பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 08, 2005

அப்துல் கலாமிற்கு ஒரு கடிதம்.

இந்தியாவின் முதல் குடிமகன் திரு. அவுல் பகீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அவர்களுக்கு,

கும்புடுகிறேன் சாமி!

இப்பெல்லாம் யாருக்காவது கடுதாசி எழுதறதுன்னாலே கையல்லாம் வெடவெடுக்கிறது. தமிழ் வலைப்பதிவின் லேட்டஸ்ட் ஃபேஷன் உங்களுக்கு கடிதம் எழுதுவதுதான். அந்த விஷயத்திற்கு அப்பால வருவோம். அப்புறம் நீங்க இன்னும் கவிதையெலாம் எழுதிக்கிட்டு இருக்கீங்களா ? அப்படியே ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சிங்கனா ஷோக்கா இருக்கும். இங்கேயும் நிறைய அரசியல் இருக்கு.

சின்ன வயசில உங்க போட்டோவை ரூம்ல எல்லாம் மாட்டி வெச்சிருப்பேன். எப்போ உங்கள் போட்டோவை பார்த்தாலும் அதில உங்கள் உழைப்பு, நேர்மை, செயல் திறமை எல்லாம் தெரியும். உங்க அக்னிச் சிறகுகள் புத்தகத்தை நிறைய முறை படிச்சிருக்கேன்.

உங்களை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்த போது, முதல மகிழ்ச்சி அடைந்தவன் நானாகத்தான் இருப்பேன். இந்தியாவிற்கு விடிவுகாலம் வந்தது என்று நினைத்துக்கொண்டேன். விஞ்ஞானி ஜனாதிபதியாகப் போகிறார் என்று ஒரே சந்தோஷம். எல்லோருக்கும் இனிப்பு எல்லாம் கொடுத்தேன்.

ஆனால் நீங்கள் கூட மற்றவர்கள் என்ன செய்யதார்களோ அதைத்தான் இன்று வரை செஞ்சிருக்கீங்க. நடு ராத்திரி வீடு தேடி வந்து கடுதாசியை நீட்டினால் உடனே கையெழுத்து போட்டுடரீங்க. அடுத்த நாள் காலை பேப்பர் பாத்தவுடன் தான் உங்களுக்கே அது அமைச்சர் மாற்றம் அல்லது ஆட்சி கலைப்பு பற்றியது என்று என்று தெரியவரும். அப்துல் கலாம் என்ற உங்கள் பெயரை அப்துல் சலாம் என்று எல்லோரும் கிண்டல் பண்ணுகிறார்கள். இது தேவையா ?

பீகார் சட்டசபை கலைத்ததற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. அதை படித்தீர்களா ? இது அசிங்கம் இல்லையா ? கையெழுத்து போடுவதற்கு முன் ஒரு சின்ன கேள்வி கூட கேட்க மாட்டிங்களா ? கொஞ்ச நாள் முன்னாடி "கவர்னர்கள் சுதந்திரமாக செயல்படலாம், எந்த முடிவையும் எடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு; யாருக்கும் பயப்படத் தேவையில்லை" என்று சொன்னீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வை என்னேன்னு சொல்லுவது ?

பொக்ரான் அணுகுண்டு நல்லா போட்டீங்க ஆனா அதை விட ஒரு பெரிய குண்டை சில வாரங்களுக்கு முன் போட்டீங்க - அது ராஜிவ் கொலையாளிகள், வீரப்பன் கூட்டாளிகள் உட்பட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சுமார் 40 கைதிகளுக்கு கருணை காட்டுமாறு மத்திய அரசுக்கு நீங்கள் சிபாரிசு செய்திருக்கிறீர்கள் என்று படித்தேன். ஏன் அவர்கள் மீதி குற்றம் சுமத்தியவுடனே கருணை காமிக்கலாமே ? கோர்ட், கேஸ், அப்பீல், தீர்ப்பு என எதற்கு வீண் செலவு, நேர விரயம் ? அப்புறம் டெல்லியிலே குண்டு வெச்சவங்களையும் இந்த லிஸ்டில சேத்துக்குவீங்களா ?

எதிர் கட்சி அவ்வப்போது உங்களிடம் வந்து டீ, காப்பி சாப்பிட்டு விட்டு ஒரு மனுவை கொடுக்கிறார்கள். அதை நீங்கள் படிக்கிறீர்களா ? அல்லது ஃபைல் செய்து வைத்துக்கொள்வீர்களா ? அல்லது பழைய பேப்பர் காரனுக்கு போடுவீர்களா ? எதிர் கட்சியும் தவறாது மனுவை கொடுத்துவிட்டு வெளியே வந்து போட்டோ எடுத்துக்கொண்டு NDTVக்கு பேட்டி கொடுக்கிறார்கள். இதெல்லாம் சுத்த ஏமாத்து வேலை என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் இந்த பாசாங்கு ?

உங்க ராஷ்ட்ரபதி மாளிகையில் மூலிகை தோட்டம் எல்லாம் நீங்க வளர்க்கிறதா கேள்விபட்டேன். அதில நம்ம அரசியல்வாதிகள் திருந்துவதற்கு எதாவது ஸ்பெஷல் மூலிகை இருக்கான்னு பாருங்க. நீங்கள் விஷன் 2010 என்று ஏதேதோ சொன்னிர்களே?

வருடா வருடம் நடிகர்களுக்கு தேசிய விருது கொடுக்கிறீங்க. நல்ல விஷயம் தான். ஆனா நீங்கள் விருது கொடுத்த சில நடிகர்களின் வீடுகளில் எல்லாம் இன்கம் டாக்ஸ் ரைடு எல்லாம் நடந்திருக்கிறது. அவர்கள் அரசாங்கத்தை ஏமாத்தியிருந்தால் இந்த விருதுக்கு அவர்கள் தகுதியானவர்களா ?. எவ்வளவோ பேர் இன்கம் டாக்ஸ் எல்லாம் தவறாது கட்டிக்கொண்டு நல்ல குடிமகன்களாக இருக்கிறார்கள். இவர்களை காட்டிலும் நடிகர்கள் உசந்தவர்களா ? அடுத்த முறை விருது கொடுக்கும் முன் கொஞ்சம் யோசிப்பீர்களா ?

வருஷா வருஷம் அந்தந்த தினங்களுக்கு வாழ்த்து சொல்லுவதும், டிவியில் குடியரசு/சுதந்திர தினத்திற்கு ரேடியோ/டிவியில் பேசுவதும் ஒரு சடங்காக ஆகிவிட்டது. இந்த தடவை பவர் பாயிண்ட் ஸ்லைட் எல்லாம் ஷோக்கா காமிச்சிங்க. இதனால் என்ன பிரயோஜனம் ?

வருகிற 14 ஆம் தேதி, குழந்தைகள் தினம். குழந்தைகளை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். குழந்தைகள் தின வாழ்த்துக்கள். சரி என்ன செய்வதாக உத்தேசம் ? உங்கள் பதவி காலத்தில் எதாவது ஒன்றாவது கொஞ்சம் வித்தியாசமாக செய்வீர்கள் என்று இன்றும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. செய்வீர்களா ?

ஆவலுடன்,
இட்லிவடை
(ஒரு சராசரி இந்திய குடிமகன்)

23 Comments:

rv said...

இட்லி வடை,
சரியாச் சொன்னீங்க. national icon என்று இளைஞர்கள் இவர் பின்னே அலையும் போது, அருமையாக கனவு காணும் ஆனால் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அதிபராவே இருக்கார். :(

Unknown said...

AyyA Idili Vadai/Ramanathan,

Before commenting on your blog, If you both do not mind letting me know what you have done for this country, other distributing sweets when Dr.Kalam became President?

Anbudan,
Natarajan.

குமரன் (Kumaran) said...

//அப்துல் கலாம் என்ற உங்கள் பெயரை அப்துல் சலாம் என்று எல்லோரும் கிண்டல் பண்ணுகிறார்கள்//

இட்லி வடை...யார் அந்த 'எல்லோரும்'? இது வரை இதைக் கேள்விபட்டதே இல்லையே??? அந்த 'எல்லோரும்' உண்மையில் 'இட்லி வடை' போடும் 'நீங்கள் தானோ'? எப்போதிருந்து ஒரு தனி மனிதர் 'எல்லோரும்' ஆனார்கள்?

உங்களுக்கும் நிறைய பின்னூட்டம் வாங்க வேண்டும் என்று தோன்றிவிட்டது போலும்...அதுதான் இப்படி ஒரு பதிவைப் போட்டிருக்கிறீர்கள்....

//national icon என்று இளைஞர்கள் இவர் பின்னே அலையும் போது, அருமையாக கனவு காணும் ஆனால் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அதிபராவே இருக்கார்//

இராமநாதன், என்ன ஆச்சு உங்களுக்கு...நீங்களுமா இப்படி? நம்ப முடியவில்லை...இல்லை...இல்லை...

PKS said...

தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து விட்டதா அல்லது இல்லவே இல்லையா என்று நடராஜன் மற்றும் குமரன் பின்னூட்டங்களின் அடிப்படையில் ஒரு பட்டிமன்றம் (அல்லது இட்லிவடை ஸ்டைலில் வாக்கெடுப்பு :-) ) நடத்தலாம். நான் இதை எழுதுகிற நேரம் அத்தகைய பின்னூட்டங்கள் குறைந்து தமிழர்கள் நகைச்சுவையில் நிபுணர்கள் என்று வலிந்து நிரூபிக்கப் போகிறார்கள் :-))

பதிவு நகைச்சுவையாக இருந்தபோதிலும், குடியரசுத் தலைவரிடம் பிறரும் கேட்கிற கேள்விகளையே கேட்கிற மாதிரி இருந்தது (பீகார் சட்டசபை கலைப்பு கையெழுத்துப் போடும் முன்னர் யோசித்தாரா? அவர் யோசிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? என்ன நடந்தது என்று தெரியாமல் எப்படிச் சொல்வது. அப்புறம் அவர் ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவராக இருக்கிறாரே. இப்போது இருக்கிற சட்டவிதிகளின்படி யார் வந்தாலும் ரப்பார் ஸ்டாம்ப்பாகத்தான் இருக்க முடியும். இதையெல்லாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும். குஜராத் கலவரங்களின் போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் ஒன்றுமே செய்யவில்லை என்று பெருத்த குரல் எழுந்தது. அவர் பதவிக் காலம் முடிந்ததும் தான் செய்ய முயன்றதை அவர் சொன்னார். அதன்படி, கலாம் அவர்களின் பதவிக்காலம் முடிந்தபின் இதைப் பற்றியெல்லாம் எழுதுகிற திட்டம் வைத்திருக்கிறாரோ என்னவோ? கவிதை எழுதாமல் அவர் வேறு எதை எழுதினாலும், அதை நான் வரவேற்கிறேன். :-) அதேபோல, மரணதண்டனையையே விரும்பாத ஒருவராகக் கலாம் அவர்கள் இருக்கக் கூடும் என்றே அது குறித்த விஷயத்தில் நான் நம்புகிறேன். பல ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனையே இல்லையே! )

விருது பெற்ற நடிகர்கள் இன்கம்-டாக்ஸ் பாக்கி வைத்திருந்தால் விருதைத் திருப்பிப் பெற்றுக் கொள்வதைவிட, விருது கொடுப்பதற்கு முன் அரசாங்கம் இதை எல்லாம் பார்க்க மாட்டார்களா? இதற்கும் குடியரசுத் தலைவர்தான் வரவேண்டும் என்றால், காலையில் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலும் குடியரசுத் தலைவர் கிட்டப் போக வேண்டிய நிலைக்கு வந்துடுவோம் :-) பிற நாடுகளில் ஒரு வேலைக்குப் போகும்போது கூட (sometimes even as a contractor) background check என்று ஒன்று இருப்பதுபோல, அரசாங்க விருதுகள் மற்றும் பட்டங்கள் வாங்குகிற யாருக்கும், criminal background, tax dues என்று எதுவும் இருக்கக் கூடாது என்று சரிபார்க்கலாமே! மத்திய அரசாங்கம் செய்ய வேண்டிய பணி இது!

மற்றபடி - ஓரிரு இடங்களைத் தவிரப் பிற இடங்களில் "அக்மார்க்" இட்லிவடை பஞ்ச் இல்லாமல், இந்தப் பதிவு சுமார் ரகம்தான் :-)

அன்புடன், பி.கே. சிவகுமார்

Anonymous said...

romba naalaga idhai ezudha ninaithadhu. neenga ezudhiteenga. indhiyavileye migavum sakthi vaaindha padhaviyil amarndhu janadhipadhiyaga ivar 'kizithadhu' enna? kanavu kandadhai thavira. kuzandhaikaluku roja thottam suttri kaatuvar. ivvalavu periya vingyaniku indha jalra postil thevaiilladha velai. 5 varudam veru yedhavadhu vingyanamo, kavidhai vadikkavo poi irukkalam.
indha padhaviku oru robot irundha podhum.

Unknown said...

இட்லி வடை, இரஷ்யா இராமநாதன்,

1.இந்தப் பதவியால் கலாமுக்கு ஒன்றும் இலாபம் இல்லை. இந்தப் பதவி இல்லாவிட்டாலும் அவர் பேசப்பட்டுத்தான் இருப்பார்.

2.இந்தப் பதவி மூலம் அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

3.அமெரிக்க ஜனாதிபதிப் பதவியைப் போல் இந்திய ஜனாதிபதிப் பதவி அதிகாரங்கள் நிறைந்ததல்ல. உண்மையில் இது ஒரு அலங்காரப் பதவி மட்டுமே.

4.இந்திய அரசியலமைப்பில் பாராளுமன்றமே (அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர்) அனைத்து அதிகாரங்களையும் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

5.பாரளுமன்றத்தின் எந்தவொரு பரிந்துரையையும் ஜனாதிபதி ஒரு முறை மட்டுமே திருப்பி அனுப்பி விளக்கம் கேட்க முடியும். அதே பரிந்துரை "அப்படியே" திரும்ப வந்தால் அதனை ஜனாதிபதி அனுமதித்தே ஆக வேண்டும். இது ஜனநாயகத்தின் சிறப்பு அல்லது குறை.

6.
//பீகார் சட்டசபை கலைத்ததற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. அதை படித்தீர்களா ? இது அசிங்கம் இல்லையா ? //

அவர் இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக முன்வந்ததாகவும் சோனியா/மன்மோகன் சமாதானம் செய்ததாகவும் படித்த ஞாபகம்.

7.
//கையெழுத்து போடுவதற்கு முன் ஒரு சின்ன கேள்வி கூட கேட்க மாட்டிங்களா ? //

இது உங்களுக்கு கொஞ்சம் ஓவராத் தெரியல? அவர் கேட்கவில்லை என்று யார் சொன்னார் உங்களுக்கு ?
(அவர் கேட்டு இருப்பார் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை )

8.
//எவ்வளவோ பேர் இன்கம் டாக்ஸ் எல்லாம் தவறாது கட்டிக்கொண்டு நல்ல குடிமகன்களாக இருக்கிறார்கள். இவர்களை காட்டிலும் நடிகர்கள் உசந்தவர்களா ? //

நடிகர்களுக்கு கொடுத்தது அவர்களின் நடிப்பிற்காகத்தான் என்று நினைக்கிறேன். அவர்களை ஒன்றும் உதாரணக் குடிகளாக நாம் (பொது மக்கள்) நினைக்க வேண்டாம்.

இருந்தாலும் இதில் நான் உங்களின் எண்ணங்களுடன் உடன் படுகிறேன். அரசு விருது/அரசால் கெளரவிக்கப் பட்டவர்கள் தவறு செய்வது (வருமான வரி ஏய்ப்பு போன்றவை ) நிரூபிக்கப்பட்டால் , அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்பப் பெறும் வகையில் சட்டம் தேவை.
நீங்களே இதை சினிமா விருதுக் கமிட்டிக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாமே?

9.
//அடுத்த முறை விருது கொடுக்கும் முன் கொஞ்சம் யோசிப்பீர்களா ? //

நல்ல குடிமனாக இருப்பது ஒவ்வொருவரின் கடமை. இவர் விருது கொடுக்கும் நபரே தவிர , அந்த விருதுப் படங்களைக்கூட பார்த்திருக்க மாட்டார் என்பது நீங்கள் அறிந்ததே.


முடிவாக:

கலாம் அவரின் அதிகார வரம்பிற்குள் முன் எல்லோரையும்விட சிறப்பாகவே செயல்படுகிறார்.

இந்தியக் குடிமகன் என்ற முறையில் யாரும் ஜனாதிபதியைக் கேள்வி கேட்கலாம். உங்களுக்கு உண்மையிலெயே அவரின் செயல்பாட்டில் குறை இருப்பதாகப் பட்டால், என்ன செய்தால் நல்லது என்று தெளிவாக எழுதி அவருக்கு அனுப்பி வைக்கவும்.

அவர் படிப்பரா? பதில் தருவாரா ? என்று எண்ண வேண்டாம். ஒரு சராசரி இந்திய குடிமகனாக உங்களின் குறைந்த பட்ச கடைமையை செய்த திருப்தியாவது உங்களுக்கு இருக்கும்.

Unknown said...

//அப்துல் கலாமிற்கு ஒரு கடிதம்// - இதப் பார்த்த உடனே., யாரோ உங்க பக்கத்து வீட்டுகாரருக்கு கடுதாசி போடுறிங்க போலன்னு நினைச்சேன். நம்ம நாட்டின் ஜானாதிபதிக்கு எழுதியிருக்கிங்களா?. அப்படியே அவரு எப்படி, எப்படி நடந்துக்கணுமின்னும் ஒரு பதிவப் போடுங்க அப்பு... வலைப் பதிவாளார்... என்பவர்.. ஜனாதிபதிக்கும் மேலயாட்டம் இருக்கு.... பி.கே.எஸ் அண்ணன் சொல்ற மாதிரி இந்த பின்னூட்டத்தை நகைச்சுவை உணர்வு குன்றாமல் படிங்க இட்டிலி...வடை.

குமரன் (Kumaran) said...

PKS நண்பரே...இட்லி வடை நண்பர் ஜோக்கடிச்சிருக்காரா...அது தெரியாம நான் ரொம்ப டென்சன் ஆயிட்டேன் போலிருக்கே...எப்படியோ அவருக்கு இன்னும் நிறைய பின்னூட்டங்கள் வர வாழ்த்துகள்.

முகமூடி said...

இட்லி வடை, நானும் இதே கோணத்தில் போன வாரம் யோசித்தேன்... நீங்கள் முந்திக்கொண்டீர்கள்...

மிகப்பெரும் சாபக்கேடுகளில் ஒன்று தகுதியானவர்கள் தகுதியான இடத்தில் இல்லாதது.. இது எல்லா இடத்திலும் இருக்கும் விஷயம்தான் என்றாலும் இந்தியாவில் இதன் சகதிவீதம் மிகவும் அதிகம்... மிகப்பெரிய விஞ்ஞானியான அப்துல் கலாம் அவர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவியான ஜனாதிபதி பதவியில் பார்ப்பதை விட அவர் கனவான ஆராய்ச்சி/அபிவிருத்தித்துறையில் பார்த்தால் அவருக்கும் தேசத்துக்கும் எவ்வளவு நன்மை என்பதை நினைத்துப்பாருங்கள். சிங்கத்தை தங்கக்கூண்டுக்குள் அடைத்து வைப்பதா அழகு...

டி ராஜ்/ DRaj said...

// அது ராஜிவ் கொலையாளிகள், வீரப்பன் கூட்டாளிகள் உட்பட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சுமார் 40 கைதிகளுக்கு கருணை காட்டுமாறு மத்திய அரசுக்கு நீங்கள் சிபாரிசு செய்திருக்கிறீர்கள் என்று படித்தேன். ஏன் அவர்கள் மீதி குற்றம் சுமத்தியவுடனே கருணை காமிக்கலாமே ? கோர்ட், கேஸ், அப்பீல், தீர்ப்பு என எதற்கு வீண் செலவு, நேர விரயம் ? அப்புறம் டெல்லியிலே குண்டு வெச்சவங்களையும் இந்த லிஸ்டில சேத்துக்குவீங்களா ?//

ஜனாதிபதி மாளிகை இது குறித்து அளித்த விளக்கத்தை வசதியாய் மறந்துவிட்டீர்களோ? அதில் பொதுவாகவே மரண தண்டனையை ரத்து பரிந்துரைக்கவே அப்துல் கலாம் தெரிவித்ததாக ஞாபகம்.

//வருடா வருடம் நடிகர்களுக்கு தேசிய விருது கொடுக்கிறீங்க. நல்ல விஷயம் தான். ஆனா நீங்கள் விருது கொடுத்த சில நடிகர்களின் வீடுகளில் எல்லாம் ......//
எதோ அப்துல் கலாம் தான் இந்த விருதை குடுக்கவே அரம்பித்தது போல எழுதி இருப்பது உண்மையை மூடும் முயற்சி தானோ?

//வருகிற 14 ஆம் தேதி, குழந்தைகள் தினம். குழந்தைகளை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். குழந்தைகள் தின வாழ்த்துக்கள். சரி என்ன செய்வதாக உத்தேசம் ? உங்கள் பதவி காலத்தில் எதாவது ஒன்றாவது கொஞ்சம் வித்தியாசமாக செய்வீர்கள் என்று இன்றும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. செய்வீர்களா ? //

அய்யா, அதற்காகத்தானே அவர் கல்விசாலைகளுக்கு தவறாமல் சென்று சிறார்களை சந்தித்தும் பேசியும், பேசச்சொல்லியும் வருகிறார். வேறு ஏதாவது ஜனாதிபதி இதை செய்திருக்கிறாரா?

கேள்வி கேட்கும் உரிமையை ஜனநாயகம் நம்க்கு வழங்குகிறது ஆனால் அதற்காக உண்மையை மறைத்தும் திரித்தும் நீங்கள் கேட்கும் கேள்வி மலிவான அரசியல்வாதியின் விளம்பர உத்தியையே காட்டுகிறது.

b said...

இட்லி நன்கு நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.

ஆனால் அனானி ஒருவர் விளக்கமாக எழுதி இருக்கிறார் பாருங்கள். அதான் எனது நிலையும்.

Anonymous said...

Dear Idli

I agree with you 100% and hereby co-sign your letter. He is a great disappointment for his supporters like me. He failed miserably in leashing the mischevous and corrupt deeds of Manmohan and his 40 thieves.

1. Why the hell should he sign the Bihar govt dissolvment from Moscow? He could atleast returned the suggestion of Bihar Govt dissolution.

2. Why delayed the bill on right to know

3. What constructibe role did he play in filling so many vacant judges position

4. Why he silently watched the Jharka land fiasco?

5. As a president who has the power to waive a death sentence, he should not have aired his opinion publicly. Now anybody can commit any crime like the Delhi bombers and expect that the president will give clemency eventuallly.

6. Had he ever questioned the PM on his choice of ministers like Dayanidhi and Anbumani, to name a few who had conflict of interests in their respective ministries.

This not what we expected from you Mr.President. We lost hope with our only hope too.

Anbudan
An ex-fan of Abdul Kalam

அன்பு said...

அன்பு இட்லி,

உங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த இந்தப்பதிவிட்டிருந்தால் ஏதோ ஒருவகையில் பொறுத்துக்கொள்ளலாம்! ஆனால் பிகேஎஸ் சொல்வது போல்...

தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து விட்டதா அல்லது இல்லவே இல்லையா

என்ற சந்தேகம் உங்களுக்கும் வந்திருக்குமாயின்... என்ன சொல்லி அழுவதென்று தெரியவில்லை!

IdlyVadai said...

இராமநாதன் - நன்றி.

நடராஜன் - எனக்கு திரு. அப்துல் கலாமை ரொம்ப பிடிக்கும். என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். யாரையும் புன்படுத்தும் எண்ணம் எப்போதும் எனக்கு இருந்தது இல்லை. உங்கள் கருத்தை மதிக்கிறேன்.

குமரன் - ஒரு முறை துக்ளக் மற்றும் இன்னொரு நாளிதழில் சலாம்-கலாம் என்று கிண்டல் அடித்திருந்தார்கள். பின்னூட்டம் வேண்டும் என்று நான் ஒரு போதும் ஆசைப்பட்டது இல்லை. உங்கள் கருத்து அப்படி என்றால் நான் என்ன செய்ய முடியும் ?

பி.கே. சிவகுமார் - நேரம் ஒதுக்கி பதிவை பின்னூட்டமாக போட்டதற்கு முதலில் நன்றி. சில சமயம் தமிழ் மக்கள் கொஞ்சம் சிரியஸாக இருப்பார்கள். ஆனால் நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது என்று நான் ஒரு போதும் எண்ணியதில்லை. என்னுடைய வாதம் எதற்கு மாஸ்கோவில் இருந்த போது ஆட்சி கலைப்புக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் ?. திரும்ப வந்து நன்கு ஆரய்ந்து அதை செய்திருக்கலாமே ? ஜனாதிபதியின் அலுவலகம், எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக கருணை காட்டுமாறு கூறப்படவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது. ஆக சிலருக்கு கருணை காட்டப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறியிருக்கார். ஏதோ உணர்ச்சி வேகத்தில் ஒருவன் கொலை செய்துவிட்டன் அல்லது கற்பழித்து விட்டால் அவனுக்கும் பல வருடம் சிறை தண்டனை எதற்கு அவனுக்கும் கருணை காட்ட வேண்டியதுதானே. லாஜிக் உதைக்கவில்லை ?

Anonymous(1) - நன்றி.

கல்வெட்டு/APDIPODU - தெளிவான கருத்துக்கு நன்றி. கலாமுக்கு கடிதமா ? நல்ல யோசனை.

முகமூடி - //சிங்கத்தை தங்கக்கூண்டுக்குள் அடைத்து வைப்பதா அழகு// ஒரு வார்த்தை என்றாலும் ...

ராஜ் - //.. கருணை... // பி.கே.சிவகுமாருக்கு அளித்த பதிலை பார்க்கவும். நான் எதையும் மறக்கவில்லை.

//எதோ அப்துல் கலாம் தான் இந்த விருதை குடுக்கவே அரம்பித்தது போல எழுதி இருப்பது உண்மையை மூடும் முயற்சி தானோ?// அப்படியா நான் சொன்னேன் ?

யாராவது ஒருவர் ஆரம்பிக்க வேண்டும். நான் அப்துல் காலாம் செய்வார் என்று நம்பினேன்.. அதில் தவறு ஏதும் இல்லை. இன்னும் நம்புகிறேன். அவர் ஜனாதிபதியில் ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்பது என் ஆதங்கம். அதில் என்ன தவறு ?

//உண்மையை மறைத்தும் திரித்தும் நீங்கள் கேட்கும் கேள்வி மலிவான அரசியல்வாதியின் விளம்பர உத்தியையே காட்டுகிறது. // என்னை சரியாக புரிந்துக்கொண்டதற்கு நன்றி :-)

Anonymous(An ex-fan of Abdul Kalam)/அன்பு - நன்றி.

ஜோ/Joe said...

//இந்தியாவிற்கு விடிவுகாலம் வந்தது என்று நினைத்துக்கொண்டேன்.//
இதைப் போல பேத்தல் எதுவுமே கிடையாது .ஜனாதிபதி ஒருவரால் விடிவுகாலம் வந்து விடாது .அப்துல் கலாம் ஐயா ,மற்ற ஜனாதிபதிகளைப்போல் நாற்காலி தேய்க்காமல் ,இளைய தலைமுறையை சந்திக்கிறார் ,அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறார் .இந்தியா போல அரசமைப்பு உள்ள நாட்டில் ஜனாதிபதி என்ன செய்ய முடியும்..

ஓ! நகைச்சுவையா? சரிங்க!நகைச்சுவை மாமன்னர்கள் வந்து திட்டவேண்டாம்.

IdlyVadai said...

ஜோ, இளய தலைமுறையை சந்திக்கிறார் அதை நான் பாராட்டுகிறேன்.

என்ன சில நடவடிக்கைகள் எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

ராக்கெட்டுகளையும் ஏவுகணைகளையும் விட்ட அவருக்கு, அரசியல் சட்டம் அனுமதிக்கும் எல்லைக்குள் புதுமையாக எதாவது செய்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று நம்புகிறவன் நான்.

NambikkaiRAMA said...

//அமெரிக்க ஜனாதிபதிப் பதவியைப் போல் இந்திய ஜனாதிபதிப் பதவி அதிகாரங்கள் நிறைந்ததல்ல. உண்மையில் இது ஒரு அலங்காரப் பதவி மட்டுமே//
இது ஒரு அனானிமஸ் கொடுத்த பின்னூட்டம்.
உங்கள் கேள்விகளுக்கு இதுதான் விடை என்று நினைக்கின்றேன்.

ஜோ/Joe said...

//அரசியல் சட்டம் அனுமதிக்கும் எல்லைக்குள் புதுமையாக எதாவது செய்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று நம்புகிறவன் நான். //
இட்லி வடை,
இந்திய அரசியலமைப்பில் குடியரசு தலைவரின் அதிகாரங்களை தெரிந்து தான் பேசுகிறீகளா? நீங்கள் ஒன்றும் இலங்கைக்காரர் இல்லையே?
என்ன செய்யலாம் என்று பட்டியலிடுங்களேன் .மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆம் இல்லை என்று ஒப்புதல் அளிக்கவே அவருக்கு அதிகாரம் இருக்கிறதே தவிர திட்டங்களை வகுக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறதா என்ன? .இது ஒரு சம்பிரதாய பதவி தானே? மற்றவர்போல் வெறும் சம்பிரதாய அறிக்கைகளை மட்டும் விடுத்து விட்டு ,குடியரசு தினத்தன்று பேருக்கு ஒரு உரையாற்றி விட்டு இருப்பதற்கு மேல் ,அவரால் முடிந்த அளவுக்கு இளைய தலை முறைக்கு நம்பிக்கையை அளிக்கிறார் .ஊக்கமளிக்கிறார் .சாதாரண மக்களை சந்திக்கிறார் .இதைவிட அவர் என்ன செய்து விட முடியும் ?உங்கள் எதிர்பார்ப்புகளை (அவரின் அதிகாரத்துக்கு உட்பட்டு) பட்டியலிடுங்களேன் பார்க்கலாம் .முடிந்தால் அவருக்கு அனுப்பி வைப்போம் .குறைந்த அளவுக்கு அதை கருந்தில் எடுத்துக்கொள்ளும் பக்குவம் உள்ளவர் அவர்.

IdlyVadai said...

//...பட்டியலிடுங்களேன் பார்க்கலாம்//

பட்டியல் தயாராகிக்கொண்டு இருக்கிறது. சில அறிஞர்களுடன் ஆலோசனை செய்த இங்கு போஸ்ட் செய்கிறேன்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

முத்துகுமரன் said...

இந்த பதிவு துக்ளக் ரக இட்லியாக இருக்கிறது -

மற்ற குடியரசு தலைவர்களை விட சிறப்பாகவே தன் பணிகளை செய்து வருகிறார் கலாம்.

ஒரு குடியரசு தலைவரால் என்ன செய்ய முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. மாற்றங்களெல்லாம் ஓரிரவில் வந்து விடாது. காத்திருக்க வேண்டும்.....

அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியது ஏன்?

அவர் திறமையான விஞ்ஞானி என்பதாலா?

-
மற்ற ஜனாதிபதிகளைப் போல ஆளுங்கட்சியின் செங்கோட்டை பிரிவு தலைவராக இல்லாதிருப்பதே பெரிய சாதனைதான்....

-
மரண தண்டனை தேவையில்லை என்பது போன்று சுய கருத்துகளை வேறெந்த ஜனாதிபதியாவது முன் வைத்திருக்கிறாரா?(ஓரிர்வர் விதி விலக்காக இருக்கலாம்)

-

ராஜீவ் கொலை நிகழ்த்தியவர்களுக்குத்தான் தண்டனை?

கொலைக்கான காரணம் அறிய ஆர்வம் இல்லை இந்திய நீதித்துறைக்கு-- புலனாய்வு துறைக்கு - அதிலுள்ள இந்திய தொடர்புகள் பற்றியெல்லாம் மவுனம் - கண்டு கொள்ளாமை - கருவிகளை மரணிக்க வைக்க வேண்டுமென்பதில் மட்டும் தீரா ஆர்வம்

----

IdlyVadai said...

நன்றி முத்துகுமரன்

Selvaa said...

Super

சீனு said...

அப்துல் கலாமையே கிண்டலடிக்கிறீர்கள் என்று (செல்லமாக) கோபிப்பதா? அல்லது இதில் உள்ள seriousness-ஐ நினைத்து வருத்தப்படுவதா?