும் தனிப்பட்ட அளவில் எனக்கு இலக்கியம்/இதழியல் அறிவு பூஜ்ஜியம்! நான் ஒரு கிறுக்கன். அதுவும் ஒரு காரணம்.

2. முகப்புப் பக்கத்தில் காட்டப்படும் இதழ்களுக்கான தொடுப்புகள் பற்றி என்றால், அவற்றுக்கான பதில் மேலே சொன்னதிலிருந்து புரிந்து கொள்ளப்படலாம். அது அல்லாது இ-இதழ்கள் என்ற பக்கத்தில் என்றால், யுனிகோடு-செய்தியோடை பதிப்பிக்கும் தளங்கள் அவர்களாக அறிவிக்கும்போது சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. (எப்படி உங்களால் உண்மையான பரி, காசி போன்றாருக்கும் போலிகளுக்கும் இடையே வேறுபாடு காண முடியவில்லையோ, அதுபோலவே உங்கள் தளங்களின் பணிகளும் என்னைப் போன்ற புதியவர்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம்:-)). காரணம் நான் ஒரு அரைலூசு.

இன்று ஒரு தகவல்:-
***************************

தமிழ்கோமணமோ, காசியோ தாம் தமிழுக்கு சேவையாற்ற முனைந்து இந்தத்தளம் நடத்துவதாக எங்கும் சொன்னதில்லை. மற்றவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கலாம். இப்போது நொந்தவனமென்ற பெயரில் புதுக்கோமணமொன்றை கண்டுபிடித்து இருக்கிறேன். மொழிக்கு சேவையாற்றுவது என்பதெல்லாம், பெரிய வார்த்தைகள், அவற்றைத் தவிர்த்தால் நன்றியுள்ளவனாவேன். இது சன்னாசி சொன்னதுபோல மொழியார்வமும் தொழில்நுட்பமும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஒருவர் செய்யும் முயற்சி. அவ்வளவே. மக்கள் ஐயங்கார் மொழியில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதோடு எனது மொழியார்வம் நின்றுவிடுகிறது. என் தாய்மொழி தெலுங்காகவோ, ஒரியாவாகவோ சமஸ்கிருதமாகவோ இருந்தாலும் நான் இப்படியே என் மொழியில் பரிமாற்றம் நடைபெற முனைந்திருப்பேன். அவ்வளவே. மூன்று நாட்களாக ஊரில் இல்லை. டோண்டு மகளைக் காணச் சென்றிருந்தேன். எனவே பதில் சொல்லத் தாமதம். மன்னிக்கவும்.

என்னைப்பற்றி கிண்டல் செய்த குசும்பனை தளத்தில் இருந்து நீக்கிவிட்டேன். அதனை இட்லி மனதில் வைக்கவும்!

நன்றி.
அன்புடன்,
-காசி

Anonymous said...

சூப்பரோ சூப்பர் !

தகடூர் கோபி(Gopi) said...

:-) ஹி. ஹி. சூப்பருங்க..

செம கலக்கல்...

எப்படிங்க.. வலைப்பதிவுகளுக்கு பொருத்தமான திரைப்படங்களை சரியாகத் தேர்ந்தெடுத்து ஓட்டியிருக்கீங்க...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இந்த வருடத்தின் சிறந்த காமெடிங்கோ

Venkat said...

Idli Vadai,

This is quality fun. Amazed to see your close observations and fitting them appropriately.

Will expect more in 2006. Happy new year. -Venkat

ramachandranusha(உஷா) said...

நன்றி, நன்றி, நன்றி! 33% கொடுக்காவிட்டாலும் எட்டில் ஒன்று கிடைத்ததே அதற்கு மீண்டும் நன்றி.
சின்ன திருத்தம், வுமன் கைண்ட் என்று அழைக்கப்பட்ட தோழியர் வலைப்பதிவில் நானும் எழுதினேன் அவ்வளவுதான். அதை ஆரம்பித்ததில், உருவாக்கியதில் எனக்கு எந்த பங்கும் கிடையாது.

காமெடி எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனால் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற
எண்ணத்தில் ஒரு ஏழை பெண்ணுக்கு உதவிய பாலாவையும், அவருடன் இணைந்த நண்பர்களையும், பொருள் கொடுத்து உதவிய இணைய நட்புகளையும் நக்கல் அடித்தது சரியாண்ணே! மன்னிக்க சரியா தம்பீஸ்!

நக்கல் இல்லை என்று பின் குறிப்பு போட்டாலும் நக்கல் தொனி தானுங்க ஒளிருது.

சிங். செயகுமார். said...

ஆன்டின் அழகான இறுதி பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

ஸ்ருசல் said...

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்!

ஸ்ருசல்.

மதுமிதா said...

எத்தனை நாள் திட்டம் இட்லிவடை
எல்லோருடைய வயிறையும் புண்படுத்தணுமின்னு.

ஆனாலும் அனாயசமான கற்பனைத்திறன் சேர்ந்த நகைச்சுவை எழுத்தாற்றல் உங்களுக்கு.

புத்தாண்டு வாழ்த்துகள்.

க்ருபா said...

உஷா, தோழியர் வலைப்பதிவில் எழுதியவர்களிலேயே நீங்கதான் இட்லி வடையின் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கீங்க போலருக்கு. அதான் அப்படி எழுதிருக்கார்.

பாலாவையும் அவருடன் இணைந்த/பொருள் கொடுத்த நண்பர்களையும் நக்கல் அடித்ததாக நீங்கள் கூறுவது இட்லிவடையின் காமடியைவிடவும் நன்றாக இருக்கிறது.

எல்லாம் சும்மா ஒரு ஜாலிக்குத்தானே, ஏன் சீரியஸா எடுத்துக்கறீங்க? பதிலுக்கு இட்லிவடையை உங்க பதிவுல களாசிட்டாப் போச்சு.

க்ருபா

Premalatha said...

I have featured you in Desipundit

யோசிப்பவர் said...

நல்ல வேளை. இந்த வருடம் நான் மாட்டி கொள்ளவில்லை!!!

யோசிப்பவர் said...

நல்ல வேளை. இந்த வருடம் நான் மாட்டி கொள்ளவில்லை!!!

பினாத்தல் சுரேஷ் said...

thalai.. SOOOOOOOOOOOOOOPPER!

பினாத்தல் சுரேஷ் said...

thalai.. SOOOOOOOOOOOOOOPPER!

enRenRum-anbudan.BALA said...

Idly,
One of the very best in humour (or satire) I have come across in Tamil Blogs :)

Keep it up and Happy new year to you and all friends in our Tamil Blogging community !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!! (You see, Old habits die hard, you know what I mean ;-))

Mey said...

அசத்தல்.கலக்கல்.தூள்.வாழ்த்துக்கள்.

ஜெ. ராம்கி said...

As usual....asathal! :-)

தருமி said...

நல்லாஆஆஆஆஆஆஆஆஆஆ இருந்தது!!!!!!!!

G.Ragavan said...

இட்லியும் வடையும் நல்லா சாம்பார்ல ஊறுன டேஸ்டுங்க. கூடவே கெட்டிச் சட்டினியும் வச்ச எஃபக்ட்டு. கலக்கலோ கலக்கல்.

gulf-tamilan said...

dr idly vadi
good post. super comedy. keep it up !!!!

Pot"tea" kadai said...

செம்மத்தியான சிரிப்பு! இந்த மாதிரி புத்தாண்டுப் பரிசு யாராலும் கொடுக்க இயலாது.

Pot"tea" kadai said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Anonymous said...

kasi %& DONDU peyaril POLI pinnuuttam . Gavanikka

மாயவரத்தான் said...

எல்லாம் சரி...முக்கியமான 'தலைவர்' படத்தை விட்டுடீங்களே?! ஹி ஹி

ஞானவெட்டியான் said...

நல்லா டிபன் சாப்பிட்டு, சிரிச்சு வயிறு வலிக்குதுங்க.
தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

Saravan said...

Konnuteenga thalaiva.

putthandu nalvazthukal.

IdlyVadai said...

Anonymous, murali, karthikrams, காசி, கீதா, துளசி கோபால், சிவா, சுந்தார், நிலா, கோபி, நிலவு நண்பன், venkat, சிங்.செயகுமார், srusal, madhumitha, க்ருபா, யோச்ப்பவர், சுரேஷ், anamikaa meyyappan, ஜெ.ரஜினி ராம்கி, தருமி, g.raghavan, gulf-tamilan, pot"tea"kadai, மாயவரத்தான், ஞானவெட்டியான், saravan - வயிறு குலுங்க சிரித்ததற்கு நன்றி. உங்கள் குடும்பத்திற்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்க்ள்.

premalatha - many thanks for featuring idlyvadai in desipundit

ramachandranusha - நல்ல காமெடி, நீங்க கூட இட்லிவடைக்கு எழுதலாம் போலயிருக்கே

என்றென்றும் அன்புடன் பாலா - ஸ்பெஷல் thanks !!

Anonymous said...

// முக்கிய குறிப்பு: சிம்ரன் படத்தை கெடுக்க வேண்டாம் என்று நியூ பட ஸ்ட்லுக்கு ஒட்டு வேலை எதுவும் செய்யவில்லை. மன்னிக்கவும் //

Ouch!

முத்துகுமரன் said...

இட்லி
புத்தாண்டு வாழ்த்துகள்

வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டீர்கள். அதிலும் உங்கள் திரைக்கதை சூப்பர்:-)

தருமி said...

ரொம்பவே நல்லா இருந்திச்சு

மீனாக்ஸ் | Meenaks said...

மிக அருமையாக இருந்தது. வாழ்த்துகள். Enjoyed it verymuch.

dondu(#11168674346665545885) said...

Fantastic. ஒரு நிமிடம் என்னை மறந்து விட்டீர்கள் என நினைத்தேன். இல்லை, என்னை மறக்கவில்லை என்பதை கண்டு மகிழ்ந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மேலே உள்ள எனது பின்னூட்டம் எனது இதற்கானத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்பட்டது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jayaprakash Sampath said...

நமீதாவா? நோ நோ நோ....முடியாத்... ஒத்துக்கவே முடியாத்... வேற ஐட்டமே உங்க கண்ல படலையாக்கும்? :-)

சும்மா சொல்லக்கூடாது..எல்லாத்தையும் நல்லாவே வாரியிருக்கீங்க :-)

Anonymous said...

நமீதாவா? நோ நோ நோ....முடியாத்... ஒதுக்கவே முடியாத்... வேற ஐட்டமே உங்க கண்ல படலையாக்கும்? :-)

Suka said...

அருமை :)

சுகா

Thangamani said...

நான் (மிகவும்) ரசித்தது சண்டைக்கோழி, கஜினி விமர்சனங்களைத்தான். நன்றி!

பூங்குழலி said...

:))

Anonymous said...

இட்லிவடை,

கொஞ்சநாள் முந்தி இந்த அன்னியன் டயலாக்கையும் அவன் எழுதுனதிலிருந்தே எடுத்துப் போட்டிருந்தேனே, படிச்சீங்களா?

இங்கே மீண்டும்:-

சுஜாதா சார், சங்கர் சார் ஓடியாங்க. அம்பிக்கு வைத்தியம் பாத்த டாக்டர் யாருன்னு சொல்லுங்க. இங்க ஒரு கேஸ் அப்படியே அச்செடுத்தாப்பல உலவிக்கிட்டிருக்கு.

நீங்களே பாருங்க.

இராமபிரான் வாலியைக் கொன்றது சரியா என்று கம்பர் சொல்வதை பார்க்கலாமா.
(அம்பி)

XXXXXX XXXXXXXX XXXXXXXXX XXXXX
XXXXXXXX.
(ரெமோ)

கொல்லத் துடிக்கிறேன். அப்புறம் என்னை யாரும் கட்டுப்படுத்தவே முடியாது.
(அன்னியன்)

மன்னித்து விடுங்க. மனைவி காறித்துப்புகிறார். மன்னித்து விடுங்க.
(அம்பி)

இந்த நடிப்புக்கு முன்னாடி விக்ரமெல்லாம் எந்த மூலைக்கு.

இந்த மனநோயாளியை அடையாளம் காட்டிய அனைவருக்கும், இவன் பதிவைத் தூக்கிய காசி அவர்களுக்கும் வலைப்பதியும் பெண்கள் சார்பில் நன்றிகள்.

அன்புடன்
தமிழ்மகள்

Muthu said...

சண்ட கோழி, தவமாய் தவமிருந்து, அந்நியன் இந்த மூன்றும் மிகவும் அருமை..

IdlyVadai said...

Anonymous, முத்துகுமரன், தருமி, மீனாக்ஸ், டோண்டு, பிரகாஷ், சுகா, தங்கமணி, பூங்குழலி, முத்து - நன்றி.

பிரகாஷ் - ரொம்பதான் ஆசை.

Vijayakumar said...

வாவ்! விடாமல் சிரித்துக் கொண்டிருந்தேன். Excellent humor-ங்க உங்களுக்கு. Keep it up.தமிழ் மணத்தில் சில இறுக்கங்களுக்கு மத்தியில் இதைப் போன்ற பதிவு கட்டாயம் தேவை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

IdlyVadai said...

அல்வாசிட்டி.விஜய் - நன்றி, எல்லோரையும் சிரிக்க வைத்ததில் சந்தோஷம். உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தெருத்தொண்டன் said...

படித்தேன்;ரசித்தேன்;சிரித்தேன். நன்றி.

Sudhakar Kasturi said...

Absolutely amazing creativity!
I just enjoyed everything you have said... Keep it up!
anpudan
K.Sudhakar

Sarah said...

amazing sense of humour
nice, thanks for the post


sarah

IdlyVadai said...

K.Sudhakar, Sarah - Thanks for your comments.

எம்.கே.குமார் said...

அன்பின் இ.வ,

செம கலக்கல். ரசிக்கவைத்த காமெடி.
நன்றி.

எம்.கே.

Anonymous said...

அனானிமசாக கருத்துகள் எழுதுவது முகமூடி என்ற பெயரில் புலம்பும் பாப்பார நாய்! இது இன்னும் பல பெயர்களில் உலவுகிறது. ஆனால் எங்கு சென்றாலும் இதன் எழுத்துகள் பார்ப்பன சார்பாகவே இருக்கும்.

இதனோடு அருண், ஸ்ரீகாந்த் மீனாக்சி, முரளி, டோண்டு, பாலா, சீமாச்சு, கிச்சி, திருமலை போன்ற பாப்பார நாய்கள் தொடுப்பு வைத்துள்ளன.

இதற்கு பாப்பானையும் பாப்பார அடிவருடிகளை மட்டுமே பிடிக்கும்! அண்ணா, காமராஜர், மூப்பனார், கருணாநிதி, திருமா, ராமதாசு பிடிக்காது.

இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், அத்வானி, வாஜ்பாய், பால்தாக்கரே போன்ற பாப்பார தலைவர்களை நன்கு பிடிக்கும்.

பைதபை இட்லி,

அருமையான ஹ்யூமர். ரசித்து சிரித்துப் படித்தேன். வாழ்த்துக்கள்.

IdlyVadai said...

எம்.கே.குமார் - நன்றி.
மங்குண்டான் - (கடைசி இரண்டு வரிக்கு ) நன்றி

ஜோ/Joe said...

இட்லி,
இட்லி வடையே இந்த ரேஞ்சுல இருந்தா ,பிரியாணி போட்டீங்கண்ணா எப்படி இருக்கும்?

அருமையான நகைச்சுவை..கலக்கல்.

IdlyVadai said...

ஜோ, பிரியாணி ரெடியாகி கொண்டிருக்கிறது இருக்கிறது !

ramachandranusha(உஷா) said...

//ஜோ, பிரியாணி ரெடியாகி கொண்டிருக்கிறது இருக்கிறது //

ஐயய்யோ!

சுபமூகா said...

நிரம்ப நாட்களுக்குப் பிறகு மனதார சிரித்து மகிழ்ந்தேன். அட்டகாசம்! அருமையான வார்த்தை பிரயோகங்கள். புத்தாண்டு இன்னும் சிறப்புகளை உங்களுக்கு வழங்கட்டும்.

அன்புடன்,
சுபமூகா

Anonymous said...

sema kalakkal pathivu.... hahaha

2005 top pathivu ithu :))))

Happy New year to you and your family

ENNAR said...

பதிவு நல்லா இருக்கு

IdlyVadai said...

டுபுக்கு, Ennar.
புத்தாண்டு வாழ்த்துக்கள் & நன்றி.

Anonymous said...

இட்லி வடை ,
நான் வலைப் பூக்களுக்கு கொஞ்சம் புதுசு கண்ணா புதுசு. வலையில் ரொம்ப சீரியசான மற்றும் வம்பான பதிவுகளியே அதிகம் பார்த்து தமிழ்ர்களுக்கு லைட் ஆனா மேட்டர் பற்றி எழுதவே வராதா ? ஏன் இப்படிக் கடித்து குதறிக் கொள்கிறார்கள் என்று அலுத்துக் கொண்டு இருந்தேன். டோண்டு-வின் பக்கத்தில் உள்ள சுட்டியில் இருந்து இந்தப் பதிவுக்கு வந்தேன். உண்மையிலேயே அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். துக்ளக் சத்யாவின் கட்டுரைகள நான் தனியாக இருக்கும் போது மட்டும் தான் படிப்பேன். எனென்றால் அவை நம்மை வாய் விட்டுச சிரிக்க வைத்து விடும். அதே தரத்தில் உங்களுடைய இந்தப் பதிவும். உங்களுடைய மற்ற பதிவுகளை இனிமேல் தான் படிக்க வேண்டும். -குப்புக் குட்டி