பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 31, 2005

கங்குலியும் நூடில்ஸும்

மாகி நூடில்ஸ் பாக்கேட் பின்னாடி செய்முறையை இப்படி எழுதலாம்.

1. ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைக்கவும்.
2. கங்குலி பேட்டிங்கிற்கு சென்றவுடன் நூடில்ஸை கொதிக்கும் தண்ணீரில் போடவும்.
3. கங்குலி மைதானத்தில் இருக்கும் வரை நன்றாக கிளரவும்
4. கங்குலி அவுட் ஆனவுடன் சூடான நூடுல்ஸ் ரெடி!

வாக்கு பெட்டி இருக்குது பார் மேலே !

Read More...

Wednesday, March 23, 2005

நரேந்திர மோடி - விசா

நரேந்திர மோடிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது

"சார், உங்களுக்கு VISA மறுக்கப்பட்டதாமே ?
"ஆமாம், அதுக்கென்ன இப்போ ?, நீங்கள் யார் சார் ?
"சார் நாங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிலிருந்து கூப்பிடுகிறோம், உங்களுக்கு MASTERCARD கொடுக்கலாம் என்று இருக்கிறோம்."

Read More...

Tuesday, March 22, 2005

உலக தண்ணீர் தினம்

Read More...

Wednesday, March 16, 2005

தாடைக்கு தடை


மேலே உள்ள படம் கனாகண்டேன் என்ற படத்தில். ஸ்ரீகாந்தின் தாடையை கோபிகா கடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த பேனர் அண்ணாசாலையில் சர்ச் பார்க் கான்வென்ட் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. ரோட்டில் வருகிறவர்கள் போகிறவர்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும், இந்த பேனரை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றார்கள். ( நானும் தான் )

சர்ச் பார்க் பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் செய்த்தால் இந்த பேனர் நேற்று உடனே அகற்றப்பட்டது.(கலி முத்திப்போச்சு என்ன செய்வது) பள்ளி நிர்வாகம் புகார் செய்ததின் பேரிலும், சாலை விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்துடனும் அந்த சினிமா பேனர் அகற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தார்கள்.

போனஸாக இட்லி வடை வாசகர்களுக்கு கீழே இரண்டு படங்கள்(CG Rating)



(CG - Child Guidance Required)

Read More...

Monday, March 14, 2005

அ-மு-ச-ச ரிசல்ட்ஸ் !

Image hosted by Photobucket.com
1. Image hosted by Photobucket.com

2. Image hosted by Photobucket.com

3. Image hosted by Photobucket.com

4. Image hosted by Photobucket.com

ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி!

Read More...

Thursday, March 10, 2005

அ-மு-ச-ச !

நண்பர்களே, பகைவர்களே,
இந்த ஏப்ரல் மாதம் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகுது.
அவற்றுள் எது சூப்பர் டூப்பர் ஹிட் என்று வாக்களிக்கலாம்.
கள்ள ஓட்டு போடலாம் எனக்கு ஆட்சேபனை இல்லை.
பரிசு கிடையாது.
வாக்கு பெட்டி இருக்குது பார் மேலே !

Read More...

Wednesday, March 09, 2005

அ-மு-ச-ச ?

நாளை வரை காத்திருக்கவும் :-)
இட்லி

Read More...

Tuesday, March 08, 2005

மகளிர் தினம்

1908 - மார்ச் 8. நியூயார்க் நகரின் பஞ்சாலைகள் அனைத்தும் சினிமாவில் ஃபிரீஸ் செய்ததுமாதிரி அன்று நின்று போயின. அவற்றில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வீதியில் திரண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.
"ஆண்கள் சமமாக பெண்களுக்கும் சம்பளம் கொடு!"
"எட்டுமணி நேரம் மட்டும் வேலை செய்வோம்!" என்று கோரிக்கை வைத்து வெற்றியும் பெற்றனர்!"
கிளாரா ஜெட்கின், ரோஸா லக்ஸம்பர்க் ஆகியோரின் பெருமுயர்ச்சியால் 1910 ஆண்டு கோபன்ஹேகனின் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு கூட்டப்பட்டபோது அந்த மார்ச் 8ஐ சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்ட முடிவெடுக்கப்பட்டது.
"வாட் ? உழைக்கும் பெண்கள் தினமா ? நோ நோ" என்று மறுத்துவிட்டது அமெரிக்கா.
பிறகு 1945ல் ஐ.நா. சபை அமைக்கபட்டபோது அக்கோரிக்கையை அமெரிக்கா தடுத்துவிட்டது. எனினும் 1975 "உழைக்கும்" என்பதை எடுத்துவிட்டு வெறும் மகளிர் தினமாக வைத்தால் ஓ.கே என்று அமெரிக்கா ஒப்புக்கொள்ள ஒருவழியாக மார்ச்-8 மகளிர் தினமானது.

பிகு: இன்று மட்டும் நக்கலுக்கு விடுமுறை!

Read More...

Monday, March 07, 2005

டுபாக்கூர் பெப்ஸி !

கடந்த 14 ஆண்டுகள் ஈராகில் டுபாக்கூர் பெப்ஸி விற்பனை செய்யபட்டன. தற்போது பெப்ஸி அவர்களுக்கு ஐந்து வருடத்திற்கான விற்பனை உரிமம் தந்துள்ளது என்று செய்திகள் தெருவிக்கின்றன.

சரி இவ்வளவு வருடம் டுபாக்கூர் பெப்ஸி எப்படி தயாரித்தார்கள். பார்க்க படங்கள்....

முதலாளி இரண்டு பாட்டில் பெப்ஸி கலர் வாங்கிண்டு வர சென்னார் சீக்கிரம் கொடுப்பா
Image hosted by Photobucket.com


பெப்ஸி பாட்டில்கள் பாத் டப்பில் குளிக்கின்றன
Image hosted by Photobucket.com


இன்னும் கொஞ்சம் சோப் போடுப்பா
Image hosted by Photobucket.com


சிக்கிரம் குடுப்பா டைம் ஆகிறது
Image hosted by Photobucket.com


லேட்டஸ்ட் டெக்னாலஜி முறைப்படி ரீஃபில் செய்யப்படுகின்றன
Image hosted by Photobucket.com


வேலை சுருசுப்பாக நடைபெருகிறது
Image hosted by Photobucket.com


பெப்ஸிக்கு தேவையான Gas செக் செய்யப்படுகிறது
Image hosted by Photobucket.com


பெப்ஸி மூடி தேர்வு செய்யப்படுகின்றன
Image hosted by Photobucket.com


பெப்ஸி சீல் செய்யப்படுகின்றன
Image hosted by Photobucket.com


தரக்கட்டுப்பாடு(?)ஒரு வழியா முடிஞ்சிது.
Image hosted by Photobucket.com


எல்லோரும் ஒரு முறை ஜோரா "Yeh Dil Maange No More" பாடுங்கப்பா

படம் உதவி gettyimages.com, செய்தி http://www.theage.com.au.

Read More...

Friday, March 04, 2005

பட்ஜெட் டாப் டென்+5


1. பாங்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் எடுத்தால் 10 ரூபாய் வரி. அதனால் 9999 ரூபாய் எடுக்கவும்.

2. ஏப்ரல் 1ம் தேதி முதல் திட்டமிட்ட படி "வாட்' வரி அறிமுகம். வாட் ? என்று கேட்பவர்கள் எங்கே சென்று பார்க்கவும்.

3. சிகரெட், குட்காவிற்கு கூடுதல் வரி, பீடிக்கு கூடுதல் வரி கிடையாது. அதனால் எல்லோரும் பீடிக்கு தாவலாம். மூக்குபொடிக்கும் வரி உண்டு!.

4. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 50 காசு அதிகரிக்கும். இது தெரிந்ததுதானே ?

5. விலை உயர்ந்த முத்திரை பெயர் கொண்ட நகை வகைகளுக்கு 2 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்படும் முத்திரை பெயர் இல்லாத நகைகளுக்கு இந்த வரி கிடையாது. ஆண்கள் கவணிக்கவும்.

6. ஏழை மக்களுக்கு 60 லட்சம் கூடுதல் வீடுகள் கட்டித் தரப்படும். இந்தியாவில் 60 லட்சம் ஏழைகள் தான் இருக்கிறார்களா ?

7. பெங்களூர் ஐ.ஐ.எஸ்., மையத்தை உலக தரத்திற்கு மாற்ற 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அவர்களே ஆச்சரியப்படுகிறார்கள்.

8. மண்எண்ணை, சமையல் கியாஸ் மீதான உற்பத்தி வரி கலால் வரி நீக்கம். இனிமேல் தினமும் விருந்துதான்.

9. சந்திரனுக்கு 2006-2007-ம் ஆண்டில் ராக்கெட் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்

காக பட்ஜெட்டில் ரூ.106 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அப்படி போடு.

10. கடன் அட்டை (கிரெடிட் கார்டு), செல்போன் வைத்து இருப்பவர்கள், கிளப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வரு பவர்கள் (`6-ல் 1' திட்டம்) வரு மான வரி கணக்கு தாக்கல்செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. ஆனால், இந்த `6-ல் 1' திட்டத் தில் இருந்து செல்போன் நீக்கப் பட்டுள்ளது. முதல்ல SMSக்கு எதாவது வரி போடவும்.

11. ஜனாதிபதியின் சம்பளம் மற்றும் ஜனாதிபதி மாளிகை தொடர்பான செலவினங் களுக்கு மொத்தம் ரூ.17 கோடியே 33 லட்சம் ஒதுக்கப் பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைவிட ரூ.38 லட்சம் அதிகம் ஆகும். அதாவது ஒரு மாதத்திற்கு 1.4 கோடி. கொஞ்சம் கம்மிதான்.

12. மீதம் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து தரப்படும். மின்சாரம் கண்டுபிடிச்சு நிறைய நாள் ஆச்சு, இன்னுமா செய்யவில்லை. சீக்கிரம் செய்யுங்கப்பா.

13. குளங்கள் மற்றும் நீர்நிலை கள் ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தண்ணி வருமா ?

14. கங்கை, பிரம்மபுத்ரா நதிகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி, பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் வடகிழக்கு மாநி லங்களில் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தவும் மணல் அரிப்பை தடுக்கவும் ரூ.180 கோடியில் திட்டம். அதில் கலக்கபடும் கழிவி நீரை முதல்ல கவனியுங்க.

15. பாலியெஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழைகள், ஆடைகள் மீதான சுங்கவரி விகிதம் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு. நடிகைகள் கஞ்சதனம் இல்லாமல் இனிமேல் டிரஸ் பண்ணிக்கொள்ளலாம்.

இடது பக்கம் (மேலே) பட்ஜெட் பற்றி வாக்களிக்கவும். நன்றி

(படம் உதவி: தினமலர்)

Read More...

Thursday, March 03, 2005

Problem Solving Flow Chart !

Read More...